Friday 24 January 2014

தற்கால சட்டங்கள்

தற்கால சட்டங்கள்

Pre conception & Pre Natal Diagnostic Techniques Act 1994 & 2003
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு கூட்டாட்சி சட்டமாகும். கருவிலேயே பெண் சிசுக்களைக் கொல்வதைத் தடுப்பதற்கும், ஆண் பெண் விகிதம் குறைவதைத் தடுப்பதற்கும் இயற்றப்பட்டது.
பிறப்பதற்கு முன்னரே பாலினத்தைக் கண்டறிவதை இச்சட்டம் தடை செய்கிறது.
இந்தியாவில் பெண் சிசு கருக்கலைப்பு
 மிகையலி தொழில்நுட்பத்தின் உதவியால் பெண் சிசுக்களைக் கருவிலேயே கண்டறிந்து கலைக்கும் முறை 1990களின் தொடக்கத்தில் ஆரம்பித்தது.
 குழந்தையின் பாலினத்தை முன்னரே கண்டறிவதும், அதைக் கருவிலேயே அழிப்பதும் இன்றைய மருத்துவ உலகில் பொதுவாகி விட்டது.
 பெண்களுக்கெதிரான சமூகக் கொடுமைகளும், ஆண் குழந்தைகளுக்கான முக்கியத்துவமும் அதிகரித்தே வருகிறது.
 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் பாலின விகிதம் 109.4 ஆகும்.
சட்டத்தின் சிறப்பம்சங்கள்
 பதிவு செய்யப்படாத அமைப்புகளில் பாலினத்தைக் கண்டறிய உதவும் PND சோதனைகளைச் செய்வதும், அதற்கு உதவுவதும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.
 கருவுறுதலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பாலினத்தை நிர்ணயிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
 கருவில் செய்யப்படும் சோதனைகளான மிகையலி தொழில்நுட்பம் மற்றும் அம்னிசென்டீஸ் போன்றவற்றை கீழ்க்கண்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த இச்சட்டம் வழிசெய்கிறது.
1. ஜீன் குறைபாடு
2. வளர்சிதை மாற்றக் குறைபாடுகள்
3. குரோமோசோம் குறைபாடுகள்
4. ஹீமோகுளோபின் மாறுபாடு
5. பாலினத்தோடு தொடர்புடைய குறைபாடுகள்
 கருவின் பாலினத்தை நிர்ணயிக்கும் எந்த சோதனைகளையும் அல்ட்ராசோனாகிராபியாக இருப்பினும் அதனை எந்த ஆய்வுக் கூடமோ அல்லது மருத்துவமனையோ செய்தல் கூடாது.
 கருவுற்ற தாய்மாரிடமோ அல்லது அவர்களது உறவினரிடமோ கருவின் பாலினத்தை எவரும் பகிர்ந்து கொள்ளுதல் கூடாது.
 எவரேனும் கருவினை முதலிலேயே கண்டறிவதற்கான வசதி தங்களிடம் உள்ளது என்ற அறிக்கையையோ, சுற்றறிக்கையையோ வெளியிட்டால் அவருக்கு 3 வருடம் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
கட்டாயப் பதிவு
 அனைத்து சோதனை ஆய்வுக்கூடங்களும், ஜீன் கலந்தாய்வு மையங்களும், ஜீன் தொடர்பான ஜெனிட்டிக் ஆய்வுக்கூடங்கள், ஜெனிட்டிக் மருத்துவமனைகள், மிகையலி மருத்துவமனைகள் போன்ற அனைத்திற்கும் கட்டாயப் பதிவு அவசியம்.
சட்டத் திருத்தம் : 2003
 Prenatal Diagnostic Technique (Regulation & Prevention of misuse) சட்டம் 1994ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 2003ம் ஆண்டு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு The Pre conception & Prenatal diagnostic techniques (Prohibition & Sex selection) சட்டமாக மாற்றப்பட்டது. இச்சட்டத் திருத்தம் பாலின நிர்ணயித்தல் சோதனைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து சீரமைக்க உதவுகிறது.
சட்டத்திருத்தத்தின் சிறப்பம்சங்கள்:
 கருவிலேயே பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் முறைகளையும் இச்சட்டத்தின் கீழ் கொணடு வந்தது.
