Saturday 25 January 2014

விளையாட்டு

விளையாட்டு
Posted Date : 17:12 (17/12/2013)Last updated : 17:12 (17/12/2013)
- தே.ச.சிவசங்கர் - த.திகழ் மிளிர்
ஒலிம்பிக் கொண்டாட்டம்!
நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஏதென்ஸில் 1896-ல் தொடங்கப்பட்டன.
 நவீன ஒலிம்பிக்கின் தந்தை: பியரி டி குபெர்டின்.
 ஒலிம்பிக் கொடியில் மஞ்சள், கறுப்பு, நீலம், சிவப்பு, பச்சை ஆகிய ஐந்து வண்ண வளையங்கள் உள்ளன.
 1936-ல் பெர்லினில் ஒலிம்பிக் ஜோதி அறிமுகமானது.
 ஒலிம்பிக்கில்  பங்கேற்ற  முதல் இந்தியப் பெண்மணி: மேரி லீலா ராவ் (1952, நீளம் தாண்டுதல்).
 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இலங்கைக்காரர்: சுஸாந்திகா ஜெயசிங்கே (சிட்னி, 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம்).
 நீளம் தாண்டுதலில் தொடர்ந்து நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அத்லெட்டிக் வீரர்: கார்ல் லூயிஸ்.
உலகப்போர்களின் காரணமாக, 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் நடை பெறவில்லை.
 பிளவுபட்டிருந்த கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்தே 1952-ல் விளையாடின.
 1992-ல் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளும் ரஷ்ய அணியிலேயே விளையாடின.
 ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஹாக்கியில் 8 முறை தங்கம் வென்றுள்ளது.
 ஜே.டி.ஜாதவ் (மல்யுத்தம்), லியாண்டர் பயஸ் (டென்னிஸ்), கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல்) ஆகிய மூவரும் ஒலிம்பிக் வரலாற்றில் தனி போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்.
 1896-ல் நடந்த முதல் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றவர்: ஜேம்ஸ் கானோலி.
 2004 ஒலிம்பிக்கில் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தனி இந்தியர்: ராஜவர்த்தன் சிங் ரத்தோர்.
 2008-ல் கோடை கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்: பீஜிங்.
 2008-ல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரே தங்கம் வென்றார்.
 ஒலிம்பிக் வரலாற்றில் தனி போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரே.
 2010-ல் குளிர் கால ஒலிம்பிக் நடைபெற்ற இடம்: கனடாவில் உள்ள வான்கூவர்.
 2012-ல் கோடை கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்: லண்டன்.
 2014-ல் குளிர் கால ஒலிம்பிக் நடைபெறவுள்ள இடம்: ரஷ்யாவில் உள்ள சோச்சி.
 2016-ல் கோடை கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள இடம்: ரியோடி ஜெனிரோ (பிரேசில்).
 2002-ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக், அமெரிக்காவிலுள்ள சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்றது.
 குளிர் கால ஒலிம்பிக், கோடை கால ஒலிம்பிக் இரண்டிலும் தங்கம் வென்ற ஒரே நபர்: எடி ஈகன்.
 Paralympics  என்பது மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படுவது.
 ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகம் உள்ள இடம்: சுவிட்சர்லாந்தில் லாசானோ.
 1936-ல் நடந்த பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டான கபடி சோதனை முறை விளையாட்டாக விளையாடப்பட்டது.
 முதன்முதலாகப் பெண்கள் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டது, 1900-ல் பாரீஸ் ஒலிம்பிக்கில்தான்.
 ஒலிம்பிக்கை தடை செய்த ரோமானியப் பேரரசர்: தியோடோசிஸ்.
 ஆசியாவில் டோக்கியோ, சியோல் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே ஒலிம்பிக் நடந்துள்ளது.
 பழங்கால ஒலிம்பிக் போட்டிகள், கி.மு. 776-லிருந்து கி.பி. 392 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்திருக்கின்றன.
 1928 ஒலிம்பிக்குக்குப் பிறகு 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்தான் மெடல் டிஸைன் மாற்றப்பட்டது.
