Monday 17 March 2014

Classical Dances of India

Classical Dances of India:

Bharat Natyam – Tamil Nadu;
Bihu – Assam;
Bhangra – Punjab;
Chhau – Bihar, Orissa, W. Bengal and Jharkhand;
Garhwali – Uttaranchal;
Garba – Gujarat;
Hattari – Karnataka;
Kathak – North India;
Kathakali – Kerala;
Kutchipudi – Andhra Pradesh;
Khantumm – Mizoram;
Karma – Madhya Pradesh;
Laho – Meghalaya;
Mohiniattam – Kerala;
Mando – Goa;
Manipuri – Manipur;
Nati – Himachal Pradesh;
Nat-Natin – Bihar;
Odissi – Orissa;
Rauf – Jammu & Kashmir;
Yakshagan – Karnataka;

தமிழ் அறிஞர்களும் தொண்டும்.....

தமிழ் அறிஞர்களும் தொண்டும்.....
மகாகவி பாரதி
*எட்டயபுரத்து சமஸ்தான புலவர்கள் பாரதி என பட்டமளித்தனர்
*ஷெல்லிதாசன் என தன்னை அழைத்துக்கொண்டார்
*புனைப்பெயர்கள்-காளிதாசன்,சக்திதாசன்,நித்திய தீரர்
*தம் பூணூலை கனகலிங்கம் என்ற திராவிடருக்கு அளித்தவர்
*புதுக்கவிதைக்கு முன்னோடி
*இவருக்கு முன்னோடி வால்ட் விட்மன்
*கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்
*1905-ல் சக்கரவர்த்தினி இதழ் தொடங்கினார்
*சுதேச மித்ரன் இதழின் துணை ஆசிரியர்
*இந்தியா இதழின் ஆசிரியர்
*சென்னை ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்
*நிவேதா தேவியை சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
*பாலபாரதி என்ற ஆங்கில இதழை நடத்தினர்
---தொடரும்...

பாரதிதாசன்....

*16வயதில் புதுவை அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்
*1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்
*பாரதியின் கட்டளைக்கு இணங்க படியது எங்கு காணினும் சக்தியடா பாடல்
*இவர் நடத்திய இதழ்-குயில்
*இவர் உரை எழுதிய நூல்-திருக்குறள்
*கற்ற பெண்களின் சிறப்பை கூறும் நூல்-குடும்பவிளக்கு
*கல்லாத பெண்களின் இழிவை கூறும் நூல்-இருண்ட வீடு
*பில்கணியத்தின் தழுவல் புரட்சி காப்பியம்
டெல்லி சுல்தானிய வம்சங்கள்...
*அடிமை- கிபி 1206-1290
*கில்ஜி-கிபி 1290-1320
குறுகிய கால வம்சம்
*துக்ளக்-கி.பி 1320-1413
நீண்ட கால வம்சம்

*சையது -1414-1451
*லோடி-1451-1526

இந்திய ஆறுகள்-பிறப்பிடம்

*சிந்து-கைலாஷ் மலை தொடர்
*கங்கை-அலக்நந்தா
*யாமுனை-யமுனோத்ரி
*பிரம்மபுத்ரா-சமாயுங்
*காவிரி-குடகுமலை
*கோதாவரி-நாசிக் குன்று
*கிருஷ்ணா-மகாபலேஸ்வர்
*நர்மதை-அமர்கண்ட்
*தபதி-பச்மாரி மலை
*கோமதி-இமயமலை
*காக்ரா-சிவாலிக்
*மகாநதி-சாத்பூரா மலை
*வைகை,பெரியாறு-ஏலகிரி
*தாமிரபரணி-அகத்தியர் மலை
**அடிமை வம்ச சுல்தான்கள் கால வரிசை
*குத்பைதின் ஐபக்
*ஆரம் பக் ஷ்
*இல்துமிஷ்
*ருக்னுதீன்
*ரஷியா ( பெண் )
*பஹ்ரம் ஷா
* அலாவுதீன் ஷா
*நசுரூதின்
*பால்பன்
*கைக்குபாத்
*கைமூர்ஸ்
தொடரும்...

▶ ▶ ▶ சர்வதேச அமைப்பு மற்றும் தலைமையகம் ◀ ◀ ◀

▶ ▶ ▶ சர்வதேச அமைப்பு மற்றும் தலைமையகம் ◀ ◀ ◀

1. ஐக்கிய நாடுகள் அமைப்பு / United Nations Organisation ------ நியூயார்க்

2. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் 'நிதியம் / United Nations Childrens' Fund (UNICEF) ------ நியூயார்க்

3. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் / United Nations Population Fund (UNFPA) ------- நியூயார்க்

4. வர்த்தக மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு / United Nations Population Fund (UNCTAD) ------- ஜெனீவா

5. உலக சுகாதார அமைப்பு / World Health Organisation ------ ஜெனீவாவில்

6. சர்வதேச தொழிலாளர் அமைப்பு / International Labour Organisation ------ ஜெனீவாவில்

7. சர்வதேச செஞ்சிலுவை குழு / International Committee of the Red Cross ------ ஜெனீவா

8. உலக வர்த்தக அமைப்பு / World Trade Organisation ------ ஜெனீவாவில்

9. உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு / World Meteorological Organisation ------ ஜெனீவா

10. உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு / World Intellectual Property Organization ----- ஜெனீவா

11. சர்வதேச நியமங்கள் அமைப்பு / International Standards Organisation ----- ஜெனீவா

12. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு / United Nations Educational Scientific and Cultural Organisation (யுனெஸ்கோ) ------ பாரிஸ்

13. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு / Organisation for Economic Cooperation and Development (OECD) ------ பாரிஸ்

14. ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு / United Nations Industrial Development Organization (UNIDO) -------------- வியன்னா

15. சர்வதேச அணுசக்தி முகமை / International Atomic Energy Agency -------- வியன்னா

16. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு / Organisation of Petroleum Exporting Countries (OPEC) ------- வியன்னா

17. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund (IMF) ------------- வாஷிங்டன் DC

18. உலக வங்கி / World Bank ----- வாஷிங்டன் DC

19. சர்வதேச மன்னிப்பு சபை / Amnesty International --------- லண்டன்

20. சர்வதேச கடல்சார் அமைப்பு / International Maritime Organisation -------- லண்டன்

21. காமன்வெல்த் நாடுகள் / Commonwealth of Nations ----------- லண்டன்

22. சர்வதேச நீதிமன்றத்தின் / International Court Of Justice ------ ஹேக்

23. யுனிவர்சல் தபால் ஒன்றிம் / Universal Postal Union ----- பேரனே

24. உணவு மற்றும் விவசாய அமைப்பு / Food and Agricultural Organisation (FAO) -------- ரோம்

25. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு / North Atlantic Treaty Organisation (நேட்டோ) --------- பிரஸ்ஸல்ஸ்

26. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை / International Renewable Energy Agency ------------ அபுதாபி (அமீரகம்)

27. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு / South Asian Association for Regional Cooperation --------- கட்மாண்டு

28. தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் / Association of South East Asian Nations (ASEAN) ---------- ஜகார்த்தா

29. ஆசியா பசிபிக் பொருளாதார அரங்கில் Asia Pacific Economic Forum (APEC) -------- சிங்கப்பூர்

30. பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்திய பெருங்கடல் ரிம் சங்கம் / Indian Ocean Rim Association for Regional
Cooperation ---------- Ebene , மொரிஷியஸ்

31. இரசாயன ஆயுதங்களை தடை அமைப்பு / Organisation for the Prohibition of Chemical Weapons ------------ ஹேக் , நெதர்லாந்து

Thursday 13 March 2014

அறிவுத் தகவல்கள்!

அறிவுத் தகவல்கள்!

* ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள்‘Little Boy,’ ‘Fat man’.

* பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள்,‘Be prepared’.
Couch Potato’:எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

* எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்:இக்லூ.

* கங்காருக் குட்டியை‘Joey’என்பர்.

* ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

* ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

* ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின்மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

* முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

* ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம்தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.

* பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.

* கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியதுCapybara.

* ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

Wednesday 12 March 2014

மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்

███▓▒░░மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்░░▒▓███

1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்/Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)- அக்டோபர் 2009:

இது கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பின்பு இது 2, அக்டோபர் 2009 ஆம் ஆண்டு இதன் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதன் திட்டம் கிராமப்புற பகுதியில் வாழும் மக்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கியது மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதுகாப்பது ஆகும்,
இந்த திட்டத்தின் முலம் 14 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றது.

தற்போது இதன் வேலை நாட்களை 150 நாட்கள் என்று மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது வரும் ஏப்ரல் 2014 இல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சுவர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா/Swarnajayanti Gram Swarozgar Yojana (SGSY) (SGSY)- ஏப்ரல் 1999:

இது சுய உதவி குழுக்கள் அமைத்து அந்த அமைப்பின் மூலம் கிராமப்புற ஏழை மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளிப்பது இதன் குறிக்கோளாகும். இது ஏப்ரல் 1, 1999 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சில மாற்றங்களுடன் 2011 ஆம் ஆண்டு தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission- NRLM) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா/ Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)- டிசம்பர் 2000:

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) 25 டிசம்பர் 2000 அன்று தொடங்கப்பட்டது. இது நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளையும் இணைப்பு சாலைகள் கொண்டு முக்கிய சாலைகளுடன் இணைப்பது ஆகும். இந்த திட்டத்திற்க்கான நிதி முழுமையாக மத்திய அரசு வழங்குகிறது.

4. இந்திரா அவாஸ் யோஜனா/ Indira Awaas Yojana (IAY)- 1985:

இந்த திட்டத்தின் நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தேவையான கட்டுமான பொருட்களுக்கு நிதி உதவி வழங்குவது ஆகும். இதன் முலம் சமதரை பகுதியில் வாழும் மக்களுக்கு 70,000/- என்றும் மற்றும் மலை போன்ற பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ.75,000/- வழங்குகிறது.
கூடுதலாக மொத்த சுகாதாரம் திட்டத்தின் ( Total Sanitation Programme -TSP) கீழ் கழிப்பறை கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டம் 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

5. பாரத் நிர்மாண்/ Bharat Nirman- 2005:

இது கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முலம் கிராமங்களில்
1) சாலை இணைப்பு
2) மின் வசதியாக்கம்
3) கிராமப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம்
4) தொலைபேசி இணைப்பு
5) வீட்டு வசதி
6) நீர் பாசனம்
ஆகிய ஆறு முக்கிய திட்டங்கள் கையாளப்படுகின்றன. இது டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மாதிரி அமைப்பான PURA (கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்- Providing Urban Amenities in Rural Areas) வை அடிப்படையாக கொண்டது. முதல் கட்டம் 2009 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது மற்றும் இப்போது இரண்டாம் கட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

6. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின்/ Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)- டிசம்பர் 2005:

இது பெரிய நகரங்களை நவீனமயமாக்கல் திட்டம் ஆகும். இது 3 டிசம்பர் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு ஏழு ஆண்டு கால திட்டமாக தொடங்கப்பட்டது, 2012 ஏப்ரல் மாதம் இந்த திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகள் நிட்டிக்கப்பட்டது. மார்ச் 31, 2014 ஆம் நாள் இத்திட்டம் முடிவடைகிறது.

7. சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா/ Swarna Jayanti Shahari Rozgar Yojana (SJSRY):

1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கு சுய தொழில் மற்றும் கூலி வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும். இதில் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2007 ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது.

8. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்/ Integrated Child Development Scheme (ICDS):

1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 6 வயது குறைவான வயது உடைய குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாடு பிரச்சினையை போக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

திட்டத்தின் முக்கிய பயனாளிகள் பெண் குழந்தைகள் தங்கள் இளமை வயது வரை , 6 வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகும்.

9. தேசிய ஊரக சுகாதார திட்டம்/ National Rural Health Mission (NRHM):

முதலில் 7 ஆண்டுகள் (2005-12) காலத்துக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற பகுதிகளில் சுகாதார வசதிகளை வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஜனனி சுரக்ஷா யோஜனா இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

மே 2013 இல் மத்திய அரசாங்கம் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை தேசிய சுகாதார திட்டத்தின் (National Health Mission) கீழ் ஒரு துணை திட்டமாக கொண்டுவந்துள்ளது.

10. ஜனனி சுரக்ஷா யோஜனா/ Janani Suraksha Yojana:

இந்த திட்டம் ஏப்ரல் 12, 2005 இல் தொடங்கப்பட்டது. இது நாட்டில் பிறக்கும் குழந்தைகள் இறப்பை குறைப்பது இதன் நோக்கம் ஆகும். மருத்துவமனைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.

11. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்/ Indira Gandhi National Old Age Pension Scheme:

இந்த திட்டத்தின் முலம் 65 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு 200 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவது ஆகும். 80 வயது கடந்தவர்களுக்கு 500 ரூபாய் வழங்குகிறது.

12. ராஷ்டிரிய ஸ்வஸ்த்தி பீமா யோஜனா (தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம்)/ Rastriya Swasthya Bima Yojna:

ஏப்ரல் 1, 2008 இல் தொடங்கப்பட்டது. வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதார காப்பீடு வசதி வழங்குவது இதன் நோக்கம் ஆகும்.
இதன் முலம் உள்நோயாளி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ 30,000 அளவிற்கு மருத்துவ காப்பிடு வழங்கப்படுகிறது.

13. ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டம்/ Jawaharlal Nehru National Solar Mission:

காலநிலை மாற்றத்தின் மீதான தேசிய செயல் திட்டத்தின் ஒரு பகுதி இத்திட்டம் ஆகும். இது 11 ஜனவரி, 2010 இல் தொடங்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தியின் முலம் 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14. ராஜீவ் காந்தி கிராமீன் வித்யூதிகரன் யோஜனா/ Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana:

அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலும் மின்சார வழங்குதல் மற்றும் ஒவ்வொரு வீடும் மின்சாரம் பெற்று இருப்பதை உறுதி செய்வது ஆகும். இது மார்ச் 2005 இல் தொடங்கப்பட்டது.

15. ஆம் ஆத்மி பீமா யோஜனா/ Aam Aadmi Bima Yojna:

கிராமப்புற பகுதியில் வாழும் நிலமற்ற குடும்பங்களின் குடும்ப தலைவர் காப்பீடு திட்டம் ஆகும். இது அக்டோபர் 2, 2007 இல் தொடங்கப்பட்டது. LIC இந்த திட்டத்தை கையாளுகின்றது.

16. ராஜீவ் அவாஸ் யோஜனா/ Rajiv Awas Yojna:

இது 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு “குடிசை இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் நோக்கம்” ஆகும் மற்றும் குடிசைவாசிகளின் தரத்தை உயர்த்துவது ஆகும்.

17. கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா/ kasturba gandhi balika vidyalaya:

இது ஓ.பி.சி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த பெண் மாணவிகளுக்கு நடுநிலை குடியிருப்பு பள்ளிகள் அமைத்து தருவது ஆகும். இது 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

18. பொது சுகாதார காப்பீடு திட்டம் / Universal health Insurance Scheme:

2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டம் ஆகும்

19. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா / Pradhan Mantri Adarsh Gram Yojana:

இது 2009-10 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இது தாழ்த்தப்பட்ட மக்கள் (50% மேல்) அதிக விகிதம் கொண்ட கிராமங்களில் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது. கிராமப்புற சாலைகள், குடிநீர் வசதி, வீட்டு வசதி, மின்சாரம் ஆகியவை இதம் முலம் வழங்கப்படுகிறது.

20. பிரதம மந்திரி ரோஜகர் யோஜனா/ pradhan mantri rozgar yojana:

இது அக்டோபர் 2, 1993 ஆம் நாள் தொடங்கப்பட்டது. வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சிறுதொழில் தொடங்க மற்றும் சிறப்பு பயிற்சிகள் இதம் முலம் வழங்கப்படுகிறது.

Monday 10 March 2014

GK

உயிரி வளர்ப்பு முறைகள்
*வெர்மிகல்சர்-மண்புழு வளர்ப்பு
*மோரிகல்சர்-மல்பெரிசெடி வளர்ப்பு
*செரி கல்சர்-பட்டு புழு வளர்ப்பு
*பிஸ்சி கல்சர்-மீன் வளர்ப்பு
*ஆஸ்டர் கல்சர்-சிப்பி வளர்ப்பு
*எபி கல்சர்-தேனீ வளர்ப்பு
*சில்வி கல்சர்-திட்டமிட்ட மரம் வளர்ப்பு
தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?-கார்த்தில்யா.

*பெஸ்கி அடிகளார் எனப்படுபவர் யார்?-வீரமாமுனிவர்.

*உரைநடையின் தந்தை யார்?-ஆறுமுக நாவலர்.

*சுருக்கென்று தைக்குமாறு கூடிய மொழிநடையைத் தமிழில் தந்தவர்

யார்?----பெரியார் ஈ.வெ.ரா.

*பன்மொழிப் புலவர் எனப் பாராட்டப் பெறுபவர்- தெ.பொ.மீ

*சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப்

போன்றது என்று சோமலே பாராட்டுவார்

*தமிழ்ப் பேரகராதி உருவாகப் பெருங்காரணமாக இருந்தவர்

வையாபுரிப்பிள்ளை
3வது பிம்ஸ்டெக் ( BIMSTEC ) மாநாடு.


*சிட்ரிக் அமிலம்-எலுமிச்சை,ஆரஞ்சு
*லாக்டிக்-பால்
*பார்மிக்-எறும்பு,தேனி கொடுக்கு
*பியூட்ரிக்-நாளாண வெண்ணெய்
*டார்டாரிக்-புளி,திராட்சை
*மாலிக்-ஆப்பிள்
*அசிட்டிக்-வினிகர்
*யூரிக்-சிறுநீர்
*ஆக்ஸாலிக்-தக்காளி
*ஸ்டியாரிக்:கொழுப்பு
*கோலிக்-பித்த நீர்
*கார்பானிக்-சோடா நீர்


*1905-வங்கபிரிவினை
*1906-முஸ்லீம் லீக் துவக்கம்
*1907-சூரத் பிளவு
*1909-மிண்டோ மார்லி சீர்திருத்தம்
*1911-டெல்லி தார்பார்
*1914-18:முதல் உலகப்போர்
*1916-லக்னோ இனணவு
*1917-ஆகஸ்டு பிரகடணம்
*1919-ரௌலட்,மாண்ட் போர்டு சீர்திருத்தம்-இரட்டை ஆட்சி
*1920-ஒத்துழையாமை இயக்கம்
*1923-சுயராட்சிய கட்சி
பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்ககடல் முன்முயற்சி கூட்டமைப்பு ( பிம்ஸ்டெக் )

Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation ( BIMSTEC )

இந்த அமைப்பின் 3வது மாநாடு ' மியான்மார் ' தலைநகர் " நே பியி டா "வில் நேற்று தொடங்கியது.

இதன் உறுப்பினர் நாடுகள் இந்தியா ,இலங்கை,நேபாளம் , பூட்டான், மியான்மார், பங்களாதேஷ் , இந்தோனேசியா ஆகியவை ஆகும்
வீரவல்லி சுந்தரம் சம்பத் - இவரைத் தெரியுமா?
அதிபர் யனுகோவிச்
ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம்  --- >   [b] தாய்-சேய் இறப்பு வீதத்தை குறைப்பது
டாக்டர் மாதங்கிக்கு அவ்வையார் விருது
9th 2012 Bhubaneshwar
100th 2013 Kolkata
101st 2014 Jammu
"சகலகலாவல்லி மாலை" என்னும் பாமாலையின் ஆசிரியர் ---  தாயுமானவர்
தமிழ் நாடக பேராசிரியர் - பரிதிமாற் கலைஞர் தமிழ் நாடக தலைமை ஆசிரியர் - சங்கர தாஸ் சுவாமிகள் தமிழ் நாடக இமயமலை - சங்கர தாஸ் சுவாமிகள் தமிழ் நாடக தந்தை - பம்மல் சம்மந்தனார் தமிழ் நாடக தாத்தா - நவாப் கோவிந்த சிவ ராவ் தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி

GK 02 ) வங்கதேச பிரதமராக சேக் ஹசீனா பதவி ஏற்றுள்ளது எத்தனையாவது முறை ? 3
 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்

*NIT-திருச்சி
*IIT-சென்னை
*CLRI-சென்னை
*NIOT-சென்னை
*CECRI-காரைக்குடி
*IIM-திருச்சி
*காசநோய் ஆராய்ச்சி நிலையம்-சென்னை
*கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம்-சென்னை
*காடு ஆராய்ச்சி நிறுவனம்-கோவை
*பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை கல்வி நிலையம்-கோவை
*கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிலையம்-தூத்துக்குடி

அம்பேத்கரும் காந்தியும்

அம்பேத்கரும் காந்தியும்

பி.ஆர்.அம்பேத்கரின் மிகவும் புரட்சிகரமான புத்தகம் ‘சாதி ஒழிப்பு’. இந்துமத அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகளுக்காக எழுதப்பட்டதல்ல அந்தப் புத்தகம்; தங்களை ‘மிதவாதிகள்’ என்று கருதிக்கொள்வோர்களுக்காக எழுதப்பட்டது. ‘இந்துக்களிலேயே சிறந்தவர்கள்’ என்று அம்பேத்கர் அவர்களை அழைத்தார். ‘இடதுசாரி இந்துக்கள்’ என்று சிந்தனாவாதிகள் அவர்களை அழைக்கின்றனர். இந்து மத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்துக்கொண்டு, தன்னை சுதந்திரச் சிந்தனையாளன் என்றோ மிதவாதி என்றோ ஒருவர் கூறிக்கொள்வது முரண்பாடானது. ‘சாதி ஒழிப்பு’ பிரசுரமானபோது, இந்துக்களிலேயே மிக உன்னதமானவர் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, அந்தச் சீண்டல்களுக்குப் பதிலளித்துவந்தார்.

அம்பேத்கருக்கும் காந்திக்கும் விவாதம் நடப்பது புதிதல்ல; அவர்களுடைய காலத்துக்கும் முன்னதாகவே தொடங்கி, இன்றுவரை நீடித்துவரும் சமூக, அரசியல், சித்தாந்த மோதல்களுக்கு, அவர்களுடைய தலைமுறையின் பிரதிநிதிகளாக இருந்து அவ்விருவரும் வாதிட்டனர். தீண்டத்தகாத வர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய அம்பேத்கர், சாதி முறையை எதிர்த்த - கி.மு. 200-100 காலத்திய - அறிவிஜீவிகளின் வாரிசாக விளங்கினார். குஜராத் மாநிலத்தின் வாணிபக் குலத்தில் பிறந்த வைசியரான காந்தி - சமூகத்தில் சலுகைகள் மிக்க - உயர் சாதி அமைப்புகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் வாரிசாகத் திகழ்ந்தார்.

இந்திய சமூகத்தின் நெடிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு, இந்த விவாதத்தின் பின்னணியையும் அம்சங்களையும் விளக்குவது எளிதல்ல. அவ்விருவரும் கடந்தவந்த அரசியல் பாதைகளைப் புரிந்துகொண்டால்தான் விவாதத்தின் தன்மை, நோக்கம்பற்றி உணர முடியும். அவ்வாறு புரிந்துகொள்ள, சற்றே இதர களங்களுக்குள்ளும் சுற்றிவர வேண்டும்.

இந்த விவாதம் இரு வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கொண்ட இரு தனி நபர்களைப் பற்றியதல்ல. இருவருமே இரண்டு வெவ்வேறு சமுதாயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள். அவர்களுடைய விவாதமே இந்திய தேசிய விடுதலை இயக்கம் என்ற களத்தில்தான் விரித்துரைக்கப்பட்டது. அவ்விருவரும் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள் என்பது இன்றைய அரசியல் களத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் அன்றைக்கும் இன்றைக்கும் சமரசம் செய்துகொள்ள முடியாதவை. இருவருமே அவரவர் தொண்டர்களால் ஆழமாக விரும்பப்பட்டவர்கள், தெய்வமாகவே வழிபடப்படுகிறவர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்தவர்களாகவே இருந்தாலும், ஒரு தரப்புத் தொண்டர்களுக்கு இன்னொருவரைப் பற்றிய பேச்சு மகிழ்ச்சி தருபவையாக இருந்ததில்லை.

வலுவான எதிராளி

அம்பேத்கர்தான் காந்தியின் கருத்துகளை வலுவாக மறுத்த எதிராளி. அரசியல்ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் மட்டுமல்ல; தார்மிக அடிப்படையிலும் காந்திக்குப் பலமான சவாலாக விளங்கியவர் அம்பேத்கர். காந்தியின் வரலாற்றில், அம்பேத்கரைப்பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது முழுமையான வரலாறாகிவிடாது. அதுபோலவே அம்பேத்கரைப் பற்றிய நூலில், காந்தியைப் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பதும் சரியல்ல. ஏனென்றால், அம்பேத்கரின் வாழ்வில் காந்தியின் கருத்துகளுக்கு எதிர்வினை உண்டு.

இந்திய தேசிய (விடுதலை) இயக்கமானது மிக அற்புதமாக உருக்கி வார்க்கப்பட்டது. ஹாலிவுட்டில் எட்டு ஆஸ்கர் விருதுகளைக் குவிக்கும் அளவுக்குக் கதாபாத்திரங்களும் திருப்பங்களும் கதைக்களமும் கொண்டது அது. கருத்துக்கணிப்புகள் நடத்துவதையும் புத்தகங்கள், பருவ இதழ்கள் நடத்துவதையும் நாம் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறோம்; அவற்றில் நாம் நம்முடைய தேசத்தை உருவாக்கிய தந்தையர்களை வரிசைப்படுத்தியும் வரிசை மாற்றியும் விளையாடிக்கொண்டிருக்கிறோம். காந்தியைக் கடுமையாக விமர்சிப்போர் உண்டு. இருந்தாலும், அவர்தான் வரிசையில் முதலிடம் பிடிக்கிறார். மற்றவர்களை நாம் கணக்கில்கொண்டு பார்க்க வேண்டும் என்றால், முதலில் காந்தியைத் தனியாகப் பிரித்து ஒதுக்கிவைத்துவிட்டு, மற்றவர்களைப் பட்டியலிட வேண்டும். காந்திக்குப் பிறகு, மிகப் பெரிய இந்தியர் யார்? அம்பேத்கர்தான் அந்த இடத்துக்கு வருகிறார். ஆனால், ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’யில் - இந்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில் - அம்பேத்கர் பாத்திரத்துக்கு சிறிய இடம்கூடத் தரப்படவில்லை.

அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவர் என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறாரே தவிர, அவருடைய ஆழ்ந்த அரசியல், சமுதாயச் சிந்தனைகள் நினைவுகூரப்படுவதில்லை. அவரை அரசியல் சட்டத்தை வகுத்தவர் என்ற முறையில் மட்டுமே பார்ப்பதும் ஒருவகையிலான பாரபட்சம் தான். உண்மை என்னவென்றால் அம்பேத்கர், காந்தி இருவரையுமே ‘இவர் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவானவர்’ என்றோ ‘ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவர்’ என்றோ நம்மால் முத்திரை குத்திவிட முடியாது. அவர்களுடைய கருத்து மோதல்களால், ஏகாதிபத்தியம்குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள்குறித்தும் நாம் மேலும் பல தகவல்களை அறிய முடிகிறது.

வரலாறு, காந்தியிடம் கருணையுடன் நடந்துகொண்டது. அவருடைய வாழ்நாளிலேயே கோடிக் கணக்கானவர்கள் அவரைத் தெய்வமாகவே கருதினர். காந்தியின் தெய்வீகத்தன்மை உலகம் முழுவதற்குமே பொருத்தமானதாக ஏற்கப்பட்டது. எனவே, அவருடயை ‘சகாப்தம்’ முடிவில்லாமல் நீள்கிறது. காந்தி சில விஷயங்களில் முரண்பட்ட நிலையை எடுத்தவர் என்பது கடந்துவிட்டது. அவையும் அவரை மீண்டும் அடையாளம் காணவே உதவிற்று. காந்தி எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கிறார். ஒபாமா அவரை நேசிக்கிறார், அமெரிக்காவில் அரசு இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு எதிர்ப்பாளர்களான புதிய சத்தியாகிரகிகளும் அவரை நேசிக்கிறார்கள். கலகக்காரர்களும் அவரை நேசிக்கிறார்கள், ஒழுங்கான விதிகளைப் பின்பற்றும் நிறுவனங்களும் அவரை நேசிக்கின்றன. நரேந்திர மோடி அவரை விரும்புகிறார், ராகுல் காந்தியும் அவ்வாறே; ஏழைகள் அவரை விரும்புகின்றனர், பணக்காரர்களும் அப்படியே. “பழமையை மாற்றக் கூடாது, அப்படியே தொடர வேண்டும்” என்று விரும்புவோருக்கும் அவர் புனித குரு.