 மிகையலி தொழில்நுட்பத்தையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வந்தது.
 மத்திய கண்காணிப்புக் குழு / அமைப்பு, மாநில அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வழிவகுக்கிறது.
 மிகக் கடுமையான தண்டனைகள் வழங்க வகை செய்கிறது.
 சட்டத்தை மீறுபவர்களின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைத் தேடுவதற்கும், கைப்பற்றுவதற்கும் உரிமையியல் நீதிமன்றத்தின் கீழ் இயங்கவல்ல ஒரு அமைப்பை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.
 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் / அமைப்புகளுக்கு மட்டுமே மிகையலி சாதனங்களை விற்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005
 ஒவ்வொரு அரசு பொதுத்துறை நிறுவனத்திலும் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் அதிகரிக்கும் பொருட்டு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அந்நிறுவனம் / அமைப்பைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காகக் கொண்டு வரப்பட்டது தகவல் பெறும் உரிமைச் சட்டம்.
 இச்சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைத் தவிர மற்ற அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் பொருந்தும்.
 ஜம்மு காஷ்மீர் மாநிலம் அதற்கென்று பிரத்யேகமான தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2009ஐக் கொண்டுள்ளது.
 இந்தியாவிற்கான தகவல் பெறும் உரிமைச் சட்டம் அக்டோபர் 12, 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
 இச்சட்டத்தின்படி ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் தங்களது பதிவுகளை கணினியாக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 தகவல்களைப் பெறுதல் என்பது இந்த அலுவல் மறைப்புச் சட்டம் 1923 (Official Secrets Act 1923) மூலமாகவும் மற்ற குறிப்பிட்ட சட்டங்கள் மூலமாகவும் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அத்தடையானது புதிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ளது.
 குடிமக்களை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறையானது அரசாங்கம் செயல்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களின் திறனை அதிகரிக்கவும், முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
செயல் முறை
 இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்களும் ஒரு பொதுத் தகவல் ஆணையரை (அலுவலரை) நியமிக்க வேண்டும். (Public Information Officer)
தகவலைப் பெறும் நோக்கில் எவரும் தமது வேண்டுகோளை எழுத்துப்பூர்வமாக பொதுத் தகவல் ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம்.
 அவ்வாறு விண்ணப்பித்த மனுதாரருக்கு அவர் கேட்ட தகவல்களை அளிப்பது பொதுத் தகவல் ஆணையரின் கடமையாகும்.
 சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோளானது குறிப்பிட்ட பொது நிறுவனத்தைச் சாராது, வேறொரு பொது நிறுவனத்தோடு தொடர்புடையதாக இருந்தால் அப்பொதுத் தகவல் ஆணையர் அவ்வேண்டுகோளை அதனுடன் சம்பந்தப்பட்ட துறைக்கு 5 வேலை நாட்களுக்குள் மாற்றி அனுப்ப வேண்டும்.
 ஒவ்வொரு பொது நிறுவனமும் ஒரு உதவி பொதுத் தகவல் ஆணையரைத் தகவல் பெறும் உரிமைச் சட்ட வேண்டுகோள்களை ஏற்கும் பொருட்டும் அதனை தொடர்புடைய தகவல் ஆணையருக்கு அனுப்பும் பொருட்டும் நியமிக்க வேண்டும்.
 தகவல் வேண்டுபவர் தனது பெயர் மற்றும் முகவரியைத் தவிர தகவல் பெறுவதற்கான காரணம் போன்றவற்றைத் தெரிவிக்க¢ தேவையில்லை.
தனி மனிதர் ஒருவரின் தகவல் பெறும் வேண்டுகோளை (விண்ணப்பத்தை) சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஏற்க மறுத்து விட்டாலோ, அல்லது அவ்விண்ணப்பத்தை செயலாக்கம் செய்ய அலுவலரை நியமிக்கா விட்டாலோ, மத்திய தகவல் ஆணையம் அதுகுறித்து பரிசீலனை செய்யும்.
கால வரம்பு
 பொதுத் தகவலை ஆணையருக்கு அனுப்பப்படும் (தகவல் பெறும்) விண்ணப்பத்திற்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும்.
