Saturday 25 January 2014

மனிதர்கள்-2013

மனிதர்கள்-2013
Posted Date : 15:12 (14/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
விக்னேஸ்வரன்-நம்பிக்கை
இலங்கை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம்-ஆதிநாயகி. கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர். தந்தை ஒர் அரசு ஊழியர். இலங்கையில் பல மாவட்டங்களில் பணியாற்றியவர். விக்னேஸ்வரனுக்கு இரு சகோ தரிகள். தனது ஆரம்பக் கல்வியை இலங்கையில் படித்து முடித்தவர், லண்டன் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
1979 மே 7-ம் தேதி நீதித்துறையில் இணைந்தார். ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும் மாவட்டம் நீதிபதியாகவும் பணியாற்றினார். ஜனவரி 1987-ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார்.
1988-ம் ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1995-ல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியானார். உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ் மொழியில் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும். 2001-ல் மார்ச் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2004 அக்டோபரில் ஓய்வு பெற்றார்.
2013 ஜூலை 15ல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். செப்டம்பர் 21ல் நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் பெற்ற அதிக அளவு வாக்குகள். 2013 அக்டோபர் 7-ல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே முன்னிலையில் கொழும்பு அலரி மாளிகையில் வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இலங்கை தமிழர்களின் நம்பிக்கை நிறைவேறட்டும்.
டெல்லி மருத்துவ மாணவி
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் 23 வயது மாணவி, ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம். தலைநகரே ஸ்தம்பிக்க, நாட்டின் பல இடங்களிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி கொந்தளித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி அன்று மாணவி தெற்கு டெல்லியின் சாக்கேத் பகுதியிலிருக் கும் மால் ஒன்றில், தன் நண்பர் அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன் சினிமா பார்த்துள்ளார்.
வீடு திரும்புவதற்காக, இரவு 9.30க்கு தனியார் பேருந்தில் இருவரும் ஏறியுள்ளனர். மாணவி, அவரது நண்பர் அர்விந்த், டிரைவர் மற்றும் ஐந்து ஆண்களுடன் பயணம் தொடர்ந்துள்ளது. அவர்கள் மாணவியை சீண்ட, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட, கோபம் அடைந்தவர்கள். அர்விந்தை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். பிறகு, டிரைவர் ஸீட்டின் அருகே உள்ள கேபினில், ஓடும் பேருந்திலேயே அனைவரும் மாணவியை மாறி மாறி வல்லுறவு கொண்டுள்ளனர். சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் அரங்கேற்றப்பட்ட  கொடூரம் அது.
அதன்பிறகு, இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்து விட்டனர். மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடக்க... போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தவும் யாரும் முன்வரவில்லை. அதன்பின் இருவரையும் மீட்டு அருகிலுள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ்.
வெறி கொண்ட அந்தக் கொடூரர்கள் அவருடைய பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியையும் நுழைத்துள்ளனர். அது வயிற்றுக்குள்ளும் சென்று பல உறுப்புகளையும் பாதித்துள்ளது. இதனால், உடல் முழுவதும் பரவிவிட்ட இன்ஃபெக்ஷன்தான் தற்போது மாணவிக்கு மிகவும் ஆபத்தாக இருந்து கடைசியில், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு, அரசு செலவில் அனுப்பப்பட்டார். ஆனால், உடல்உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க... டிசம்பர் 29ம் தேதி அதிகாலை சிங்கப்பூரிலேயே, 13 நாள் போராட்டத்துக்குப் பின் இறந்து போனார் அந்த மாணவி.
இந்த சம்பவம் மக்களை கொதிப்பு அடைய செய்ய, டெல்லியின் கல்லூரி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் சேர  போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலித்தது. பொதுமக்களின் ஆவேசப் போராட்டம் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி. ஏன், ஜனாதிபதியின் வீட்டையும் முற்றுகையிட முயன்று போராட்டம் நடத்தினார்கள். இதன் பிறகு, மீதம் இருந்த நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தது டெல்லி போலீஸ்.
