Friday 24 January 2014

இந்திய சினிமா 100 - பகுதி 1

இந்திய சினிமா 100 - பகுதி 1
Posted Date : 11:12 (14/12/2013)Last updated : 11:12 (14/12/2013)
- துரை.ராஜசேகரன் - பிலிம் பித்தன்
இந்திய திரைப்படங்கள்
லகில் அதிக எண்ணிக்கையில் சினிமாக்களைத் தயாரிக்கும் நாடு  இந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்திய சினிமா தயாராகிறது. இதை Indian movie is one has many talkies  என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் காட்டப்பட்ட முதல் சினிமா
உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள 'ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, ஆறு மாதத்திற்குள்ளாகவே, லூமியர் சகோதரர்கள்  இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஹோட்டலில் திரையிட்டுக் காட்டினர்.
இந்தியாவில் குறும்படங்கள்
1896 ல் இந்தியாவில் முதல் சினிமா திரையிடப்பட்ட நாள் முதல் 1913 வரை வெளிநாட்டுப்படங்களே திரையிடப்பட்டு வந்தன. இந்தியாவின் முதல் குறும்படமான A Dancing Scene ஐ  இயக்கியவர், ஹிராலா சென், 1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவர் தனது முதல் படத்தை ஒரு ஆங்கிலேயரிடமிருந்து இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே எடுத்துள்ளார்.
மௌனப்பட முயற்சிகள்
1896 முதல் 1913 வரை மௌனப்பட உருவாக்கத்தில் சாவேதாதா, F.B. தானாவாலா, ஹரிலால், ஸ்டீவன்சன் போன்ற பலர் மௌனப்பட உருவாக்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அதில் வென்றவர் தாதா சாகேப் பால்கே.
இந்தியாவின் முதல் திரையரங்கம்
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907 இல்ஜே.எஃப். மதனால் கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் கதைப்படம்
இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக்,மே 19, 1912 இல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது. இதை இயக்கியவர் தோர்னே.
இந்திய சினிமாவின் தந்தை
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கபடும் 'தாதாசாகேப்பால்கே' அவர்களின் 'ராஜா ஹரிச்சந்திரா' (1913 மே 3 ஆம் தேதி) தான் இந்தியா வின் முதல் முழு நீளத் திரைப்படம்.
மதன் தியேட்டர்ஸ்
ஜாம்ஷெட்ஜி ப்ராம்ஜி மதன் என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தியேட்டர் கலைஞர் தனது எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் வரிசையாக நிறைய குறும்படங்களைத் தயாரித்தார். அதுதான் பின்னாளில் மதன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் புதிய தோற்றமாக 1918 இல் பரிணமித்தது.
இந்தியாவில் திரைப்படத் தணிக்கை
1920இல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூனில் முதல் திரைப்பட தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிறகு லாகூரில் 1927 இல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட முதல் இந்தியப் படம்
பாம்பே கோஹினூர் ஸ்டூடியோஸ் தயாரித்த பகத் விதூர் (1921) என்ற படம் தான் தடை செய்யப்பட முதல் இந்தியப் படமாகும். ஸ்டுடியோவின் உரிமையாளர் துவாரகா தாஸ் நரந்தாஸ் சம்பத் அப்படத்தின் பிரதான வேடமான மகாத்மா காந்தி போன்ற தோற்றத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அப்படத்தைச் சென்சார் தடை செய்தது. இருப்பினும் வேறு சில மாநிலங்களில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.
இந்தியாவில் முதல் முழு நீள வரலாற்றுப் படம்
பாபுராவ் பெயிண்டர் இயக்கிய சிங்காகாத் (1923) இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இப்படம் சக்கரவர்த்தி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவில் முதல் சினிமா இதழ்
1927  இல் மூவி மிரர் ஆங்கில மாத இதழை எஸ். கே. வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேக இதழ்.
திரைப்படத்தில் முதல் முத்தக்காட்சி
1929ல் வெளியான 'எ த்ரோ ஆப் டைஸ்’ என்ற படத்தில் முதன் முதலாகத் திரையில் முத்தக்காட்சி இடம் பெற்றது. சாரு ராயும் சீதா தேவியும் முதன்முதலாகத் திரையில் முத்தமிட்டுக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத்தில் முத்தத்துக்குத் தடை இல்லை.
இந்தியாவில் முதல் பேசும் படம்
இந்தியாவின் முதல் பேசும்படம்: மார்ச் 14, 1931 இல், இம்பீரியல் மூவிடோன் தயாரிப்பில் வெளியான ஆலம் ஆரா (ஓடும் நேரம் : 124 நிமிடங்கள்). இயக்கியவர் 'அர்தேஷிர் இரானி’. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்டது.
இந்தியாவில் முதல் திரை இசைப் பாடல்
ஆலம் ஆரா இந்தியாவின் முதல் திரையிசைப் பாடல்களை அளித்தது என்றாலும் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாடல்களுக்குத் தபலா, ஹார்மோனியம் மற்றும் வயலின் ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் முதல் ஆங்கில பேசும் படம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில பேசும் படம், ஹிமான்ஷ§ ராய் இயக்கிய  கர்மா (1933). லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச் பெவிலியனில் திரையிடப்பட்ட இப்படம் ஆங்கில பத்திரிகைகளால் வெகுவாகப் புகழப்பட்டது.
இந்திய திரைப்படத்தில் நீண்ட முத்தக்காட்சி
1933 இல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷ§ ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்திய திரையில் முதல் ஆங்கிலப் பாடல்
Now the Moon Her light Has Shed' என்று தேவிகா ராணி, 'கர்மா’ (1933) படத்துக்காகப் பாடிய பாடல் தான் இந்தியத் திரையில் முதல் ஆங்கிலப் பாடலாகும். எர்னெஸ்ட் ப்ராதர்ஸ்ட் என்பவர் இதற்கு இசையமைத்துஇருந்தார்.
இந்திய திரைப்படத்தில் முதல் பின்னணிப் பாடல்
மேஸ்ட்ரோ ராய் சந்த் போரல், தூப் சாவோன் (1935)  என்ற படத்தில் முதன்முதலாகப் பின்னணி பாடும் முறையை அறிமுகப் படுத்தினார். 'மே குஷ் ஹோனா சாஹூ' என்ற அந்தப் பாடலை பாருல் கோஷ் மற்றும் சர்கார் ஹரிமதியுடன் பெண்கள் குழுவினர் பாடியிருந்தனர்.
இந்திய திரைப்படத்தில் முதல் இரட்டை வேடம்
ஒரே காட்சியில் இருவர் தோன்றும் (இரட்டை வேடம்) முதல் படம் துருவா வெளியான ஆண்டு 1935.  ஒருவரே  ராணியாகவும், கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில்  தோன்றிய காட்சி  இந்தப் படத்தில் இடம்பெற்றது.
இந்தியாவில் காந்தி பற்றிய முதல் டாக்குமெண்ட்ரி
இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற ஆவண படம் (டாக்குமெண்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment