Friday 24 January 2014

இந்தியப் போக்குவரத்து

இந்தியப் போக்குவரத்து
Posted Date : 09:12 (13/12/2013)Last updated : 09:12 (13/12/2013)
க்கள் மற்றும் பொருள்களின் இடம்பெயர்வுக்கு ஆதாரமாக விளங்கும் போக்குவரத்து இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாட்டின் மொத்த பரப்பளவிற்கும், அந்த நாட்டில் உள்ள சாலைகளின் மொத்த நீளத்திற்கும் இடையேயான விகிதம் சாலைகளின் அடர்த்தி (Road Density) எனப்படும்.
இந்திய வாணிபத்தின்  95 சதவீதமும் கடல் வழி போக்குவரத்து மூலமாகவே நடைபெறுகிறது.
இந்திய போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாகத் திகழும் இந்திய ரயில்வே 150வருடத்திற்கும் மேற்பட்ட பாரம்பரியம் மிக்க வரலாறு கொண்டது.
போக்குவரத்து அமைப்பு நான்கு வகைப்படும்
சாலைப் போக்குவரத்து
 இருப்புப்பாதை (ரயில்) போக்குவரத்து
 நீர்வழிப் போக்குவரத்து
 ஆகாயவழிப் போக்குவரத்து
இந்திய சாலைப்போக்குவரத்து
உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சாலைப் போக்குவரத்தைக் கொண்ட இந்தியாவின் சாலை போக்குவரத்து சுமார் 4.69 மில்லியன் கி.மீ நீளம் கொண்டது. (முதல் மற்றும் இரண்டாவது இடங்களில்  அமெரிக்கா, சீனா உள்ளது).
2011-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளின்  நீளம் 4.23 மில்லியன் கி.மீ.
கிராமச் சாலைகளே இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ளன, இதன் மொத்த நீளம் சுமார் 14.5 லட்சம் கி.மீ.
இந்தியாவில் உள்ள மாவட்டச் சாலைகளின் நீளம் 26 லட்சம் கி.மீ.
இந்தியாவில் உள்ள மாநிலச் சாலைகளின் நீளம் 1.7 லட்சம் கி.மீ.
இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ஹைவேயின் நீளம் 200 கி.மீ.
தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 70,934 கி.மீ
இந்தியாவில் மிக நீளமான சாலை போக்குவரத்து கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா – 3,61,893 கி.மீ. மிகக் குறைவான நீளமுடைய சாலையை கொண்டது லட்சத்தீவுகள் – 1 கி.மீ
சாலைப் போக்குவரத்து அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI), மாநில பொதுப்பணித்துறை (PWD),  எல்லைப்புற சாலை அமைப்பு (BRO) போன்றவை மூலம் சாலை உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் (NHDL) நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதைத் தனது நோக்கமாகக் கொண்டது.

