Friday 21 August 2015

THE STATES IN WHICH TROPIC OF CANCER PASSES THROUGH: (FROM EAST TO WEST)

THE STATES IN WHICH TROPIC OF CANCER PASSES THROUGH:
(FROM EAST TO WEST)

MIZORAM, TRIPURA, WESTBENGAL, MADHYAPRADESH, CHATTISGARH, RAJASTAN, GUJARAT

CODEWORD: MISS. TRISHA WEDS MACHAN (மச்சான்) RAG

MISS - MIZORAM
TRISHA - TRIPURA
(WE)DS - WESTBENGAL
MACHAN - (MA) -MADHYAPRADESH, (CHA) - CHATTISGARH
RAGU - (RA)-RAJASTAN . (GU) - GUJARAT

THEN JUST INCLUDE JHARKAND ONLY .

எனக்குப் பிடித்த ஐன்ஸ்டீனின் வரிகள்!

எனக்குப் பிடித்த ஐன்ஸ்டீனின் வரிகள்!

பலவீனமானவர்கள் பழிவாங்குவார்கள்!
வலிமையானவர்கள் மன்னிப்பார்கள்!
அறிவாளிகள் புறந்தள்ளுவார்கள்!

எளிமையாக விளக்கத்தெரியவில்லை என்றால் நீங்கள் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்!

மீனின் திறமையை அதன் மரம் ஏறும் திறனை வைத்தா முடிவு செய்வது



எண்ணியதை அடையாமல்
இனிநானு ஓய்வதில்லை ...
கடலேழு வற்றினாலும்
இவன்தேடல் தோய்வதில்லை ...

விரையில்நான் வெல்லப்போறேன்
அதுமட்டும் நிச்சயம் ...
இதுஎந்தன் தமிழ்மீது
இவன்செய்த சத்தியம் ..

மரணமும் வெட்க்கப்படவேண்டும் ! உலகறிந்த மனிதனை விழுங்கிவிட்டோமென்று    





இந்தியா முக்கிய நிகழ்வுகள்:

இந்தியா முக்கிய நிகழ்வுகள்:

1707 அவுரங்கசீப் இறப்பு
1746-48 முதல் கர்நாடகப்போர்
1749-54 இரண்டாம் கர்நாடகப்போர்
1756-63 மூன்றாம் கர்நாடகப்போர்
1757 பிளாசிப்போர்
1761 மூன்றாம் பானிபட் போர்.
1764 பக்சார் போர்
1767-1799 மைசூர்போர்
1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
1829 சதி தடை சட்டம்
1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்
1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,
1875 ஆரிய சமாஜம்,பிரம்மஞான சபைத் தொடக்கம்
1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்
1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
1905 வங்காளப் பிரிவினை
1906 முஸ்லீம் லீக் தோற்றம்
1907 சூரத் பிளவு
1909 மின்டோ மார்லி சட்டம்,
1911 ஆஷ் சுட்டுக் கொலை
1914 முதல் உலகப்போர் தொடக்கம்
1916 தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை, நீதிக்கட்சி தொடக்கம்
1917 ஆகஸ்ட் அறிக்கை
1918 முதல் உலகப்போர் முடிவு
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை, மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,
ரௌலட் சட்டம்
1920 ஒத்துழையாமை இயக்கம்,கிலாபத் இயக்கம்
1922 செளரி சௌரா சம்பவம், ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
1923 சுயராஜ்ஜிய கட்சி
1925 சுயமரியாதை இயக்கம்
1927 சைமன் குழு அமைத்தல்
1928 சைமன் குழு இந்தியா வருகை
1929 லாகூர் காங்கிரஸ்,பூரண சுயராஜ்யம்
1930 உப்புசத்தியகிரகம்(சட்ட மறுப்பு இயக்கம்)முதல் வட்டமேசை மாநாடு
1931 காந்தி இரவின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 பூனா ஒப்பந்தம்,மூன்றாம் வட்டமேசை மாநாடு,வகுப்புவாத அறிக்கை
1935 இந்திய அரசு சட்டம்
1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை, ஆகஸ்டு நன்கொடை, தனிநபர் சத்தியாகிரகம்
1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை, வெள்ளையனே வெளியேறு
1945 இரண்டாம் உலகப்போர் முடிவு, ஐ.நா.சபை தோற்றம்
1946 காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
1947 மவுண்ட்பேட்டன் திட்டம்,
1948 காந்தியடிகள் மறைவு, இந்து தொழிலாளர் சட்டம்
1949 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
1950 இந்தியா குடியரசு அறிவிப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
1951 தோட்ட தொழிலாளர்கள் சட்டம்
1952 சுரங்கசட்டம்
1954 திருமணச்சட்டம்
1955 ஊனமுற்றோர் சட்டம், தீண்டாமை குற்றச்சட்டம்
1955,56 இந்து சட்ட மசோதா
1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
1961 வரதட்சனை கொடுமைச்சட்டம்
1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
1976 சம ஊதியச்சட்டம்
1990 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்
1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்

