Friday 24 January 2014

இந்திய மாநிலங்கள் - 8

இந்திய மாநிலங்கள் - 8
Posted Date : 10:12 (14/12/2013)Last updated : 10:12 (14/12/2013)
உத்தரகாண்ட்
 டவுளின் தேசம் என்றழைக்கப்படுகிறது. கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இந்துக்களின் பல முக்கிய வழிபாட்டுத்தலங்கள் இம் மாநிலத்தில் அமைந்துள்ளன. கங்கை, யமுனை உற்பத்தியாகும் மாநிலம்.
வரலாறு: பண்டையகால இந்து நூல்களில் இந்தப் பகுதி கேதர்காந்த், மானஷ்காந்த், ஹிம்மாவத் என அழைக்கப் பட்டது. குஷானர்கள், கனிஷ்கர், குப்தர்கள், சீக்கியர்கள் என பலரது ஆட்சிக்கு உட்பட்டு கடைசியில் ஆங்கிலேயர்
ஆட்சியின் கீழ் வந்தது. இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு, இந்தப் பகுதி உத்தரப்பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. இதன்பிறகு, 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்திரகாண்ட் இந்தியாவின் 27-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
எல்லைகள்: வடக்கில் திபெத் சுயாட்சி பிரதேசமும் (சீனா), தெற்கில் உத்தரப்பிரதேசமும், கிழக்கில் நேபாளமும், வடமேற்கில் ஹிமாச்சலப்பிரதேசமும் இதன் எல்லைகளாக உள்ளன.
முக்கிய ஆறுகள்: கங்கை, யமுகை, ராம் பங்பை, பானி, கோசி.
புவியியல் அமைப்பு
கங்கோத்ரி பனிப் பிளவுகளிலிருந்து கங்கை உற்பத்தியாகிறது. யமுனோத்திரி பனிப் பிளவுகளி லிருந்து யமுனை நதி உற்பத்தியாகிறது.
 இந்தியாவின் ஏரி மாவட்டம் என அழைக்கப்படும் நைனிடால் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
 கிம் கோர்பர்ட் தேசியப் பூங்காவின் இருப்பிடம்.
முதன்மைத் துறை
 மாநிலத்தின் 90% மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே சார்ந்துள்ளனர்.
 கரும்பு, சோயாபீன், நிலக்கடலை, பாசுமதி அரிசி, கோதுமை போன்றவை முக்கிய விளைபொருள்கள்.
 சுண்ணாம்புக்கல், பாஸ்பேட் படிமங்கள், டோலமைட், மாக்சைட், ஜிப்சம் போன்ற கனிம வளங்கள் மிகுதியாகக் காணப்படுகிறது.
மூன்றாம் நிலைத் துறை
 மாநில வருவாயில் சுற்றுலா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
கங்கோத்ரி, யமுனோத்திரி, பத்ரிநாத், கேதார்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இந்துக்களின் பல முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
 உலகப் புகழ்பெற்ற கும்பமேளா, பூர்ணகிரி மேளா, நந்ததேவி மேளா, உத்ரானி மேளா, விஷ§மேளா போன்றவை முக்கிய விழாக்கள்.
 பத்ரிநாத், டேராடூன், கேதார்நாத், கங்கோத்ரி, ஹரித்வார், நைனிடால் முக்கிய சுற்றுலா தலங்கள்.

உத்தரப்பிரதேசம்
ந்தியாவுக்கு 8 பிரதமர்களை அளித்த மாநிலம். அதிகபட்சமாக 9 மாநிலங்களுடனும், நேபாள நாட்டுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. உலக அதிச யங்களுள் ஒன்றான தாஜ்மஹால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளா, கிருஷ்ணர் பிறந்த மதுரா, ராமர் பிறந்த அயோத்தியா, புத்தர் மறைந்த குஷாநகர் போன்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட மாநிலம். 'இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு: ராமர் ஆட்சி செய்த இடம், கிருஷ்ணர் பிறந்த பூமி என்று கூறப்படுகிறது. மௌரியர், குஷானர், குப்தர் என பல ஆட்சிக்கு உட்பட்டிருந்த இடம்.
1833-ல் வங்காளத்திலிருந்து ஆக்ரா மாகாணம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு பல பெயர் மாற்றத்துக்குப் பிறகு, 1937-ம் ஆண்டு யுனைடெட் மாகாணம் என்ற பெயர் பெற்றது.
சுதந்திரத்துக்குப் பிறகு, மன்னராட்சி நடந்த ராம்பூர், பனாரஸ், தேரி கார்வால் ஆகியவையும் இணைக்கப்பட்டன. 1950-ம் ஆண்டு யுனைடெட் ப்ராவின்ஸ் என்பது உத்தரப் பிரதேசம் ஆனது.
எல்லைகள்: வடக்கு, வட மேற்கில் நேபாளம், உத்தரகாண்ட், ஹரி யானா, டெல்லி மாநிலங்களும், மேற்கில் ராஜஸ்தானும், தெற்கில் மத்தியப்பிரதேசமும், தென் கிழக்கில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங் களும், கிழக்கில் பீகாரும் எல்லை களாக உள்ளன.
முக்கிய ஆறுகள்: கங்கை, யமுனை, ராம் கங்கை, கோமதி யமுனை.
முதன்மைத் துறை
 இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம். மாநிலத்தின் வருவாய் 46% விவசாயத்தினைச் சார்ந்துள்ளது.
 கோதுமை, அரிசி, எண்ணெய் வித்துக்கள், உருளைக்கிழங்கு, கரும்பு, ஆப்பிள் அதிகம் விளைகின்றன.
 நிலக்கரி, மாங்கனீஸ், டோலமைட் கனிமங்கள் இங்கு கிடைக்கின்றன.
இரண்டாம் நிலைத் துறை
 மின்னணுப் பொருட்கள், மின்சாரக் கருவிகள், அலுமினியக் கருவிகள், ரயில் அமைப்புக் கருவிகள் சார்ந்த தொழிற்சாலைகள் முன்னிலை பெற்றுள்ளன.
மூன்றாம் நிதி துறை
 கும்பமேளா, மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, ஹோலி, தாரா, ராம்லீலா போன்றவை முக்கியத் திருவிழாக்கள்.
 மகாவீரர் சமாதியடைந்த தேவ்ரிபா, புத்தரின் சாரநாத், குஷிநகர், ராமரின் அயோத்தி, கிருஷ்ணர் பிறந்த மதுரா இங்கு காணப்படுகிறது.
 தாஜ்மகால், அலகாபாத், வித்தியாஞ்சல், அயோத்தி, சித்திரகூட், பிரபாகை, ஜோகேஷ்வர், கௌசாம்பி, மதுரா போன்றவை முக்கிய சுற்றுலா தலங்கள்.
 லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி, ஆக்ரா, ஜான்சி போன்றவை முக்கிய விமான நிலையங்கள்.

மேற்கு வங்காளம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், ராமகிருஷ்ண னர், சுவாமி விவேகானந்தர், ராஜாராம் மோகன் ராய், அமர்த் தியா சென் என பிரபலங்கள் பிறந்த மாநிலம். 
வரலாறு: 1772-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா அறிவிக்கப்பட்டது.
வங்காளம் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டபோது அதில் பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசத்தின் ஒருபகுதி இடம்பெற்றிருந்தது. 1905-ம் ஆண்டு வங்காளம் பிரிக்கப் பட்டது. மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தப் பிரிவினையை ரத்து செய்தார். சுதந்திரம் அடைந்த போது வங்காளம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கும்போது பீகாரின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு இன்றைய மேற்கு வங்கம் மாநிலம் உருவாக் கப்பட்டது. வெஸ்ட் பெங்கால் மாநிலத்தின் பெயரை பச்சிம் பங்கா என்று மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
எல்லைகள்: வடக்கில் சிக்கிம், பூடான், தெற்கில் வங்காள விரிகுடா, தென்மேற்கில் ஒடிசா, மேற்கில் ஜார்கண்ட், பீகார், வடகிழக்கில் அஸ்ஸாம், கிழக்கில் வங்கதேசம்.
முக்கிய ஆறுகள்: கங்கை, தாமோதர், பாகீரதி, ஹூக்ளி, மயூராஷி.
புவியியல் அமைப்பு
 சுந்தரவனம் மிகப் பெரிய சதுப்பு நிலப் பகுதியாகும்.
முதன்மைத் துறை
 விவசாயம் மிக முக்கியத் தொழிலாகும். நெல், சணல் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. கோதுமை, உருளைக்கிழங்கு, கரும்பு ஆகியவை முக்கிய விளை பொருட்கள்.
 டார்ஜிலிங் பகுதியில் அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
இரண்டாம் நிலைத் துறை
 துர்காபூர் உருக்குத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.
 கொல்கத்தா, ஹால்டியா ஆகியவை முக்கியத் துறைமுகங்கள்.
 நேதாஜி சுபாஷ் சர்வதேச விமான நிலையம், பாக்டோக்ரா விமான நிலையம்.
 டார்ஜிலிங், துர்காப்பூர், ஹெளரா, மித்தனாப்பூர், ஹுக்ளி, முன்ஷிதபாத், சிலகுரி முக்கிய இடங்கள்.
மூன்றாம் நிலைத் துறை
 பாரம்பரிய கலாசாரப் பின்னணி கொண்டது.
 பவுல், கோம்பிரா, பாவையா ஆகியவை வங்காளத்தின் நாட்டுப்புற இசைகள்.