அவரவருக்கு ஏற்ற காந்தி

காந்தியின் வாழ்க்கையும் எழுத்துகளும் 48,000 பக்கங்களில் எழுதப்பட்டு, 98 தொகுதிகளாகத் திரட்டப் பட்டிருக்கின்றன. அவற்றைத் தனித்தனியாகவும் நிகழ்ச்சிகள் வாரியாகவும், வாக்கியங்கள் வாரியாகவும் எழுதியும் பேசியும் அவற்றுக்கு விளக்கம் அளித்துவருகின்றனர். பிரச்சினை என்ன வென்றால், காந்தி எல்லாவற்றையும்பற்றி கருத்துச் சொல்லியிருக்கிறார்; அந்தக் கருத்துகளுக்கு எதிரானதையும் சொல்லியிருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தங்களுக்குத் தேவையான கருத்துகளை மட்டும் திரட்டிப் பேசுவோருக்கு இவை சாதகமாகவே அமைந்துள்ளன. 1946-ல்

எழுதப்பட்ட, ‘பிரமிடு எதிர் சமுத்திர வட்டம்’ என்பதைப் படித்தால், அவருடைய கருத்துகள் முரண்பட்டிருப்பதை உணரலாம். “சுதந்திரம் என்பது அடிநிலையிலிருந்துதான் தொடங்குகிறது. ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக அல்லது முழு அதிகாரம் பெற்ற பஞ்சாயத்தாக விளங்கும். எனவே, ஒவ்வொரு கிராமமும் சுயசார்புள்ளதாகவும் தன்னுடைய விவகாரங்களைத் தானே பார்த்துக்கொள்ளக்கூடியதாகவும் உலகமே எதிர்த்தாலும் தன்னைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய தாகவும் இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்பில் எண்ணிலடங்கா கிராமங்கள் இடம்பெறும், அவை விரிவடைந்துகொண்டே போகும், அந்த வட்டம் எப்போதும் மேலே உயராது. வாழ்க்கை என்பது பிரமிடைப் போல, நுனியைத் தாங்குகிற அகலமான பீடத்தைப் போல இருக்காது. ஆனால், அது சமுத்திர வட்டத்தைப் போல இருக்கும், அதன் மையத்தில் ஒரு தனிநபர்தான் இருப்பார் - அவர் தன்னுடைய கிராமத்துக்காக உயிரையும் விடுவார். எனவே, இதில் உள்ள வெளிவட்டம், உள்வட்டங்களை நொறுக்கிவிடாது. அது எல்லாவற்றுக்கும் ஆற்றலை வழங்கி, தனக்கு வேண்டிய ஆற்றலை அவற்றிட மிருந்து பெறும்” என்கிறார் காந்தி.

ஆனால், 1921-ல் வெளியான ‘நவஜீவன்’ இதழில், சாதி முறைக்கு அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. குஜராத்தி மொழியில் எழுதப்பட்டதை அம்பேத்கர் மொழிபெயர்த்திருக்கிறார். (காந்தி மக்களை ஏமாற்றிவிட்டார் என்று கூறும் அம்பேத்கர், ஆங்கி

லத்திலும் குஜராத்தியிலும் அவர் எழுதியவற்றை ஒப்பிட்டு வாசிக்கும்படி அறிவுறுத்துகிறார்.)

“சாதி முறையை அழிக்க முற்படுவோரின் கருத்தை நான் எதிர்க்கிறேன்” என்று ஆரம்ப காலத்தில் காந்தி கூறியிருக்கிறார்.

ஆனால் பிற்பகுதியில், “சாதி என்பது அடக்கு முறைக்கு மற்றொரு பெயர். மகிழ்ச்சிக்கு வரம்பு கட்டுவது சாதி. மகிழ்ச்சிக்காக ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்தைவிட்டு வெளியே வருவதை சாதி அனுமதிப்பதில்லை. பிற சாதியினருடன் சேர்ந்து சாப்பிடுவது, திருமணம் செய்துகொள்வது போன்றவை சாதி அடிப்படையில் தடுக்கப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார்.

சரி, “எப்போதும் விரிவடைந்து, மேல்நோக்கி வளராத (ஆதிக்கம் செலுத்தாத) வட்டங்கள்” என்று அவர் முன்னர் கூறிய கருத்துக்கு இது முரணாக இருக்கிறதா, இல்லையா?

இவ்விரு கருத்துகளும் 25 ஆண்டுகள் இடைவெளியில் கூறப்பட்டவை என்பது உண்மையே. அப்படியென்றால், காந்தி சீர்திருத்தவாதியாக மாறிவிட்டாரா? சாதிகுறித்த கருத்துகளை மாற்றிக்கொண்டுவிட்டாரா? சாதி அமைப்பு முறையில் அவர் கொண்டிருந்த அடிப்படை நம்பிக்கையை மாற்றிக்கொள்ளாமல், “4,000 சாதிகளாக இல்லாமல் பழையபடி நான்கு வருணங்களாக சாதிகள் இணைந்துவிட வேண்டும்” என்றார் காந்தி. “இந்த வர்ணாசிரமம்தான் சாதி முறையின் பிறப்பிடம்” என்கிறார் அம்பேத்கர்.

தன்னுடைய வாழ்நாளின் இறுதிப் பகுதியில், “சேர்ந்து சாப்பிடுவதையோ, சாதி மறுப்புத் திருமணங்களையோ நான் ஆட்சேபிக்கவில்லை” என்றார் காந்தி. (அவை வெறும் கருத்துகளே தவிர, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் அல்ல!) வர்ணாசிரமத்தில் தனக்கு நம்பிக்கை இருந்தாலும், வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், அவரவர் மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார். இதேதான் ஆரிய சமாஜத்தின் கருத்தும். இது எவ்வளவு அபத்தமானது என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். “தங்களுக்கு வேறு தகுதிகள் இல்லாவிட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சாதிய படிநிலையில் மேலே இருப்பவர்களை அந்த இடத்தைவிட்டு இறங்குங்கள் என்று எப்படி உங்களால் வற்புறுத்த முடியும்?” என்று கேட்டார் அம்பேத்கர். “பிறப்பின் அடிப்படையில் கீழ்நிலையில் இருக்கும் ஒருவர், மற்ற தகுதிகள் காரணமாக உயர்நிலை அடைந்தால், அவருக்கு உரிய அங்கீகாரம் தருமாறு உங்களால் எப்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும்?” என்றும் கேட்டார். “பெண்களுடைய நிலை என்ன, அவர்களுடைய நிலையை மட்டும் வைத்து எடை போடப்படுமா அல்லது அவர்களுடைய கணவன்மார்களுடைய நிலையைப் பொருத்ததா?” என்றும் கேட்டார்.

இந்தக் கேள்வி நியாயமானதா?

சிலர் கேட்பதுண்டு: “காந்தி எப்போதுமே சதுர் வர்ணத்தில் தனக்கிருந்த நம்பிக்கையைத் திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் என்றுமே கைவிட்டதில்லை. இருந்தாலும், அவருடைய கருத்துகளில் எதிர்மறையானவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், அவர் சொன்னவற்றில் நன்மை எதுவோ அதைக் கொண்டு மக்களிடமிருந்து நல்லவற்றைப் பெற ஏன் பாடுபடக் கூடாது?”

இது நல்ல கேள்விதான், காந்திக்காகக் கோயில் கட்டியவர்கள், அதை நிர்வகிக்கும் விதத்தி லேயே தாங்களாகவே அதற்குப் பதிலையும் அளித்து விட்டார்கள்.

நம்முடைய நன்மைக்கு விரோதமானதாகவே இருந்தாலும் - பாடல் புனைவோர்கள், எழுத்தாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், இசைவாணர்கள் ஆகியோரின் திறமையை நாம் பாராட்டிப் புகழ்கிறோம். வித்தியாசம் என்னவென்றால், காந்தி பாட்டு எழுதுகிறவரோ, எழுத்தாளரோ, இசைவாணரோ, விளையாட்டு வீரரோ அல்ல. அவர் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்று கருத்துச் சொன்னவர், பரம்பொருளிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு மக்களிடையே ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர், அறநெறிப்படி வாழ்ந்தவர், மனிதாபி மானம் மிக்க காருண்யவான், உண்மை, சத்தியாகிரகம் போன்ற அறநெறிகளைக் கொண்டு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே வீழ்த்தியவர். சத்தியாகிரகத்தை வலியுறுத்திய காந்தி, அதிகார பீடங்களிடமும் உண்மையையே பேசிய காந்தி, அநீதிக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்ட காந்தி, சாந்தமான காந்தி, தாயுள்ளத்தையும் தந்தையின் கண்டிப்பையும் தன்னுள்ளே ஒருங்கே பெற்ற காந்தி, அனைவரையும் தாய்போல் அரவணைத்த காந்தி, அரசியல் களத்தில் பெண்களும் உள்ளே வர வழிவகுத்த காந்தி, புவியின் சுற்றுச்சூழலைக் காக்க விரும்பிய காந்தி, சிக்கலான நிலையிலும் ஒருவரி பதிலால் சிரிப்பில் ஆழ்த்திய காந்தி - ஆகிய இந்த காந்திகளில் ஒருவரை, சாதி அல்லது வர்ணம்பற்றி கருத்துத் தெரிவித்த காந்தியுடன் எப்படி நாம் இணைத்துப் பார்ப்பது?

