Friday 24 January 2014

இந்தியா - மக்களும் மக்கள்தொகையும்

இந்தியா - மக்களும் மக்கள்தொகையும்
Posted Date : 14:12 (12/12/2013)Last updated : 14:12 (12/12/2013)
திக மக்கள் தொகை கொண்ட உலக நாடுளில் இந்தியா இரண்டாம் இடம் பெறுகிறது.
மக்கள் தொகை 125  கோடிக்கும் அதிகமாக பெருகிக்கொண்டிருக்கிறது.
2050 ஆம் ஆண்டில் இந்தியா மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் முதல் இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 5-ஆவது பெரிய மக்கள்தொகையைக் கொண்ட  பிரேசில் நாட்டின் மக்கள்தொகை இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகைக்குச் சமம். அது போலவே  தமிழ்நாட்டின் மக்கள்தொகை தாய்லாந்து மக்கள் தொகைக்குச் சமம்.
இந்திய மக்கள் இனங்கள்
இந்தியாவில் தற்போது வாழ்ந்து வரும் மக்களை நீக்ரிடோஸ், புரோட்டோ ஆஸ்ட்ரலாய்ட்ஸ், மங்கோலாய்ட்ஸ், மத்திய தரைக்கடல் இனத்தவர்கள், மேற்கு பிராக்கி செஃபல்கள், நார்டிக்ஸ் என ஆறு இனங்களில் வகைப்படுத்துவார்கள் மானுடவியலாளர்கள்.
நீக்ரிடோஸ்
ஆப்பிரிக்காவிலிருந்து வந்து குடியேறிய நீக்ராய்ட்களின் சந்ததியர் தென்னிந்தியப் பழங்குடி மக்களான இருளர், கோடர், பனியர் மற்றும் குரும்பர்.
புரோட்டோ ஆஸ்ட்ரலாய்ட்ஸ்
இந்தியாவின் மத்தியப் பகுதிகளிலும், தென்னிந்தியாவிலும் வாழும் பழங்குடி இனத்தவர்கள் புரோட்டோ ஆஸ்ட்ரலாய்ட்ஸ் இனத்தவர்கள்.
மங்கோலாய்ட்ஸ்
இந்தியாவின் அஸ்ஸாம், நாகலாந்து, மியோ, காரோ, ஜெயந்தி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மங்கோலாய்ட் இனத்தவர்கள் மஞ்சள் நிறமும், குள்ள உருவமும் உடையவர்கள்.
மத்திய தரைக்கடல் இனத்தவர்கள்
இந்த இனத்தவர்கள் இரு வகைப்படுவர் பழங்கால மத்திய தரைக்கடல் இனத்தவர் (Palaeo Mediterraneans) மற்றும் உண்மையான மத்திய தரைக்கடல் இனத்தவர் (True Mediterraneans or European Type)
தமிழர், மலையாளிகள்,தெலுங்கர், கன்னடர் ஆகிய தென்னிந்திய இனங்களை 'திராவிடர்கள்' என்றும் கூறுவர்.
ஒரே மாதிரியான தோற்றம், கலாசாரம், மொழிகளை கொண்ட தென்னிந்திய இனங்களை திராவிடர் என்றோ, தமிழர் என்றோ அவரவர் வசதிக்கேற்றவாறு அழைத்துக் கொள்கின்றனர்.
சிந்து சமவெளி நாகரிக காலத்தில், திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் இந்தியா முழுவதும்  பரந்து வாழ்ந்தார்கள் என்று நம்பப்படுகிறது.
மத்திய தரைக்கடல் பகுதி இனத்தின் சந்ததியர் எனவும், சிந்து சமவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்களாகவும் திராவிடர்கள் கருதப்படுகின்றனர்.
மேற்கு பிராக்கி செப்பல்கள்
மேற்கு வங்காளம், ஒடிஸா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் சில பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.
அகன்ற தலையுடைய இவர்களின் சந்ததியினர் கூர்க் மற்றும் பார்சியர்களிடம் காணப்படுகின்றனர்.
நோர்டிக்ஸ்
கி.மு.2000 முதல் கி.மு 1500 வரையிலான காலக்கட்டத்தில் நோர்டிக் ஆரியர்கள் மெசபடோமியாவிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான்  கங்கைச் சமவெளி மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவி உள்ள இவர்கள் இந்தோ  இரானியப் பிரிவைச் சார்ந்தவர்கள்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து இங்கிருந்து நாகரிகத்தில் மேம்பட்டு விளங்கிய சிந்து சமவெளி மக்களுடன் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.
நவீன மானுடவியலாளர்கள் இந்தியாவில் வாழும் மக்கள் குறிப்பிட்ட நான்கு முக்கிய இன குழுக்களிலிருந்து வந்தவர்கள் என வகைப்படுத்துகின்றனர்.
காகசாய்டுகள் (Caucasoids) – இந்தோஆரிய மொழி
ஆஸ்ட்ரலாய்டுகள் (Austroloids) – திராவிட மொழி
மங்கோலாய்டுகள் (Mongoloids) – திபெத் பர்மிய மொழி
நீக்ரிடோஸ் (Negritos) –  கிரேட் அந்தமான் மொழி
2009 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி, இரட்டை அல்லீல் உடல் குரோமோசோம் குறிப்பான்கள் அடிப்படையில் (Biallelic Autosomal markers) இந்திய மக்கள், வட இந்திய வம்சாவழியினர் (Ancestor of North Indians - ANI) மற்றும் தென் இந்திய வம்சாவழியினர் (Ancestor of South Indians - ASI)  என்ற இரண்டு குழுக்களின் கலப்பு எனவும் கூறப்படுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு  2011
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிக்கோள் (motto) – 'நமது சென்சஸ் நமது எதிர்காலம்' (Our census Our Future)
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register).
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் பிப்ரவரி 9.
இந்திய மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு,  இருப்பிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய விவரங்களை சேகரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
1872-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு தொடங்கப்பட்டது.
வைசிராய் ரிப்பன் பிரபு காலத்தில் 1881-ம் ஆண்டு இந்தியாவில் முழு அளவிலான மக்கள் தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் (1881) சென்சஸ் கமிஷனர் W.V. பிளாடன்
1881 முதல் 1941 வரை சென்சஸ் கமிஷனரே மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பொறுப்பு வகித்தவர். 1949 முதல் இந்த பொறுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனர்  (Register General and Census Vommissioner) வி.கீ.வி.யேட்ஸ்.
ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்ற 15-வது  மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு முன்பு 1931-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பும், சுதந்திரத்திற்குப் பின் 1968-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் மக்களின் சமூக நிலையை அறிய சாதிவாரியாக கணக்கெடுக்கப்பட்டது
இந்திய மக்கள் தொகை 2011
இந்தியாவின்  மொத்த மக்கள் தொகை : 121,01,93,422 (1210.2 மில்லியன்)
ஆண்கள் : 62,37,24,248
பெண்கள் : 58,64,69,174
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்  17.64%
இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்: உத்தரப்பிரதேசம் (19,95,81,477).
அதிக மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசம்: டெல்லி        (1,67,53,235)
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்: சிக்கிம் (6,07,688).
மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட யூனியன் பிரதேசம்: இலட்சத் தீவு ( 64,429).
பாலின விகிதம் (Sex Ratio)
இந்தியாவில் ஆண்-பெண் விகிதம்- 940 (1000 ஆண்களுக்கு 940 பெண்கள்).
ஆண்-பெண் விகிதம் அதிகமாக உள்ள மாநிலம்: கேரளா: 1,084/1000
ஆண்-பெண் விகிதம் அதிகமாக உள்ள யூனியன் பிரதேசம் : புதுச்சேரி: 1038/1000
ஆண்-பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலம் : ஹரியானா: 877/1000
ஆண்-பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள யூனியன் பிரதேசம்: டாமன்-டையூ: 709/1000
ஆண்-பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாவட்டம் : டாமன் மாவட்டம் (618/1000).
மக்கள் நெருக்கம் ( Population Density)
இந்தியாவின் மக்கள் நெருக்கம்   382 ( ஒரு சதுர கி.மீ.க்கு 382 பேர்)
இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிக அதிகமான மாநிலம்: பீகார். 1,102/ச.கி.மீ.
இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிக அதிகமான யூனியன் பிரதேசம்: புதுதில்லி 11,297/ச.கி.மீ.
மக்கள் நெருக்கம் மிகக் குறைந்த மாநிலம்: அருணாசலப்பிரதேசம்  17/ச.கி.மீ.
மக்கள் நெருக்கம் மிகக் குறைந்த யூனியன் பிரதேசம்   அந்தமான் நிகோபர் 46/ச.கி.மீ.
எழுத்தறிவு  (Literacy)
இந்திய மக்களின் எழுத்தறிவு விகிதம்  74.04%
ஆண்கள்   82.14%
பெண்கள்  65.46%.
மிக உயர்ந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம்: கேரளா (93.91%). (ஆண்கள் 96.02%; பெண்கள் 91.98%).
மிக குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம் : பீகார் (63.82%). (ஆண்கள் 73.39%) (பெண்கள்  53.83% )
மிக உயர்ந்த எழுத்தறிவு பெற்ற யூனியன் பிரதேசம் : இலட்சத்தீவு (92.28) (ஆண்கள் 96.11%; பெண்கள் 88.25%)
மிக குறைந்த எழுத்தறிவு பெற்ற யூனியன் பிரதேசம் : தாத்ரா நாகர் ஹவேலி(77.65%). (ஆண்கள்  86.46%; பெண்கள்  65.93%)
ஆதார் அடையாள அட்டை
இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு (unique Identification Autority of Inida) இந்திய அரசின் நிலப்பகுதிக்குள் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்குவ தற்காக 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. இதன் தலைமையிடம் டெல்லியில் உள்ளது. தலைவர் : நந்தன் நீல்கேனி.
வாக்காளர் அட்டையில் உள்ள விவரங்களுடன், ஒவ் வொருவருடைய உயிரியளவு களையும் சேகரித்து, தனிப்பட்ட அடையாள எண் கொண்ட ஆதார் அட்டையை வழங்குகிறது.
ஆதார் அட்டை உள்ளவர் களுக்கு மட்டுமே நேரடி பணப் பரிமாற்றத்தில் மத்திய அரசு வழங்கும் மானியம் என்ற மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பு ஆதார் அடையாள அட்டை கட்டாயமல்ல என்று குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment