Saturday 25 January 2014

உலக நிறுவனங்கள் - முனைவர் நே.ஜுலியட்

உலக நிறுவனங்கள் - முனைவர் நே.ஜுலியட்
Posted Date : 12:12 (11/12/2013)Last updated : 15:12 (11/12/2013)
பொருளாதாரம், தர நிர்ணயம், போக்குவரத்து, பொதுநலம், தொலைத்தொடர்பு   என இன்னும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், உலக அளவில் ஏற்படுத்தப் பட்டுள்ள கூட்டமைப்பு நிறுனங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு
(African Union - AU)
ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெறும் கூட்டமைப்பாக இது விளங்குகிறது. 54 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீஸியம், ஸ்வாய்லி ஆகியன அலுவலக மொழிகளாக உள்ளன.
25 மே, 1963-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பாக துவங்கப்பட்டு,  26 மே, 2001-ல் ஆப்பிரிக்க கூட்டமைப்பாக உருவானது. மொராக்கோ இந்த அமைப்பில் இடம்பெறவில்லை. மடகாஸ்கர், மாலி, கினியா,பிசசாவு ஆகிய நாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அடிஸ் அபாபா மற்றும் எத்தியோப்பியாவில் தலைமையகம் உள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி
(Asian Development Bank - ADB)
ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 22 ஆகஸ்ட், 1966-ல் தொடங்கப்பட்டது. 1974-ம் ஆண்டு, ஜூன் மாதம் ஆசிய வளர்ச்சி நிதி நிறுவனத்தைத் தொடங்கியது.
67 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தலைவர் ஹருஷிகோ குரோடா(harushiko kurda) ஆவார். 2500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிலுள்ளனர். தலைமையகம் பிலிப்பைன்ஸில் உள்ளது.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு
(Asia-Pacific Economic Co-operation - APEC)
21 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது. ஆசிய - பசிபிக் பகுதியின் திறந்த வெளி வணிகத்துக்கு உதவுகின்றது. பொருளாதார ஒத்துழைப்பு மையமாகத் திகழ்கின்றது. செயல் இயக்குநராக முகமது நூர் யாகோப் (Muhamad Noor Yacob)  செயல்படுகின்றார். சிங்கப்பூரில் தலைமையகம் உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு
(Association of South East Nations - ASEAN)
'ஒரே நோக்கம், ஒரே அடையாளம், ஒரே சமுதாயம்’ என்னும் குறிக்கோளுடன் செயல்படுகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர பாடுபடுகின்றது. 1967-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், புரூனே, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. ASEAN உலகின் 9-வது பெரிய பொருளாதார மையமாகக் கருதப்படுகிறது. அலுவலக மொழியாக ஆங்கிலம் உள்ளது. பொதுச் செயலாளராக லீ லுயோங் மின் (Le Luong Minh) உள்ளார். தலைமையகம் இந்தோனேசியாவில் உள்ளது.
சர்வதேச ஒதுக்கீட்டு வங்கி:
(Bank for International Settlements - BIS)
சர்வதேச நிறுவனமாக விளங்குகிறது. மத்திய வங்கிகளிடையே ஒத்துழைப்பைத் தோற்றுவிக்கின்றது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 58 மத்திய வங்கிகள் இணைந்துள்ளன. பொது மேலாளர் ஜெய்மி காருவானா (Jamie Caruana)  சுவிட்சர்லாந்தில் தலைமையகம்  உள்ளது. கிளை அலுவலகங்கள் ஹாங்காங், மெக்ஸிகோவில் உள்ளன. நி10 நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
கரிபியச் சமுதாயம்
(Caribbean Community - CARICOM)
கரிபியச் சமுதாயம் 4 ஜூலை, 1973-ல் தொடங்கப்பட்டது. இதில் 15 கரிபிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம் போன்ற துறைகளில் உதவிக்கொள்கின்றன. பொதுச்செயலாளராக இர்வின் லா ராக்கு(Irwin La rocque),தலைவராக கென்னி அந்தோணி (Kenny Anthony)  ஆகியோர் செயல்படுகின்றனர். தலைமையகம் கயானாவில் உள்ளது.
பொதுநல அமைப்பு
(Commonwealth)
உலக அமைதி, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், வறுமை ஒழிப்பு, வர்த்தகம், விளையாட்டு போன்ற பல்வேறு விஷயங்களை இலக்காகக் கொண்டு, காமன்வெல்த் அமைப்பு நவம்பர் 18, 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 53 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. ராணி இரண்டாம் எலிசபெத்தைத் தங்கள் நாட்டின் கௌரவத் தலைவராகப் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் காமன்வெல்த்தின் தலைவராக மட்டுமே ஏற்றுக்கொண் டுள்ளன. தலைமையகம் லண்டனில் உள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம்
(International Air Transport Association - IATA)