அடிப்படையிலேயே மூர்க்கத்தனமான - சாதிகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட - நிறுவனரீதியாகவே அநீதிக்குத் துணைபோன சாதிய அமைப்புகள் மீது, இந்த அற விழுமியங்களைக் கொண்டு என்ன செய்வது? காந்தி இப்படித்தான் சிக்கலான சிந்தனை கள் நிரம்பியவர் என்று கூறிவிட்டு விட்டுவிடுவதா?

காந்தி அசாதாரணமானவர், அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியவர், நாட்டின் விடுதலைப் போராட்டத்தின்போது அவர் அதிகாரத்தில் இருந்தவர் களிடம் நிஜமாகவே உண்மையைத்தான் பேசினாரா? உண்மையிலேயே தரித்திர நாராயணர்களிடம் அவர் சேர்ந்திருந்தாரா?

“காங்கிரஸ் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுகிறது என்பதால், இந்திய நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறது, மிகவும் ஏழ்மை நிலையிலிருப்போருக்காகப் போராடுகிறது என்று ஆறுதல்படுவது முட்டாள்தனமானது” என்றார் அம்பேத்கர். “காங்கிரஸ் சுதந்திரத்துக்காகப் போராடுகிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு யாருடைய விடுதலைக்காக அது போராடுகிறது என்பதும் முக்கியம்” என்றார் அவர்.

1931-ல்தான் காந்தி, அம்பேத்கர் சந்திப்பு முதல் முறையாக நடந்தது. “காங்கிரஸ் கட்சியை ஏன் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அம்பேத்கரிடம் கேட்டார் காந்தி. காங்கிரஸ் அப்போது ‘ஹோம் ரூல்’ (சுயாட்சி உரிமை) வேண்டும் என்று கோரிவந்தது. “காந்திஜி, எனக்கு ஹோம்லேண்ட் என்று எதுவுமில்லை” என்று பதில் அளித்தார் அம்பேத்கர். அப்போதுதான், “தீண்டப்படாதவர் என்று அழைக்கப்படும் ஒருவர்கூட இந்த தேசம்குறித்துப் பெருமை கொள்ள மாட்டார்” என்ற பிரபலமான கருத்தை அவர் வெளியிட்டார்.

வரலாறு அம்பேத்கரிடம் கனிவுகாட்டவில்லை. முதலில் அது அவரை அடக்கிவைத்தது. பிறகு, அவரைப் பெருமைக்கு உரியவராக்கியது. அவரை இந்தியாவின் தீண்டப்படாதவர்களின் தலைவனாக்கியது, ‘சேரிகளின் மன்னன்’ ஆக அடையாளப்படுத்தியது. அது அவருடைய எழுத்தாற்றலையும் முற்போக்கான அறிவுத்திறனையும் கொதித்தெழும் சுபாவத்தையும் திரையிட்டு மறைத்தது.

அதேசமயம், அம்பேத்கரைப் பின்பற்றுவோர் அவருடைய திறமைகளைப் பல வழிகளிலும் இன்றும் உலகுக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் நாடெங்கும் அவருக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டது.

சிலை அல்ல உயிர்!

அவருடைய சிலை என்பது முற்போக்கான, உயிருள்ள அடையாளம்; தலித்துகளுக்கு உண்டான இடங்களைப் பெறவும், அவர்களுக்கு உரிய உரிமைகளைக் கேட்கவும் உதவுவது. அவர்களுக்கு உரிய நிலம், நீர், கல்வி, வேலைவாய்ப்பு, இதர சமூக உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கான கருவி அது. பொது இடங்களில், கையில் புத்தகத்துடன் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்படுகின்றன (நல்ல வேளையாக அந்தப் புத்தகம், ‘சாதி ஒழிப்பு’ பற்றியதல்ல; அது இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தின் மாதிரி வடிவம்). நல்லதற்கோ கெட்டதற்கோ ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் வரையறுப்பதுதான் அந்தப் புத்தகம்.

அரசியல் சட்டத்தையே, தேசத்தைச் சீர்குலைப்பதற் காகப் பயன்படுத்துவது என்பது ஒன்று; அதனால் வாய்ப்புகளுக்கு வரம்பு கட்டப்படுவது மற்றொன்று. அம்பேத்கருடைய காலச் சூழ்நிலை அவரைப் புரட்சி வீரராக்கியது. அதேசமயம், வாய்ப்பு கிடைத்தபோது அதிகார பீடங்களில் கால் பதிக்கவும் இடம் கொடுத்தது. அவருடைய அறிவாற்றல் இந்த இரு சந்தர்ப்பங்களையும் மிக வலுவான வகையில் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. இப்போதைய காலநிலைகளைக் கொண்டு பார்க்கும்போது, அவர் இரட்டையான - சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும்படியான - பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அம்பேத்கர் சீர்திருத்தவாதி! அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை! அரசியல் சட்டம் என்பது புரட்சிக்குத் தடையாக வரக்கூடும். ‘தலித் புரட்சி’ இதுவரை நடைபெறவில்லை. நாம் இன்னும் அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு முன்னால் இன்னொரு புரட்சி - இந்தியாவில் (நடைபெற) வாய்ப்பே இல்லை.

நவயானா பதிப்பகத்தின் வெளியீடான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘அனிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ சிறப்புப் பதிப்புக்கு அருந்ததி ராய் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.

தமிழில்: சாரி

கவிக்கோ அப்துல் ரகுமான்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிக்கோ அப்துல் ரகுமான்

மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்

புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்

என்று பாராட்டப்பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிறப்பு: மதுரை வைகை ஆற்றின் தென்கரையில் உருதுக்கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு நவம்பர் 2 ஆம் நாள் 1937 ஆம் ஆண்டு பிறந்தவர்.

தனது தொடக்கக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் மதுரையில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று மதுரை தியாகராசர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். அதன்பின் அங்கேயே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய சா.வே.சுப்பிரமணியன் நெறிகாட்டலில் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி: தொடக்கத்தில் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் இதழில் மெய்ப்புத் திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அதன்பின் 1961 ஆம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேரூரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்து 20 ஆண்டுகள் தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றி 1991 ஆம் ஆண்டு விருப்ப ஒய்வு பெற்றார்.

மே 2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வஃக்ப் வாரியத்த தலைவராக பணியாற்றினார். இப்போது முழு நேர இலக்கிய பணியில் செயல்பட்டு வருகிறார்.



படைப்புகள்:

எழுதிய நூல்கள்: 37

கவிதை தொகுப்புகள்: 12

1974 பால்வீதி - கவிதைப் தொகுப்பு

1978 நேயர் விருப்பம் - கவிதைப் தொகுப்பு

1985 கரைகளே நதியாவதில்லை - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)

1986 அவளுக்கு நிலா என்று பெயர் - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)

1986 முட்டைவாசிகள் - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)

1986 மரணம் முற்றுப்புள்ளி அல்ல - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)

1987 விலங்குகள் இல்லாத கவிதை - கட்டுரை

1987 சொந்தச் சிறைகள் - வசன கவிதை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)

1989 புதுக்கவிதையில் குறியீடு - ஆய்வு - முனைவர் பட்ட ஆய்வேடு

1989 சுட்டுவிரல் - பாடல் (முத்தாரத்தில் வெளிவந்த தொடர்)

1990 கம்பனின் அரசியல் கோட்பாடு - ஆய்வு - அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு

1995 ஆலாபனை - கவிதை - சாகித்திய அகாதமி விருது பெற்றது. (பாக்யா இதழில் வெளிவந்த தொடர்)

1998 பித்தன் - கவிதை (குங்குமத்தில் வெளிவந்த தொடர்)

1998 விதைபோல் விழுந்தவன் - கவியரங்கக் கவிதைகள் - அண்ணா கவியரங்கக் கவிதைகள்

1998 முத்தமிழின் முகவரி - கவியரங்கக் கவிதைகள் - மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை

1999 பூப்படைந்த சபதம் - கட்டுரை

1999 தொலைப்பேசிக் கண்ணீர் - கட்டுரை

2003 காற்று என் மனைவி - கட்டுரை

2003 உறங்கும் அழகி - கட்டுரை

2003 நெருப்பை அணைக்கும் நெருப்பு - கட்டுரை

2003 பசி எந்தச் சாதி - கட்டுரை

2003 நிலவிலிருந்து வந்தவன் - கட்டுரை

2003 கடவுளின் முகவரி - கட்டுரை

2003 முத்தங்கள் ஓய்வதில்லை - கட்டுரை

2004 காக்கைச் சோறு - கட்டுரை

2004 சோதிமிகு நவகவிதை - கட்டுரை

2004 மின்மினிகளால் ஒரு கடிதம் - கவிதை (கஜல் கவிதைகள்)

2005 தாகூரின் 'சித்ரா' - மொழிபெயர்ப்பு

2005 ரகசிய பூ - கவிதை

2005 சிலந்தியின் வீடு - கட்டுரை

2005 இது சிறகுகளின் நேரம் - கட்டுரை (ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)

2006 இல்லையிலும் இருக்கிறான் - கட்டுரை

2006 பறவையின் பாதை - கவிதை

2007 இறந்ததால் பிறந்தவன் - கவியரங்க கவிதை (முதல் தொகுதி)

2008 தட்டாதே திறந்திருக்கிறது - கட்டுரை

2010 எம்மொழி செம்மொழி - கட்டுரை

2010 பூக்காலம் - கட்டுரை

2011 தேவகானம் - கவிதை

கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிதை

2013 பாலை நிலா - கவிதை



மொழி பெயர்ப்பு: 01

01. தாகூரின் 'சித்ரா' (2005)

ஆய்வு நூல்கள்: 02

01. புதுக்கவிதையில் குறியீடு (முனைவர் பட்ட ஆய்வேடு, 1989)

02. கம்பனின் அரசியல் கோட்பாடு (ஏவிம் அறக்கட்டளைச் சொற்பொழிவு, 1990)

பதிப்பித்த நூல்கள்: 06

01. குணங்குடியார் பாடற்கோவை (1980), மேலும் 5 சிறு கவிதைத் தொகுதிகள்

ஆய்வு கட்டுரைகள் : 15

ஆய்வு சொற்பொழிவுகள்: ஐம்பதுக்கும் மேல்

கவிதை வாசிப்புக்கும், சொற்பொழிவுக்கும் சென்று வந்த நாடுகள்: இலங்கை, மலேயா, சிங்கபூர், பேங்காக், ஆங்காக், ஐக்கிய அரபு எமிரேட்டு, சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குவைத், பக்ரைன்.

