Friday 24 January 2014

இந்தியா - இயற்கை அமைப்பு

இந்தியா - இயற்கை அமைப்பு
Posted Date : 12:12 (12/12/2013)Last updated : 12:12 (12/12/2013)
புவியியல் அமைப்பு
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நாடான இந்தியா ஆசியக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
ஒரு கண்டத்திற்குரிய அனைத்து பண்புகளும்  இந்தியாவில் காணப்படுவதால்,  இந்தியா ஒரு துணைக் கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தியா வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கி.மீ. நீளத்தையும், மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாசலப்பிரதேசம் வரை 2933 கி.மீ. அகலத்தையும் கொண்டுள்ளது.
இந்தியக் கடற்கரையின் நீளம் 6000கி.மீ. அந்தமான் நிக்கோபார், இலட்ச தீவு கடற்கரையையும் சேர்த்து 7516கி.மீ. நீளம் கொண்டுள்ளது.
தீபகற்பம்
இந்தியாவின் மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளன.
வடக்கு, வடமேற்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் இமயமலைத் தொடர்கள் அமைந்துள்ளன.
அரசியல் எல்லைகள்
இந்தியாவிற்கு கிழக்கே உள்ள மலைத்தொடர்கள் இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கிறது.
இந்தியாவின் அண்டைநாடுகள்
மேற்கில் பாகிஸ்தான், வடமேற்கில் ஆப்கானிஸ்தான், வடகிழக்கில் நேபாளம், பூடான் மற்றும் சீனா, கிழக்கில் வங்காளதேசம் மற்றும் மியான்மர்.
இந்தியா தென்மேற்கு திசையில் அரபிக் கடலும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வங்காளவிரிகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளது.
இந்திய தீபகற்பத்தின் தென் முனையாக கன்னியாகுமரி அமைந்துள்ளது. இந்தியாவுக்கு தெற்கில் உள்ள இலங்கையை பாக் நீர்ச்சந்தி பிரிக்கிறது. இந்துகுஷ் மற்றும் காரகோரம் மலைகளைக் கொண்ட இமயமலைத் தொடர்கள் இந்தியாவின் வடக்கு இயற்கை எல்லையாக அமைந்து உள்ளன.
வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளும், அரபிக்கடலில் உள்ள இலட்சத் தீவுகளும் இந்திய யூனியன் பிரதேசங்களாக அமைந்துள்ளன.
நிலவியல் அமைப்புகள் இமயமலை
இமயமலை ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிடையே பரவியுள்ளது.
உலகில் உள்ள மலைகளில்  வயது குறைந்த மடிப்பு மலைகளில் ஒன்றான இமாலயம் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு, வட கிழக்குத் திசைகளைச் சுற்றி அமைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள ஆரவல்லி மலைத்தொடர் உலகின் பழமையான மலைத் தொடர்களுள் ஒன்றாகும்.
இமயமலை சுமார் 2400 கி.மீ. நீளமும், 240 முதல் 330கி.மீ. அகலமும் கொண்டது.
மேற்கு இமயமலைகள்
 மத்திய இமயமலைகள்
 கிழக்கு இமயமலைகள்
மேற்கு இமயமலைகள்
வடமேற்கு இந்தியாவிலுள்ள பாமீர் முடிச்சிலிருந்து கிழக்காக காரகோரம் மலைகள் செல்கின்றன.
தென்மேற்கு காஷ்மீரில் அமைந்துள்ள மேற்கு இமயமலைகள் ஆப்கானிஸ்தானிற்கும், சீனாவிற்கும் இடையில் இந்திய எல்லைகளாக அமைந்துள்ளன.
மத்திய இமயமலைத் தொடர்கள்
1.  ஹிமாத்ரி (Greater Himalayas): இதன் சராசரி உயரம் 6000 மீ. இதில் தான் எவரெஸ்ட், K2, கஞ்சன் ஜங்கா போன்ற உலகின் உயரமான  சிகரங்கள் அமைந்துள்ளன.
2. இமாச்சல் (Lesser Himalayas): வடக்குத் தொடருக்கு தெற்கே அமைந்துள்ள இமயமலைப் பிரிவு.இதன் சராசரி உயரம் சுமார் 1500-5000 கி.மீ.
3. ஷிவாலிக் குன்றுகள்: தெற்காக அமைந்துள்ள வெளிப்புற இமயமலைப் பகுதி அல்லது ஷிவாலிக். சராசரி உயரம் 900-1200 மீ. இதன் கீழ்பகுதியில் கங்கைச் சமவெளி அமைந்துள்ளது.
கிழக்கு இமயமலைகள்
இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள இம்மலைகள் பூர்வாச்சல் என்று அழைக்கப்படுகிறது.
வடக்கில் பட்காய் மற்றும் நாகா குன்றுகளும், தெற்கில் மீசோ குன்றுகளும் கிழக்கு இமயமலையில் உள்ளன.
வட இந்தியச் சமவெளி
ராஜஸ்தான் சமவெளி
பஞ்சாப்  ஹரியானா சமவெளி
கங்கைச் சமவெளி
பிரம்மபுத்ரா சமவெளி
ராஜஸ்தான் சமவெளி :  ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
பஞ்சாப்-ஹரியானா சமவெளி : பஞ்சாப்  ஹரியானா சமவெளி, சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளால் ஏற்படும் படிவுகளால் ஆனது.