Trick

1. ## Indian States touching Pakistan ##
Mind Trick: (( “PARAG JAMMU GAYA” ))

Explaination of this trick
1. Pa = Punjab
2. Ra = Rajasthan
3. G = Gujarat
4. Jammu = J&K
___________________________
2. ## Indian State Touching Myanmar ##
Mind Trick ((“ARUNA MAMI”))
Explain this trick:
1. ARU = ARUNACHAL PARDESH
2. NA = NAGALAND
3. MA = MANIPUR
4. MI = MIJORAM
________________________________
3. ## Indian States Touching Bangladesh ##
Mind Trick (( “BAAP MERA AMITRA”))
Explanation of Trick:
1. Ba =Bangladesh
2. P =Pacchim (west) Bengal 3. Me = Meghalaya
4. A = Assam
5. Mi = Mizoram
6. Tra = Tripura
________________________________
4. ## Indian States Touching China ##
Mind Trick: (( “HI AAJ CHI USI” ))
1. Hi =Himachal Pradesh
2. Aa = Arunachal Pradesh
3. J = Jammu and Kashmir
4. Si = Sikkim
________________________________
5. ## Indian States Touching Bhutan ##
Mind Trick: (( “SAAB” ))
1. S = SIKKIM
2. A = ARUNACHAL PRADESH
3. A = ASSAM
4. B = BENGAL

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அப்துல் கலாம், இளைஞர்கள் ஏற்க வேண்டிய 10 சபதங்களை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அப்துல் கலாம், இளைஞர்கள் ஏற்க வேண்டிய 10 சபதங்களை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

1. நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாகஉழைத்துபடித்து, வாழ்க்கையின்லட்சியத்தைஅடையமுயல்வேன்.


3. எனதுவிடுமுறைநாள்களில், எழுதப்படிக்கத்தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.


4. எனதுவீட்டில்அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டு வைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.


5. மது, சூதாடுதல், போதைப்பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்தமுயல்வேன்.


6. துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.


7. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.


8. வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.


9. என்தாய், தாய்நாட்டை நேசித்து, பெண்குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.


10. நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.

விரையில்நான் வெல்லப்போறேன்

விரையில்நான் வெல்லப்போறேன்
-------------------------------------------------

மாற்றத்தை உருவாக்க
மணிக்கணக்காய் உழைக்கப்போகிறேன் ...
விடியவிடிய இனிமேல்நான்
வியர்வைக்குள்ளே பிழைக்கப்போகிறேன்...

இடர்களை களைந்துநான்
இமயம்பிளந்து முளைக்கப்போகிறேன் ...
எதுகைமோனை சந்தங்களாய்
இனிமேல்நான் தளைக்கப்போகிறேன் ...

ஓய்வுமுடிந்து மீண்டும்நான்
உழைப்பிற்கு திரும்பப்போகிறேன் ...
உதாசீனம் செய்தசில
ஓநாய்களை உமிழப்போகிறேன் ...

காலத்தின் கணக்கையென்
கைகொண்டு எழுதப்போகிறேன் ...
ஞாலத்தால் என்தடைகள்
பாலத்தை பிளக்கப்போகிறேன் ...

சிலந்திவலை என்பதைநான்
சிலகாலம் மறந்துவிட்டேன் ...
சிலந்திவலைக்குள் சிக்குண்ட
சில்வண்டாய் கிடந்ததுவிட்டேன் ...

இனிமேல்நான் எக்கனமும்
இளைப்பாரப் போவதில்லை ...
தடைதந்தால் இனிமேல்நான்
காலத்திற்கே தருவேன்தொல்லை ...

இன்றிருந்து என்னாட்டம்
இனிதாக தொடங்கியது ...
ஏளனம் செய்தோர்குரல்
எதிரொலியாய் முடங்கியது ...

அணுக்கரு உலையளவு
ஆற்றலேன்னுள் இருக்கிறது ...
அந்தஉலை சிலநாளாய்
அசதியில் கிடக்கிறது ...

எண்ணியதை அடையாமல்
இனிநானு ஓய்வதில்லை ...
கடலேழு வற்றினாலும்
இவன்தேடல் தோய்வதில்லை ...

விரையில்நான் வெல்லப்போறேன்
அதுமட்டும் நிச்சயம் ...
இதுஎந்தன் தமிழ்மீது
இவன்செய்த சத்தியம் ...

Important tricks to remember direct taxes and indirect taxes

Important tricks to remember direct taxes and indirect taxes
Direct taxes------ wipro.co.in
We---wealth tax
Pro---property tax
Co----corporatetax
In-----income tax

Indirect taxes---------excuse me
Ex------excise tax
Cu-------customtax
Se-------service tax
M-------market tax/vat
E--------entertainment tax

Place Of Harappa Civilisation (means its important places are situated)
TRICK :- GPRS
G – Gujrat P – Punjab R – Rajasthan S – Sind

Places Which Shows Different -2 Stages Of Growth Of Harappa Civilisation
TRICK :- HSBC
H – Harappa S – Suktagandor B – Banawali C – Chahundaro

Human being start to use
TRICK :- C.B.I (in sequence..means)
C – COPPER B - BRONZE I - IRON

Kings are belongs to Morya kings
TRICK : - ABC
A-AshoK(3) B-Bindusar(2) C-Chandrgupt

Many students confuse between these two in exams. Which one grows from bottom and which one from the top.
Here is a TRICK TO REMEMBER IT EASILY FOREVER.
STALAGMITE = IT HAS A LETTER ‘G’ IN IT = So it grows from GROUND
STALACTITE = IT HAS A LETTER ‘C’ IN IT = So it grows from the CEILING....

Countries Thru Which Prime Meridian Passes-
TRICK : - BSF GAME IN TOTO
B – Burkinafaso S – Spain F – France
G – Ghana A – Algeria M - Mali E - England
IN TOTO - Niger Toto

To Remember Great Lakes In Order From West To East
TRICK :- Super Man Helps Every One
Super - Superior Man - Michigan
Helps – Huron Every - Erie One – Ontario

OCEANS (LARGEST TO SMALLEST)
ACRONYM = P A I S A
PACIFIC, ATLANTIC, INDIAN, SOUTHERN, ARCTIC
NOTE: SOUTHERN OCEAN IS A NEW ADDITION ( IN 2000 )

Countries Around Caspian Sea-
TRICK :- TARIK
Tajakistan, Azarbejaan, Russia, Iran, Kazakh

Length F Boundary India Shares In Decreasing Order
TRICK :- BACHPAN
Bangladesh China Pakistan Nepal

Indian states touch boundary of Bhutan
TRICK :- "SAAB"
SIKKIM ARUNACHAL PRADESH ASSAM BENGAL

Indian states touch boundary of Myanmar
TRICK :- ARUNA MAMI
ARUNANCHAL NAGALAND MANIPUR MIZORAM

