Friday 24 January 2014

தமிழக மாவட்டங்கள் -5

தமிழக மாவட்டங்கள் -5
Posted Date : 17:12 (17/12/2013)Last updated : 17:12 (17/12/2013)
சென்னை மாவட்டம்
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி சென்னை நகரம் உருவெடுத்தது. 'சென்னப்ப நாயக்கர் என்பவருக்குச் சொந்தமாக இருந்த பகுதி ஆங்கிலேயர் வசம் வந்தபோது, சென்னப்பட்டணம் காலப்போக்கில் 'சென்னை’ என மாறியது. 1659-ல் முதல் 1996 வரையில் மெட்ராஸாக இருந்த நகரம், அதன்பிறகு 'சென்னை’ என பெயர் மாற்றம் பெற்றது.
முதனிலைத் துறை
பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் போன்றவை சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரிகள்.
சென்னைக்கு வீராணம் குடிநீர்த் திட்டம் (1967), தெலுங்கு கங்கைத் திட்டம் (அ) கிருஷ்ணா நதிநீர்த் திட்டம் (1983), கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் குடிநீர் கிடைக்கிறது.
இரண்டாம் நிலைத் துறை
ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி துறையில் புகழ்பெற்று 'இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் : வள்ளுவர் கோட்டம், மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, கிண்டி பாம்புப் பண்ணை, எழும்பூர் அரசு அருங்காட் சியகம், ரிப்பன் கட்டிடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. வடபழனி முருகன் கோயில், அஷ்டலட்சுமி கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், ஆயிரம் விளக்கு மசூதி, சாந்தோம் தேவாலயம்
தமிழகத்தின் அதிக மக்கள் நெருக்கமும் இந்தியாவின் நான்காவது அதிக மக்கள் தொகையும் கொண்ட மாநகரம் சென்னை.
தமிழ்நாட்டில் முற்றிலும் நகரமயமான மாவட்டம் சென்னை மாவட்டம்.
கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாகக் கருதப்படுகிறது.
'கோலிவுட்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் சென்னை யின் கோடம்பாக்கம், தமிழ்த் திரைப்படங்களின் தலைநகர்.
உலகின் இரண்டாவது நீண்ட அழகிய கடற்கரை, மெரினா.  இந்தியாவின் சிறந்த துறைமுகம்.

திருவள்ளூர் மாவட்டம்
 பல்லவர், கோல்கொண்டா, மொகலாயர், ஃபிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.
1968-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரையில் இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தபோது, 1997 ஜனவரி 1-ம் தேதி உருவாக்கப்பட்டது திருவள்ளூர் மாவட்டம்.
தொண்டை மண்டலத்தில் இருந்த இந்தப் பகுதி முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்ததால், அதன் வரலாறு இதற்கும் பொருந்தும்.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, மிளகாய், கடலை, எள் போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண் பயிர்கள்.
இம்மாவட்டத்திலுள்ள சத்தியமூர்த்தி சாகர் எனப்படும் பூண்டி நீர்த்தேக்கம், சோழவரம் ஏரி, புழல் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி போன்றவை சென்னைக்குக் குடிநீர் வழங்குகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர், எண்ணூர் அனல்மின் நிலையம், ஆவடி டேங்க் தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மாதவரம் பால் பண்ணை போன்றவை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள்: தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற 32 சிவத் தலங்களுள் ஒன்றான திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில், சிவபெருமான் சயனக் கோலத்தில காட்சி தரும் இந்தியாவின் ஒரே கோயிலான சுருட்டப் பள்ளி, 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் போன்றவை இம்மாவட்டத்தில் உள்ளன.
காரைக்கால் அம்மையாரால் பாடப்பட்ட திருவாலங்காடு சிவன் கோயில் (சிவபெருமானின் 5 சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது), பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் போன்றவை இம்மாவட்டத்தில் உள்ளன.
பட்டினத்தாரின் சமாதி திருவொற்றியூரில் அமைந்துள்ளது.
தமிழ்ப் படைப்பு ஒன்றின் சிறப்பை எடுத்துக்காட்ட 70 தமிழ் அறிஞர்கள் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகத் திருமண் 'பழையனூர்.’
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி இம்மாவட்டத்தில் உள்ளது.
குறிப்பிடத்தக்கவர்கள் : இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணன், பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையார், பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் போன்றோர் தோன்றிய மாவட்டம்.
தமிழக எல்லைப் போராட்டத்தின் போது திருத்தணியை தமிழகத்தோடு இணைக்கப் போராடிய ம.பொ.சி.யின் பெயரும் இம்மாவட்ட வரலாற்றோடு இணைந்துள்ளது.