 கிரேக்கக் கடவுள் 'நைக்கி’யின் உருவம் மெடலின் ஒரு பக்கம் செதுக்கப்பட்டு இருக்கிறது.
 ஒலிம்பிக்கில் இப்போது மொத்தம் 28 விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
 ஒலிம்பிக் குறிக்கோள்: Citius Altius Fortius (விரைவாக, உயரமாக, பலமாக).
 அரிய கோப்பைகள்
 வெல்லிங்டன் டிராபி - ரோயிங்.
 ஸ்வத்லிங் கோப்பை - டேபிள் டென்னிஸ்.
 கார்பிலியன் கோப்பை - டேபிள் டென்னிஸ்.
 பாரத் கேசரி - மல்யுத்தம்.
 பாகிஸ்தான் ஓபன் - ஸ்குவாஷ்.
 கிராண்ட் நேஷனல் - குதிரைப் பந்தயம்.
 டெர்பி கோப்பை - குதிரைப் பந்தயம்.
 ப்ளூ ரிபான்ட் கோப்பை - குதிரைப் பந்தயம்.
 எஸ்ரா கோப்பை - போலோ.
 வின்செஸ்டர் கோப்பை - போலோ.
 கனடா கோப்பை - கோல்ஃப்.
 பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கோப்பை - கோல்ஃப்.
 ரைடர் கோப்பை - கோல்ஃப்.
 வால்கர் கோப்பை - கோல்ஃப்.
 டூர் டி ஃபிரான்ஸ் - சைக்ளிங்.
 ஆர்தர் வால்கர் டிராபி - பில்லியர்ட்ஸ்.
 சூப்பர் பவல் - பேஸ் பால்.
 ஹோல்கர் டிராபி - பிரிட்ஜஸ்.
 ராமாஜெயின் சேம்பியன்ஷிப் - பிரிட்ஜஸ்.
 ரானா கோல்ட் கப் - பிரிட்ஜஸ்.
கால்பந்து
 1904, மே மாதம் பாரிஸ் நகரில் சர்வதேச கால்பந்து பெடரேஷன் (திமிதிகி) தொடங்கப் பட்டது.
 நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய ஏழு நாடுகளால் திமிதிகி தொடங்கப்பட்டது.
 1908-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக கால்பந்து சேர்க்கப்பட்டது.
 1930, ஜூலை மாதம் உருகுவே நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதன்முதலாக நடத்தப்பட்டது.
 கால்பந்துக்கான உலகக் கோப்பை 'ஜூல்ஸ் ரிமெட் கோப்பை’.
 மூன்று முறைக்கு மேல் உலகக் கோப்பையைக் கைப்பற்றும் நாட்டுக்கு அது நிரந்தரமாக வழங்கப்படும்.
 முதன்முதலாக ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை 1970-ல் பிரேசில் நிரந்தரமாகக் கைப்பற்றியது.
 உலகக் கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய ஒரே நாடு: பிரேசில் (1958, 1962, 1970, 1994, 2002).
 பிரேசில் நாட்டு கால்பந்து வீரரான பீலே 'கருப்பு முத்து’ எனப்படுகிறார்.
 பீலேவின் இயற்பெயர்: எட்ஸன் அரான்டஸ்டோ நாசிமென்டோ.
 22 வருடங்களில், 1352 போட்டிகளில் மொத்தம் 1277 கோல்கள் அடித்து சாதனை செய்தவர்: பீலே.
இத்தாலி, நான்கு முறை கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
 மேற்கு ஜெர்மனி, மூன்று முறை கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.
 இத்தாலி, 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளிலும், மேற்கு ஜெர்மனி, 1954 1974, 1990 ஆகிய ஆண்டுகளிலும் உலகக் கோப்பையை வென்றன.
 உலகக் கோப்பையை தலா இரு முறை பெற்ற நாடுகள்: அர்ஜென்டீனா, உருகுவே.
   டீகோ மாரடோனா, அர்ஜென்டினாவை சேர்ந்தவர்.
 உலகக் கோப்பை போட்டிகளில் மிக விரைவாக கோல் போடுபவருக்கு 'கோல்டன் வாட்ச்' விருது வழங்கப்படுகிறது.