150 நாடுகளில் 240 விமானப் போக்குவரத்து நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏப்ரல் 19, 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறைந்த செலவில் பாதுகாப்பான விமானப் பயணம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. முதன்மைச் செயல் அலுவலராக டோனி டெய்லர்(Tony Tyler) விளங்குகிறார். தலைமை அலுவலகம் கனடாவில் உள்ளது.
சுதந்திர நாடுகளின் பொதுநல அமைப்பு
(Commonwealth of Independent States - CIS)
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தனித் தனி நாடுகளாக மாறிய நாடுகளின் கூட்டமைப்பு. 1991-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. 9 நாடுகள் அதிகாரபூர்வமான உறுப்பு நாடுகளாக உள்ளன. 2 நாடுகள் அதிகாரபூர்வமற்ற உறுப்பு நாடுகளாக உள்ளன.
உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம், பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு, குற்றத் தடுப்பு போன்ற பல விஷயங்களில் உதவுவதைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளன. செர்ஜே லெபேதேவ் (Sergei Lebedev)  உயர் செயலாளராகச் செயல்படுகின்றார். தலைமையகம் பெலாரஸ்.
சர்வதேச குற்றவியல் காவல் நிறுவனம்
(International Criminal Police Organization - Interpol - ICPO)
 ICPO என்னும் குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. செப்டம்பர் 7, 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 190 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. கூ பூன் ஹுய் (khoo boon hui) தலைவராக உள்ளார். ரொனால்ட் நோபிள் (khoo boon hui) பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். பன்னாட்டுக் காவல் துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தலை மையகம் பிரான்ஸில் உள்ளது.
சர்வதேச தர நிர்ணயம்
(International Organization for Standardization - ISO)
அரசு சாராத் தொண்டு நிறுவன முறையில் செயல்பட்டு வருகின்றது. பிப்ரவரி 23, 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 'சர்வதேசத் தரம்’ ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகிறது.
அலுவலக மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்ளன. 162 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
பன்னாட்டுத் தொலைத்தொடர்புச் செயற்கைக்கோள் நிறுவனம்
(International Telecommunication Satellite Organization - Intelsat)
Intelsat1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தனியார் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு நிறுவனம் ஆகும். மடிசன் டியர் பார்ன் பங்குதாரர்கள், அபக்ஸ் பங்கு தாரர்கள், பெர்மிரா, அப்போலோ மேனேஜ் மென்ட் போன்ற நான்கு நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளனர். தலைமையகம் வாஷிங்டன்.
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம்
(Inter - Parlimentary Union - IPU)
IPU 1889-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனர்கள், வில்லியம் ராண்டல் கிரிமர் (William Randal Cremer) ஃபிரெடெரிக் பாஸி (Frederic passy) ஆகியோர். 162 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. IPU ஐ.நா-வின் பார்வையாளர் என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. IPU-க்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்துள்ளன. தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பு
(North Atlantic Treaty Organization - NATO)
ஏப்ரல் 4, 1949-ம் ஆண்டுNATO தொடங்கப்பட்டது. அரசியல் மற்றும் ராணுவ கூட்டமைப்பாக விளங்குகிறது. 26 உறுப்பு நாடுகள் உள்ளன. அலுவலக மொழிகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு. பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசன்(Anders Fogh Rasmussen, NATO), ராணுவக் குழுத் தலைவர் குனுட் பார்ட்டல்ஸ் ((Knud Bartels).
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம்
(Organization for Economic Co-operation and Development - OECD)
இரண்டாம் உலகப் போரில் பாதித்த நாடுகளுக்கு உதவுவதற்காக OEEC என்னும் அமைப்பு ஏப்ரல் 16, 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செப்டம்பர் 30, 1961-ம் ஆண்டு பெயர் மாற்றம் பெற்று OECD என்று   உதயமானது. மொத்தம் 34 உறுப்பு நாடுகள் உள்ளன. பொதுச் செயலாளர் ஜோஸ் ஏஞ்சல் குரியா (Jose Angel Gurria). வளர்ந்த நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உள் ளன. அலுவலக மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு. தலைமையகம் பாரிஸ்.
அமெரிக்கக் கூட்டமைப்பு நாடுகள்