QUANTITATIVE APTITUDE

QUANTITATIVE APTITUDE
*******************************
1. If the radius of a circle is increased by 50%, its area is increased by
(A) 125% (B) 100% (C) 75% (D) 50%

2. A and B together can do a work in 10 days. B and C together can do the same work in 6 days. A and C together can do the work in 12 days. Then A, B and C together can do the work in
(A) 28 days (B) 14 days
(C)40/7 days (D)58/ 7 days

3. A bicycle wheel makes 5000 revolution in moving 11 km. The diameter of the wheel, in cm, is
(A) 35 (B) 55 (C) 65 (D) 70

4. Water is flowing at the rate of 3km/hr through a circular pipe of 20 cm internal diameter into a circular cistern of diameter 10m and depth 2 m. In how much time will the cistern be filled?
(A) 1 hr (B) 1 hr 40 min
(C) 1 hr 20 min (D) 2 hr s 40 min

5. The single discount equal to three consecutive discounts of 10%, 12% and 5% is
(A) 26.27% (B) 24.76%
(C) 9% (D) 11%

6. An article is marked 40% above the cost price and discount of 30% is allowed. What is the gain or loss percentage?
(A) 10 % gain (B) 5% gain
(C) 2% loss (D) 12% loss

7. The average age of 11 players of a cricket team is increased by 2 months when two of them aged 18 years and 20 years are replaced by two new players. The average age of the new players is
(A) 19 years 1 month (B) 19 years 6 month
(C) 19 years 11 month (D) 19 years 5 month

8. From a point P on a level ground, the angle of elevation of the top tower is 30º. If the tower is 100 m high, the distance of point P from the foot of the tower is:
(A) 100√3 (B) 100/ √3
(C) 200√3 (D) 200/√3

9. Walking at 5 km/hr a student reaches his school from his house 15 minutes early and walking at 3 km/hr he is late by 9 minutes. What is the distance between his school and his house?
(A) 5 km (B) 8 km (C) 3 km (D) 2 km

10. If 1720 is divided by 18, the remainder is
(A) 1 (B) 2 (C) 16 (D) 17

Explanatory answers:
*************************

SOLUTION Q1:
If radius of a circle = 100, then area of a circle = R2

Net it is increasing from 100 to 225 so there will be overall 125% increase.

SOLUTION Q2:
A and B together can do a work in 10 days.
B and C together can do the same work in 6 days.
A and C together can do the work in 12 days.

Let total work done = LCM of 10, 6 & 12 = 60 units
(A + B)’ s 1 day work = 60/ 10 = 6 units
(B + C)’ s 1 day work = 60 / 6 = 10 units
(C + A)’ s 1 day work = 60/ 12 = 5 units

Adding these three questions (2A + 2B + 2C)’s 1 day work = 21 units

(A + B + C)’s 1 day work = 21/2 units
So A + B + C will do whole work = 60 / (21/2) = 120/21 = 40/7 days

SOLUTION Q3:
A bicycle wheel makes 5000 revolution in 11km.
We know in 1 revolution, a wheel cover a circumference = 2R
So in 5000 revolution it will cover = 2R×5000 =
11km = 11000m = 11,00,000 cm
Hence R = 35 cm
Hence diameter = 70 cm

SOLUTION Q4:
Water is flowing at the rate of 3kmph through a circular pipe of 20 cm = 0.2 cm , internal diameter
So volume of water flows through pipe in an
hour = × 0.12×3000 m3 = 30
Volume of cistern = ×52×2 = 50
So time taken by pipe to fill cistern = Volume of cistern/ volume filled by pipe in an hour
= 50 /30 = 5/3 hr = 1hr 40 min

SOLUTION Q5:
100 90
100 88
100 95
net 100000 75240
100 75.24 so single discount = 100 – 75.24
= 24.76%

SOLUTION Q6:
Let cost price be 100 the marked price = 140 then discount = 140 ×0.7 = 98
So there is net 2% loss.