விருதுகள்:

குன்றக்குடி அடிகளார் - பாரிவிழா விருது கவியரசர்(1986)

தஞ்சைத்தமிழ்ப் பல்கலை - தமிழன்னை விருது.(1989)

தமிழக அரசு - பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது(1989)

சாகித்திய அகாதெமி - சாகித்திய அகாதெமி விருது.(1999)

தி.மு.க - கலைஞர் விருது (ஒரு இலட்சம் ரூபாய்)(1997)

கொழும்பு கம்பன் கழகம் (கொழும்பு) - கம்ப காவலர்(2006)

கம்பன் கழகம், சென்னை - கம்பர் விருது(2007)

தினதந்தி - சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு(2007)

பொதிகை தொலைக்காட்சி, சென்னை - பொதிகை விருது(2007)



கவிதை:

வருடம் தவறாமல்

குழந்தைகள் தினத்தைக்

கொண்டாடுகிறவர்களே!

தினங்களைக் கொண்டாடுவதை

விட்டு விட்டுக்

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகிறீர்கள்?

என்பது குழந்தைத் தொழிலாளர் என்னும் சமுதாயக் குறையை அவர் சாடியுள்ள கவிதை சிறப்புக் குரியதாகும். இவைத்தவிர புதினம், கட்டுரை, கடிதங்கள் ஆகியவையும் எழுதியவர்.



பாராட்டுக்கள்:

வெற்றி பல கண்டு நான்

விருது பெற வரும் போது

வெகுமானம் என்ன

வேண்டும் எனக் கேட்டால்,

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்'

- முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர்



'நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் 'தமிழில் இப்படி எழுத யாருமில்லையே' என ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்துவிட்டார்.

இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து வெளியிட்டால், 'யார் இந்தக் கவிஞன்?' என்று உலகம் விசாரிக்கும்.'

- கவியரசு கண்ணதாசன்.



'கம்பனுக்கும் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்கு தோன்றுகின்றன'

- வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.



இன்று பலர் புதுக்கவிதை எழுதுகின்றார்

எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்

முன் நிற்கும் மோனையைப் போல் முன் நிற்கின்றார்

முன்னேறி முன்னேறி வளர்ந்து, தம்மைப்

பின்பற்றும்படி செய்து வருவதோடு

பெரும்புகழுக் குரியவராய் விளங்குகின்றார்

மன்றத்தில் இவரைப் போல் புதுமையாக

மற்றவர்கள் பாடுதற்கே முடியவில்லை

- உவமைக் கவிஞர் சுரதா, 'நேயர் விருப்பம்' முன்னுரையில்



ஒடிந்து விழும் சிந்தனையோ, விஞ்ஞானத்தை

ஒதுக்குகின்ற பழமைகளோ, சமுதா யத்தில்

படிந்திருக்கும் தீமைகளை வெள்ளைத் தாளில்

பதிவு செய்யும் பாடல்களோ நூலில் இல்லை

உடனடியாய் இந்நூலை ஆங்கிலத்தில்

ஒழுங்காக மொழிபெயர்த்தால் ரகுமான் கீர்த்தி

கிடுகிடென மேனாட்டில் பரவும் அந்தக்

கீா்த்தியினைப் பெறும் தகுதி இவருக் குண்டு

- உவமைக் கவிஞர் சுரதா, 'நேயர் விருப்பம்' முன்னுரையில்

ரகுமான்! கவியரங்களில் நீ எப்போதும் பிறரை வெல்வாய், இன்று உன்னையே நீ வென்றுவிட்டாய்!'

- தமிழறிஞர் அ.ச.ஞா.

Tuesday 4 March 2014

தமிழ் மகளிரின் சிறப்பு: முத்துலட்சுமி ரெட்டி


தமிழ் மகளிரின் சிறப்பு: முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர்.

புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

பிறப்பு: “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”,-என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண சுவாமி அய்யருக்கும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மா தம்பதியருக்கு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மூத்தமகளாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகளும், இராமையா என்று ஒரு தம்பியும் ஆகும்.

குழந்தை பருவத்திலிருந்தே இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். பெண்கள் கல்வி கற்க தயங்கி அந்தக்காலத்திலேய கல்லூரிக்கு சென்று படித்தார். 1907ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். 1912ல் மருத்துவப்பட்டம் மருத்துவராக வெளியே வந்தார். இந்தியாவிலேயே மருத்துவம் படித்த முதல் பெண் என்று பெயர் பெற்றார் முத்துலட்சுமி ரெட்டி.

மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றினார்.

திருமணம்: அனைவரது பெற்றோர் போல, முத்துலட்சுமியின் பெற்றோரும் இவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் இதற்கு இவர் சம்மதிக்கவில்லை. மாறாக திருமணம் என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை பறித்து விடும் எனவும், வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனுக்கு அடங்கி வாழ்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி திருமணத்தை மறுத்து விட்டார். படிப்பிலும், சமூகப் பணியிலுமே அதிக ஆர்வம் செலுத்தி வந்த முத்துலட்சுமி ரெட்டி சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். இதையடுத்து அடையாறில் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட தியாசபிகல் சொசைட்டி எனும் பிரம்மஞான சபையில் 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துலட்சும் - சுரந்தரரெட்டி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருமே மருத்துவர்கள் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல மருத்துவர்.

சமூகப்பணி: முத்துலட்சுமியின் அறிவு ஆற்றலை அறிந்த அரசாங்கம் பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற, உபகாரச் சம்பளம் கொடுத்து ஆவரை இங்கிலாந்து அனுப்பியது. அங்கு 11 மாதம் தங்கி உயர் பயிற்சி பெற்று வந்தார்.

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

தமிழக மேலவைக்கு உறுப்பினராக 1926 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவதாசி ஒழிப்புத் திட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை இவரின் சிறந்த பணிகள். தொடர்ந்து அவர் பெண்கள் விழிப்புணர்ச்சிக்கும், பெண்கள் காப்பகங்களுக்கும் சேவை செய்ய ஆரம்பித்தார்.

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தர்மம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

வறுமையில் வாடிய பெண்களுக்கும், நடத்தையில் தடம் தவறிய பெண்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கமாக இருந்து வந்தது. அந்த மாதிரியான அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

முத்துலட்சுமி, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, கலக்கம் அடைந்தாலும், விரைவில் மனதை திடப்படுத்திக் கொண்டு, மக்கள் சேவைக்கே தன் முழுநேரத்தையும் செலவிட ஆரம்பித்தார்.

முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தகுந்த சிகிச்சையும், நல்ல மருத்துவ மனைகளே இல்லாத காரணத்தால் இளம் வயதிலேயே இறந்து போனார். இதனால் தன் தங்கைக்கு தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது என்று மிகவும் வருத்தமடைந்தார். தன் தங்கைக்கு ஏற்பட்ட கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்றவர். 1925 ல் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் லண்டன் சென்று அங்குள்ள செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.

அதன் பலனாக சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்கள் 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

1936 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் குடியேறியப் பிறகு முழு நேர மருத்துவ உதவிகளோடு மீனவக் குழந்தைகளின் கல்விக்காவும் பாடுபட்டார். நூல்கங்களை உருவாக்கினார். மருத்துவர் செளந்திரம் ராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.

மறைவு: ஆண்டவனின் படைப்புகளில் அதி அற்புதமான படைப்பான முத்துலட்சுமி ரெட்டி (Dr Muthulakshmi Reddy), புற்று நோய் என்னும் அரக்கனுக்கு எதிராக பல போராடங்களை மருத்துவத்துறையில் நடத்தி வெற்றி கண்ட அந்த அற்புத படைப்பான அந்த இதயம் 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி தனது 82 வயதில் இயங்க மறுத்து நின்றது. அவருக்காக பல ஆயிரகணக்கான இதயங்கள் துடித்தது. கண்கள் கண்ணீர் விட்டு அழுதன. அவர் மறைந்தாலும் அவரின் ஆன்மா அவருடைய சேவைகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அன்னை இல்லம், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

விருதுகள்:

பெண் விடுதலைக்காவும், ஏழை, எளிய மக்களுக்காவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937 ஆம் ஆண்டு சென்னை மாநகரத் தலைமையாரல் ஆல்டர் வுமன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையில் பிறந்து இத்தனை சிறப்புகளையும் பெற்ற இவரின் புகழ் புதுக்கோட்டைக்கே உரியது. இவரின் நினைவாக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை”என தமிழக அரசு பெயர் சூட்டியிருக்கிறது.

இந்திய அரசு முத்துலட்சுமியின் சேவைகளுக்காக பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்:

தமிழக அரசு தமிழகத்தில் வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட 2006-2007 ஆம் ஆண்டு முதல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவி தொகை ருபாய் 6 ஆயிரத்திலிருந்து , ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில், முதல் தவணையாக ரூபாய் 4000/- கருவுற்ற ஏழாவது மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூபாய் 3000/- குழந்தை பிறந்த பின்பும் , பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் 3-வது தவணையாக ரூ. 4 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்:

தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

கலப்புத் திருமணம் முதல்வகை:

தமிழக அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

* பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.

* வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.

* திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

* ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.

கலப்புத் திருமணம் இரண்டாம்வகை:

தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

* பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.

* வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.

* திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

* ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கி வருகிறது.

Monday 3 March 2014

எகிப்தின் அதிபர் முகமது மோர்சியைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கிய அந்நாட்டின் ராணுவத்தலைமை ஹசேம்-எல்-பெப்லாவி தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது.

புதிய பிரதமராக பதவியேற்ற இப்ராகிம் மக்லப்

பிரேசில் நாட்டின் கார்னிவல் கொண்டாட்டங்களும் சம்பா நடனங்களும் உலகப் புகழ் பெற்றவையாகும்


நாட்டிலேயே முதல் அஞ்சலக ஏடிஎம் : நிதிஅமைச்சர் சிதம்பரம் சென்னையில் திறந்து வைத்தார்


அர்ஜுன் சிங் தலைமையிலான மனிதவளத்துறை அமைச்சகம் “கல்வி ஓர் அடிப்படை உரிமை”


நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் இன்று ரஷியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது

இந்த ஒப்பந்தங்கள் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய மற்றொரு மேடையாக இருக்கும். இது சம்பந்தமாக இரு நாடுகளின் உள்நாட்டு அமைச்சகங்களின் தலைமைக்கு எங்கள் பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றோம் என்று இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதுர் அலோன் உஷ்பிஸ் தெரிவித்தார். நாங்கள் எங்கள் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாக்க இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் நிபந்தனையற்ற உறுதிப்பாடே இந்த ஒப்பந்தங்களுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது. முக்கியமாக பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படுவதன் மூலம் தொழில்நுட்பம், மனித வள மேம்பாட்டில் முதலீடு போன்ற அனைத்துத் துறைகளிலும் நமது சமுதாயமும், பொருளாதாரமும் மேம்படும் வண்ணம் செயலாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்தியாவுடனான கணிசமான கூட்டாண்மைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். இரு நாடுகளும் சந்தித்து வரும் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு இந்த ஒத்துழைப்பு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதம் என்பது தற்போது உலக அச்சுறுத்தலாக இருக்கும் போது நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு மூலமே இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும் என்று இஸ்ரேலின் பொது பாதுகாப்பு அமைச்சரான இட்சக் அஹரோநோவிச் கூறினார்.

அமெரிக்காவில் மார்ஷல் தீவுகள்

அமெரிக்காவில் மார்ஷல் தீவுகள் உள்ளன. அங்கு பிகினி அடோல் என்ற இடத்தில் கடந்த 1954–ம் ஆண்டு மார்ச் 1–ந்தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசி சோதனை நடத்தியது.
அது ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டைவிட 1000 மடங்குக்கு மேல் சக்தி வாய்ந்தது. அங்கு அணுகுண்டு வீசப்பட்டதால் மார்ஷல் தீவுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிக்கப்பட்டது.
எனவே, பிகினி அடோல் மற்றும் அதை சுற்றி தங்கியிருந்த மக்கள் வெளியேறினர். குண்டுவீச்சு நடத்திய 3 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1957–ம் ஆண்டு அங்கு சென்று குடியேறினர்.
பின்னர் 1985–ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி வேறு பகுதிகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இன்னும் அப்பகுதியில் கதிர்வீச்சு உள்ளது. அதனால் தங்களது வாழ்வும், சந்ததியினரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்.
அணுகுண்டு சோதனை நடத்தியதால் ஏற்பட்ட கதிர் வீச்சு பாதிப்புக்காக மார்ஷல் தீவுக்கு அமெரிக்கா 150 மில்லியன் டாலர் நஷ்டஈடாக வழங்கியது.
இங்கு அணுகுண்டு சோதனை நடத்தி நேற்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது. அதுபற்றிய நினைவுதினம் மார்ஷல் தீவின் தலைநகர் மஜுரோவில் கடைபிடிக்கப்பட்டது. இருந்தும் இன்னும் அங்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

86–வது அகாடமி ஆஸ்கார் விருதுகள்

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது திகழ்கிறது.

இந்த ஆண்டுக்கான 86–வது அகாடமி ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. வண்ண மயமாக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் பங்கேற்க உலக நாடுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்தனர்.

விழாவில் சிறந்த படம், நடிகர், நடிகை, டைரக்டர் என பல பிரிவுகளில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக மாத்யூ மெக்காகுகே தேர்வு செய்யப்பட்டார். ‘தல்லாஸ் பையர்ஸ் கிளப்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. இதை ஜீன் மார்க் வல்லீஸ் இயக்கி உள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் வென்றார். இவர் ‘புளூ ஜாஸ்மின்’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இப்படத்தை வுடி ஏல்லன் இயக்கியுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது ஜாரெட் லெடோவுக்கு கிடைத்தது. இவர் ‘தல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்தில் எய்ட்ஸ் நோய் (எச்.வி.ஐ.) தாக்கிய செக்ஸ் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்த நபராக நடித்திருந்தார்.

துணை நடிகைக்கான விருதை லுபிதா நியோங்கோ தட்டிச் சென்றார். இவர் ‘12 இயர்ஸ் ஏஸ்லேவ்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக விருது பெற்றார்.

சிறந்த இயக்குனருக்கான விருது அல்போன்சா குயரானுக்கு வழங்கப்பட்டது. ‘கிராவிட்டி’ என்ற ‘3டி’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது. இவர் மெக்சிகோவைச் சேர்ந்தவர். ரூ. 600 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘கிராவிட்டி’ படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி இருந்தார். சிறந்த டைரக்டருக்கான இவரது பெயரை நடிகை ஏஞ்சலா ஜோலி, மூத்த நடிகர் சிட்னி பாய் டியர் ஆகியோர் கரகோஷத்துக்கு மத்தியில் அறிவித்தனர்.

சிறந்த படத்துக்கான விருதை ‘12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்’ என்ற படம் தட்டிச்சென்றது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை இத்தாலியின் ‘தி கிரேட் பிபரட்டி’ படம் பெற்றது.

இப்படத்தை பாலோ சொரன்டினோ டைரக்டு செய்து இருந்தார். சிறந்த அனிமேசன் படத்துக்கான விருதை ‘புரோசன்’ படம் பெற்றது. இதை கிறிஸ்பக் மற்றும் ஜென்னியர் லீ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்.

கிராவிட்டி டைரக்டர் தவிர சிறந்த சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங், சிறந்த விஷுவல் எபெக்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை ஆகிய ஐந்து விருதகளையும் தட்டிச் சென்றது.

IMPORTANT GK

*The pin code was introduced in India in the year 1972
*In his last years,Ambedkar converted to Buddhism
*The film actor who became the chief minister of Andhra Pradesh was N.T.Rama Rao
*Satyajit Ray was awarded the Bharat Ratna in the year 1992
*Central Research Institute is located at Kasauli
*The movie Raja Harishchandra was released in the year 1913
*The first Indian Prime Minister to resign from office was Morarji Desai
*The largest railway bridge in India is Sone Bridge,Bihar
*The largest dome in India is the Gol Gumbaz,Bijapur
*Air Force Day is celebrated on October 8
*Indian Military Academy is located at Dehradun
*The postal department was set up in India in the year 1854
*Navy day is celebrated on 4th December
*NABARD was established in the year 1982
*Koradi Thermal power Station is located at Maharashtra
*PTI stands for Press Trust of India
*Rail Coach Factory is located at Kapurthala
*The constitution of India was adopted on 26-11-1949
*The constitution of India became effective on 26-1-1950
*Mrinalini'was written by Bankim chandra Chatterjee
*Panipat is popularly known as Weaver City


*மதுரை மல்லி புவி சார் வர்த்தக குறியீடு
*ராணி லட்சுமி பெயரிலான ஸ்திரி சக்தி விருது2013ல் பெற்றவர்-நிர்பயா
*சீனாவின் புதிய அதிபர்-ஜீ ஜின் பிங்
*எனது அஞ்சல் தலை திட்டம் முதன்முதலில் துவக்கம்-தமிழ் நாடு-மே 2013
*28வது பொறியாளர் மாநாடு-சென்னை
*மெகா லேக் அதாலத்-23 நவம்பர் 2013
*அணு சக்தி இழப்பு பொறுப்புடைமை சட்டம்-2010
*மேற்கு தொடர்ச்சி மலை வளர்ச்சி பணி குழு தலைவர்-மாதவ் காட்கில்
தற்பொழுது-கஸ்தூரி ரங்கன் குழு
*புற நிழல் சந்திர கிரகணம்-19.10.2013

The largest producer

1. The largest producer of paddy in India----West Bengal
2. The lagest producer of wheat in India---Uttar Pradesh
3. The lagest producer of sugarcane in India ---Uttar Pradesh
4. The lagest producer of groundnut in India ---Gujarat
5. The largest producer of tea in India---Assam
6. The largest producer of coffee in India---Karnataka
7. The largest producer of jute in India ---West Bengal
8. The largest producer of tobacco in India---Andhra Pradesh
9. The largest producer of bananas in India---Tamilnadu
10. The largest producer of saffron in India---Jammu & Kashmir
11. The largest producer of onion in India---Maharashtra
12. The largest producer of black pepper in India---Kerala
13. The largest producer of cotton in India---Gujarat*
14. The largest producer of bamboos in India---Assam
(Maharashtra has the largest area under cotton cultivation but Gujarat is the largest producer as per GoI release dt 25 Jul 2011)