 விண்ணப்பமானது உதவி பொதுத் தகவல் ஆணையர் முன் சமர்ப்பிக்கப்படுமாயின்¢ 35 நாட்களுக்குள் பதில் தரப்பட வேண்டும்.
 அவ்வேண்டுகோள் பொதுத் தகவல் ஆணையரிடமிருந்து மற்றொரு பொதுத்துறை நிறுவனத்துக்கு மாற்றப்படுமாயின், அவ்வாறு புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும்.
 அட்டவணையிடப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் (நிறுவனங்கள்) (அட்டவணை 2ல் குறிப்பிட்டவை த.பெ.உ.ச. 2005) குறித்த ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான கேள்விகளுக்கு 45 நாட்களுக்குள் விடையளிக்க வேண்டும். அதற்குமுன் மத்திய தகவல் ஆணையத் திட்டம் அவ்வேண்டுகோளுக்கான பதிலளிக்க அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.
எனினும் ஒரு மனிதனின் உயிர் மற்றும் சுதந்திரம் தொடர்பான விண்ணப்பங்கள் 48 மணி நேரத்திற்குள் விடையளிக்கப்பட வேண்டும்.
எல்லைகள்
 இச்சட்டம் அனைத்து சட்டமியற்றும், நிர்வகிக்கும் நிதித் துறை உள்ளிட்ட அரசியலமைப்பு நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும்.
 பாராளுமன்றம் / சட்டமன்றம் மூலமாகக் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நிறுவனங்களும் அடங்கும்.
 அரசாங்கம் ஏற்படுத்திய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்/அமைப்புகள், அரசு கட்டுப்படுத்தும் நிறுவனங்கள், அரசிடம் நிதியுவி பெறும் நிறுவனங்கள் மற்றும் அரசிடம் இருந்து நிதி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் இவையனைத்தும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
உள்ளடங்காத நிறுவனங்கள்:
 மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளானவை.
1. புலனாய்வுத் துறை (IB)
2. வருமான வரிகள் துறை பொது இயக்குநரகம்
3. மத்திய உளவுத் துறை (RAW)
4. மத்திய புலனாய்வுத் துறை (CBI)
5. வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம்
6. மத்திய பொருளியல் புலனாய்வுத் துறை
7. Directorate of Enforcement
8. Narcotics Control Bureau
9. Aviation Research Centre
10. சிறப்பு எல்லைப் படைகள்
BSF, CRPF, ITBP, CISF, NSG, Assam Rifles
11). சிறப்பு சேவைகள ¢துறை
மேல் முறையீடு
 தகவல்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் பொதுத் தகவல் ஆணையர்/ உதவி பொதுத் தகவல் ஆணையருக்கு எதிராக மூத்த அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம்.
 அடுத்ததாக இரண்டாவது மேல் முறையீடு 90 நாட்களுக்குள் மத்திய தகவல் ஆணையத்திடமோ அல்லது மாநில தகவல் ஆணையத்திடமோ செய்யலாம்.
 மத்திய தகவல் / மாநில தகவல் ஆணையங்களின் முடிவுகள் விண்ணப்பதாரரையும் பொதுத் தகவல் ஆணையரையும் கட்டுப்படுத்தும்.
அபராதம்
 கோரிய தகவல்கள் உரிய நேரத்தில் அளிக்கப் படவில்லையென்றாலோ, மறுக்கப்பட்டாலோ, வேண்டுமென்றே தவறாகக் கொடுக்கப்பட்டாலோ, அரைகுறையாக தெரிவிக்கப்பட்டாலோ, கேட்கப்பட்ட விவரங்களுக்குப் பொருந்தாத வகையில் தகவல்கள் இருந்தாலோ அல்லது வேறு காரணங்கள் காரணமாக தகவல் பெறத் தடை ஏற்பட்டாலோ, தகவல் பெறும் நாள் வரை ரூபாய் 200 (அ) 500 தினந்தோறும் அபராதமாக விதிக்கப்படும். எனினும் அந்த மொத்த அபராதத் தொகை ரூபாய் 2500ஐ விட அதிகமாக இருத்தல் கூடாது.
அமைப்பு சாரா பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு சட்டம்  2008
 இச்சட்டமானது அமைப்பு சாரா பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் அதனோடு தொடர்புடைய பிற விஷயங்களை வழங்கும்.
