Saturday 25 January 2014

நோய்கள் ஒரு வரிக் குறிப்புகள்

நோய்கள் ஒரு வரிக் குறிப்புகள்
Posted Date : 17:12 (13/12/2013)Last updated : 18:12 (17/12/2013)
 வைரஸ் நோய்கள்
வைரஸ் என்ற சொல்லுக்கு நச்சு என்பது பொருள்.
வைரஸை கண்டுபிடித்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி.
வைரஸ் என்பது பிற உயிரினங்களின் செல்லுக்குள் வாழும் ஓர் ஒட்டுண்ணி.
வைரஸில் DNA அல்லது RNA இவற்றில் ஏதாவது ஒன்று தான் காணப்படும்.
பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ் - பாக்டீரியோபேஜ்.
தாவரங்களைத் தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள்.
மனிதர்களை RNA வைரஸ், DNA வைரஸ் இரண்டுமே தாக்கும்.
எய்ட்ஸ் (AIDS) ஏற்படுத்தும் HIV ஒரு RNA வைரஸ்.
பெரியம்மையை (Small pox) ஏற்படுத்துவது ஒரு RNA வைரஸ்.
உலகில் முதல் தடுப்புமருந்து 'பெரியம்மை’க்கு எதிராகக் கண்டறியப்பட்டது. 
பெரியம்மை’க்கு தடுப்புமருந்து கண்டறிந்தவர் எட்வர்டு ஜென்னர்.
எட்வர்டு ஜென்னர் 'நோய்த் தடுப்பியலின் தந்தை’ எனப்படுகிறார்.
பெரியம்மை தடுப்புமருந்து மாட்டம்மை கொப்புளங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.
தடுப்புமருந்துக்கு Vaccine  என்று பெயரிட்டவர் லூயி பாஸ்டர்.
Vaccine   என்னும் பெயர் Vacca என்ற லத்தின் சொல்லில் இருந்து வந்தது.
Vacca என்ற லத்தின் சொல்லுக்கு 'மாடு’ என்று பொருள்.
பெரியம்மை நோய் 1979-ல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
சின்னம்மை’ ஏற்படுத்தும் வைரஸ் - Varicella Joster.
போலியோ, என்டிரோ வைரஸால் ஏற்படுகிறது.
5 வயதுக்குட்பட்டோருக்கு போலியோ தடுப்பூசி அவசியம்.
OPV என்பதன் விரிவு  Oral Polio Vaccine.
OPV-யைக் கண்டறிந்தவர் ஆல்பிரட் சாபின்.
போலியோவுக்கான மற்றொரு தடுப்பு மருந்து IPV.
IPV என்பதன் விரிவு  Inactivated Polio Vaccine.
போலியோ தடுப்பு மருந்து கண்டவர் ஜோனஸ் சால்க்.
AIDS என்பதன் விரிவு - Acquired Immuno Deficiency Syndrome.
AIDS நோய் Retro Viridae குடும்பத்தைச் சேர்ந்த 'HIV’ வைரஸால் ஏற்படுகிறது.
HIV - Human Immuno Deficiency Virus.
AIDS நோயைக் கண்டறிய உதவுவது- ELISA, Western Blot சோதனைகள்.
ELISA -  Enzyme Linked Immuno Sorbent Assay.
MMR - Mumps Measles Rubella.
SARS என்பதன் விரிவு - Severe Acute Respiratory Syndrome.
சிக்குன்குன்யா என்பது  ஸ்வாகிலி மொழிச் சொல்.
சிக்குன்குன்யா என்பதன் பொருள் வளைதல் அல்லது உருக்குலைத்தல்.
சிக்குன்குன்யா நோயின் முக்கிய அறிகுறி மூட்டுவலி (Arthritis).
சிக்குன்குன்யா (Chi-kun-gunya) ஏடிஸ் (Aedes) வகை கொசுக்களால் பரவுகிறது.
டெங்கு ஜுரம், ஏடிஸ் (Aedes) வகை கொசுக்களால் பரவுகிறது.
வெறிநாய் கடிப்பதால் ரேபிஸ் பரவுகிறது.
வெறிநாய்க்கடிக்கு தடுப்பு மருந்து கண்டறிந்தவர் லூயி பாஸ்டர்.
ரேபிஸ் நோயாளிகள் தண்ணீரைக் கண்டு அஞ்சுவர்.
மெட்ராஸ் ஐ - வைரஸ் நோய் அடினோ வைரஸ் II
பாக்டீரியல் நோய்கள்
காலரா, நீரினால் பரவும் பாக்டீரியல் நோய்.
காலராவுக்குக் காரணமான பாக்டீரியாவின் பெயர் - விப்ரியோ காலரே. 
'சால்மோனெல்லா டைபி’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுவது - டைபாய்ட் (குடற்காய்ச்சல்).
காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா - மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸ்.
காசநோய் காற்று மூலம் பரவுகிறது.
காசநோய்க்கு எதிரானது - BCG தடுப்பு ஊசி. 
மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்னும் பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது.
ஹென்சன்ஸ் நோய் - தொழுநோயின் வேறுபெயர்.
பிளேக் நோயின் பழங்காலப் பெயர்: கறுப்பு நோய்.
டிப்தீரியா, பெர்டூஸிஸ், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கு எதிரானது - DPT தடுப்பு ஊசி.
டிப்தீரியா நோய் தொண்டையைப் பாதிக்கிறது.
டிப்தீரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர் வான்பெரிங்.
துருப்பிடித்த பொருட்களில் டெட்டனஸ் பாக்டீரியா இருக்கக்கூடும்.
துருப்பிடித்த ஆணி குத்தினால், பாதுகாப்புக்கு: Tetanas Toxoid (TT) ஊசி.
மலேரியா என்றால் 'மோசமான காற்று’ என்று பொருள்.
மலேரியா காற்றினால் பரவுவதாக தவறாகக் கருதி அப்பெயர் வைக்கப்பட்டது.
மலேரியாவைப் பரப்புவது - அனபிலஸ் கொசுக்கள்.
சின்கோனா மரப்பட்டைகளிலிருந்து பெறப்படும் கொய்னா (Quinine), மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
யானைக்கால் நோய் - பைலேரியாசிஸ்.
யானைக்கால் நோய் க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது.
அத்லெட்ஸ் ஃபுட் என்பது பூஞ்சைகளால் ஏற்படும் நோய்.
ரிங் வார்ம் என்பதும் பூஞ்சைகளால்தான் ஏற்படுகிறது.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆன்டிபயாடிக்' - பெனிசிலின்.
பென்சிலினைக் கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் ஃப்ளமிங்.
'ஆன்டிபயாடிக்' என்ற சொல்லை உருவாக்கியவர் - செல்மேன் வாக்ஸ்மேன்.
செல்மேன் வாக்ஸ்மேன் கண்டுபிடித்தது ஸ்ரெப்டோமைசின்.
நோய்
மஞ்சள்காமாலையால் பாதிக்கப்படுவது - கல்லீரல்.
கீழாநெல்லி மஞ்சள்காமாலைக்கு மருந்து.
கிட்டப் பார்வை - 'மையோபியா’.
தூரப்பார்வை - 'ஹைபர் மெட்ரோபியா’.
'Goitre’: முன்கழுத்துக் கழலை.
அயோடின் சத்துக்குறைவால் தைராய்டு சுரப்பி வீங்குவது - காய்டர்.
பற்களைப் பாதிப்பது - பயோரியா நோய்.
ஈறு வீங்குவது - 'ஜிஞ்சிவைடிஸ் (Gingivitis)’.
நோய்களும் பாதிப்படையும் உறுப்புகளும்
டிப்தீரியா - தொண்டை
டைபாய்டு - கல்லீரல், குடல்
காசநோய் - நுரையீரல், எலும்புகள்
தொழுநோய் - தோல், கை, கால், விரல்
டெட்டனஸ் - தாடை, தசைகள்
காட்டராக்ட் - கண்
கிளக்கோமா - கண்
அஸ்டிக்மாட்டிசம் - கண்
மஞ்சள் காமாலை - கல்லீரல்
நிமோனியா - நுரையீரல்
அதிக மது அருந்துதல் - கல்லீரல்
நீரிழிவு நோய் - கணையம்
ஜிரோப்தால்மியா - கண்
ரிக்கட்ஸ் - எலும்புகள்
ஸ்கர்வி - தோல்
மருந்துகள்
காய்ச்சலைக் குறைக்கும் மருந்து - Antipyretic.
மயக்கம் ஏற்படுத்தும் மருந்து - Anaesthetic.
கிருமிகளை அழிக்கும் மருந்து - Antibiotic.
வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்து - Antiemetic.
விஷத்தை முறிக்கும் மருந்து - Antidote.
வலியைக் குறைக்கும் மருந்து - Analgesic.
வலிப்பைத் தடுக்கும் மருந்து - Anticonvulsant.

No comments:

Post a Comment