SOLUTION Q7:
Two players of age 18 yr & 20 yr is replaced i.e. total 38 year age is replaced. Total average age is increased by 2 months & so total age increased of two men is 11× 2 =

22 months. So now total of both person = 38 yr 22 months
Hence their average = 19 yr 11 months

SOLUTION Q8:
Let AB be the tower.

Then, APB = 30º and AB = 100 m
The ratio of sides opposite to angle of 30 – 60 – 90 is
1 :√3 : 2
So if side opposite to angle of 30o is 100 & side opposite to angle of 60o is 100√3.

SOLUTION Q9:
Distance travelled by him = =

== 3km

SOLUTION Q10:
When 1720 = (18-1)20 is divided by 18, remainder is (-1)20= 1

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
1,இந்தியாவின் இரும்பு மனிதர் -சர்தார் வல்லபாய் படேல்.
2,இந்தியாவின் நைட்டிங்கேல் -கவிக்குயில் சரோஜினிநாயுடு.
3,இந்தியாவின் முதும்பெரும் மனிதர் -தாதாபாய் நெளரோஜி.
4,இந்திய மறுமலர்ச்சியின் தந்தை -ராஜாராம் மோகன்ராய்.
5,லோகமான்யர் -பாலகங்காதர திலகர்.
6,லோக்நாயக் -ஜெயபிரகாஷ் நாராயணன்.
7,தேசபந்து -சித்தரஞ்சன் தாஸ்.
8,தீனபந்து -சி.தி.ஆண்ட்ரூஸ்.
9,பங்கபந்து -ஷேக் முஜிபூர் ரஹ்மான்.
10,குருதேவ் -ரவீந்தரநாத் தாகூர்.
11,மனிதருள் மாணிக்கம் -ஜவஹர்லால் நேரு.
12,அமைதி மனிதர் -லால்பகதூர் சாஸ்திரி.
13,தமிழ்த்தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
14,தேசபக்தர்களின் தேசபக்தர் -சுபாஷ் சந்திரபோஸ்.
15,தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.
16,கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
17,திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை -கால்டுவெல்.
18,மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.
19,தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்.
20,தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை.
21,சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
22,தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
23,தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
24,தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
25,புதுக்கவிதையின் பிதாமகன் -நா.பிச்சமுத்து.
26,வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
27,தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
28,தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
29,தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் -சங்கரதாஸ் சுவாமிகள்.
30,முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
31,தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
32,பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
33,கர்மவீரர் -காமராஜர்.
34,கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
35,மூதறிஞர் -ராஜாஜி.
36,தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
37,சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
38,சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை.
39,சொல்லின் செல்வன் -அனுமன்.
40,புரட்சிக்கவிஞர் -பாரதிதாசன்.

நீ கண்ட கனவு இந்தியா 2020ஐ இவ்வுலகம் வியந்து பார்க்கும்

😰
என் அன்னை பூமிக்கு அன்னை ஆஷியம்மா ஈன்று தந்த அருந்தவப்பதல்வன் நீ.....

😰
கலாம் உன்னை கரைசேர்க்க
கலம் செலுத்தி கரைகடந்த ஜைனுலாப்தீனின் செல்வப்புதல்வன் நீ.....

😰
தந்தைக்கு கைகொடுக்க கற்ற நேரம் தவிர்த்து கடினமாக உழைத்த உழைப்பாளி நீ....

😰
சோதனைகளை தகர்த்து கடினமாக உழைத்து அறிவியலில்
சாதித்த அறிஞன் நீ.....

😰
அக்கினி ஆகாஷ் பிரித்திவி போன்ற ஏவுகணைகளை தர காரணமாக இருந்து உலக நாடுகளிடையே இந்தியாவை
ஒளிரச் செய்தவன் நீ....

😰
மாணவர்களின் மனதான மணிமகுடத்தில் பசுமரத்தாணிபோல்
பதிந்த மாணிக்கம் நீ.....

😰
கனவுகாணுங்கள் என்று கூறி இந்திய இளைஞர்களை விழிக்க வைத்த விடியல் நீ.....