கங்கைச் சமவெளி : யமுனா ஆற்றிலிருந்து வங்கதேசம் வரை உள்ள  1500 கி.மீ நீளத்தில் உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது.
ராம்கங்கா, கோமதி, காக்ரா, காண்டக், கோசி, யமுனா போன்ற நதிகள் வடக்கிலிருந்தும், சோன், சம்பல், பீட்வா போன்ற நதிகள் தெற்கிலிருந்தும் உருவாகும் துணையாறுகள் மலைகளிலிருந்தும் பீடபூமிகளிலிருந்தும் அதிக அளவில் மணலையும் வண்டலையும் படிய வைத்து மிகப்பெரிய சமவெளியை உருவாக்குகின்றன.
பிரம்மபுத்ரா சமவெளி : வடகிழக்கிலுள்ள அஸ்ஸாம் குன்றுகளிலிருந்து பல துணையாறுகள் தோன்றி பிரம்மபுத்ரா ஆற்றுடன் இணைந்து, வண்டல் விசிறிகளை ஏற்படுத்துகின்றன.
களிமண் நிறைந்த சதுப்பு நிலங்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. வண்டல் விசிறிகளால் தராய் எனப்படும் சதுப்பு நிலக்காடுகளை உருவாகியுள்ளன.
தார் பாலைவனம்
இந்தியாவின் மேற்குப்பகுதியில் பெரிய இந்தியப் பாலைவனம் (Great Indian Desert) என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் அமைந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் தார்ப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
தீபகற்ப பீடபூமி
வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ள தீபகற்ப பீடபூமி  முக்கோண வடிவம் கொண்டது.
தீபகற்ப பீடபூமியை  சுற்றி வடக்கே ஆரவல்லி, விந்தியா, சாத்பூரா, ராஜ்மகால் மலைத் தொடர்களும், மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைகளும், கிழக்கே கிழக்கு தொடர்ச்சி மலைகளும் அமைந்துள்ளன.
நர்மதை ஆறு தீபகற்ப பீடபூமியை இரு சமமற்ற பகுதிகளாகப் பிரிக்கின்றது. இதன் வடபகுதியை மத்திய உயர் நிலங்கள் என்றும், தென் பகுதியை தக்காண பீடபூமி என்றும் அழைப்பர்.
மத்திய உயர் நிலங்கள்
மாளவ பீடபூமி
பண்டல்காண்ட் உயர்நிலம்
பகல் கண்ட்
சோட்டாநாகபுரி பீடபூமி
தக்காண பீடபூமி
வடமேற்கு திசையில் விந்திய சாத்பூரா மலைத்தொடர்களையும் வடக்கில் மகாதேவ் மற்றும் மைக்கலா மலைத்தொடர்களையும் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் எல்லை களாக கொண்டுள்ளது.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆனைமுடியாகும். (2695மீ)
தக்காண பீடபூமியின் உயர்ந்த சிகரத்தில்தான் நீலகிரி மலை அமைந்துள்ளது.
கடற்கரைப் பகுதி
மேற்குக் கடற்கரைச் சமவெளியின் வடபகுதி கொங்கண் கடற்கரை எனவும், தென்பகுதி மலபார் கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது. மேற்கு கடற்கரையில் அரபிக் கடல் அமைந்துள்ளது.
கிழக்குக் கடற்கரை கொரமண்டல் கடற்பகுதி  என அழைக்கப்படுகிறது. கிழக்குக் கடற்கரையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
இந்தியத் தீவுகள்
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் வங்காள விரிகுடாவிலும் இலட்சத் தீவுகள் அரபிக் கடலிலும் அமைந்துள்ளன.
100 வடக்கு கால்வாய்  (10 Degree Channel) அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து பிரிக்கிறது.
அந்தமான் நிகோபாரின் தென்கோடி முனை 'இந்திரா முனை’ என அழைக்கப்படுகிறது.
அரபிக் கடலில் அமைந்துள்ள இலட்சத்தீவில் 36 தீவுகள் உள்ளன. இதில் 11 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர்.
லேக்டிவ்ஸ், மினிக்காய் மற்றும் அமினிதிவி தீவுக் கூட்டங்கள் 1973-ம் ஆண்டு  முதல் இலட்சத் தீவுகள் என அழைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய சிகரங்களின் உயரங்கள்
சிகரம்                                   உயரம் (மீ)
மவுண்ட் கே-2                         8611
கஞ்சன் ஜங்கா                      8586
நந்தா தேவி                            7817
சால்டோரோ                           7742
காங்டு                                        7090
ரியோ புர்கில்                        6816
சரமதி                                        3841
சந்தக்பூ                                    3636
கயாங்க்                                   3114
ஆனைமுடி                            2695
தொட்டபட்டா                       2636

No comments:

Post a Comment