பஸ் டிரைவர் ராம்சிங், இவனுடைய சகோதரன் முகேஷ் சிங், பாடி பில்டரான வினய் சர்மா, தள்ளுவண்டியில் பழங்களை விற்கும் பவண் குப்தா, ப்ளஸ் டூ படித்துவிட்டு வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி வந்திருக்கும் அக்ஷய் தாக்கூர், கூலி வேலை செய்து பிழைக்க ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் ராஜு ஆகிய ஆறு பேரும், இந்தக் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறை தயாரித்து சமர்பித்தது. ஆறுபேரில் ஐவர் பேரும் திகார் சிறையில் இருந்தனர். அவர்களில் முக்கியக் குற்றவாளியான பேருந்தின் ஓட்டுநர் ராம்சிங், சிறை வளாகத்தில் விசாரனை முடியும் முன்னரே மார்ச் மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மற்ற ஐந்து பேரில் ஒருவர் மைனர். இவரைப் பற்றிய வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு சிறார்களுக்கான நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு பேருக்கு இப்போது, சிறப்பு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா தூக்குத் தண்டனை விதித்தார்.
டெல்லியில் 2011ல் மட்டும் 572 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர்.
நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் ராணுவத் தளபதியாக இருந்து அதிபரான பர்வேஷ் முஷாரப் ஆட்சிசெய்த பல ஆண்டுகளில்தான் தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக பாகிஸ்தானைப் பிடித்தது. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத நாடாக பாகிஸ்தான் மாறியது. ராணுவ ஆட்சி ஒழிந்து ஐனநாயக ஆட்சி மலர பாகிஸ்தானில் மக்கள் நம்பிக்கையின் நட்சத்திரமாக மாறினார் நவாஸ் ஷெரீப். 
நவாஸ் 1990 முதல் 1993 வரையிலும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆவார். பாகிஸ்தானில் ஒரு ஜனநாயக ஆட்சி மலராதா என்று ஏங்கித் தவித்த வேளையில் பாகிஸ்தான் பிரதமராக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானில் மே மாதம் நடந்த நாடாளுமன்றத்துக்கு தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
பாகிஸ்தானில் மொத்தம் 342 தொகுதிகளில் நவாஸ் ஷெரீப் கட்சி 180 இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை முன்னாள் பாகிஸ்தான் கிரிகெட் கேப்டன் இம்ரான்கான் கட்சி பிடித்தது. சர்கோடா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அமெரிக்க ராணுவத் தலையீட்டாலும் ஓயாத உள்நாட்டுக் கலவரங்களாலும் அமைதி இழந்து இருந்த பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மாற்றம் கொண்டுவருவார் என நம்புகிறார்கள் பாகிஸ்தான் மக்கள். பெனாசீர் பூட்டோ படுகொலை எழுப்பிய அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்த யூசுப் ரஸா கிலானியால் நிம்மதியான நிரந்தரமான ஆட்சியை பாகிஸ்தானில் அமைக்க முடியவில்லை. ஏனென்றால் கடந்த 10 வருடங்களில் பாகிஸ்தான் பல நெருக்கடிகளுக்குள்ளாகிவிட்டது. மிகப் பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் வளர்ந்துவிட்டது. அதன் சமூக அரசியல், பண்பாட்டுத் தளங்களில் செல்வாக்குச் செலுத்தும் தலிபான், மிகப் பெரிய சவாலாக பாகிஸ்தானுக்கு உருவாகிவிட்டது. ஆசியாவின் இன்னொரு ஆப்கானாக மாறிவிட்ட பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும் என்று பல நெருக்கடிகளை நவாஸ் சந்தித்து மாற்றம் கொண்டுவருவார் என மக்கள் நம்புகின்றனர்.
நவாஸ் ஷெரீப் ஏற்படுத்தும் நல்ல முயற்சிகள் அவரது அரசியல் வாழ்வில் மட்டுமல்லாது, பாகிஸ்தானை ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும். அதை அவர் உணர்ந்துகொண்டு செயலாற்றுவதில்தான் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான சுமுக உறவு மட்டுமல்ல, பாகிஸ்தானின் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்று உலக அரசியல் தலைவர்கள் பல கருத்து தெரிவித்து இருக்கின்றனர். 