Saturday 1 March 2014

அய்யா வைகுண்டர்

‘உபகார நாதனாகிய நான் ஆணையிட்டுச்
சொல்கிறேன். என்றைக்கும் மலையின் மீது
ஏற்றிய தீபம் போலும், கன்றுக்குப் பால் போலும்,
கண்ணுக்குப் புருவம் போலும்
என்றைக்கும் மக்கா உங்களிடம் இருந்து  அரசாள்வேன்’
– அய்யா வைகுண்டர்.
இறைவன் ஒருவனே, எல்லா தெய்வங்களும் நாராயணருக்குள் அடக்கம் என்ற ஓரிறை கோட்பாட்டையும், உருவ வழிபாடு அற்ற கண்ணாடி தத்துவத்தையும் அடிப்படையாக கொண்டது அய்யா வழி. கலியுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச் செய்ய வைக்கும் நோக்கில் இறைவன் மனு அவதாரம் எடுத்து வந்ததாக அய்யா வழி புராண வரலாறு தெரிவிக்கிறது. கடலில் இருந்து தோன்றி வந்த ஒப்பற்ற அவதாரம் என்று அகிலம் விளக்குகிறது.
நீடிய யுகத்தில் குறோணி என்ற அரக்கன் தோன்றினான். அவனது பசிக்கு இந்த உலகம் இறையாகாமல் தடுக்க ஈசனும், மாயவனும் சேர்ந்து அவனை ஆறு துண்டுகளாக்கினர். இந்த ஆறு துண்டுகளும் ஒவ்வொன்றாக, ஒவ்வொரு யுகத்திலும் அரக்கர்களாக மாறி தேவர்களையும், உலக மக்களையும் துன்புறுத்தின. நீடிய யுகம், சதுர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய ஆறு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களை நாராயணமூர்த்தி பல அவதாரங்கள் எடுத்து அழித்தார். 7–வதாக இப்போது நடந்து கொண்டிருப்பது கலி யுகம். அடுத்து இனி வரப்போவது தர்ம யுகம் ஆகும்.
கலியை அழிக்க மனு அவதாரம்
கலியுகத்தில் மாயையாக தோன்றி மக்களின் மனதில் குடிபுகுந்து உலகை அழிக்க நினைத்தான் கலி என்ற அசுரன். கலியுகத்தில் பிறப்பெடுத்த கலியன் ஈசனிடம், மும்மூர்த்திகளின் அடிப்படை சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய வரங்களை கேட்டு பெற்றிருந்தான். எனவே இந்த யுகத்தில் கலியனை நேரடியாக நின்று இறைவனால் அழிக்க முடியவில்லை. இதனை, ‘முன்னின்று கொல்ல மூவராலும் அரிது’ என்று அகிலம் கூறுகிறது.
எனவே தான் இறைவன் கலியுகத்தில் மனு அவதாரம் பூண்டு, தவ முனியைப் போல் வாழ்ந்து மக்களிடம் பல போதனைகளை எடுத்துரைத்தார். அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக மக்களுக்கு கொடுத்து அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, தர்மம் செய்பவர்களாக, சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக வடிவப்படுத்துவதன் மூலம் கலி தன்னாலேயே அழிந்துபோகும், தர்மயுகம் பிறக்கும் என்று அய்யா வைகுண்டர் நம்பினார்.
கடலில் தோன்றினார்
இதற்காகவே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20–ல், வைகுண்டர் திருச்செந்தூர் பதியில் கடலிலிருந்து வெளிப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பை அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல் இரண்டு வருடங்கள் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் தரையில் இருந்து மேலெழுந்த நிலையிலும் தவம் இருந்தார். அவர் தவம் செய்த இடமே வடக்கு வாசல் ஆகும்.
அய்யா வைகுண்டர் அடிமைத்தனத்தில் இருந்து சான்றோர் மக்களை விடுவிக்க போராடினார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அதன்காரணமாக எதிரிகளால் பல துன்பங்களையும் அவர் அனுபவிக்க நேர்ந்தது. அந்த துன்பங்கள் வைகுண்டரின் சக்திக்கு முன்பு ஒன்றுமில்லாமல் தவிடு பொடியாகிப்போனது. வைகுண்டர் 1851–ம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார்.
மணலிபுதுநகர் தர்மபதி
சுவாமி தோப்பு, திருச்செந்தூர் பதி தவிர பல்வேறு இடங்களிலும் அய்யா வைகுண்டருக்கு பதி அமைந்துள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக விளங்குகிறது சென்னை அருகே மணலி புதுநகரில் அமைந்த அய்யா வைகுண்டர் தர்மபதி.
‘பல்லக்கேறித் தெருவீதி பகலத் தேரு நீ நடத்தி
செல்லப் பதிகள் மிக முகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திரு நீ
வல்லக்கொடிகள் மரம் நிறுத்தி வருவாய் நித்த வாகனத்தில்
பொல்லாக்கலியன் கண்டுளைந்து பொடி வானித்த மடிவானே’
– அகிலத்திரட்டு
மேற்கண்ட உத்தரவை செயல்படுத்தும் விதமாக மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் நித்தம் வாகனத்தில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுவாமி தோப்பு பதியை அடுத்து தினந்தோறும் வாகனத்தில் அய்யா பதிவலம் வருவது இங்கு மட்டுமே என்பது இந்த தர்மபதியின் சிறப்புக்களில் ஒன்றாகும்.
சிறப்பு மிக்க ராஜகோபுரம்
மேலும் அய்யா வழி கோவில்களிலேயே முதன் முதலில் ராஜகோபுரம் கட்டப்பட்டது இங்குதான் என்பதும் மணலிபுதுநகர் தர்மபதிக்கு சிறப்பு சேர்ப்பதாகும். அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 யுகங்களை தெரிவிக்கும் விதமாக இந்த ராஜகோபுரம் 7 நிலைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
தர்மத்தை முன்னிறுத்திய அய்யா வைகுண்டரின் சொல்படி, தர்மபதியில் தினமும் மூன்று வேளைகளில் அன்ன தர்மம் நடைபெறுகிறது. பலர் செய்யும் தர்மங்களில் மூலமாகவே இந்த அன்னதர்மம் செய்யப்படுகிறது.
தேர்த் திருவிழா
மணலி புதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் 10 நாள் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 13–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு திருத்தேரில் அய்யா வீதி வலம் வருவார். அய்யா வைகுண்டர் பதி அமைந்த இடங்களிலேயே மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பை மணலிபுதுநகர் தர்மபதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 36 டன் எடையுடன், 36 அடி உயரம் கொண்டதாக இந்த தேர் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்த் திருவிழாவை தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும், பின்இரவு 1.45 மணிக்கு பூப்பல்லக்கு வாகனத்தில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சென்னை அடுத்த திருவொற்றியூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணலிபுதுநகர்.
உயர்வு  தரும்  தர்மம்
‘தர்மம் செய்து தழைத்திருங்கோ கண்ணு மக்கா’
– அகிலத்திரட்டு
மணலி புதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியின் திருவிழாவை முன்னிட்டு 8 நாட்கள் ஊர் மக்களிடம் அய்யாவுக்கு திருநாள் பிச்சை ஏற்கச் செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள் தங்களின் வீட்டில் உள்ள தானியங்கள், உணவு பொருட்களை அய்யாவின் திருநாளுக்காக வழங்குவார்கள்.
அய்யா வைகுண்டர் மனு அவதாரம் எடுத்திருந்தபோது, மக்கள் பலரும் தங்கள் நிலங்களில் என்ன பயிரிடுவது?, எது பயிரிட்டாலும் சரியான விளைச்சல் இல்லை என்பது போன்ற கவலையை அவரிடம் தெரிவித்து வந்தனர். அப்போது தன் மக்களுக்கு என்ன பயிர் செய்வது?, எப்போது பயிர் செய்வது? என்றெல்லாம் அய்யா வழிகாட்டுவார். அவர் கூறியபடி பயிர் செய்யும் போது அது அமோக விளைச்சலை அல்ல, அதையும் தாண்டிய விளைச்சலை மக்களுக்கு கொடுத்து அவர்களின் உயர்ந்த வாழ்வுக்கு வழிவகுக்கும். இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மக்கள் அனைவரும் குழந்தைகளின் கல்வி, திருமணம் அனைத்தையும் செய்து வளம் பெற்றனர்.
இதற்காக அய்யாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களின் முதல் விளைச்சலை எடுத்து வைத்து அய்யா வைகுண்டருக்கு காணிக்கையாக கொடுத்து வந்தனர். அந்த தானியங்களை வைகுண்டர், சமைத்து வறுமையில் வாடும் மக்களுக்கு தர்மம் செய்து வந்தார். இதை நினைவு கூறும் விதமாகத்தான் மக்கள் அனைவரும் தங்கள் நிலங்களில் விளைந்த முதல் விளைச்சலை எடுத்து வைத்து, அய்யா வைகுண்டர் திருநாளின் போது வழங்குகிறார்கள்.
பேதங்களை  களைந்தவர்
அய்யா வைகுண்டர் அடிமைப்பட்டு கிடந்த சான்றோர்களை சுயமரியாதையுடன் வாழும் வகையில் அவர்களை மீட்டெடுத்தார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார். உலக மக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி வாழும் வகையில் ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் அறிவுறுத்தினார். நம் நாட்டின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
சுடரை  தாங்கும்  தாமரை
அய்யா வழியின் சமயச் சின்னமானது, சுடரை தாங்கும் தாமரையாகும்.
இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் நம்முள் இயங்கும் ஆன்மஜோதியாகிய பரப்பிரம்மம் அய்யா வைகுண்ட பரம்பொருளை யும் குறிக்கும்.
இந்த தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதற்கு தண்டு வரையப்படாது. 
இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008 ஆக கருதப்படுகிறது.