Friday 24 January 2014

இந்திய பாதுகாப்புப் படைகள்

இந்திய பாதுகாப்புப் படைகள்
Posted Date : 19:12 (12/12/2013)Last updated : 19:12 (12/12/2013)
- த.ராமர்
இந்தியப் பாதுகாப்புப் படை (Indian Armed Forces) முப்படைகளான தரைப்படை, கடற்படை, வான் படைகளுடன் கூடிய கடலோரக் காவல் படை மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டுள்ளது.
 உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றான இந்திய பாதுகாப்புப் படைகளின் (முப்படை) தலைவர் இந்தியக் குடியரசுத் தலைவர்.
 இந்திய பாதுகாப்புப் படைகள் மத்திய இராணுவ அமைச்சரால் வழிநடத்தப்படும் பாதுகாப்பு அமைச்சகத்தால் (Ministry of Defence) நிர்வகிக்கப்படுகிறது.
 இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யில் 1.83% ராணுவத்திற்காகச் செலவிடுகிறது.
 அரசமைப்பின் 53-வது உறுப்பு (Article) முப்படைகளின் தலைவர் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடுகிறது.
 பிரதமரின் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கியத் தீர்மானங்களை எடுக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகமும் மூன்று படைப் பிரிவுகளும் படைகளின் கட்டுப்பாடு, செயல்பாடு குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.
 1932-ம் ஆண்டு இந்தியன் மிலிட்டரி அகாடமி தொடங்கப்பட்டது.
 முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களிலும் பங்கேற்றுள்ளது.
 ஆங்கில இந்தியத் தரைப்படை விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. 1857 முதல் விடுதலைப் போராட்டத்துக்கு கொழுப்பு தடவிய தோட்டாக்களை இந்தியச் சிப்பாய்கள் வாங்கிக்கொள்ள மறுத்து பெர்ஹாம்பூர், மீரட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியே உடனடிக் காரணமாகக் கருதப்படுகிறது.
இந்திய பாதுகாப்புப் படைப் பிரிவுகள்
1. இந்திய தரைப்படை (Indian Army)
2. இந்திய கடற்படை (Indian Navy)
3. இந்திய வான்படை (Indian Airforce)
4. துணை ராணுவப் படைகள்
5. இந்தியக் கடலோர காவல்படை

இந்திய தரைப்படை
 இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படை.
 இந்தியாவின் எல்லைக் கண்காணிப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகள், இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப் பணி, நலப்பணிகளில் இந்திய ராணுவம் பெரும்பங்கு வகிக்கிறது.
 இந்தியத் தரைப்படை தினம்  ஜனவரி 15
 முதல் கமாண்டர் இன் சீஃப்  ஸ்டிங்கர் லாரன்ஸ் (1748)
 இந்தியத் தரைப்படை கமாண்டர்இன் சீஃப் பதவியேற்ற முதல் இந்தியர்  ஜெனரல் K.M.கரியப்பா.
 1955-ம் ஆண்டு கமாண்டர் இன்சீஃப் என்னும் பதவிக்குப் பதிலாக சீஃப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் (Chief of Army Staff) பதவி ஏற்படுத்தப்பட்டது.

ந்திய தேசிய ராணுவம் (Indian National Army) இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒன்று. இதில் இந்திய ராணுவத்தின் போர்க் கைதிகள் இடம் பெற்றிருந்தனர். இது 1942-ம் ஆண்டு ராஸ் பிஹாரி போஸ் என்பவரால் தொடங்கப்பட்ட ஒன்று. இதன் படைத் தலைவர் மோகன்சிங். 1943-ம் ஆண்டு இந்திய தேசிய ராணுவத்திற்கு புத்துயிர் அளித்து 43,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையாக உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இந்திய கடற்படை
 1934-ம் ஆண்டு ராயல் இந்தியன் நேவி உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு கடற்படை இந்தியன் நேவி, இந்தயா மரைன், பம்பாய் மரைன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது.
 ராயல் இந்தியன் நேவியின் முதல் கமாண்டர்இன்சீஃப் I.T.S..ஹால்
 1950-ம் ஆண்டு ராயல் இந்தியன் நேவி பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்தியன் நேவி என்று அழைக்கப்பட்டது.
 இந்திய கடற்படையின் முதல் கமாண்டர் இன் சீஃப்  அட்மிரல் எட்வர்ட் பாரி.
 இந்தியாவின் முதல் சீஃப் ஆஃப் நேவல் ஸ்டாஃப்  அட்மிரல் மார்க் பைஸி.
 கடற்படைத் தலைவராகப் பதவியேற்ற முதல் இந்தியர்  R.D.கடாரி.
HMS என்பதற்கு His/Her Majestic Ship' என்று அர்த்தம்.
 INS (Indian Naval Ship)  கடற்படையின் கப்பல்களுக்கு பெயர் குறிப்பிடும் போது INS சேர்த்து அழைக்கப்படுகிறது.
 இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் APJ. அப்துல்கலாம் (2006). நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் INS சிந்துரக்ஷக்.
 INS சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இது 2013-ம் ஆண்டு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
 இந்திய கடற்படையின் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல்  INS விக்ராந்த்.
 INS விக்ராந்த், 1961-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது.
 இந்தியாவின் முதல் நேவல் அகாடமி, கேரள மாநில 'கொச்சி'யில் 1969-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
 இந்தியக் கடற்படை தினம்  டிசம்பர் 4
 இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய ஒரு படைப் பிரிவாக இந்திய கடற்படை திகழ்கிறது.
 நமது மொத்த வணிகத்தில் 90 சதவீதம் கப்பல் போக்குவரத்து மூலமே நடைபெறுகிறது.
 ஆபரேஷன் பிளாஸம் (Operation Blossom) : 2011-ம் ஆண்டு லிபியாவிலிருந்து இந்தியர்களை விடுவிக்க இந்திய கப்பற்படையின் மைசூர், ஜலஸ்வா மற்றும் ஆதித்யா போர்க்கப்பல்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
 கடற்கரையோர பாதுகாப்பு: 2009-ம் ஆண்டு இந்திய கப்பற்படை கடற்புற பாதுகாப்பை கவனிக்கும் வகையில் Brown Water Operationsஐ நடத்தியது.
 கடற்கொள்ளைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2008-ம் ஆண்டு ஏடன் வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல் களுக்கு பாதுகாப்பை அளித்தது.