ஹீகோ சாவேஸ் - கம்யூனிஸ்ட் ஹீரோ
வெனிசுலா நாட்டின் பெட்ரோலிய வளத்தை தேசியமயமாக்கியது, ஒருவரிடமே இருந்த அதிக நிலங்களை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தது, ஆடம்பரம் தவிர்த்து எளிய வாழ்க்கை வாழ்ந்தது... என சமகாலத்தில் கம்யூனிஸ்ட்களின் உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். வட அமெரிக்க ஏகாதி பத்தியத்தை இளமைக் காலம் முதல்58வயது வரைச மாளித்தவரால்,புற்று  நோயை வென்றெடுக்க முடியவில்லை. புற்றுடனான இரண்டு ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பின், கடந்த வாரம் இறந்திருக்கிறார். 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு சாவேஸின் உடலை வெனிசுலா ராணுவ அருங்காட்சியகத்தில் பதப் படுத்திவைக்க முடிவு எடுத்திருக்கிறது வெனிசுலா அரசாங்கம். சல்யூட் ஹ்யூகோ!
 சுலைமான் அபுகெய்த் - அல்கொய்தா பி.ஆர்.ஒ
நீண்ட தேடலுக்குப் பின்அல்கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவரான சுலைமான் அபுகெய்த்தை உயிருடன் பிடித்துள்ளது அமெரிக்கா. அதைவிட ஆச்சர்யம், இந்தச் செய்தியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிவித்திருப்பதுதான். அல்கொய்தாவின் பி.ஆர்.ஓ., பின்லேடனின் மருமகன் போன்ற சிறப்புத் தகுதிகள்கொண்ட சுலைமான் அபுகெய்த்தை ஜோர் டானில் வைத்து கைதுசெய்திருக்கிறார்கள். நீதி மன்றத்தில் முதல்முறையாக விசாரணைக்காக ஆஜர் செய்யப்பட விருக்கும் அல் கொய்தா தலைவராக சுலைமான் இருப்பார்.
உச்சத்தில் அமர்ந்த தமிழன்
வி.கே. சிங் - பரபரப்பு
 முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் வி.கே.சிங் பிறந்த தேதி தான் காரணம்.
வி.கே. சிங் தான், கடந்த 1951ம் ஆண்டு மே 10ம் தேதி பிறந்ததாக கூறினார். ஆனால் அவரது சான்றிதழ்களில் 1950ம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து அவருக்கு  கடந்த 2012 மே 31ம் தேதி ஓய்வு அளித்தது. ஆனால், தனக்கு இன்னும் ஒரு ஆண்டு பதவிக்காலம் இருப்பதாக வி.கே. சிங் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. வி.கே. சிங் தரப்பில் வயது பிரச்னை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை வி.கே.சிங் கடைசியில் வாபஸ் பெற்றார்.
கோர்ட் தீர்ப்பை விமர்சித்து வி.கே.சிங் பேட்டி அளித்தார். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  தொடர்ந்து காஷ்மீர் மாநில அரசை கலைக்க அரசியல்வாதிக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வி.கே. சிங் பரபரப்பாக பேட்டி அளித்தார். இதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூப் அப்துல்லா எம்பி கண்டனம் தெரிவித்தார். அதே நேரத்தில் முன்னாள் ராணுவத்தளபதியின் கருத்தை நாம் ஒதுக்கி தள்ள முடியாது என்று தற்போதைய முதல்வர் ஒமர் அப்துல்லா, வி.கே.சிங்குக்கு ஆதரவு கரம் நீட்டினார்.   விஜயகுமார் சிங் என்பதின் சுருக்கம் வி.கே. சிங். ஹரியானா மாநிலம் பிவாளி மாவட்டத்தில் பாபேரா கிராமத்தில் பிறந்தார். விகே சிங்கின் தந்தையும், தாத்தாவும் ராணுவத்தில் அதிகாரியாக இருந்துள்ளனர்.
விகே சிங் ராஜஸ்தான் பிலானியில் உள்ள பிர்லா பப்ளிக் பள்ளியில் படித்தார். வி.கே.சிங், கடந்த 1970ல் ஜூன் 14ல் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட் டார். இவர் ராணுவ சர்வீஸ் அலுவலர் கள் கல்லூரியிலும், அமெரிக்காவில் உள்ள ஆர்மி இன்பன்ட்ரி பள்ளியிலும் படித்தார். கடந்த 1971ல் வங்காளதேசம் போரில் ஈடுப்பட்டார். இவர் 2010 மார்ச் 31ல் ராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.