   இங்கிலாந்து, ஃபிரான்சுக்குஇடையேயான உலகக் கோப்பை போட்டியில் (1982) 27 நொடிகளில் பிரையன் ராப்சன் அடித்ததே உலகக்கோப்பை கோல்களில் விரைவானது.
  உலகக் கோப்பை போட்டிகளில் அதிகமான கோல்கள் போடுபவருக்கு 'கோல்டன் பூட்’ விருது வழங்கப்படுகிறது.
 'கோல்டன் பூட்’ விருது பெற்றவர்களிலேயே அதிகமான கோல்கள் (13 கோல்கள்) போட்டவர்: பிரெஞ்சு வீரர் ஜஸ்ட் பான்டெய்ன் (1958).
 ஸ்பானிஷ் கால்பந்தின் முரடர் என்றழைக்கப்பட்டவர்: கில்லீகோ.
 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை வந்த முதல் ஆசிய நாடு: தென் கொரியா (2002).
 2010-ல் உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற இடம்: தென் ஆப்பிரிக்கா.
 2010-ல் உலகக் கோப்பை போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர்:ஜபுலானி.
 2010-ல் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற நாடு: ஸ்பெயின்.
 2014-ல் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள இடம்: பிரேசில்.
 உலகின் மிகப் பழமையான கால்பந்து கிளப்: 1857-ல் இங்கிலாந்தில் நிறுவப்பட்ட செஃபீல்ட் கிளப்.
 இந்தியாவின் மிகப் பழமையான கால்பந்து கிளப்: 1878-ல் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட டல்ஹவுசி கால்பந்து கிளப்.
 தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையான சந்தோஷ் டிராபி 1941-ல் நிறுவப்பட்டது.
 'சர் மன்மத ராய் சவுத்ரி ஆப் சந்தோஷ்’ என்பவரின் பெயரால் வழங்கப்படுவது: சந்தோஷ் டிராபி.
 இந்தியாவின் மிகப் பழமையான கால்பந்து கோப்பை: டூரண்ட் கப்.
 சர் மொர்டிமர் டூரண்ட் என்பவரின் நினைவாக டூரண்ட் கோப்பை வழங்கப் படுகிறது.
 பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய கால்பந்து வீரர்: கோஸ்தா பீகாரி பால் (1962).
 ஜூனியர் ஆண்களுக்கான சுப்ரதோ முகர்ஜி கோப்பை கால்பந்துப் போட்டி ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறுகிறது.
 அர்ஜுனா விருது பெற்ற முதல் கால்பந்து வீரர்: பி.கே.பேனர்ஜி (1961).
 சர்வதேச கால்பந்து போட்டியின் கால அளவு: 90 நிமிடங்கள்.
 கால்பந்தின் சராசரி எடை: 14 - 16 அவுன்ஸ்கள்.
கால்பந்து
 பந்தின் சுற்றளவு - 68-71 செ.மீ.
 பந்தின் எடை - 396-453 கிராம்.
 ஆடு களத்தின் நீளம் - 91-120 மீ.
 ஆடு களத்தின் அகலம் - 45-91 மீ.
 கோல் போஸ்டின் அகலம் - 32 மீ.
 கோல் போஸ்டின் உயரம் - 2.44 மீ.

கிரிக்கெட்
 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்தியாவுக்காக  சதம் அடித்தவர்: கபில் தேவ்.
 உலகக் கோப்பையை 1983-ல் இந்தியா வென்றபோது ஆட்ட நாயகனாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர்: மொஹீந்தர் அமர்நாத்.
 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட இரண்டு டை மாட்சுகளோடும் தொடர்புடைய நாடு: ஆஸ்திரேலியா.
 'ரகு ராமய்யா டிராபி’ லோக்சபா, ராஜ்யசபா அணிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கான கோப்பை.
 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் மூன்று கோப்பைகள் (1975, 1979, 1983) புருடென்ஷியல் கோப்பை என அழைக்கப்பட்டது.
 சர் டொனால்ட் பிராட்மேன் தன் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸிலும், சச்சின் தன் முதல் போட்டியிலும் பெற்ற ரன்கள் பூஜ்ஜியம்.