 காஞ்சிபுரம் மாவட்டம்
 'பல்லவர்களின் தலைநகர்’ என்ற பெருமையைப் பெற்ற காஞ்சிபுரம், சோழ விஜயநகர முகலாய அரசர்கள் ஆட்சி செய்த பூமி. அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை வரை நீள்கிறது. 1968-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டமாக உருவாக்கப்பட்டதற்கு பிறகு, செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டமாக மாறியது. 1997, ஜூலை 1-ம் தேதி செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டம் பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்கள் உருவாகின.
முதனிலைத் துறை
நெல், கரும்பு,கேழ்வரகு, கம்பு, காய்கறிகள் போன்றவை முக்கியப் பயிர்கள்.
இரண்டாம் நிலைத் துறை
போர்டு, ஹுண்டாய், நிஸான் போன்ற கார் தொழிற்சாலைகளும் நோக்கியா, சாம்சங் போன்ற செல்போன் மின்னணு தொழிற் சாலைகளும், செயின்ட் கோபெய்ன் கண்ணாடி தொழிற்சாலையும், தோல் தொழிற்சாலை மற்றும் இருங்காட்டுக்கோட்டை தொழிற் பேட்டை போன்றவை இம்மாவட்டத்திற்கு தொழில் வளம் சேர்க்கின்றன.  காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் உலகப்புகழ் பெற்றவை.
 
மூன்றாம் நிலைத் துறை
யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் கால மாமல்லபுரச் சிற்பங்கள் தென்னிந்திய சிற்பக்கலைக்கு முன்னோடியாகும்.
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மற்றும் அணுமின் நிலையம் இங்குள்ளது.
சுற்றுலா தலங்கள் : மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேடந்தாங்கல், கரிக்கிலி, வி.ஜி.பி. தங்கக் கடற்கரை, திருக்கழுக்குன்றம்,  காஞ்சிபுரம் அண்ணா நினைவகம் முட்டுக்காடு படகு சவாரி, முதலைப்பண்ணை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்   ஆகியவை இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.
வழிபாட்டுத்தலங்கள் : கோயில்களின் நகரம்: காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், குமரக்கோட்டம் ஆகிய கோயில்கள், அச்சிறுப்பாக்கம், குன்றத்தூர், திருவிடைச்சுரம், திருப்போரூர், திருமாற்பேறு, திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், திருமேற்றளி, திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், மகாபலிபுரம் குடைவரைக் கோயில்கள், மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்.
குறிப்பிடத்தக்கவர்கள் ஸ்ரீ ராமானுஜர் (திருபெரும்புதூர்), பேரறிஞர் அண்ணா (காஞ்சிபுரம்) இம்மாவட்டத்தில் பிறந்த புகழ்பெற்ற பெரியோர்கள்.

 வேலூர் மாவட்டம்
 கோட்டையும், சிறைச் சாலையும் தான் இதன் அடையாளங்கள். 1806-ல் நடைபெற்ற 'சிப்பாய் கலக’த்துக்கு விதை போட்டதே வேலூர்தான்.
பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சியாளர்கள், மராத்தியர், கர்நாடக நாவப்புகள் என பல்வேறு ஆட்சியின் கீழ் இது இருந்தது. ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாகவும் இருந்தது.
வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த வேலூர், 1989, செப்டம்பர் 30-ம் தேதி 'வேலூர் மாவட்டம்’ என மாறியது. 1866ம் ஆண்டு உருவான வேலூர் நகராட்சி 2008ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது.
முதனிலைத் துறை
சேப்பங்கிழங்கு உற்பத்தியில் இம்மாவட்டம் பெரிதும் புகழ் பெற்றது.
இம்மாவட்டத்திலுள்ள மேலப் பூரில் கரும்பு ஆராய்ச்சி நிலையமும் விரிஞ்சிபுரத்தில் விவசாய ஆராய்ச்சி நிலையமும் அமைந்துள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1932ம் ஆண்டு ராணிப்பேட்டையில் தொடங்கப்பட்டு, தற்பொழுது தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் உள்ள IVPM எனப்படும் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையம் (Institute of Veterinary Preventive Medicine) ஆயிரம் பிறை கண்ட அரசு நிறுவனமாகும்.
இரண்டாம் நிலைத் துறை
சிட்கோ தொழிற்பேட்டை (காட்பாடி), சிப்காட் தொழிற்பேட்டை (ராணிப்பேட்டை), சிட்கோ தொழிற் பேட்டை (அரக்கோணம்) என 3 தொழிற்பேட்டைகள் இம்மாவட்டத் தில் உள்ளன.
இ.ஐ.டி.பாரி, ஙிபிணிலி போன்ற முக்கியத் தொழில் நிறுவனங்களும்  ரசாயனத் தொழிற்சாலைகளும் ராணிப்பேட்டையில் அமைந்துள் ளன.
ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணி யம்பாடி தோல் தொழிற்சாலைகள் குறிப்பிடத்தக்கவை.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் : வேலூர் கோட்டை (சின்னபொம்மி நாயக்கர் கட்டியது), முத்துமண்டபம், ஏலகிரிமலை, அமிர்திகாடு, ஜவ்வாது மலை, வைணுபாப்பு தொலைநோக்கி மையம் (காவலூர்). வேலூர் ஜல கண்டேஸ்வரர் கோயில் (விஜயநகர மன்னர்கள் கட்டியது), இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலயம், வள்ளிமலைக் கோயில், மகாதேவமலை.
ஆசியாவிலேயே புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை (ஐடா ஸ்கடரால் தோற்றுவிக்கப்பட்டது); உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையம்.
ஆம்பூர் பிரியாணி, ஆற்காடு மக்கன்பேடா போன்றவை புகழ் பெற்றவை.
அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையை அடுத்து, கொடிய சிறையாக பழைமை வாய்ந்ததாக இருக்கிறது வேலூர் சிறை.