'ஆர்ஜி’-ராகுல்காந்தி

நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா ஆகியோரின் அரசியல் வாரிசாக ராகுல் காந்தி வலம் வந்துக் கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி தலைமையின் பணியாற்ற காத்துக் கொண் டிருக்கிறேன் என்று 10 ஆண்டு கால பிரதமர் மன்மோகன்சிங் சங்கநாதம் முழங்கி விட்டார். வரும் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக அறி வித்தாலும் அறி விக்காவிட்டாலும் அவர்தான் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது.
உத்திரப்பிரதேசத்தில் அவர்களின் குடும்ப தொகுதியாக இருந்து வரும் அமேதியில் 2004-ம் ஆண்டு ராகுல் காந்தி களம் இறக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். தொடர்ந்து அதே தொகுதியில் 2009-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். ஏற்கனவே இந்த தொகுதியில் அவரின் பெரியப்பா சஞ்செய் காந்தி (1980) வெற்றி பெற்றார். அவரது மரணத்துக்கு பிறகு ராகுல்காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி (1981-1984, 1984 -89, 1989-91), அம்மா சோனியாகாந்தி 1999-2004) ஆகியோரும் அதே தொகுதியில் ஜெயித்துள்ளனர்.
2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக ராகுல் பாராட்டப்பட்டார். ''அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாய பண்பினை கொண்டு வர முயற்சித்து வருகிறார்'' என்றெல்லாம் புகழப்படுகிறார். மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்தி விட்டு கட்சியின் அடித்தளத்தை வலுவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மாணவர் காங்கிரஸ்-இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தை கவனித்து வந்த அவர் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆனார்.
அதன்பின்னர், 2013-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கட்சியின் துணைத் தலைவர் ஆக்கப்பட்டார். ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி புடோட்டா கால் படி தலைவர் சோனியாகாந்திக்கு அடுத்த 2-வது இடத்தில் இளவரசர் ராகுல்காந்திக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, சல்மான் குர்ஷித், திக் விஜயசிங் போன்றவர்கள், 'ராகுல் காந்தியின் புதிய சித்தாந்தங்கள் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்கும் வகையில் உள்ளது'' என்று வர்ணித்துள்ளனர்.
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குற்ற பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது. அவர்களை காப்பாற்ற மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை, 'நான்சென்ஸ், குப்பையில் தூக்கி வீசுங்கள்’ என்று ராகுல்காந்தி பேசியது தேசிய அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அவசர சட்டமும் திரும்ப பெறப்பட்டது.
அக்டோபர் 20ம் தேதி ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்ல், ''என் பாட்டி இந்திரா, என் தந்தை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அதுபோல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. அதைபற்றி கவலைப்படவும் இல்லை'' என்று ராகுல் காந்தி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரசின் இளவரசர் பேச்சுக்கள்தன் இப்போது காங்கிரசாருக்கு வேதவாக்காக இருக்கிறது.
ரகுராம் ராஜன்!
 மத்திய நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், கடந்த செப்டம்பர் 4ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக பொறுப்பேற்றார். அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் இந்த பொறுப்பில் இருக்கலாம். சுப்பாராவ் பதவி காலம் முடிந்ததை முன்னிட்டு அந்த பொறுப்புக்கு ரகுராம் ராஜன் நியமிக்கப்படுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் (ஐ.எம்.எப்) தலைமை பொருளாதார அலோசகராக 2003 முதல் 2007 வரை பணியாற்றிய ரகுராம் ராஜன், 2008ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே 2005-ல் கணித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1963-ம் ஆண்டு பிறந்த ரகுராம் ராஜன், டெல்லி ஐ.ஐ.டி-யில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்தார். அகமதாபாத் ஐ.ஐ.எம்-ல் 1987-ம் ஆண்டு பிசினஸ் அட் மினிஸ்ட்ரேஷன் பாடத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.
பின்னர், 'வங்கி மேலாண்மை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து பிஎச்டி (டாக்டர்) பட்டம் பெற்றார். அதன் பின், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். அதன் பிறகுதான், ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிரதமர் மன்மோகன் சிங்-கின் கவுரவ பொருளாதார அலோசகராகவும் இருந்துள்ளார்.
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில் ரகுராம் ராஜன் எடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை சற்றே தூக்கி பிடித்துள்ளது.
கவனர் ஆனவுடன் அவர் அளித்த பேட்டியில், ''பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது முக்கியம்தான். அதற்காக நாட்டின் வளர்ச்சியை அது முடக்கி விடக்கூடாது. நமது உடனடித் தேவை தற்போது அதிகமான வெளிநாட்டு முதலீடுகள். பணவீக்கம் ஏற்பட்டாலும் முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். எனது இந்த நடவடிக்கைகள் அனைத்தும்  மாதகணக்கில் வருடக்கணக்கில் என்று இருக்காது. அடுத்த ஒரு சில வாரங்களிலேயே நடைமுறைப்படுத்தப்படும். எனது பேஸ்புக்கில் எத்தனைபேர் லைக் செய் கிறார்கள். டிஸ்லைக் செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று எப்போதும் போல வெளிப்படையாக பேசினார்.
சச்சின் டெண்டுல்கர்
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இந்த 2013ல் முடிவுக்கு வந்தது!
மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்றார் சச்சின்.
சச்சின் எத்தனை தன்மையான மனிதர் என்பதைப் பகிர்ந்துகொள்கிறார்கள் அவருடன் பழகிய கிரிக்கெட் பிரபலங்கள்...
சடகோபன் ரமேஷ், முன்னாள் கிரிக்கெட் ப்ளேயர்:
''2002-ம் வருடம் சென்னையில் ரோட்டரி அமைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சச்சினை அழைத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கென ஐந்து நிமிடங்கள் நேரம் கொடுத்த சச்சின், குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தார். விடைபெறும் சமயம், 'எங்ககூட கிரிக்கெட் விளையாடுவீங்களா?’ என்று அந்தக் குழந்தைகள் கேட்க, 'அடுத்த சென்னை டிரிப்ல கண்டிப்பா உங்களோட விளையாடுவேன்’ என்று சொல்லிச் சென்றார் சச்சின்.
மூன்று மாதங்கள் கழித்து ரஞ்சி போட்டிக்காக சென்னை வந்தார் சச்சின். கடைசி நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின்போது என்னிடம், 'அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு இன்று மாலை கூட்டிப் போக முடியுமா? அந்தக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமே!’ என்று கேட்டார். போட்டி முடிந்ததும்  போலீஸ் பாதுகாப்புடன் அடையாறுக்குச் சென்றோம். இருட்டும் வரை சுமார் இரண்டு மணி நேரம் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அந்தக் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ்வித்தார் சச்சின். அங்கு ஒரு பெண்ணுக்கு, மறுநாள் சிக்கலான ஒரு ஆபரேஷன் என்று தெரிந்ததும், அந்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கு ரொம்பவே ஜாலியாகப் பதில்சொல்லி அரட்டையடித்து அந்தப் பெண்ணை ரொம்ப உற்சாகப்படுத்தினார். சச்சின் போன்றவர்களால் ஒரு வாக்குறுதி கொடுப்பது சிரமம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, அதைவிட சிரமம். ஆனால், அத்தனை எளிமையாக, இனிமையாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சச்சினுக்கு நிகர் அவர்தான்!''
ராம்கி, இந்திய கிரிக்கெட் அணியின் பெர்ஃபார்மன்ஸ் அனலிஸ்ட்:
''2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றிருந்தபோது சச்சின் மோசமான ஃபார்மில் இருந்தார். முதல் டெஸ்ட்டில் டக் அவுட், இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ரன்கள், மூன்றாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் எனத் திணறல். நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, 'நான் எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் ஷாட் அடிக்கும்போதுதான் அவுட் ஆகிறேன். இந்த மேட்ச்சில் ஒரு ஷாட்கூட எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பக்கம் ஆட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் 241 ரன்கள் நாட் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்கள் நாட் அவுட். மொத்தம் 38 பவுண்டரிகளை விளாசினர். ஆனால், ஒரு ஷாட்கூட எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பக்கம் செல்லவில்லை.
ஒரு பேட்ஸ்மேன் ஒரு ஸ்ட்ரோக்கைத் தேர்ந்தெடுப்பது, பந்து எப்படி வருகிறது என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால், எந்த வகையான பந்துகளை வீசினாலும் குறிப்பிட்ட ஷாட்டை மட்டும் ஆடாமல் ஒருவரால் கட்டுப்பாடாக இருக்க முடியும் என்பதை அன்றுதான் பார்த்தேன். அதனால்தான் சச்சின் ஜீனியஸ்!