மிக நீளமான தேசிய நெடுஞ்சாலைகள்
NH-7 வாரணாசி  கன்னியாகுமரி   2,369கி.மீ
NH 6 ஹாஜிரா  கொல்கத்தா - 1949கி.மீ.
NH 6 பஹாரகொரா  சென்னை- 1,533கி.மீ.
நீளம் குறைந்த தேசிய நெடுஞ்சாலைகள்
NH47A எர்ணாகுளம்   கொச்சின் துறைமுகம்    6கி.மீ.
NH1 தோமல்  கத்ரா (ஜம்மு -காஷ்மீர்)   8கி.மீ.
NH54A தெரியாட்  லுங்கியி (மிசோரம்)   9கி.மீ.
கொல்கத்தா முதல்  பெஷாவர் ( பாகிஸ்தான்) வரை உள்ள கிரான்ட் டிரங் ரோடு தான் இந்தியாவின் முதல் நெடுஞ்சாலை
2,400 கி.மீ. நீளமுடைய கிரான்ட் ட்ரங்க் ரோடு ஷெர்ஷா சூரி அவர்களது ஆட்சிக் காலத்தில் 1540 ல் போடப்பட்டது.
94 கி.மீ. நீளமுடைய மும்பை  புனே எக்ஸ்பிரஸ் பாதையே இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் பாதை.
உத்திரப்பிரதேச மாநிலம் வழியாகத்தான் மிக அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. (மொத்தம் 37தேசிய நெடுஞ்சாலைகள்). பீகார் மற்றும் தமிழ்நாடு முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களில் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள்
மத்திய அரசின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் – 70,548 கி.மீ
இந்திய சாலையின் மொத்த நீளத்தில் 2% ஆகவே இருந்தபோதிலும் 40% போக்குவரத்து இதன் வழியாக நடைபெறுகிறது.
இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை  : NH  7 (2369 கி.மீ, வாரணாசி – கன்னியாகுமரி) (ஜபல்பூர், நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு மாநகர்களை இணைக்கிறது).
இந்தியாவில் மிகக் குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை  : NH – 47A (5.9 கி.மீ, எர்ணாகுளம் – கொச்சி துறைமுகம்)
14,846 கி.மீ நீளம் கொண்ட தங்க நாற்கர சாலைகள் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கின்றன.
5882 கி.மீ நீளம் கொண்ட ஆறு வழிச்சாலைகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களை தங்க நாற்கரச் சாலையோடு இணைக்கின்றன.
எல்லைப்புற சாலைகளை பராமரிக்க எல்லையோரச் சாலை அமைப்பு (Border Roads Organization)  1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தங்க நாற்கரச் சாலைத்திட்டம்
இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப் பாதைகளாக மாற்றும் திட்டம் தங்கநாற்கரச் சாலைத் திட்டம் ஆகும்.
1998-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி நான்கு நகரங்களையும் இணைக்கும் சாலை நாற்கர வடிவில் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது.இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் 2001-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் (NHDP) மூலமாக செயல்படுத்தப்படும் தங்க நாற்கர சாலைத் திட்டம் நான்கு/ஆறு வழி நெடுஞ்சாலைகளைக் கொண்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தங்க நாற்கரச் சாலை நீளம்
தங்க நாற்கர சாலைத் திட்டம் முடிக்கப்பட்டதும் இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்.
கடக்கும் மாநிலம்                            தூரம்   கி.மீ.
ஆந்திரப் பிரதேசம்                                1,014
உத்தரப் பிரதேசம்                                  756
ராஜஸ்தான்                                                725
கர்நாடகம்                                                   623
மகாராஷ்டிரா                                            487
குஜராத்                                                        485
ஒடிஸா                                                       440
மேற்கு வங்காளம்                             406
தமிழ்நாடு                                                342
பீகார்                                                          204
ஜார்க்கண்ட்                                            192
அரியானா                                               152
டெல்லி                                                    25
மொத்தம்                                               5,846

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. (North-South Corridor and East - West Corridor)
4000 கி.மீ நீளமுள்ள வடக்கு  தெற்கு நெடுஞ்சாலை (North – South Corridor), வடக்கே ஸ்ரீநகரையும் தெற்கே கன்னியாகுமரியையும் இணைக்கிறது.
3,300 கி.மீ நீளமுள்ள கிழக்கு  மேற்கு நெடுஞ்சாலை (East – West Corridor), மேற்கே போர்பந்தரையும் கிழக்கே சில்ச்சரையும் இணைக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களும் நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளைக் கொண்டவை.
ரயில் போக்குவரத்து
இந்தியாவில் 1853-ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டது.  மும்பை  தானே இடையேயான 34 கி.மீ. தொலைவிற்கு நீராவி எஞ்சின் ஓடியது.
இந்தியாவின் முதல் மின்சார இரயில் 1925-ல் பயணம் துவங்கியது. மும்பை விக்டோரியா டெர்மினஸ் (தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) முதல் குர்லா வரை 16 கி.மீ.
1988-ம் ஆண்டு நாட்டின் முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் புது டெல்லி யிலிருந்து  ஜான்சி வரை ஓடியது. பிறகு இது போபால் வரை நீட்டிக்கப்பட்டது.
2002-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் மும்பையிலிருந்து  மட்காவன் (கோவா) வரை இயக்கப்பட்டது.
இந்திய ரயில்வே பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும்.
இந்திய ரயில்வே 6,909 ரயில் நிலையங்களுடன் உலகின் நான்காவது பெரிய ரயில்வே வலைப்பின்னல் ஆக உள்ளது. (அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன).
இந்திய ரயில்வே மொத்தம் 8,702 ரயில்களை இயக்குகிறது.
ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான பயணிகளையும், 350 மில்லியன் டன் சரக்குகளையும் இந்தியன் ரயில்வே சுமந்து செல்கிறது.
இந்திய ரயில்வே அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் இணைக்கிறது.
இந்தியாவில் மிக அதிகப் பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனம். (சுமார் 16 லட்சம் பணியாளர்கள்)
இந்தியாவில் ரயில் தொடர்பில்லாத ஒரே மாநிலம் சிக்கிம்.
நாட்டின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் திப்ரூகார் (அஸ்ஸாம்)   கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (4,286கி.மீ./82.03மணி நேரம்)
இந்தியாவின் முதல் ரயில் நிலையம் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (பழைய பெயர் விக்டோரியா டெர்மினஸ்)
இந்தியாவின் முதல் அதிவேக ரயில் தில்லி  ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ், 1969-இல் தொடங்கப்பட்டது.
2006-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஏழைகள் ரதம் (கரீப் ரத்) பிகாரில் உள்ள சஹன்ஸ் முதல் பஞ்சாப் அமிர்தசரஸ் வரையில் ஓடத்துவங்கியது .
இந்தியாவின் மாடி ரயில் சிம்ஹட் எக்ஸ்பிரஸ். 1978-ல் மும்பை முதல் புனே வரை ஓடத் துவங்கியது.
இந்திய ரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்
கொங்கண் இருப்புப்பாதை கழக நிறுவனம் (Konkan railway corporation Limited )
1928-ல் தொடங்கப்பட்ட, இந்திய ரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இதன் தலைமையிடம் பாட்னா (பீகார்).
மின் தொடரமைப்பு கோபுரங்கள், எரிபொருள் பாகங்கள், தொடர் வண்டி சரக்கு பெட்டிகள் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
மேற்கு கடற்கரை வழியாக கர்நாடகாவின் மங்களூரில் இருந்து கோவா வழியாக மஹாராஸ்டிராவின் மும்பை வரை உள்ள கொங்கண் இருப்பு பாதை இந்நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.
1998-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், 738 கி.மீ நீளமுள்ள கொங்கண் இருப்புப் பாதையில் 56 நிலையங்கள் உள்ளன.
கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( Container Corporation of India Limited)
1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான இது மேற்கு வங்காளத்தில் உள்ள சித்தரஞ்சனில் உள்ளது.