 இது இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுளளது.
அமைப்பு சாரா பணியாளர்கள்
அமைப்பு சாரா பணியாளர்கள் என்பது வீட்டுத் தொழிலாளி, சுயவேலைத் தொழிலாளி அல்லது அமைப்பு சாரா துறையின் கூலித் தொழிலாளி மற்றும் இச்சட்டப்படி அட்டவணையில் குறிப்பிடப்படாத அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.
சமூகப் பாதுகாப்பு நலன்கள் :
 மத்திய அரசு சாரா பணியாளர்களின் பல விஷயங்களில் நலத்திட்டங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு நேரம் வடிவமைத்து தெரியப்படுத்துகிறது.
அ) வாழ்க்கை மற்றும் இயலாமை சூழ்நிலையின் போது
ஆ) உடல்நல மற்றும் மகப்பேறின் போது
இ) முதியோர் பாதுகாப்பு
ஈ) மத்திய அரசு உறுதி செய்யும் மற்ற நன்மைகள்
 மாநில அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் பல விஷயங்களை நலத்திட்டங்களை நேரத்திற்கு நேரம் வடிவமைத்து தெரியப்படுத்துகிறது.
அ) வருங்கால வைப்பு நிதி
ஆ) வேலைவாய்ப்பின் போது ஏற்படும் காயங்களுக்கான உதவிகள்
இ) வீடு அமைப்பு
ஈ) குழந்தைகள் கல்வித் திட்டம்
உ) தொழிலாளர் திறன் மேம்பாடு
ஊ) இறுதிக் கால உதவி
எ) முதியோர் இல்லங்கள்
தேசிய அமைப்பு சாரா பணியாளர்களின் சமூக பாதுகாப்பு வாரியம்
வாரியம் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அ) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்  தலைவர்
ஆ) பொது இயக்குநர் (தொழிலாளர் நலன்)  உறுப்பினர் செயலர்
இ) மத்திய அரசால் 34 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர் களுள்
 7 பேர் அமைப்புசாரா பணியாளர்களைக் குறிக்கிறது.
 7 பேர் அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களைக் குறிக்கிறது.
 7 பேர் குடிமை சமூகத்திலுள்ள திறமை வாய்ந்த நபர்களைக் குறிக்கிறது.
 2 மக்களவை உறுப்பினர்களையும் மற்றும் 1 ராஜ்யசபை உறுப்பினர்களையும் குறிக்கிறது.
 5 பேர் சம்பந்தப்பட்ட மத்திய அரசாங்க அமைச்சகம் மற்றும் துறை
 5 பேர் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்க அமைச்சகம் மற்றும் துறை
 இவ்வாரியத்தின் பதவிக் காலம்  3 ஆண்டுகள்
 இவ்வாரியம் வருடத்திற்கு மூன்று முறை கூடும்.
 பொதுவாக இச்சட்டத்தின் கீழ் மாநில அமைப்புசாரா பணி யாளர்களின் சமூகப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
 இதன் சாதனைகளும் செயல் பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிகழ்த்தப்படும்.
பதிவு செய்தல்
ஒவ்வொரு அமைப்புசாரா பணியாளர்களும் பின்வரும் பூர்த்திகளை உறுதி செய்து பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
1) ஆண்/பெண் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
2) ஆண்/பெண் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சுய உறுதிமொழி உறுதி செய்யப்பட வேண்டும்.
 ஒவ்வொரு அமைப்பு சாரா பணியாளர்களும் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அதாவது தனிப்பட்ட அடையாள எண்ணைக் கொண்ட ஸ்மார்ட் கார்டைக் கொண்டிருக்க வேண்டும்.
சமூக பாதுகாப்புத் திட்டங்கள்:
1) இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்
2) தேசிய குடும்பநலத் திட்டம்
3) ஜனனி சுரக்ஷ யோஜனா
4) கைத்தறி நெசவாளர்களின் விரிவான நலத்திட்டங்கள்
5) கைவினைக் கலைஞர்களின் விரிவான நலத்திட்டம்
6) முதன்மை கைவினை நபர்களின் ஓய்வூதியம்
7) ஜனஸ்ரீ பீம யோஜனா
8) ஆம் ஆத்மி பீம யோஜனா
9) இராஷ்டிரிய சுவஸ்திய பீம யோஜனா
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்  2009
 இச்சட்டம் 2002ம் ஆண்டு 86வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 இதன் மூலம் அடிப்படை உரிமைகளில் விதி21ஏவில் சேர்க்கப்பட்டுள்ளது.