யாரிடமும், 'எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் சொல்வதைக் கேள்’ என்ற மனப்பான்மையுடன் பழக மாட்டார் சச்சின். அதேபோல யார் மனதும் புண்படும்படி பேசிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.
சச்சின் 25 வருடங்களாகத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், அவர் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்தான். போட்டிக்கு முந்தைய நாள் வெளியில் எங்கும் போக மாட்டார். பயிற்சிக்கு ஒருமுறைகூட நேரம் தவறியதே இல்லை. அவருக்காக யாரையும் காக்கவைக்க மாட்டார். பால்ய காலத்தைச் செலவழித்த மிடில் கிளாஸ் நபராக இன்றும் செயல்படுவார் சச்சின். இப்போதும் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் பலமுறை யோசித்து, இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்து விட்டுத்தான் வாங்குவார். 'என் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக காசை மிச்சம் பிடித்து, பஸ் டிக்கெட் எடுத்து என்னைப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்வார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்!’ என்பார் சச்சின்!''
'என் மனம் என்ன சொல்கிறதோ, அதைப் பொறுத்தே என் ஓய்வு அமையும். ஓய்வு பெறும் தருணத்தை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமானது. கடந்த 30 வருடங்களாக கிரிக்கெட்டைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை!’ - ஓய்வுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் கூறிய வார்த்தைகள் இவை.
சச்சின் ஓய்வு பெற்ற நாளில் அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து கவுரவித்தது இந்திய அரசு.
சச்சின்-Fact file
மொத்தம் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் சச்சின், 18,426 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 49 சதங்கள், 96 அரை சதங்கள் அடங்கும்.
199 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 67 அரை சதங்கள் உள்பட 15,847 ரன்கள் குவித்திருக்கிறார்.
 டெஸ்டிலும், ஒரு நாள் போட்டியிலுமாக சச்சின் விளாசிய 100 சதங்களும், 163 அரை சதங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் எட்டிப்பிடிக்க முடியாத உலக சாதனைகள்.
 20 வயதுக்குள் டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் குவித்தவர் என்ற சாதனை இப்போதும் சச்சினுக்கு மட்டுமே சொந்தம்!
 'ஒரே ஆண்டில் (2010) ஏழு சதங்கள் அடித்த இந்தியர்’ என்ற சாதனையை, தனது 36-வது வயதில் படைத்தார் சச்சின்.
 15 வருடங்களாக மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஸ்பான்சர் பெற்றுத்தரும் பொறுப்பு சச்சின் வசம்தான். மது, சிகரெட் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, தனக்கு மட்டுமல்ல மும்பை கிரிக்கெட் அணிக்கும் ஸ்பான்சராக இதுவரை சச்சின் அனுமதித்தது இல்லை.
 மங்கையர் திலகம் மலாலா

நான் மலாலா’ (I AM MALALA) என்ற தலைப்பில், இதுவரையிலான தனது உணர்ச்சிமிகு அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார், தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் மலாலா. சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் கிரிஸ்டினா லாம்ப்(Christina Lamb)  உடன் இணைந்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மலாலாவின் வார்த்தைகளின் வழியே அவரை வாசிப்போம்...
'நான் பிறந்தபோது, எங்கள் கிராமத்தில் அனைவரும் என் அம்மா மீது கருணை பொழிந்தார்கள். அப்பாவுக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை. மருத்து வமனைக்கும் மருத்துவச்சிக்கும் அப்பாவிடம் பணம் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவர்தான் பிரசவத்துக்கு உதவிசெய்தார். ஆண் குழந்தை பிறந்தால், பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். பெண் குழந்தைகளை திரைச்சீலைக்குப் பின்னால் மறைத்துவிடுவார்கள். சமைப்பதும், குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பதும் மட்டுமே அவர்களுக்கு வேலை, இப்படியான ஒரு சூழலில்தான் நான் பிறந்தேன்.
ஆப்கானிஸ்தான் பெண் போராளி யாகத் திகழ்ந்த 'மலாலாயின் பெயரை எனக்கு வைத்தார் என் அப்பா. மற்றவர்கள் கிண்டல் அடித்தது பற்றி அவர் கவலைப்படவில்லை. 'இந்தக் குழந்தை வித்தியாசமானவள் என்பது எனக்குத் தெரியும்’ என்றார். நான் படுத்திருந்த தொட்டிலில் பழங்களையும், இனிப்புகளையும், காசுகளையும் வைக்கும்படி தன் நண்பர்களிடம் சொன்னார். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே இப்படிச் செய்யப்படுவது உண்டு.
ஏழாவது வயதில் நான்தான் வகுப்பில் முதலாவதாக வருவேன். பாட்மின்ட்டன், நாடகம், கிரிக்கெட், ஓவியம் என்று எல்லாவற்றிலும் கலந்துகொள்வேன். மால்கா-இ-நூர் என்ற பெயருடைய புது பெண், என் வகுப்பில் சேர்ந்தாள். 'பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாக, தான் பதவி வகிக்க வேண்டும்’ என்பாள். வருடக் கடைசியில் வகுப்பில் அவள் முதலாவதாக வந்தபோது எனக்கு அதிர்ச்சி. வீட்டில் தொடர்ந்து அழுதேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்தினார்.
எங்கள் நாட்டிலேயே பெரிய நியூஸ் சேனல் என்று கருதப்பட்ட 'ஜியோ’, சிறுமி ஒருத்தியை பேட்டி எடுக்க விரும்பியது. பேட்டிக்கொடுக்க சின்னப் பெண்கள் பயந்தார்கள். அப்படியே தைரியசாலியான சிறுமிகள் பேட்டிக்கொடுக்க இருந்தாலும் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். என் தந்தை தைரியமானவர். எப்போதும் எனக்குத் துணை நிற்பவர். என் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் நான் பேசுகிறேன் என்றால் தவறு ஏதும் இல்லை என்று நினைப்பவர். அப்படியான சூழ்நிலைகளில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதை அறிய கடவுள் விரும்புகிறார். 'வஞ்சகமும் பாசாங்கும் மறைய வேண்டும். அப்போது உண்மை நிலைத்து நிற்கும்’ என்று குரானில் வாசகம் உண்டு. 'ஒருவரால் எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்றால், ஒரு பெண் ஏன் அதை மாற்ற முடியாது?’ என்ற நினைப்பேன். அதுவே எனக்கு மனவலிமையைத் தந்தது. அதற்காக ஒவ்வோர் இரவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வேன்.
எனது 13-வது வயதில் என் உடல் வளர்ச்சி நின்றுவிட்டது. திடீரென்று என் தோழிகள் அனைவரும் என்னைவிட உயரமாகிவிட்டார்கள். நான் உயரமாக வேண்டும் என்று அல்லாவிடம் ஒவ்வோர் இரவும் வேண்டிக்கொள்வேன். நிறைய இடங்களில் நான் உரை நிகழ்த்தி வருகிறேன். ஆனால், நான் குள்ளமாக இருப்பதால் அதிகாரத் தோரணையுடன் பேச முடிவது இல்லை. சில சமயங்களில் சாய்வு மேஜைக்கு மேல் பார்ப்பதுகூட எனக்குக் கடினமாக இருக்கும். ஹை-ஹீல் ஷூக்கள் எனக்குப் பிடிக்காது. வேறு வழியின்றி அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.’
புத்தகத்தின் முடிவு அத்தியாங்களில், குண்டடிபட்ட பிறகு நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் லண்டன் சென்று, அங்கு சிகிச்சையைத் தொடர்ந்தது பற்றியெல்லாம் நெகிழவைக்கும் வகையில் ஆவணப்படுத்தி இருக்கிறார் மலாலா.
'கண்ணாடியில் என்னைப் பார்த்து ஒரு விநாடி சிந்தித்தேன். நான் ஓரிரு அங்குலம் உயர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால், வானளவு என்னை உயர்த்திவிட்டார் அவர். இனி என்னை அளந்து பார்த்துக்கொள்ள முடியாது. வளர்ந்தால் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததுபோல், கூடுதலாக நூறு தடவை பிரேயர் செய்கிறேன்.
