Saturday 25 January 2014

குரூப் I - குரூப் II பாடத்திட்டம் (GROUP I & GROUP II SYLLABUS)

குரூப் I - குரூப் II பாடத்திட்டம் (GROUP I & GROUP II SYLLABUS)
Posted Date : 15:12 (17/12/2013)Last updated : 15:12 (17/12/2013)
மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான நன்கு வரையறுக்கப்பட்ட முழுமையான பாடத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டு வெளியிட்டது. அந்த பாடத்திட்டம் ஆங்கிலத்தில் உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் அதைப் பார்க்கலாம். அப்பாடத் திட்டத்தை விளக்கும் வகையில் சிற்சில கூடுதல் குறிப்புகளோடு அந்த பாடத்திட்டத்தின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.
பகுதி 1 பொது அறிவியல்
A. இயற்பியல்
பேரண்டம் - பொது அறிவியல் விதிகள் - அறிவியல் கருவிகள் - புதுப் புனைவுகளும் கண்டுபிடிப்புகளும் - தேசிய அறிவியல் ஆய்வுக் கூடங்கள் - அறிவியல் கலைச் சொற்கள் - எந்திரவியலும் பருப்பொருளின் பண்புகளும் - இயற்பியல் அளவுகள் - அலகுகள், தகுதரங்கள் - இசை, இயக்கம், ஆற்றல் - மின்னியலும் காந்தவியலும் - மின் அணுவியல் (ம)  தகவல் தொடர்பு - வெப்பம், ஒலி, ஒளி - அணு இயற்பியல் (ம) அணுக்கரு இயற்பியல் - திடநிலை இயற்பியல் - நிறமாலையியல் - புவி இயற்பியல் (ம) ஈர்ப்பியல் - வானியலும் விண்வெளி அறிவியலும்
B. வேதியியல்
தனிமங்களும், சேர்மங்களும் - அமிலங்கள், காரங்கள், உப்புகள் - ஆக்ஸிகரணம் (ஆக்ஸிஜனேற்றம்) மற்றும் ஒடுக்கம் (குறைப்பு வினை) - கனிமங்கள் மற்றும் உலோகங்களின் வேதியியல் - கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள் - உரங்கள், தீங்கு கொல்லிகள் (ம) பூச்சிக் கொல்லிகள் - உயிர் வேதியியல் (ம) உயிரித் தொழிற்நுட்பம் - மின் வேதியியல் - பாலிமர்களும் நெகிழிகளும்
C. தாவரவியல்
உயிரியலின் முக்கியக் கருத்தாக்கங்கள் - செல் - உயிரினத்தின் அடிப் படை அலகு - உயிரினங்களின் வகைப்பாடு - ஊட்டச்சத்தியலும் உணவியலும் - சுவாசித்தல் - கழிவு நீக்கம் - உயிரித் தகவல் தொடர்பு.
D. விலங்கியல்
இரத்தம், இரத்த ஓட்டம் - நாளமில்லாச் சுரப்பிகள் - இனப்பெருக்க மண்டலம் - மரபியல் - சுற்றுப்புறமும் சுற்றுசூழலியல் - சுகாதாரமும் நலவாழ்வும் - பல்லுயிரியமும் அதைப் பாதுகாத்தலும் - மனித நோய்கள் - தடுப்பு முறைகளும் சிகிச்சைகளும் - தொற்று நோய்களும் தொற்றா நோய்களும் - மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் - தாவர, விலங்கு, மனித வாழ்க்கைத் தொடர்பியல்
பகுதி 2 நடப்பு நிகழ்வுகள்
A. வரலாறு
சமீபத்திய நிகழ்வுகளின் நாட்குறிப்பு - உலக நாடுகளின் சின்னங்கள் - தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களின் நிகழ்வுகள் - பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் - உலக நிறுவனங்கள், ஒப்பந்தங்கள், உச்சி மாநாடுகள் - செய்திகளில் வந்த முக்கிய மனிதர்கள், இடங்கள் - விளையாட்டுகள் - புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியர்களும் - பரிசுகளும் விருதுகளும் - கலாச்சாரம் - சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் - சமீபத்திய கலைச் சொற்கள் ஸிமீநீமீஸீt கிஜீஜீஷீவீஸீtனீமீஸீts.