கடலோர காவல்படை (Indian Coast Guard)
 1978-ம் ஆண்டு EEZ (Exclusive Economic Zone) களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ருஸ்தம்ஜி கமிட்டியின் பரிந்துரைப்படி இந்தியன் கோஸ்ட் கார்டு (இந்திய கடலோர காவல் படை) அமைக்கப்பட்டது.
 இந்தியாவின் தீவுகள் மற்றும் கடலில் உள்ள முக்கிய பகுதிகளை பாதுகாப்பது, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாத்தல், கடத்தலை தடுத்தல், கடற்கரையுடன் நாட்டு எல்லைகளை பாதுகாத்தல் ஆகியவை இதன் முக்கிய பணிகள் ஆகும்.
 இந்திய கடலோர காவல் படையின் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது. இதன் மண்டல தலைமையகங்கள் மும்பை, சென்னை, காந்தி நகர், போர்ட் பிளேர் மற்றும் காரைக்காலில் உள்ளது.
 மேலும் இரண்டு விமான நிலையங்கள், ஐந்து விமான (Air Endaves) மூன்று ஏர் ஸ்குவாட்ரான்ஸ் கடற்பகுதியில் தொலைந்துபோன கப்பல்களைத் தேடும் பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை
1932-ம் ஆண்டு ராயல் இந்தியன் ஏர்போர்ஸ் உருவாக்கப்பட்டது. இது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ல் இந்திய விமானப்படை (இந்தியன் ஏர்போர்ஸ்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 உலக அளவில் நான்காவது மிகப் பெரியது.
 முதல் ஏர் மார்ஷல்  சர். தாமஸ் எல்ம்கர்ஸ்ட்.
 இந்திய விமானப் படையின் ஏர்மார்ஷலாகப் பதவியேற்ற முதல் இந்தியர்  ஏர் மார்ஷல் S.முகர்ஜி.
 இந்திய விமானப் படையின் முதல் ஏர்சீஃப் மார்ஷல்  அர்ஜுன் சிங்.
 ஐந்து கமாண்டுகள் மற்றும் பயிற்சி, பராமரிப்புகளுக்காக இரண்டு செயல்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளது.
 இந்திய விமானப்படையின் சுகோய் 30 MKI என்னும் போர் விமானத்தில் 2006-ம் ஆண்டு பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் A.P.J .அப்துல்கலாம்.
 இந்திய விமானப் படையின் முதல் பெண் ஏர் மார்ஷல், ஏர் வைஸ் மார்ஷல் பத்மாவதி பந்தோபாத்யாயா.
இந்தியாவில் முழுவதுமாகத் தயாரிக்கப்பட்ட போர் விமானம் ''தேஜஸ்''.
தேசிய மாணவர் படை (National Cadet Corps)
 1948-ம் ஆண்டு தேசிய மாணவர் படை சட்டத்தின்படி NCC தோற்றுவிக்கப்பட்டது.
 இளைஞர்களுக்கு தன்னொழுக்கம், அர்ப்பணிப்பு, நல்ல குணாதிசயங்கள் போன்ற பல நல்வழிகளைக் கற்றுத் தருவதே இதன் நோக்கம்.
 ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் (Unity and Discipline) இதன் லட்சியம்.
 1949-ம் ஆண்டு முதல் மாணவியருக்கு தேசிய மாணவர் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
 1960-ம் ஆண்டு NCC ரைபிள்ஸ் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, 1964ல் NCC உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
 1963-ம் ஆண்டு அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 1 ஆண்டு கட்டாய பயிற்சி என ஆரம்பிக் கப்பட்டு 1968-ம் ஆண்டு விருப்ப கல்வி நிலைக்கு மாற்றப்பட்டது.
 மரம் நடுதல், துப்பாக்கி சுடுதல், மலையேறுதல் போன்ற பணி களுடன் நாட்டு நலப்பணிகளிலும் தேசிய மாணவர் படை பங்கேற்கிறது.

No comments:

Post a Comment