😰
மக்களின் மனதில் குடிகொண்டு
அன்னை தேசத்தின் குடியரசுத் தலைவனாக உயர்ந்த முதல் குடிமகன் நீ.....

😰
முத்தான உன் பிறப்பை ஆனந்த கண்ணீருடன் முதலில் தாங்கியது உன் அன்னை மடி...

😰
இன்று மூர்ச்சை அடைந்து கிடக்கும் உன் இறப்பை முகம்முழுதும் கண்ணீருடன் முடிவில் தாங்கியது இந்திய அன்னை மடி....

😰
நீ சோர்ந்து போகலாம், நீ தந்த அக்கினி சிறகுகள் முழுவேகத்துடன் பறக்கத் துவங்கிவிட்டன.....

😰
நீ ஏற்றிய எழுச்சி தீபங்கள் சுடர்விட்டு எறியத் துவங்கிவிட்டன....

😰
நீ கண்ட கனவு இந்தியா 2020ஐ இவ்வுலகம் வியந்து பார்க்கும்

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி

* உனக்குள் ஓர் அரும்பெரும் சக்தி உள்ளது. அதில் வெற்றி எண்ணத்தை வளர்த்து உன் சக்தியால் வெற்றி அடைந்தே தீரவேண்டும்.
* ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லும் பாடங்களை அன்றைய இரவே படிக்க வேண்டும்.
* அறிவுபெட்டகமாக திகழும் உன் ஆசிரியர்களின் வாழ்வுமுறையை தெரிந்து அவர்களை  மதித்து நடக்க வேண்டும்.
* பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்க வேண்டும்.
* நீ பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
* நீ வெற்றிபெற்று மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழவேண்டும்.
* உன் வீட்டில் ஒரு சிறுநூலகம் அமைத்து தினமும் 30 நிமிடமாவது புத்தகங்களை படிக்க வேண்டும்.
* பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது. தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து விடாமுயற்சியுடன் உன்னத லட்சியத்தை அடைய வேண்டும்.  வெற்றிக்கு மூலக்காரணமான அறிவு, உழைப்பு, தைரியம், விடாமுயற்சியை பின்பற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு கூறிய கவிதை

நான் பறந்து கொண்டே இருப்பேன்!
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற மன உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்த, பலரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அந்த உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகிறார்கள்.

திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஆனால், காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே, எந்த விஷயத்திலும், சாமர்த்தியமாக திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும். அதற்கான சில ஆலோசனைகளைப் பற்றி இங்கே அலசுவோம்,

நோக்கத்தைப் பற்றி தெளிவான புரிதல்

ஒருவருக்கு தனது இலக்கைப் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். பலர், தான் எதற்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலேயே, தேவையின்றி கடினமாக உழைத்து, தங்களின் ஆற்றலையும், நேரத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். எனவே, இந்த விரயத்தை தவிர்க்க, நோக்கத்தை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும்.

எதற்கு முக்கியத்துவம்?

ஒரு காரியத்தை மேற்கொள்கையில், முதலில் எதை செய்தால் வேலை விரைவாக முடியும் மற்றும் பலன் அதிகமாக கிடைக்கும் என்பதை தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மதுரையிலிருந்து, சென்னைக்கு சாலை வழியாக பயணம் செய்யும் ஒருவர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக பயணம் செய்தால் விரைவாக வந்து விடலாம். சிறந்த சாலை வசதியும் உண்டு. மாறாக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று, அங்கிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து, கரூர் சென்று, சேலம் சென்று, விருத்தாச்சலம் வந்து, பிறகு விழுப்புரம் சென்று, திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரம் வழியாக சென்றால் எவ்வளவு தேவையில்லாத ஒன்றோ, அதுபோலத்தான் அம்சங்களை அலசி ஆராயாத உழைப்பும்.

