Saturday 25 January 2014

ஏழு உலக அதிசயங்கள்

ஏழு உலக அதிசயங்கள்
Posted Date : 12:12 (11/12/2013)Last updated : 12:12 (11/12/2013)
பழங்கால அதிசயங்கள்
காபூல் பிரமிட்.
 பாபிலோன் தொங்கும் தோட்டம்.
 ஒலிம்பியாவில் உள்ள ஜூயுஸ் சிலை.
 எபிஸஸ் அர்டிமிஸ் தேவாலயம்
 ஹாலிகர் நஸ்ஸார் கல்லறை.
 ரோட்ஸின் கொலோஸஸ்.
 அலெக்சாண்டிரியா தீப ஸ்தம்பம்.
இடைக்கால அதிசயங்கள்
 ரோமன் கொலோஸியம்.
 அலெக்சாண்டிரியாவின் குகைகளும் சுரங்கப் பாதைகளும்.
 சீனப் பெருஞ்சுவர்.
 கற்களால் ஆன வட்டங்கள்.
 போர்தீலியன் கோபுரம்.
 பைசா நகர கோபுரம்.
 கான்ஸ்டான்டினோபிளின் ஹசியா சோஃபியா.
தற்கால அதிசயங்கள்
2001-ம் ஆண்டு நியூ 7 வொண்டர்ஸ் அறக்கட்டளையை பெர்னார்டு வெபர் என்பவர் தொடங்கினார். தொலைபேசி வழியாகவும், இணையம் வழியாகவும் பதிவு செய்த வாக்குகளைக் கொண்டு 2007-ம் ஆண்டு லிஸ்பன் நகரில் வெளியிடப்பட்ட ஏழு உலக அதிசயங்கள் (எகிப்து ஜிஸா பிரமிடுக்கு கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டது)
 தாஜ்மஹால், இந்தியா
 சிச்சன் இட்சா, மெக்சிகோ.
 கிறைஸ்ட் டீமர் சிலை, பிரேசில்.
 கோலோசியம், ரோம்.
 
 மச்சு பிச்சு, பெரு.
 பெட்ரா, ஜோர்டான்.
 சீனப் பெருஞ்சுவர்.
உலக அதிசயங்கள் - சில விளக்கங்கள்
 கி.மு. 2-ம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அலெக்சாண்டிரியனின் காலத்தில் பழங்காலத்தின் ஏழு அதிசயங்கள் வரையறுக்கப் பட்டன.
 பழங்காலத்தின் ஏழு அதிசயங் களின் பட்டியலை உருவாக்கிய வர்: சிடோவின் ஆன்டிபட்டரே.
 கிரேக்கர்கள் எண் 7-ஐ புனித மானதாகவும், ராசியானதாகவும் கருதியதால் உலக அதிசயங்கள் ஏழாகத் தொகுக்கப்பட்டன.
 எகிப்திய பிரமிடுகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.
 பாபிலோன் தொங்கு தோட்டம் கி.மு. 6-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
 பாபிலோன் தொங்கும் தோட்டத்தை அமைத்த அரசர்: இரண்டாம் நெபுகாத் நாஸர்.
 ஆர்டிமிஸ் ஆலயம் வேட்டை மற்றும் நிலவுக்கான கிரேக்க தெய்வமான ஆர்டிமிஸுக்காக எழுப்பப்பட்டது.
 கி.பி. 3-ம் நூற்றாண்டில் கோத்துகள் படையெடுத்தபோது ஆர்டிமிஸ் ஆலயம் தகர்க்கப்பட்டது.
 ஆர்டிமிஸ் ஆலயத்தின் துண்டுப் படிமங்கள் லண்டன், பிரிட்டிஷ் மியூஸியத்தில் உள்ளன.
 கலோஸஸ் ஆஃப் ரோடிஸ் என்பது கிரேக்கக் கடவுளான ஹூலியஸ்ஸின் 32 அடி உயர வெண்கலச் சிலை.
 கிரேக்க நாட்டில் ரோடிஸ் துறைமுகத்தில் கி.மு. 305-293-ல் ஹூலியஸ் சிலை உருவாக்கப்பட்டது.
 தற்கால உலக அதிசயங்கள் எவை என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.
 தற்கால உலக அதிசயங்கள் பட்டியல், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

No comments:

Post a Comment