 கிரிக்கெட் வீரர் இயான் போத்தம், ஸ்கன்தோர்ப் என்ற அணிக்காக கால்பந்து விளையாடினார்.
 கிரிக்கெட் மட்டையை, பந்து தொட்டதா என்பதைக் கண்டறிய உதவும் கருவி: ஸ்னிக்கோ மீட்டர்.
 லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய தனது முதல் டெஸ்டிலேயே சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்: சௌரவ் கங்கூலி.
 அர்ஜுனா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்: சலிம் துரானி.
 விளம்பரப் படத்தில் நடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்: ஃபரூக் அலி இன்ஜினீயர்.
 இங்கிலாந்து, நான்கு முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தி உள்ளது.
 இங்கிலாந்து, மூன்று முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் உலகக் கோப்பையை வென்றதில்லை.
 இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்: அயர்லாந்து கிரிக்கெட் வீரர் சாமுவெல் பெக்கெட்.
 மழையால் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படும்போது ரன் ரேட் கணக்கிடும் முறை: டக்வொர்த் லூயிஸ்.
 டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் பூஜ்யம் எடுத்தால் அதை Pair அல்லது  Spectacle என்பார்கள்.
 முதல் உலகக் கோப்பையை வென்ற கேப்டன்: கிளைவ் லாயிட்.
 முதல் மற்றும் கடைசி மேட்சுகளில் சதம் அடித்தவர்: க்ரெய்க் சேப்பல்.
 கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) புதிய விதிமுறையின்படி, ஒருநாள் போட்டியில் ஓவரில் ஒரு முறைக்கு மேல் Bouncer வீசக் கூடாது.
 'கிரிக்கெட் தாத்தா' என்றழைக்கப்படுவர்: பிராட்மேன்.
 இரு முறை 150 ரன்கள் எடுத்த முதல் இந்தியர்: சௌரவ் கங்குலி.
 கபிலுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் குழுவுக்கு கேப்டன்: சுனில் காவஸ்கர்.
 9 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்தியோர்: அனில் கும்ப்ளே, சுபாஷ் குப்தே, கபில் தேவ், ஜாஸ் பட்டேல்.
 கேப்டன் பதவியில் இருந்தபோது அதிக சதங்களை (15) அடித்தவர்: ஆலன் பார்டர்.
 40-க்கும் மேற்பட்ட முறை ஒரு நாள் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்: சச்சின் டெண்டுல்கர்.
 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 17,000 ரன்களை தாண்டிய முதல் கிரிக்கெட் வீரர்: சச்சின் டெண்டுல்கர்.
 இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932-ல் சி.கே.நாயுடு தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது.
 இந்தியா தனது முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 1970-ல் அஜீத் வடேகர் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் சௌரவ் கங்குலி.
 முதல் ஒரு நாள் போட்டி 1971ம் ஆண்டு மெல்பெர்னில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
 முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2005ம் ஆண்டு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இரட்டை சதம் அடித்த முதல் இந்திய விககெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி.
 அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி (22 வெற்றிகள்).
 ஐசிசி முக்கிய கோப்பைகள் அனைத்தையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் மகேந்திரசிங் தோனி.
சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 ரன் கடந்த முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்த மூன்று வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் (200*), வீரேந்திர சேவாக் (219), ரோஹித் சர்மா (209).
 இந்திய வீரர்களின் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் விராட் கோலி. (52 பந்துகளில் 100 ரன்கள்)
கிரிக்கெட்
 பிட்சின் நீளம் - 20.11 மீட்டர்.
 பந்தின் சுற்றளவு - 20.79-22.8 செ.மீ. (9'')
 பந்தின் எடை - 155-168 கிராம் (5.75 அவுன்ஸ்)
 மட்டையின் நீளம் - 96.5 செ.மீ. (38'').
 மட்டையின் அகலம் - 11.4 செ.மீ. (4.5'').
 மட்டையின் எடை - 2 பவுண்டுகள்.
 ஸ்டம்பின் விட்டம் - 3.81 செ.மீ.
 விக்கெட் மொத்த அகலம் - 20 செ.மீ.