ஒரு இலட்சியத்திற்காக உழைக்கையில், எந்த காரியத்தை முதலில் செய்தால், விரைவாகவும், எளிதாகவும் வேலை முடியும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, கடைசியில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்சத்திற்கு, ஆரம்பத்திலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

குழப்பிக் கொள்ளாதீர்…

உங்களின் லட்சியத்தை அடையும் முயற்சியில், வேலைகளை பிரித்து செய்யும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேலையை, ஒரேநேரத்தில் கவனம் செலுத்தி விரைவாக முடிக்க வேண்டும். அதைவிடுத்து, பல வேலைகளை ஒரேநேரத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு, குழப்பிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக்கூடாது.

அனைத்தும் தயாராக இருத்தல்

ஒரு வேலையை துவங்கும்போது, அதற்கு தேவையான உதவி உபகரணங்கள் அனைத்தையும் முதலிலேயே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு வேலையானது தொடங்கப்பட்டு விட்டால், விரைவாக சென்று கொண்டே இருக்க வேண்டும். தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருந்தால்தான் தடையின்றி செல்ல முடியும். வேலையின்போது, தேவையானவற்றை அங்குமிங்கும் தேடினால், மனஉளைச்சல் ஏற்படுவதுடன், பல்வேறான தீங்குகள் ஏற்படும்.

சரியான சூழல்

முக்கியமான ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, அதற்கான புறச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். தொந்தரவற்ற, தேவையானால் அமைதியான, நிம்மதியான சூழலை அமைத்துக் கொண்டால், உங்களின் வேலை விரைவாக, வெற்றிகரமாக முடிவதை உறுதி செய்யலாம்.

உதவி கேட்கலாமா?

பொதுவாக, ஒருவர் தனது வேலையை பிறரின் உதவியின்றி, யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் தானே செய்து முடிக்க வேண்டும் என்று இயல்பாக நினைப்பார். அது ஒரு நல்ல கொள்கையும்கூட. ஆனால் சில சமயங்களில் பிறரின் உதவியை கேட்டே ஆக வேண்டிய நிலையேற்படும்.

அந்த நேரத்தில், பிடிவாதம், வரட்டு கவுரவம் பார்க்காமல் பிறரிடம் உதவி கேட்பதில் தவறில்லை. இதன்மூலம், உங்களின் லட்சியம் எளிதாக அடையப்படலாம்.

ஒதுக்கி விடவும்…

வாழ்க்கையில் தெளிவான இலக்கின்றி நாம் இருக்கையில், எது முக்கியம், எது முக்கியமற்றது என்பது நமக்குப் புரியாது. எனவே, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செயல்படுவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தப் பின்பாக, தேவையற்றதை ஒதுக்குவதற்கு தயங்கக்கூடாது.

மதிப்பாய்வு செய்க…

ஒரு நீண்ட செயல்பாட்டில் நீங்கள் ஈடுபடுகையில், அதன் தொடர் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் அவசியம். எந்த செயல் அதிக பலனைத் தந்தது, எந்த செயல் நேரத்தை வீணடித்தது என்பதை மதிப்பிடுவது மிகவும் அவசியம் மற்றும் நல்லது. இதன்மூலம் தேவையற்றதை ஒதுக்கி, நமது பணியை விரைந்து முடிக்கலாம்.

முடிவே முக்கியம்

வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்றில்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவு வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு ஆகும் நேரத்தைவிட, அதனால் கிடைக்கும் நன்மைதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

Do

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்



அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

Monday 3 August 2015

SK

வரலாறு உங்கள் கையில். (History is in ur hand)(Pls read the short story to know about the chronological order of Governor General and Viceroys from warren hastings to mountpatten - from 1773 to 1947)
வாரன் ஹேஸ்டிங்ஸ்(1773) முதல் மவுண்ட்பேட்டன் (1947) வரை
சுமார் 174 வருடங்கள் வரிசைகிரகமாக இந்தியாவை ஆட்சி செய்த
கவர்னர் ஜெனெரல் மற்றும் வைசிராய் பற்றி அறியவேண்டுமா!.கீழே
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை படியுங்கள்.

Chronological order:
Governor Generals of India (1773 - 1858)
1)warren hastings (WARREN)
2)Corn wallis (CORN)
3)John Shore(SHORE)
4)Wellessy(WELL)
5)Barlow(BAR)
6)Minto I(MINT)
7)lord hastings
8)Amherest (ARREST)
9)William Bentick
10)Metcafe (MET)
11)Auckland (LAND)
12)Ellenborough (BORROW)
13)Hardinge I (HARD)
14)Dalhousie (HOUSE)
15)Cannig (SUGARCANE)
Viceroys of India (From 1858-1947)
1)Canning
2)Elgin I
3)John Lawrence
4)Mayo (MAY)
5)Northbrook (NOTRHINDIA)
6)Lytton (லைட்)
7)Ripon (ரிப்பன்)
8)Dufferin (ரின் சோப்பு)
9)Lansdovene (டவ் shampoo)
10)Elgin II
11)Curzon (SON)
12)Minto II(MINT)
13)Hardinge II(HARD)
14)Chemsford(CHEMS)
15)Reading(READ)
16)Irwin(WIN)
17)Wellington(DON)
18)Linlithlow(LOW)
19)Wavell(WAVES)
20)Mountpatten(MOUNT)
Short story to remember all the Governor Generals and Viceroy's
.(சிறுகதை- EACH AND AVERY WORD SHOW A NAME OF GOVERNOR GENERAL AND VICEROY)
SHORTSTORY:
Warren (Warren hastings), Corn (Corn wallis) ரெண்டு பேரும் friends. ரெண்டு பேரும்நடந்து போகும்போது "ஷோர்"(John shore) னு மழை பெய்து .மழை பெயிறதுனால கிணறு(Well was fllled - Wellessy) நிரம்புகிறது.
climate was cool due to rain. so they went to BAR(Barlow) to take mint (Minto I). there Lord hastings came.He arrests(Amherest) the both.arrest பண்ணி பெண்ட கழட்டிடுறாரு(William Bentick).that time he met(metcafe) a land(Auckland).about
to borrow(Ellenborough) that land..
it was very hard(Hardinge I).anyhow he brought
the land and built a house(dalhousie) and sow Sugarcane(canning) The name of the sugarcane variety is Elgin I(Elgin I). The variety was failed one.
So John lawrence came to study about sugarcane. He said may(Mayo) month is suitable for sugarcane its also in north india (Northbrook).so he went to north india with லைட்,ரிப்பன், ரின் சோப்பு, டவ் shampoo(லைட் - Lytton, ரிப்பன்-Ripon,
ரின் சோப்பு-Dufferin,டவ் shampoo- Lansdovene) then he sow the variety named Elgin II.
Then his son(Curzon) came. he took mint (Minto II) it was very hard(Hardinge II), then he took chems(Chemsford), Chems was sweet, then he was good in reading(readig),,
after good reading he wins(Irwin), after winning he became a
Don(Wellindon) , then his growth became low(Linlithow), after some years waves (Wavell)moves towards him, finally he hoisted the flag at Mount(Mountpatten).


Important National level Institutes which have their headquartarz as Hyderabad.
Codeword : " BOSS - C.N.PRATHIP"
B - Business School (Indian School of Business}
O -Ocean and Information (Indian National Centre for Ocean Information)
S - Surveyor Training (Indian Inst. of Survey Training)
S - Staff College (Administrative Staff College)

C - Community Development, Chemical Technology
N - Nutrition Institute (National Institute of Nutrition)
P - Police, Petroleum(National Police Academy,Internl.Inst.of Petroleum
R - Remote Sensing (National Remote Sensing Centre)
A - Agricultural Extension Mgnt.(National inst of Agri.Extension)
T - Telecom Finance(National Academy of Telecom Finance and Mgnt.)
H - Handicapped(National Inst. of mentally handicapped),
HITEC city(Hyderabad Information Technology and
Engineering Consultancy City)
I - Information Technology(Indian Inst.of Information Technology)
P - Physical(National Geo Physical Res.Inst)