B. அரசியல் அறிவியல்
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை - சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் - பொதுக் கருத்து - பொதுத் தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சனைகளும், சவால்களும் - இந்தியாவிலுள்ள அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் - பொதுமக்கள் விழிப்புணர்வும் பொது நிர்வாகமும் - தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்கு - மக்கள் நலம் சார்ந்த தனியார் நிறுவனங்களும் அவற்றின் பயன்களும்
C. புவியியல்: முக்கிய இடங்கள்,சுற்றுசூழல் கொள்கைகள்
D. தற்போதைய சமூக (ம) பொருளாதார பிரச்னைகள் - அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகள்.
E. அறிவியல் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் - நலவாழ்வு அறிவியல் புதிய கண்டுபிடிப்புகள். வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு.

பகுதி 3 புவியியல் (Geography)
பேரண்டம் - சூரியன் மற்றும் கோள்கள்  (சூரிய குடும்பம்) -  பூமி - நிலா - புவியின் அமைப்பு - இரு கோடுகள் - முக்கிய படக் கோடுகள் - புல்வெளி - வாயு மண்டலம் - உலக அழுத்தப்பட்டைகள் - காற்று - திசை மாறும் காற்றுகள் - தளக் காற்றுகள் - நீர் மண்டலம் - இந்திய மாநிலங்கள்_சில சிறப்புகள் - பருவக்காற்று -  வானிலை - காலநிலை - மழைபொழிவு - நீர் வளங்கள் - இந்திய நதிகள் - இந்திய நதிக்கரை நகரங்கள் - முக்கிய இந்திய ஏரிகள் - இந்திய மலைகள் -  இமய மலை - இந்திய இயற்கை வளங்கள் - இந்திய மண் வகைகள் - இந்தியக் கனிம வளம் - இந்தியாவில் முக்கியச் சுரங்கங்கள் - எண்ணெய் வயல்கள் - இயற்கைத் தாவரம் - இந்தியக் காடுகளும் வன விலங்குகளும் - இந்திய சரணாலயங்கள் - பூங்காக்கள் - தேசியப் பூ - விவசாயப் பயிர்களும், முன்னணி உற்பத்தி மாநிலங்களும் -  மாநிலங்களும் விவசாய முறைகளும் - பயிர்களின் வகைகள் - இந்தியத் தொழில் நகரங்கள் - போக்குவரத்தும் தகவல் தொடர்பும் - இந்திய சாலைப் போக்குவரத்து - இந்திய ரயில்வே மண்டலங்கள் - இந்தியன் ரயில்வே சில குறிப்புகள் - இந்தியாவில் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்துகள் - இந்தியாவில் தகவல் தொடர்பு வளர்ச்சி - சமூக புவியியல் மக்கள் தொகை – அடர்த்தி,பரவல் - பழங்குடி இனத்தவர்கள் - இந்தியப் பழங்குடியினர் - இயற்கைப் பேரிடர்கள் – பேரிடர் மேலாண்மை - பருவ நிலை மாற்றம் தாக்கமும், விளைவும் - மாசுக்கட்டுப்பாடு - இந்திய நகரங்களின் சாட்டுப் பெயர்கள் - புகழ் மிக்க சாட்டுப்பெயர்கள் - உலக நதிக்கரை நகரங்கள் - நாடுகளின் சாட்டுப் பெயர்கள் - பழைய பெயரும்,புதிய பெயரும் - உலகத் துறைமுக நகரங்களும் முக்கிய ஏற்றுமதிகளும் - உலகின் மிகப் பெரியவை.