கடவுளை நான் நேசிக்கிறேன். அல்லாவுக்கு நன்றி. தினமும் அவருடன் உரையாடுகிறேன். மக்களைச் சென்றடைய இந்த உயரத்தை எனக்குக் கொடுத்த அவர், எனக்குப் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் - இது என் கனவு. உலகில் உள்ள ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் கல்வி அவசியம். பள்ளியில் தோழிகளுடன் உட்கார்ந்து பாடங்களைப் படிப்பது என்னுடைய உரிமை. மனிதகுலத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் மலாலா. என் உலகம் மாறிவிட்டது; ஆனால் நான் மாறவில்லை!’
என்று நூலை நிறைவு செய்கிறார் இந்த அற்புதப் பெண்.
கேமரூன் - காமன்வெல்த் கர்ஜனை
இலங்கையில் காம்வெல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 15 ஆம் தேதி கலைநகர் கொழும்பு அன்று பிற்பகலில் பாழப்பாணம் பொது நுலகத்தில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னே1வரன், தமிழ்த் தேதியக் கூட்டடைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து பேசினார். பின்னர் 2013 13 ஆம் தேதி இராணுவக் தாக்குதலுக்க உள்ளான உதயன் நாளிதழ் அலுவரகத்துக்கு சென்று, அங்கிருந்த ஊழயர்களிடம் பேசி உண்மை நிலலவரங்களை அறிந்து கொண்டார். உதயன் நாளிதழ் முப்பதுக்கு மேற்பட்ட தடவைத் தாக்கப்பட்டதையும், பல பத்திரிகையாளர் கொல்லப் பட்டதையும் அறிந்த கேரூன் ''நீங்கள் மிகவும் துணிச்சலான வீரர்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்'' எனக் கூறியுள்ளார் அந்தக் கருத்தைச் சமூக வலைக் தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டதன் முத்தாய்ப்பாக நவம்பர், 10ஆம் தேதி கொழும்பில் உள்ள பண்டாரநாயாக சர்வதேச மண்டபத்தில் செய்தியாளர் கூடடத்தில் டேவிட் கேமரூன் ''போர்க் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசு 2014 மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் அவ்வாறு முடிக்கவில்லையெனில் ஐ.நா. வின் வழிகாட்டுதலின் கீழ்  சர்வதேச விசாரணைக்கு இலங்கை உட்பட வேண்டும் எனக் கர்ஜித்தார் மேலும்,'' இலங்கையின் எதிர்காலம் பற்றி நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன் மனித உரிமை மீறல், கருத்துத் சுதந்திரம் ஊடகக் சுதந்திரம், நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் தவிர்த்து விட முடியாது. இவை குறித்து விரைவாக நடிவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்'' எனக் கூறி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சதுரங்கப்புயல் - மேக்னஸ் கார்ல்சன்
2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தை வீழ்த்தி சாதனை படைத்தவர்.
நார்வே நாட்டு செஸ் வீரர் மேக்னஸ் கார்லசன் 12 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் ஐந்து மற்றும் ஆறாவது சுற்றுகளில் ஆனந்த்தை தொடர்ந்து தோற்கடித்து தனது வெற்றிப் பாதையை உருவாக்கினார் கார்ல்சன். 2010 முதல் தற்போது வரை தர வரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட கார்ல்சன் 2,822 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எடுத்துள்ளார்.
கடந்த ஜனவரியில் 2861 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டியதன் மூலம் செஸ் வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை ஈட்டியவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். இதன் மூலம் அதிக இ.எல்.ஓ. புள்ளிகள் வைத்திருந்த ரஷ்ய செஸ் சாம்பியன் கேரி கெல்பரோவின் பதிமூன்றாண்டு கால சாதனையை முறியடித்தார்.
பால் வடியும் முகம் கொண்ட கார்ல்சன் வயது 22. இவர் 1990, நவம்பர் 30 அன்று நார்வேயில் பிறந்தார். ஒரு பொருளை பல பாகங்களாகப் பிரித்துக் கொடுத்தால் அதை விரைவாக இணைத்து, பழைய நிலைக்குக் கொண்டு வரும் பதிர் போன்ற சுமார் 50 புதிர்களைள சரியாகச் செய்திருக்கிறார். ஐந்து வயதில் செஸ் ஆடத்துவங்கிய கார்ல்சன் எட்டு வயதில் 'நார்வே செஸ் சாம்பியன் ஷிப்’ பெற்றார்.

No comments:

Post a Comment