 திருவண்ணாமலை மாவட்டம்
 அண்ணாமலை தீபத்துக்குப் புகழ்பெற்ற சித்தர் பூமியான இது, தொண்டை நாட்டின் ஒரு பகுதி.
பல்லவர்களின் ஆட்சிக்குப் பிறகு சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.  'சம்புவராயர்’ என்ற குறுநில மன்னர்களைத் தொடர்ந்து, விஜயநகர நாயக்கர்கள், ஆற்காட்டு நவாப் என மாறி, ஆங்கிலேயரின் கைக்கு வந்தது. சுந்திரத்துக்குப் பிறகு இருந்த வடஆற்காடு மாவட்டம், 1989-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, 'திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம்’ எனவும், 'வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம்’ எனவும் பிரிக்கப்பட்டன. பிறகு, 1996-ல் 'திருவண்ணாமலை மாவட்டம்’ எனப் பெயர் மாறியது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, கேழ்வரகு, நிலக் கடலை, எள் போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண் பயிர்கள். களம்பூர் பொன்னி அரிசி பெரிதும் புகழ் பெற்றது.
1958ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை இம்மாவட்டத்தின் முக்கிய அணையாகும்.
சாத்தனூர் முதலைப் பண்ணை புகழ்பெற்றது.
இரண்டாம் நிலைத் துறை
செய்யாறுக்கு அருகில் அரசுக்குச் சொந்தமான பெரிய அரிசி ஆலை அமைந்துள்ளது.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும்.
பட்டு நெசவு இம்மாவட்டத்தின் இரண்டாவது முக்கியத் தொழில்.
கைத்தறிப் பட்டு நெசவும், விசைத்தறிப் பருத்தி ஆடைகளும் இம்மாவட்டத்தில் நெய்யப் படுகின்றன.
கமண்டல நாகநதிக் கரையில் அமைந்துள்ள ஆரணி பட்டு நெசவுக்கு தேசியப் புகழ்பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள்: திருவண்ணா மலை அண்ணா மலையார் கோயிலும் (பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம்), ரமண மகரிஷி ஆசிரமமும் உலகப் புகழ் பெற்றவை.
அண்ணாமலையார் கோயில் கோபுரம், 66 மீட்டர் உயரத்தில், 13 அடுக்குகளைக் கொண்டது.
2609 மீட்டர் உயரம் உள்ள இம்மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் 16 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மலைப் பாதையைச் சுற்றி வரும் கிரிவல வழிபாடு புகழ்பெற்றது.
இம்மாவட்டத்தில் காணப்படும் ஜவ்வாது மலை தொடர்ச்சியில் பீமன் அருவி, கோமட்டேரி அருவி போன்றவை அமைந்துள்ளன.
ஆரணிக்கு அருகிலுள்ள திருமலைக் குன்றின் மேல் 22வது சமண தீர்த்தங்கரரான நேமிநாதரின் 18 அடி உயர சிலை அமைந் துள்ளது.
குறிப்பிடத்தக்கவர்கள் : திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் (திருவண்ணாமலையில் பிறந்தவர்), சி.பி.இராமசாமி அய்யர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

No comments:

Post a Comment