பகுதி 4 இந்திய வரலாறும் பண்பாடும்
வரலாற்றுக்கு முந்தைய கால நிகழ்வுகள்   சிந்து சமவெளி நாகரிகம்  ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துக்கள் - வேதகால நாகரிகம் - பண்டைத் தமிழகம் - பௌத்தம் - சமணம் - அலெக்சாண்டர் படையெடுப்பு - மௌரியப் பேரரசு - சாதவாகனர்கள் - குஷாணப் பேரரசு - குப்தப் பேரரசு - வர்த்தமானப் பேரரசு - தென்னிந்திய வரலாறு - பல்லவர்கள் - சாளுக்கியர்கள் - பிற்காலச் சோழர்கள் - பாண்டியர்கள் - பல்லவர் மற்றும் சோழர் காலங்களில் தமிழக அரசியல், சமூகம், பண்பாடு - டெல்லி சுல்தான்கள் ஆட்சி - விஜயநகரப் பேரரசு - பாமினி அரசு - மொகலாயர்கள் - மராத்தியர்கள் - சீக்கியர்கள் - ஆளவந்த ஐரோப்பியர்கள் - பிரிட்டிஷ் ஆட்சி – பரவலும், நிலைப்படுதலும் - பிரிட்டிஷ் ஆட்சி – சமூக, பொருளாதார விளைவுகள் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - நவீன இந்தியாவில் கல்வி மற்றும் கலாச்சார மையங்கள் - சுதந்திரத்திற்குப் பின் இந்தியா - இந்தியப் பண்பாடு - வேற்றுமையில் ஒற்றுமை -  இந்தியா – சமய சார்பற்ற அரசு - இந்தியா  நுண்கலை நிறுவனங்கள் - தமிழகத்தில் பகுத்தறிவு, திராவிட இயக்கங்கள் - அரசியல் கட்சிகளும், மக்கள் திட்டங்களும் - பல்துறைச் சான்றோர்கள் (கலை, அறிவியல், இலக்கியம், தத்துவம்) சுவாமி விவேகானந்தர் - அன்னை தெரசா   பண்டிட் ரவிசங்கர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி - ருக்குமணிதேவி அருண்டேல் - ஜே.கிருஷ்ண மூர்த்தி - ஜெய்ஹிந்த் செண்பகராமன். ராணி மங்கம்மாள் - மகாகவி பாரதியார்.
பகுதி 5 அரசமைப்பு (POLITY)
இந்திய அரசமைப்பு வரலாறு - இந்திய அரசமைப்பு சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியப் பகுதிகள் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியப் பகுதிகளும் நோக்கங்களும் - எது எங்கிருந்து வந்தது - அட்டவணைகள் - முக்கிய உறுப்புகள் - முக்கிய சட்ட திருத்தங்கள் - இந்திய அரசமைப்பு முகவுரை - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பியல்புகள் - இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பு - குடியுரிமை கிஅல் -அடிப்படை உரிமைகள் - அரசு நெறிமுறை கோட்பாடுகள் - அடிப்படைக் கடமைகள் - மனித உரிமைகள் சாசனம் - இந்தியாவில் அதிகாரப் பிரிவினை - இந்தியாவில் அதிகாரப் பகிர்மானம் - இந்தியக் குடியரசுத் தலைவர் - இந்தியப் பிரதமர் - நாடாளுமன்றம் – லோக்சபா,ராஜ்யசபா - இந்திய நாடாளுமன்றத்தில் குழுமுறைகள்    இந்தியப் பிரதமர்கள் –  உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் - பொதுநல வழக்குகள் - மாநில ஆளுநர்   மாநில முதலமைச்சர் - மாநில சட்டமன்றம் - உயர்நீதி மன்றம் - ஜம்மு காஷ்மீர் தனி அந்தஸ்து - இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கல் – உள்ளாட்சி - பஞ்சாயத்து ராஜ் - சட்டத்தின் ஆட்சியும் சட்டப்படியான அணுகுமுறைகளும் - இந்திய கூட்டாட்சி, மத்திய மாநில உறவுகள் - அவசர நிலை பிரகடனம் - இந்தியாவில் குடிமைப் பணிகள் - நலஅரசின் நிர்வாகத்துறை சவால்கள் - மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் - தேர்தல்கள் - இந்திய அலுவல் மொழிகளும், எட்டாவது அட்டவணை மொழிகளும் - நிர்வாகச் சீர்திருத்தங்களும், தீர்ப்பாயங்களும் - பொது வாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - மத்திய  ஊழல் கண்காணிப்பு ஆணையம் - மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) - லோக்பால் - தணிக்கை மற்றும் தலைமைக் கணக்கர் - இந்திய தலைமை வழக்குரைஞர் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் - தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் - பொதுமக்கள் குறை களைதல் - நுகர்வோர் பாதுகாப்பு சபைகள்