 (Organization of American States - OAS)
'ஜனநாயகம் என்பது அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சியைக் கொடுப்பதற்கே’ என்னும் நோக்கத்தைக் கொண்டது. ஏப்ரல் 30, 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 35 உறுப்பு நாடுகளைக் கொண்டது. பொதுச் செயலாளர் ஜோஸ் மிகுல் இன்சுல்சா (Jose Miguel Insulza). தலைமையகம் வாஷிங்டன்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு
(Organization of the Petroleum Exporting Countries- OPEC)
பெட்ரோலியம் விலை நிர்ணயம் செய்தல், பெட்ரோலியம் ஏற்றுமதியை முறைப்படுத்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, அரபு எமிரேட், வெனிசூலா எனும் 12 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. 1960-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலர் அப்தல்லா எல்-பாட்ரி (Abdalla el-Badri).   தலைமையகம் வியன்னா.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

 (South Asian Association For Regional Co-operation- SAARC)
டிசம்பர் 8, 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கை, பூட்டான், இந்தியா, மாலத் தீவு, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தலைவர் முகமது வாஹித் ஹசன் மானிக்(Mohammed Waheed Hassan Manik), பொதுச் செயலாளர் அகமது சலீம் (Ahmed Saleem). ஏழ்மை, வறுமை, ஊழல், மக்கள்தொகைப் பெருக்கம், ஏகாதிபத்தியம் போன்றவற்றுக்கு எதிரான சிந்தனை மற்றும் செயலாக்கத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தலைமையகம் நேபாளம்.
அரபு நாடுகளின் கூட்டமைப்பு
The League of Arab States
'அரபு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்தி, புரிதலை உண்டாக்குதல், உணர்வுகளை மதித்தல்’ போன்ற அடிப்படைச் சித்தாந்தங்களைக் கொண்டது அரபு நாடுகளின் கூட்டமைப்பு. மொத்தம் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 1945 மார்ச் 22-ல் தோன்றியது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பார்வையாளராகக் கலந்து கொள்ளலாம். அலுவலக மொழி அரபிக். தலைமையகம் கெய்ரோ.
EAGLES: Emerging and Growth Leading Economies
பொருளாதாரத்தில் வளரும் நாடுகளை‘EAGLES’ எனக் குறிப்பிடுகின்றனர். EAGLES அடுத்த பத்து ஆண்டுகளில் வளர்ந்து, உலகின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2010-ம் ஆண்டின் பிற்பகுதியில் EAGLES  என்னும் சுருக்கக் குறியீடு வெளியானது.
இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்து ஆண்டுதோறும் பரிசீலனைக்கு உட்பட்டது. இது எதிர்பார்க்கப்படும் பொருளாதார நிகழ்வுகளின் அடிப்படையில் அமைகின்றது. 2011-ம் ஆண்டில் EAGLES உறுப்பு நாடுகள் பிரேசில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷ்யா, தைவான், துருக்கி. இதில் எகிப்து நாடு 2010-ம் ஆண்டு உறுப்பு நாடாக இருந்துள்ளது.
EAGLES NEST: EAGLES--ன் அடுத்த நிலையிலுள்ள கருத்துருவாக்கம்EAGLES NESTஎன்பதாகும். 2010 - 2011-ல் EAGLES NEST-ன் உறுப்பு நாடுகள் அர்ஜென்டினா, பங்களாதேஷ், சிலி, கொலம்பியா, எகிப்து, மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, உக்ரைன், வியட்நாம். இவற்றில் சிலி, எகிப்து, உக்ரைன் 2010-ல் NEST-ல் இடம் பெறவில்லை.
நான்கு ஆசியப் புலிகள்
(Four Asian Tigers )
பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்த ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவை ஆசியப் புலிகள் என அழைக்கப்படுகின்றன.
புலிக்குட்டிகள்

 (Tiger Cub Economies)
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து 'புலிக்குட்டி பொருளாதார நாடுகள்’ என அழைக்கப்படுகின்றன.
PIGS
போர்ச்சுக்கல், அயர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் நாடுகளைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுPIGS என்பதாகும். இத்தாலி நாட்டையும் சேர்த்து PIIGS  எனவும் குறிக்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான பொருளாதார சூழலைக் கொண்டுள்ளன.
CIVETS::
வளரும் சந்தையின் சூழலுக்கு ஏற்ப கொலம்பியா, இந்தோனேசியா, வியட்நாம், எகிப்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா நாடுகளை இணைத்த சுருக்கக் குறியீடே CIVETSMIKT: மெக்ஸிகோ, இந்தோனேசியா, கொரியா (தெற்கு), துருக்கி நாடுகளின் சுருக்கக் குறியீடு MIKT:. பொருளாதாரம், சந்தை, முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடுகள் இணைத்துக் கூறப்பட்டுள்ளன.
 BRICS: ஆங்கிலத்தில் 'BIG FOUR’என அழைக்கப்படும் நாடுகள் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா. தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டையும் இணைத்துக்கொண்டு BRICS என அழைக்கப்படுகின்றது.
BASIC:பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா என்னும் நாடுகளின் சுருக்கக் குறியீடு BASIC: என அழைக்கபடுகின்றது.

No comments:

Post a Comment