Friday, 24 January 2014

தமிழக ஆட்சிப்பிரிவுகள்

மிழ்நாட்டின் மொத்த  நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர்களாகும். இது இந்தியாவின் மொத்த பரப்பில் நான்கு சதவீதமாகும்.
மாநில நிர்வாக பிரிவுகள்
தமிழ்நாடு 234 சட்டசபைத் தொகுதிகளையும், 39 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
நிர்வாக அமைப்பிற்காக தமிழ் நாடு 32 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு  வருவாய் நிர்வாக மேம்பாட்டிற்காக 78 வருவாய்க் கோட்டங்களாகவும், 229 வட்டங்களாகவும், 16,671 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு 10 மாநகராட்சிகளையும், 125  நகராட்சிகளையும், 529 பேரூராட்சிகளையும், 385 ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் 12,524 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கிய உள்ளாட்சி நிர்வாக அமைப்பினைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்
                             வ. எண் மாவட்டம்
01 அரியலூர்
02 சென்னை
03 கோயம்புத்தூர்
04 கடலூர்
05 தர்மபுரி
06 திண்டுக்கல்
07 ஈரோடு
08 காஞ்சிபுரம்
09 கன்னியாகுமரி
10 கரூர்
11 கிருஷ்ணகிரி
12 மதுரை
13 நாகப்பட்டினம்
14 நாமக்கல்
15 நீலகிரி
16 பெரம்பலூர்
17 புதுக்கோட்டை
18 இராமநாதபுரம்
19 சேலம்
20 சிவகங்கை
21 தஞ்சாவூர்
22 தேனி
23 திருச்சிராப்பள்ளி
24 திருநெல்வேலி
25 திருவள்ளூர்
26 திருவண்ணாமலை
27 திருவாரூர்
28 தூத்துக்குடி
29 திருப்பூர்
30 வேலூர்|
31 விழுப்புரம்
32 விருதுநகர்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாட்டில் இருக்கும் உள் ளாட்சி அமைப்புகள் கீழ்க்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை
   1.  மாநகராட்சி   2.  நகராட்சி 3.  பேரூராட்சி 4.  ஊராட்சி
தமிழகத்தின் வருவாய் நிர்வாகப் பிரிவுகள்
மாவட்டங்கள் 32
கோட்டங்கள் 78
வட்டங்கள் 231
குறுவட்டங்கள் 1136
வருவாய் கிராமங்கள் 16671
(மூலம்: கொள்கை விளக்கக் குறிப்பு 2013)
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள்
மாநகராட்சிகள் 10
நகராட்சிகள் 125
பேரூராட்சிகள் 529
மாவட்ட ஊராட்சிகள் 31
ஊராட்சி ஒன்றியங்கள் 385
கிராம ஊராட்சிகள் 12524

மாநகராட்சிகள்
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment