Thursday 21 November 2013

திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.
மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.
மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.
“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.
இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.
திப்புவின் புலி
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.
துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்
ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.
காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.
“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.
திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.
அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு
“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:
“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”
- இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்
மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”
வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.
இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”
“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.
- விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

Tuesday 19 November 2013

தமிழ் இலக்கியம்

பாரதிதாசன்
*  இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
*  சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
*  காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
*  பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
*  திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
*  படைப்புகள்: எதிப்பாராத முத்தம், சேர தாண்டவம், குறிஞ்சித் திட்டு, கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கழைக்கூத்தியின் காதல், தமிழச்சியின் கத்தி, அமைதி, இளைஞர் இலக்கியம், செளமியன், நல்ல தீர்ப்பு, தமிழ் இயக்கம், இரண்யன் அல்லது இணையற்ற வீரன், காதலா கடமையா? சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.
*  சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூல் பொதுவுடைமையை வலியுறுத்துகிறது.
*  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
*  கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
*  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
*  பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.
*  பாரதியார் மீது கொண்ட காதலால் சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
*  கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் - பாரதிதாசன்.
*  நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் - பாரதிதாசன்.
*  புதியதோர் உலகம் செய்வோம் - பாரதிதாசன்.
*  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்.
*  கொலை வாளினை எடடா - மிகு கொடியோர் செயல் அறவே - பாரதிதாசன்.
*  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாரதிதாசன்.
*  தமிழுக்கு அமுதென்று பேர் - இந்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - பாரதிதாசன்.
*  கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா - பாரதிதாசன்.
காரைக்கால் அம்மையார்
*  காரைக்கால் அம்மையார் இயற்பெயர் - புனிதவதி. பிறந்த ஊர் - காரைக்கால். இவரது பாடல் மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
*  திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர் காரைக்கால் அம்மையார்.
*  அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர். இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்.
*  இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் தம் கால் பதிக்க அஞ்சி ஞானசம்பந்தர் ஊர்ப்புறத்தே தங்கினார்.
எண் குறிப்புகள்
*  பூதங்கள் ஐந்து, நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் ஆகியன.
*  ஞானந்திரியங்கள் ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.
*  கார்மேந்திரயங்கள் ஐந்து. வாக்கு(வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயு (மலவாய்), உபஸ்தம் (கருவாய்) ஆகியன.
*  தன் மாத்திரைகள் ஐந்து. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியன.
*  அந்தக் கரணங்கள் (அக கருவிகள்) நான்கு. மனம், புத்தி (அறிவு), சித்தம் (நினைவு) அகங்காரம் (முனைப்பு) ஆகியன.
*  மலங்கள் மூன்று. ஆணவம், கன்மம், மாயை ஆகியன.
*  உடல்கள் மூன்று. பருவுடல், நுண்ணுடல், காரண உடல் ஆகியன.
*  கர்மங்கள் மூன்று. இருப்பு வினை (சஞ்சிதகர்மம்), நுகர்வினை (பிராத்த கர்மம்), நிகழ்வினை (ஆகாமிய கர்மம்) ஆகியன.
*  குணங்கள் மூன்று. ராஜஸம் (மன எழுச்சி), தாமஸம் (மயக்கம்), சாத்வீகம் (அமைதி) ஆகியன.
குமரகுரூபரர்
*  பிறந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். ஐந்து வயது வரை ஊமையாக இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர் குமரகுரூபரர்.
*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் ஆகிய நூல்களை மதுரையிலும், ஸ்ரீவைகுண்டத்தில் கைலைக் கலம்பகத்தையும், சிதம்பரத்தில் சிதம்பர மும்மணிக் கோவையையும் இயற்றியவர்.
*  காசியில் இவ்ர் நிறுவிய மடம் குமாரசாமி மடம். பிரபந்த வேந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
அருணகிரியார்
*  ஊர் திருவண்ணாமலை முத்தைத்தரு என்று முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவர் அருணகிரியார்.
*  சந்தக் களஞ்சியம் எனப்படும் திருப்புகழை இயற்றியவர். சந்த வேந்தர் என்று அருணகிரியார் புகழப்படுகிறார். கனதர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில்
விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
*  முருக நாயனார் என்று புகழப்படுபவர். முவரை கந்தர் அனுபூதி சொன்ன என்தை - என்று போற்றியவர் தாயுமானவர் ஆவார்.
ஒட்டக்கூத்தர்
*  இயற்பெயர் கூத்தர். விக்கிர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக இருந்தவர்
ஒட்டக்கூத்தர்.
*  மூவர் உலா, குலோத்துங்கன் பிள்லைத் தமிழ் (தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் நூல்), தக்கயாகப் பரணி (வீரபத்திர பரணி), தில்லை உலா போன்ற நூல்களை ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.
*  கூத்தனூரில் கலைமகளுக்கு கோயில் கட்டியவர் இவர். கவிராட்சதன், காளக்கவி, சர்வஞ்ஞகவி போன்ற பட்டங்களை உடையவர்.
*  கம்பர் கூழுக்குப் பாடியவர், கூத்தர் மன்னனுக்குப் பாடியவர் என்பவர்.
பாம்பன் சுவாமிகள்
*  இயற்பெயர் குமரகுருதாசர். இராயப்பேட்டை (சென்னை) பாலசுப்ரமணிய பக்த ஜனசபையைத் தொடங்கியவர்.
*  அருணகிரியாருக்கு குருபூஜை எடுக்கச் செய்தவர். இக்கால அருணகிரி என்று போற்றப்பட்டவர்.
ஆழ்வார்கள்
*  பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம். சங்கின் அம்சமாகப் பிறந்த பொய்கையாழ்வார் முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர் ஆவார்.
*  காலம் - 7ம்நூற்றாண்டு
*  மகாபலிபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொண்டார். கதாயுதத்தின் அம்சமாகப் பிறந்தவர்.
*  மயிலாப்பூரில் வாளின் அம்சமாகப் பிறந்த பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.
*  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவருமே முதலாழ்வார்கள் எனப்படுவர்.
*  சக்கரத்தின் அம்சமாக திருமழிசையில் பிறந்தவர் திருமழிசையாழ்வார்.
*  ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த பெரியாழ்வார் கருட அம்சமாகப் பிறந்தவர். பட்டர் பிரான் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது வளர்ப்பு மகள் ஆணடாள். ஆண்டாளுக்குக்
கோதை என்று பெயரிட்டார். பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையின் முன்னோடி பெரியாழ்வார்.
*  பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாளாழ்வார் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஆவார். சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனப்பட்டார்.
*  இறைவனுக்கு மனைவியானதால் நாச்சியார் எனப்பட்டார். திருப்பாவை, திருமொழி ஆகியவற்றைப் பாடியவர். திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் இராமானுஜர் ஆவார்.

இந்திய குடியரசுத் தலைவர்

1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்
2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்
3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்
5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்
9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்
10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)
11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை
13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி
14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்
16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35
17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்
19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை
20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு
21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்
22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை
23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்
26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்
29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்
30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்
34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை
47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்
48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை
50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123
53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331
56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360
67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்
71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து
72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000
73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000
74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை

இந்திய பாராளுமன்றம்

1. இந்திய பாராளுமன்றம் - மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
2. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு - பாராளுமன்றம்
3. புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு - பாராளுமன்றம்
4. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
5. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் - 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
6. மக்களவையின் தலைவர் - அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.
7. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை 32 விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
8. பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 102
9. இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர் அம்பேத்கார்
10. அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது - அடிப்படை உரிமை
11. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது - முகவுரை
12. இந்திய அரசாங்க முறையானது - பாராளுமன்ற ஆட்சி முறை
13. மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார் வசமுள்ளது - பாராளுமன்றம்
14. பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையான நிதிக்குழு - பொதுக் கணக்குக் குழு
15. பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 24
16. பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை - 45
17. பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 21
18. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் - குளிர்கால கூட்டத்தொடர்
19. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர் - பட்ஜெட் கூட்டத்தொடர்
20. பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் - 6 மாதங்கள்
21. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர் - துணை சபாநாயகர்
22. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திராகாந்தி
23. லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
24. அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை
25. மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை
26. பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்
27. பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் - 2 முறை
28. எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்
29. பாராளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 14
30. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்
31. நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம் - மத்திய அமைச்சரவை
32. காபினெட்டின் தலைவர் - பிரதமர்
33. மத்திய அமைச்சரவையின் தலைவர் - பிரதமர்
34. காபினெட் என்பது - மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்
35. மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும் - 6 மாதங்கள் வரை
36. அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது - மூன்று
37. அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது - லோக்சபைக்கு
38. ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - சபாநாயகர்
39. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் - லோக்சபை
40. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை - லோக்சபை(மக்களவை)
41. லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர் - லோக் சபை உறுப்பினர்கள்
42. தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும் - 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)
43. பண மசோதா என்று வரையறை செய்பவர் - சபாநாயகர்
44. பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும் - லோக்சபை
45. பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு - 14 நாட்கள்
46. லோக்சபையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
47. லோக்சபையின் பதவிக்காலம் எந்த சமயத்தின்போது நீட்டிக்கப்படலாம் - தேசிய அவசரகால நெருக்கடி நிலையின்போது
48. லோக்சபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)
49. தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 545 (530+13+2)
50. 545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் - 2025
51. லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 25
52. லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
53. இராஜ்யசபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 30
54. இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் - லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள்
55. இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி
56. இராஜ்யசபையின் பதவிக்காலம் - நிரந்தரமானது
57. இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்
58. தற்போது நடைமுறையில் உள்ள இரைஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 245 (233+12)
59. மாநில சட்டப்பேரவை கொண்ட இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி
60. ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை - 3
61. ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை - 3
62. இருசபைக் கூட்டுக் கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 108
63. பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 110
64. பட்ஜெட் என்பது - பண மசோதா
65. மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 30
66. மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையை சார்ந்தவர்கள்.
67. மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் - 1 ஆண்டு
68. பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 22 உறுப்பினர்கள்
69. பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 15
70. பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 7
71. இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள் - பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு
72. அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு - மதிப்பீட்டுக் குழு
73. மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு - பொதுக் கணக்கு குழு
74. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் - 50
75. இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு - பொதுக் கணக்குக் குழு
76. பொதுவாக கேள்வி நேரம் என்பது - காலை 11 முதல் 12 வரை
77. பூஜ்ய நேரம் என்பது - 12 முதல் 1 மணி வரை
78. சபையின் முதல் ஒரு மணி நேரமே - கேள்வி நேரம்
79. நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும் - லோக்சபை
80. லோக்சபையின் தலைவரா செயல்படுபவர் - சபாநாயகர்
81. லோக்சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர் - சபாநாயகர்
82. லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் - பிரதமர்
83. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்
84. லோக்சபையின் முதல் சபாநாயகர் - ஜி.வி.மாவலங்கார்
85. ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது - 1935ம் ஆண்டுச் சட்டம்
86. 1995ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் - ஃபாசல் அலி
87. நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை - வாக்குரிமை (பாராளுமன்ற செயல்பாடுகளில் வாக்களிக்க இயலாது)
88. காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
89. அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு - ஜப்பான்
90. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பது - 11வது அடிப்படை கடமை
91. ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு - ஷரத்து 356
92. இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்
93. இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஒய்வுக்கால வயது - 65 (அல்லது 6 ஆண்டுகள்)
94. இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்
95. இந்திய பொதுப்பணத்தின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலர்
96. மைய அரசில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் - மொரார்ஜி தேசாய்
97. இந்திய அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் - மக்கள்
98. இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்தி்ருக்கிறது - கனடா
99. கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம் - அதிகார பங்கீடு
100. இந்தியாவில் நடைமுறையில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை

இந்திய அரசியலமைப்பு

1. அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது - ஷரத்து 32
2. அரசியலமைப்பை திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 368
3. அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பாராளுமன்றம்
4. நிறுத்திவைக்கப்பட இயலாத இரு ஷரத்துக்கள் - ஷரத்து 20 மற்றும் 21
5. அவசர கால நெருக்கடி நிலையின்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை - ஷரத்து 19
6. வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18 என்று வாக்குரிமை அளிக்கும் ஷரத்து - ஷரத்து 326
7. ஷரத்து 20 மற்றும் 21 தவிர எந்த அடிப்படை உரிமையையும் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 368
8. அடிப்படை கடமைகள் என்பது அமைந்துள்ள ஷரத்து - ஷரத்து 51 A
9. 1948ல் நியமிக்கப்பட்ட மாநி்ல மறுசீரமைப்புக் குழு - ஜே.வி.பி. கமிட்டி
10. 1947ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு எஸ்.கே.தார் கமிட்டி
11. மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
12. சொத்துரிமை என்பது தற்போது அடிப்படை உரிமை அல்ல, ஆனால் சட்ட உரிமை
13. அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு - 1978
14. சொத்துரிமை 42வது திருத்தத்தின்போது நீக்கப்பட்டது.
15. தற்போது சொத்துரிமை உள்ள ஷரத்து - ஷரத்து 300 A
16. சொத்துரிமை நீக்கப்பட்டபோது இருந்த அரசு - ஜனதா அரசு
17. தனி அரசியலமைப்பை உடைய ஒரே ஒரு இந்திய மாநிலம் - ஜம்மு காஷ்மீர்
18. அரசியலமைப்பின்படி லோக்சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை - 552
19. அரசியலமைப்பின்படி இராஜ்யசபைக்கான உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை - 250 (238+12)
20. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கியது - 3 அதிகாரப் பட்டியல்கள்
21. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தம் செய்ய இயலாது என்று குறிப்பிட்ட வழக்கு - கேசவானந்த பாரதி வழக்கு
22. அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - அயர்லாந்து
23. அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களி்ன் எண்ணிக்கை - 530
24. அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 20
25. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தைச் சார்ந்தவை என்னும் கருத்துப் படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - கனடா
26. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
27. அடிப்படை கடமைகள் பகுதி எந்த திருத்தத்தின்போது அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டன - 42வது திருத்தம்(1976)
28. தொடக்கத்தில் அரசியலமைப்பில் இருந்த அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை - 10
29. தற்போது அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை - 11
30. 86வது திருத்தம்(2002) திருத்தத்தின்போது 11வது அடிப்படை கடமை சேர்க்கப்பட்டது.
31. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் குறித்த அட்டவணை - 8வது அட்டவணை
32. அதிகாரப் பட்டியல்கள்(3 பட்டியல்கள்) குறித்த விவரம் அடங்கியுள்ள அட்டவணை - 7வது அட்டவணை
33. மாநிலங்களுக்கான இராஜ்ய சபை இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இடம் பெற்றுள்ள அட்டவணை - நான்காவது அட்டவணை
34. உறுதிமொழிகள் இடம் பெற்றுள்ள அட்டவணை - மூன்றாவது அட்டவணை
35. அனைத்து மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - முதலாம் அட்டவணை
36. பதவிப்பிரமாணங்கள் இடம் பெற்றுள்ள அட்டவணை - மூன்றாவது அட்டவணை
37. ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டன.

Current Questions and Answer



1. who is the current loksabha speaker ?
ans: Meira Kumar
2. Who is the Deputy Chairman of the Rajya Sabha?
ans: pj kuryan
3. who is the current rajya sabha chairman ?
ans: Mohammad Hamid Ansari
4. america is in which part of the world?
Ans: in Northern hemisphere
5.how many members are in europian union?
ans: 28 members
6. Who became the first player to win four successive ballon d'or awards ?
Answer: Lionel Mess
7. how many member in IMF.?
Answer: 188 Members
8. Who is known as the father of Indian Cricket ?
Answer: Renjith Singh
9. 2013 republic day guest
Answer: King of Bhutan, Jigme Khesar Namgyel Wangchuck
10. name of protein in milk
Answer: casein
11.Which element has no nutron?
Answer: Hydrogen
12. Kalinga Prize is related to ___?
Answer: Popularization of Science
13.silent valley biosphere is in
Answer: palakad,kerala
14. Zindagi Ka Karvan' book is an autobiography of
Answer: Former prime minister chandrasekhar
15.who is the current nawab of patudi?
Answer: Saif Ali Khan
16. which is the biggest land locked country in the world??
Answer: Kazakhstan
17.who is the president of world bank?
Answer: Dr. Jim Yong Kim
18.present us secretary of state?
Answer: John Kerry
19.present chairman of ISRO
Answer: Radhakrishnan
20.current indian men's hockey coach ?
Answer: M. K. Kaushik