யுனெஸ்கோவின் (UNESCO) உலகப்பிரசித்தி பெற்ற தளமாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள்
டார்ஜிலிங் இமாலய ரயில் : கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தின் சமவெளியான சிலிகுரியில் தொடங்கி தேயிலை தோட்டங்களின் வழியாக டார்ஜிலிங் ரயில்பாதை சென்றடைகிறது.
நீலகிரி மலை ரயில்:  இந்தியாவிலுள்ள பற்சக்கர அமைப்புக்கொண்ட ஒரே ரயில் பாதை ஆகும்.
கல்ஹா - சிம்லா ரயில்

இந்திய ரயில்களும் புகழ்களும்
சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓடும் அரண்மனை ரயில் (Palace on Wheels) ராஜஸ்தானில் உள்ளது.
டெக்கான் ஒடிஸி ரயில் மகாராஷ்டிர அரசின் சுற்றுலாவை மேம்படுத்த உருவாக்கப்பட்டு போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே இயக்கப்பட்ட ரயிலின் பெயர் சம்ஜௌதா விரைவு வண்டி ஆகும்.
மற்றொரு புகழ்பெற்ற ரயில் சேவை மருத்துவமனை ரயில் ஆகும். இது ஒரு நடமாடும் மருத்துவமனை. நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு இரண்டு மாதங்கள் தங்கி சேவை புரிகிறது.
உலகிலேயே மிகப்பழமையான ஓடும் நிலையில் இருக்கும் நீராவி எஞ்சின் இந்திய ரயில்வேயின் ஃபெயரி குயின் என்பதாகும்.
உலகின் மிக நீளமான நடைபாதையைக் கொண்டுள்ள ரயில் நிலையம் கரக்பூர் ரயில் நிலையம்.
கரக்பூர் ரயில் நிலையத்தின்  நீளம் 833 மீட்டர்களாகும்.
டாய் ரயில் பாதையிலுள்ள கும் ரயில் நிலையமே நீராவி எஞ்சின் செல்லும் மிக உயர்ந்த ரயில் நிலையமாகும்.
இந்திய ரயில்வேயில் மொத்தம் 7,566 ரயில் எஞ்சின்களும் 37,840 பயணியர் பெட்டிகளும் 222,147 சரக்குப் பெட்டிகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 6,853 ரயில் நிலையங்களும் 300 யார்டுகளும் 2,300 சரக்கு ரயில் ஷெட்களும் 700 பழுதுபார்ப்பு மையங்களும் உள்ளன.
மிகச் சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் 'இப்'
மிகப்பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையம் 'ஸ்ரீ வெங்கட நரசிம்மராஜூ வாரி பீடா'.
இந்திய ரயில்வேயிலேயே இரண்டாவது மிக நீண்ட தூரம், மற்றும் மிக நீண்ட நேரம் பயணிக்கும் ரயில் கன்னியாகுமரி, ஜம்முதாவி ஆகியவற்றுக்கிடையே ஓடும் ஹிம்சாகர் விரைவு வண்டியாகும். இந்த ரயில் 3,745 கி.மீ. தூரத்தினை மொத்தம் 74 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கிறது.
வதோதரா மற்றும் கோட்டாவிற்கிடையே உள்ள 528 கி. மீ தொலைவினை திருவனந்தபுரம் ராஜதானி ரயில் 6.5 மணிகளில் இடையில் எங்கும் நிற்காமல் கடக்கிறது. இதுவே இந்திய ரயில்வேயினால் இயக்கப்படும் நீண்ட இடைநில்லா சேவையாகும்.
ஃபரிதாபாத் ஆக்ராவிற்கிடையே ஓடும் போபால் சதாப்தி விரைவு வண்டியே இந்தியாவின் மிக வேகமான ரயிலாகும். இது மணிக்கு 140 கி. மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்தியாவில் ரயிலின் அதிகபட்ச வேகமான ஒரு மணிக்கு 184 கி. மீ 2000ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின் போது அடையப்பட்டது.
ரயில் தொழிற்சாலைகள்
டீசல் எஞ்சின் ஒர்க்ஸ்: வாரணாசி
சித்தரஞ்சன் எஞ்சின் ஒர்க்ஸ்: சித்தரஞ்சன் (மேற்கு வங்காளம்)
இன்டகிரேடட் கோச் ஃபாக்டரி: பெரம்பூர்.
ரயில் கோச் ஃபாக்டரி: காபூர்த்தலா
ரயில் வீல் ஃபாக்டரி: யெலஹங்கா (கர்நாடகம்)
டீசல் எஞ்சின் மாடர்ன் ஒர்க்ஸ்: பாட்டியாலா (பஞ்சாப்)
நீர்ப்போக்குவரத்து
இந்தியக் கப்பல் போக்குவரத்தின் நிர்வாகம் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தது.
இந்தியா மொத்தம் 7516 கி.மீ நீளமுள்ள கடற்கரை கொண்டது.
இந்தியாவில் 13 மிகப்பெரிய துறைமுகங்களும், 190-க்கும் அதிகமான சிறு துறைமுகங்களும் உள்ளன.
1986-ம் ஆண்டு உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து மேம்பாட்டிற்காக உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் நொய்டாவில் உள்ளது.
போக்குவரத்துக்கு ஏற்ற நீர்வழிப்பாதை இந்தியாவில் ஆறுகள், ஏரிகள், கால்வாய்களில் சுமார் 14,500 கி.மீ உள்ளது.
இந்தியாவின் முதல் தேசிய நீர்ப்பாதை 1986-ல் நடைமுறைக்கு வந்தது. இது கங்கை  பாகீரதி ஹூக்ளி நதியமைப்பில் அலகாபாத் முதல் ஹால்டியா வரையிலான 1620 கி.மீ. நீர்வழிப்பாதை.
துறைமுகங்கள்
இந்தியாவில் நடைபெறும் அயல்நாட்டு வணிகத்தின் 95% துறைமுகங்கள் வழியாகவே நடைபெறுகின்றன.
முக்கிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

மேற்குக் கடற்கரையின் முக்கியத் துறைமுகங்கள்
மும்பை, கண்ட்லா, ஜவஹர் லால் நேரு துறைமுகம், மர்ம கோவா, நியூ மங்களூர், கொச்சி.
கிழக்கு கடற்கரையின் முக்கியத் துறைமுகங்கள்
கொல்கத்தா/ஹால்டியா, பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, போர்ட் பிளேர்.

மிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்கள் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ளன.
ஆந்திர மாநிலத்தின் கங்காபுரம் துறைமுகம், இந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் (21மீட்டர்)
குஜராத் மாநில சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 'பிபவாவ்’ துறைமுகம் நாட்டின் முதல் தனியார் துறைமுகம்.
முத்ரா (குஜராத்தின் கட்ச் மாவட்டம்), கிருஷ்ணப் பட்டணம் (ஆந்திரப்பிரதேசம், நெல்லூர்) ஆகியவை மற்ற இரண்டு தனியார் துறைமுகங்கள்.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
இந்தியாவில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், கழிமுகங்கள் போன்றவை , உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கு இன்றியமையாததாகின்றன.
இந்தியாவின் 15544 கி.மீ. நீளமுடைய நீர்வழிகளில், 5700 கி.மீ மட்டுமே  போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விமானப் போக்குவரத்து
உலகின் முதல் தேசிய விமானக் கம்பெனியான பிரிட்டனின் இம்பீரியல் ஏர்வேஸ் தான் இந்தியாவை விமானம் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
1927-ம் ஆண்டு இம்பீரியல் ஏர்வேஸின் விமானம் கெய்ரோவிலிருந்து புதுடெல்லிக்கு சர்வீஸ் நடத்தியது.
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கராச்சி முதல் டெல்லிக்கு விமான சேவையை இம்பீரியல் நிறுவனம் வழங்கியது.
இந்தியாவின் முதல் ஏர்லைன் நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ்.
1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஜே.ஆர்.டி. டாட்டா தொடங்கினார்.
டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் விமான சேவை கராச்சி மற்றும் சென்னைக்கு இடையே நடந்தது.
1946-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இதன் முதல் தலைவர் ஜே.ஆர்.டி. டாட்டா.
இந்தியாவில் பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் நபர் ஜே.ஆர்.டி. டாடா (1929).
1948 ஜூன் 8-ம் தேதி ஏர் இந்தியா தனது முதல் பயணத்தைத் துவங்கியது. முதல் பயணம் லண்டனுக்கு (கெய்ரோ, ஜெனீவா வழி). விமானத்தின் பெயர் மலபார் பிரின்சஸ்.
1953 ஆகஸ்டில் விமானப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது. இதையடுத்து சர்வ தேச போக்குவரத்துக்காக ஏர் இந்தியா இன்டர் நேஷனல் லிமிடெட்டும், உள்நாட்டு சர்வீஸ்களுக்காக இந்தியன் ஏர்லைன்ஸ¨ம் உருவாக்கப்பட்டன.
1992-ம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தின்படி (1956) ஏர் இந்தியா, பொதுத்துறை நிறுவனமானது.
2005-ம் ஆண்டு இம்பீரியன் நிறுவனம் இந்தியன் ஏர்லைன் என்று பெயரை மாற்றியது.
2007-ம் ஆண்டு ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸும் இணைந்து நேஷனல் ஏவியேஷன் கம்பெனி இந்தியா லிட். உருவானது.
இந்திய விமானப் போக்குவரத்தை நிர்வகிப்பது ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா, 1995 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.
இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் (Airports Authority of India, AAI) இந்தியாவில் உள்ள வானூர்தி நிலையங்களையும் ஏடிசி, சிஎன்எஸ் போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய மத்திய அரசு அமைப்பாகும்.
இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் 125 வானூர்தி நிலையங்களை இயக்குகிறது, இவற்றில் 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் 8 சுங்கச் சாவடியுள்ள நிலையங்களும் 81 உள்ளூர் நிலையங்களும் படைத்துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 உள்ளூர் நிலையங்களும் அடங்கும்.
ஆசியாவிலேயே மிக நீளமான ஓடுதளம் கொண்ட விமான நிலையம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். ஓடுதளத்தின் நீளம் 4.43 கி.மீ.
இந்தியாவின் முதல் ஜெட் விமான சர்வீஸ் 1960-ம் ஆண்டு ஏர் இந்தியா. போயிங் 707  437 விமானத்தின் முதல் பயணம் அமெரிக்காவுக்கு. முதல் ஜெட் விமானத்தின் பெயர் நந்தா தேவி.
இந்தியாவின் குறைந்த செலவிலான வகுப்பை வழங்கிய முதல் விமான நிறுவனம் ஏர் டெக்கான்.
2003 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பெங்களூர்-மங்களூர் சர்வீஸே கம்பெனியின் முதல் பட்ஜெட் விமான சர்வீஸ்.
முக்கிய விமான நிலையங்கள்
இந்திரா காந்தி விமான நிலையம் (டெல்லி), கொச்சின் சர்வதேச விமான நிலையம் (கொச்சி), கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் (கொல்கத்தா), திருவனந்த புரம் சர்வதேச விமான நிலையம் (திருவனந்தபுரம்), சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் (மும்பை), ராஜா ஜான்சி சர்வதேச விமான நிலையம் (அம்ரித்ஸர்), சங்கநர் சர்வதேச விமான நிலையம் (ஜெய்ப்பூர்), சென்னை சர்வதேச விமான நிலையம் (சென்னை), நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் (கொல்கத்தா).

No comments:

Post a Comment