 தரைக்கு மேல் ஸ்டம்ப் உயரம் - 28''
 விக்கெட், பாப்பிங் கிரீஸ் தூரம் - 4’

ஹாக்கி
  ஹாக்கி என்பது இடைக்காலத்தில் ஃபிரான்சில் விளையாடப்பட்ட Hoquet  என்பதிலிருந்து தோன்றியது.
   Hoquet  என்ற ஃபிரெஞ்சு வார்த்தைக்கு ஆட்டு இடையரின் குச்சி (Shepherd’s crook) என்று பொருள்.
  உலகின் முதல் ஹாக்கி அசோசியேஷன் 1875-ல் லண்டனில் தொடங்கப்பட்டது.
  1895-ல் நடந்த முதல் சர்வதேச ஹாக்கி போட்டியில் பங்குபெற்ற நாடுகள்: வேல்ஸ், அயர்லாந்து.
1908-ல் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்ற நாடு: இங்கிலாந்து.
 1928 முதல் 1956 வரை தொடர்ந்து ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஹாக்கியில் வெற்றிபெற்றது.
 ரோமில் 1960-ல் நடந்த ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா முதன்முதலாக பாகிஸ்தானிடம் தோற்றது.
 ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவின் ஏழாவது, எட்டாவது வெற்றிகள் டோக்கியோ (1964), மாஸ்கோ (1980) நாடுகளில் கிட்டியது.
 ஒலிம்பிக் ஹாக்கியில் நிறைய போட்டிகளில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய நாடு: நெதர்லாந்து.
 நெதர்லாந்தில் 16-ம் நூற்றாண்டில் விளையாடப்பட்ட கால்வ் என்ற விளையாட்டு ஹாக்கியோடு நெருங்கிய தொடர்புடையது.
 இந்திய ஹாக்கியின் மாந்திரீகர் (Wizard of Indian Hocke) என்று அழைக்கப்படுபவர்: த்யான்சந்த்.
 1928 முதல் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் த்யான்சந்த் போட்ட மொத்த கோல்களின் எண்ணிக்கை 33.
 ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்காக விளையாடிய இரு தந்தை மகன் ஜோடிகள்: த்யான்சந்த் - அசோக்குமார் மற்றும் அகமது செர்கான் - ஆலம் செர்கான்.
 இந்தியாவிலுள்ள ஹாக்கி கோப்பைகளிலேயே மிகவும் பழமையானது - பெய்டன் கப்.
 இந்திய தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை: ரங்கசாமி கோப்பை.
 ரங்கசாமி கோப்பைக்கு முன், இந்தியாவின் தேசிய கோப்பையாக இருந்தது: மவோரி கோப்பை (Maori cu).
 நியூஸிலாந்து டூர் ஒன்றின்போது, இந்திய அணி வென்று வந்த மவோரி கோப்பையே, இந்திய தேசியக் கோப்பையாக பயன்படுத்தப்பட்டது.
 நியூஸிலாந்தில் வாழும் ஒருவகை பழங்குடியினரின் பெயர்: மவோரி.
 மவோரி கோப்பையை 1946-47-ல் வென்ற மேற்கு பஞ்சாப் அணியே தொடர்ந்து வைத்துக்ªகாண்டது.
 ரங்கசாமி கோப்பை ஹிந்து பத்திரிகை குழுமத்தால் இந்தியன் ஹாக்கி ஃபெடரேஷனுக்கு வழங்கப்பட்டது.
 ஆண்களுக்கான இந்திய ஹாக்கி கோப்பைகளில் முக்கியமானது: ஆகாகான் கப்.
 பெண்களுக்கான இந்திய ஹாக்கி கோப்பைகள்: லேடி ரத்தன் டாடா டிராபி மற்றும் இந்திரா காந்தி தங்கக் கோப்பை.
 கோலாலம்பூரில் 1975-ல் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
2006 வரை நடைபெற்றுள்ள பத்து உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இந்தியா தங்கம் வென்றுள்ளது.
 முதல் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்ற ஆண்டு: 1971 (பார்சிலோனா).
 பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்ற ஆண்டு: 1975 (இங்கிலாந்து).
 முதல் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி: 1982 (கராச்சி).
 ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் இதுவரை இந்தியா இருமுறை தங்கம் வென்றுள்ளது.
 ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் முதன்முதலாக, 1976-ல் (மான்ட்ரியல்) செயற்கைத் தரை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹாக்கி
 பந்தின் சுற்றளவு - 8 13/14''
 பந்தின் எடை - 155-163 கிராம் (5.75 அவுன்ஸ்).
 ஆடுகளத்தின் நீளம் - 91.44 மீ.
 ஆடுகளத்தின் அகலம் - 50-55 மீ.
 கோல் போஸ்டின் அகலம் - 3.66 மீ.
 கோல் போஸ்டின் உயரம் - 2.14 மீ.

டென்னிஸ்
 டென்னிஸ் என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து (Tenez) எடுக்கப்பட்டது. இதற்கு Hold or Receive or Takeஎன்பது பொருள்.
 12ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் வடக்கு பிரான்ஸ் நாட்டில் டென்னிஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.
 16ம் நூற்றாண்டிலிருந்துதான் டென்னிஸ் மட்டையை வைத்து ஆடும் பழக்கம் அறிமுகமானது.
18ம் நூற்றாண்டுகளின் மத்தியில் பர்மிங்காம், இங்கிலாந்தில் இப்பொழுது நாம் விளையாடும் புல்வெளி டென்னிஸுக்கான அடிப்படை மாற்றங்கள் தோன்றின.
 ITF சர்வதேச டென்னிஸ் கழகம் லண்டனில் அமைந்துள்ளது. 1913ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்டது.
 ITF-ன் கீழ் நாடுகளுக்கிடையே ஆன டென்னிஸ் போட்டிகள், டேவிஸ் கோப்பை, ஃபெட் கோப்பை, ஹாப்மேன் கோப்பை மற்றும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறுகிறது.
 ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யு.எஸ். ஓபன் ஆகிய நான்கு டென்னிஸ் போட்டிகளையும் கிராண்ட்ஸ்லாம் என்கிறோம்.
 பிரெஞ்சு ஓபன் களிமண் தளங்களிலும் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் யு.எஸ்.ஓபன் செயற்கைத் தரைகளில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 1877ம் ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 1881ம் ஆண்டு யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 1891ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 1908ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 டேவிஸ் கோப்பை ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி, 1900 ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. முதல் போட்டியில் யு.எஸ்.ஏ. மற்றும் கிரேட் பிரிட்டன் அணிகள் விளையாடின.
 பெடரேசன் கோப்பை, பெண்களுக்கான டென்னிஸ் போட்டி, 1963ம் ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. இப்பொழுது 95 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
    ஹாப்மேன் கோப்பை கலப்பு இரட்டையருக்கான டென்னிஸ் போட்டி 1989ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
   டென்னிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 1896லிருந்து விளையாடப்படுகிறது.
     டென்னிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
   ஓராண்டில் நடைபெறும் நான்கு முக்கிய டென்னிஸ் போட்டிகளிலும் வென்று முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் டான் புட்ஜு 1938.
    இதுவரை 17 வீரர்கள் கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார்கள்.
     கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக முறை ஒற்றையர் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர் (17 முறை).
 கிராண்ட்ஸ்லாம் பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் அதிக முறை பட்டம் வென்றவர் ரபேல் நடால் (8 முறை)
பந்தின் விட்டம் - 6.35-6.67 செ.மீ.
 பந்தின் எடை - 56.7-58.5 கிராம்.
 ராக்கெட்டின் அதிகபட்ச நீளம் - 32' '
 ராக்கெட்டின் அதிகபட்ச அகலம் - 12.5''
ஒற்றையர் ஆடு களம் - 78'' x 27''
 இரட்டையர் ஆடு களம் - 78'' x 36''
 வலையின் உயரம் (போஸ்டில்) - 1.07 மீ.
வலையின் உயரம் (நடுவில்) - 0.91 மீ.
புத்தகம் எழுதிய புயல்கள்
 My Cricketing Years - அஜித் வடேகர்.
 Sunny Days, Runs & Ruins - சுனில் காவஸ்கர்.
 Cricket is My Style - கபில் தேவ்.
 Cricket Replayed - விஜய் ஹசாரே.
 All Round View - இம்ரான் கான்.

No comments:

Post a Comment