இந்திய யூனியன் பிரதேசங்கள்
அந்தமான் நிகோபார் தீவுகள்
அமைவிடம்: சென்னையிலிருந்து 1,190 கி.மீ., கொல்கத்தாவிலிருந்து 1255 கி.மீ. தொலைவில் போர்ட் பிளேயர் அமைந்துள்ளது.
வரலாறு: இங்கு ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள 572 தீவுகளில், மனிதர்கள் வசிப்பது 38 தீவுகளில் மட்டுமே. 1950-ல்  இந்தியாவுடன் இணைந்து, 1956-ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் (INA) அந்தமான் தீவைக் கைப்பற்றி சுவராஜ் - சாஹிப் தீவுகள் என்று பெயர் சூட்டியது.
கலாசாரம்: இன்றும் வெளிஉலகத்தை அறிந்திராத பழங்குடியின மக்கள் இங்குள்ள காடுகளில் வசிக்கின்றனர். தமிழர்களும் வங்காளிகளும் அதிக அளவில் உள்ளனர்.
முக்கிய இடங்கள்: போர்ட் பிளேயர், அழகிய கடற்கரை, செல்லுலார் சிறைச்சாலை.
புவியியல் அமைப்பு
 90 சதவீத பகுதிகள் காடுகளால் சூழப்பட்டுள்ளது.
 இந்தியாவின் ஒரே எரிமலைத் தீவு அந்தமானின் பாரன் தீவில் அமைந்துள்ளது.
 விலை மிகுந்த 'பாடுக்’ தேக்கினம் இங்கு அதிக அளவில் வளர்க்கப் படுகின்றன.
 மிகப்பெரிய மலை, ஸாடில் சிகரம் (732 மீ)
முதனிலைத் துறை
 இங்கு 48,675 ஹெக்டர் பரப்பளவு விவசாயத்தில், எண்ணெய் வித்துக்கள், அரிசி ஆகியவை முக்கிய விளைபொருட்கள்.
 மா, சப்போட்டா, வாழை, ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
இரண்டாம் நிலைத் துறை
 ஆசியாவின் மிகப்பெரிய சாத்தமர ஆலை இங்கு காணப்படுகிறது.
 இங்கு 1,347 பதிவு பெற்ற கைவினை, சிறுதொழில் அமைப்புகள் உள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
 சுற்றுலா முக்கியத் தொழிலாகும்
 நெக்கிடோ, மங்கோலாய்ட் ஆகிய இரு கலாசாரங்கள் முக்கிய மானவை.
 சுற்றுலாத் திருவிழா, சுபாஷ் மேளா, விவகோனந்த மேளா, பங்குனி உத்திரம், பொங்கல், துர்கா பூஜை, ஓணம் முக்கிய விழாக்கள்.
 போர்ட் பிளேயர், அழகிய கடற்கரை, செல்லுலர் சிறைச்சாலை முக்கிய இடங்கள்.
 போர்ட் பிளேயர் முக்கிய விமான நிலையம்.
சண்டிகர்
 சுதந்திர இந்தியாவின் முதல் நிர்மாணிக்கப்பட்ட நகரம். ஜவஹர்லால் நேருவின் கனவு நகரம். பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகர்.
வரலாறு: இந்திய சுதந்திரத்தின்போது பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டது. பஞ்சாபின் தலைநகராக இருந்த லாகூர் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. இதனால், புதிய தலைநகர் நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டது.
1950-ல் இதற்கான பணி தொடங்கியது. 1966-ல் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டு தனி மாநிலம் ஆனது. 1966 ந்வம்பர் முதல் தேதியில் சண்டிகர் தனி யூனியன் மாநிலம் ஆனது. இரண்டு மாநிலத்துக்கும் மையமாக சண்டிகர் இருந்ததால், மத்திய ஆட்சிப் பகுதியாக மாற்றப்பட்டு இரண்டு மாநிலத்துக்கும் தலைநகராக மாறியது.
சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா என மூன்று மாநில அரசுகளின் தலைமையிடமாக இருப்பதால் அரசாங்கமே முக்கிய வேலை வாய்ப்பு அளிப்பதாக இருக்கிறது.
இதனாலேயே 'ஓய்வூதியதாரர்களின் சொர்க்கம்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சண்டிகர் நகரம் ஃப்ரெஞ்சு கட்டிடக்கலைஞர் லீ கார்புசியர் என்பவரால் வடிவமைக்கப் பட்டது.
சண்டிகர் கல்வி நகரத் திட்டம் சரங்பூர் என்ற இடத்தில் 130 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
சண்டிகரில் சுதந்திரப் போராட்ட தியாகிகள்:, மாற்றுத் திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், முஸ்லிம்கள், கிறித்த வர்கள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோரின் ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு அரசாங்கமே இலவசக் கல்விக்கு எற்பாடு செய்கிறது.
அரசுக் கட்டடங்களில் விளக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை இங்கு நன்கு வளர்ச்சி கண்டுள்ளது.
எல்லைகள்: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்: இந்துக்கள், சீக்கியர்களின் திருவிழாக்கள்.
முதன்மைத் துறை
 கோதுமை, சோளம் முக்கியப் பயிர்கள்.
இரண்டாம நிலைத் துறை
 தகவல் தொழில்நுட்பத் துறை நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
மூன்றாம் நிலைத் துறை
 பைசாகி, தீஜ், மாம்பழத் திருவிழா, தொட்டத் திருவிழா, மகாமோர்க்கா சமாமோளம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள்.
 ரோஸ் தோட்டம், கல் தோட்டம், சாந்திகஞ்ச் ஏரி, சுகானா ஏரி, அருங்காட்சியகம் முக்கிய இடங்கள்.

No comments:

Post a Comment