பகுதி  6 இந்தியப் பொருளாதாரத்துக்கான பாடத்திட்டம்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள் குறித்தான மதிப்பீடு - வேளாண்மையும், நிலச்சீர்த்திருத்தங்களும்  - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - முதல் உருவாக்கமும் முதலீடும் - பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பும் முதலீடு விலக்கமும் - உள்கட்டமைப்பு வளர்ச்சி - தேசிய வருமானம் - பொது நிதியும் நிதிக்கொள்கையும்  - விலைக் கொள்கையும் விலைப்பரவலும் - வங்கியியல், பணம், பணக்கொள்கை - நேரடி அந்நிய முதலீடு - உலக வர்த்தக நிறுவனம்; உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் - ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள் - சமூகத்துறை சவால்கள் ; மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை - மனித வள மேம்பாடு - நிலைத்த நீடித்த வளர்ச்சி - தமிழகத்தின் பொருளாதாரப் போக்குகள் - எரிசக்தி – பல்வேறு மூலங்களும் எரிசக்தித் துறை வளர்ச்சியும் - நிதிக்குழு - திட்டக்குழு - தேசிய வளர்ச்சிக் கவுன்சில்.
பகுதி  7 இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
தேசிய மறுமலர்ச்சி - ஆங்கில ஆட்சிக்கு எதிரான தொடக்க காலப் புரட்சிகள் - 1857 பெருங்கிளர்ச்சி - இந்திய தேசிய காங்கிரஸ் - தேசியத் தலைவர்களின் எழுச்சி - காந்தி - நேரு - தாகூர் - நேதாஜி - புரட்சி இயக்கங்களின் வளர்ச்சி - இந்திய விடுதலைப் போரில் பல்வேறு வகையான போராட்டங்கள் - இந்திய விடுதலைப் போர் – பல்வேறு சட்டங்களும், ஒப்பந்தங்களும் - இரண்டாம் விடுதலைப் போரும், இந்திய விடுதலைப் போரில் இறுதிகட்டமும் - இந்தியாவில் வகுப்பு வாத வளர்ச்சியும், பிரிவினையும் - இந்திய சுதந்திரப் போரில் தமிழகம் - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் - இராஜாஜி - வ.உ.சி. - பெரியார் - பாரதியார் - சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல் கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும்.
பகுதி  8 திறனறிதலும் அறிவுக்கூர்மையும்
தரவுகள்/விவரங்கள், தொகுத்தல், வழங்குதல்  (Conversion of information & data Collection, compilation and presentation of data) - அட்டவணைகள், வரைபடங்கள், படங்கள் (Tables, graphs, diagrams)  மற்றும் விவரங்களைப் பகுத்து ஆராய்தல் (Analytical interpretation of data)  - சுருக்குதல் (Simplification) - சதவீதம் (Percentage)  - மீப்பெரு பொது வகுத்தி (Highest Common Factor - HCF) - மீச்சிறு பொது மடங்கு (Lowest Common Multiple - LCM)  - விகிதமும் விகிதாச்சாரமும் (Ratio and Proportion)  - தனிவட்டி மற்றும் கூட்டுவட்டி (Simple interest & Compound interest)  - பரப்பளவும் கனஅளவும் (Area & Volume)  - நேரம் மற்றும் வேலை (Time and Work) - தர்க்கக் காரணவியல் (Logical Reasoning)  - புதிர்கள் (Puzzles)  - பகடை (Dice) - கட்புல காரணவியல் (Visual Reasoning) - எண் எழுத்து காரணவியல் (Alpha numeric Reasoning) - எண்தொடர்கள் (Number Series).

No comments:

Post a Comment