 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது.
 தொடக்கக் கல்வி பெறுவது குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமையாகும்.
 இது மறுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக பூர்த்தி செய்யப்பட்ட நீதிப் போராணை மனு மூலம் சட்டவிதி 32 மற்றும் 226ன் படி உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகலாம்.
 அரசுப் பள்ளிகள் இலவசக் கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கும் பொருட்டு தனியார் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு குறைந்தது 25% கட்டணமாகவோ அல்லது கட்டணமின்றியோ அளிக்கலாம்.
 பள்ளி ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் போதுமான முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.
 பள்ளி உள்கட்டமைப்பு தேவையான அளவு மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அங்கீகாரம் இரத்து செய்யப்படும்.
 வயது ஆதாரம் இல்லாத எந்தக் குழந்தைகளுக்கும் சேர்க்கை மறுக்கப்பட வேண்டும்.
 தொடக்கக் கல்வி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை குழந்தைகளை வெளியேற்றக் கூடாது.
 உறுப்பு 51Aவில் புதிய துணை வகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 51A(K) : ஒவ்வொரு தந்தை அல்லது காப்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தொடக்கக் கல்வியை வழங்குவதற்கு அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
 தடை செய்யப்பட்டவை : உடல் தண்டனை மற்றும் மன துன்புறுத்தல், திரையிடல் நடைமுறைகள், ஆசிரியர்களின் தனிப்பயிற்சி வகுப்புகள்.
 நிதிச் சுமை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் (கொடுமைகளைத் தடுத்தல்) சட்டம் 1989
 இச்சட்டம் SC/ST சட்டம், கொடுமைகளைத் தடுத்தல் சட்டம் (POA) அல்லது சாதாரணமாக கொடுமைச் சட்டம் என பிரபலமாக அழைக்கப்படுகிறது.
 1955ல அரசாங்கம் தீண்டாமை (குற்றம்) தடுப்புச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டமானது சீரமைக்கப்பட்டு மற்றும் மறுபெயரிடப்பட்டு பாதுகாப்பான குடியுரிமைச் சட்டமாக 1976ல் ஆனது.
 1989ல் SC/ST மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளைச் சரிபார்க்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
 வரையறுக்கப்பட்ட விரிவான கொடுமை குற்றங்கள் பின்வருமாறு: சகிக்க முடியாத விஷயங்கள், தவறான நடவடிக்கைகள், காயம், அவமானம், வருத்தம், தவறான ஆக்ரமிப்பு அல்லது பிற நபர் உடைய எந்நிலத்திலும் பயிரிடுதல், கட்டாய உழைப்பு, கொத்தடிமை, பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள்.
 இச்சட்டத்தின் கீழ் ஒருவர் (பொது சேவை புரிபவர்) தனது கடமையைச் செய்யாமல் இருந்தால் 6 மாத காலம சிறைத்தண்டனை பெறுவர். இது மேலும் ஒரு வருட காலம் நீட்டிக்கப்படலாம்.
 விரைவான நீதிக்காக ஒவ்வொரு மாநில அரசும், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம்.
 ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு அமர்வு நீதிமன்றம் அமைக்கலாம். ஒவ்வொரு சிறப்பு நீதிமன்றத்திலும் மாநில அரசாங்கம் அரசு வழக்கறிஞரை அல்லது சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கலாம்.
 கொடுமைக் குற்றமானது நடவடிக்கைக்கு உட்பட்டது.
 எதிர்கால சொத்து இணைப்பிற்கு கூடுதலான தண்டனை வழங்கப்படும்.
 கொடுமைகள் நிகழக்கூடிய பகுதிகளின் அடையாளங்கள் :
இப்பகுதிகள் மாவட்ட நீதிபதி அல்லது துணைக் கோட்ட நீதிபதி அல்லது நிர்வாக நீதிபதி அல்லது  DSP  பிரிவிற்குக் குறையாத காவல்துறை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment