Saturday 25 January 2014

ஐக்கிய நாடுகள் சபை - முனைவர் ஆ.ராஜா

ஐக்கிய நாடுகள் சபை - முனைவர் ஆ.ராஜா
Posted Date : 12:12 (11/12/2013)Last updated : 12:12 (11/12/2013)
உலக நாடுகளிடையே ஒற்றுமை, சமாதானம், நல்லிணக்கம், அரசியல், பொருளாதார ஒத்துழைப்பு இவற்றைக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகள் சேர்ந்து தோற்றுவித்த அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை. ஐக்கிய நாடுகள் சபை ஹிழிளி UNO (United Nations Organization ) என்று அழைக்கப்படுகின்றது.
  'அட்லாண்டிக் சார்ட்டர்’ (ஆகஸ்ட் 14, 1941) தான் ஐ.நா. தொடங்கப்படுவதற்கான காரணமாக அமைந்தது.
 அமெரிக்க அதிபர் ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டனர்.
 லீக் ஆப் நேஷன்ஸ் அடிப்படையில் ஐ.நா. சபையை உருவாக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முடிவு செய்தனர்.
 ஐ.நா. தொடங்கப்படுவதற்கான மாநாடு 1945-ம் ஆண்டு, ஜூன் 26-ம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாளிலிருந்து ஐ.நா. செயல்பாட்டுக்கு வந்தது.
 அக்டோபர் 24 -ம் நாள் ஆண்டு தோறும் ஐ.நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது.
 1945-ம் ஆண்டு தொடக்ககாலத்தில் 50 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது.
 ஐ.நா-வின் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193.
 ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 1946-ம் ஆண்டில் நடைபெற்றது.
நிரந்தர உறுப்பினர்கள்:
சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
ஐ.நா. அமைப்பு:
 தலைமைச் செயலகம்
 பொதுச் சபை
 பாதுகாப்புச் சபை
 பொருளாதார சமூகச் சபை
 பொறுப்பாண்மைக் குழு
 பன்னாட்டு நீதிமன்றம்
தலைமைச் செயலகம்:
 ஐ.நா-வின் மையமாக விளங்குவது தலைமைச் செயலகம்.
 ஜூன் 30, 2011 தகவலின்படி உலகம் முழுவதும் 43,747 தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளனர்.
 ஐ.நா-வின் தலைமைச் செயலகம் நியூயார்க்கில் உள்ளது. இருப்பினும், உலகம் முழுக்க அலுவலகங்கள் உள்ளன.
 பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச் சபை கூடி, பொதுச் செயலாளரை நியமிக்கின்றது.
 பொதுச் செயலாளரே முதன்மையான நிர்வாகியாகத் திகழ் கின்றார்.
 தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பான் கி மூன் பொதுச் செயலாளராக உள்ளார்.
தலைமை அலுவலகம்:
நியூயார்க்.
முகவரி:
First Avenue, UN Plaza, Newyork City, Newyork, USA.
  முதன்மை அலுவலகங்கள்:
ஜெனீவா, நைரோபி, வியன்னா.
ஐ.நா. சின்னம்:
இளம் நீலத்தின் நடுவே ஆலிவ் இலைகளுக்கு மத்தியில் வெள்ளை வட்டங்களில் அமைந்த உலகம்.
ஐ.நா. கொடி:
 இளம் நீலப் பின்புலம்.
 வெண்மை நிற ஐ.நா. சின்னம்.
 வடதுருவத்தில் நிற்கும் உலக வரைபடம்.
 இரு ஆலிவ் மரக் கிளைகள்.
 1947-ம் ஆண்டு, அக்டோபர் 20-ம் நாள் ஐ.நா-வின் கொடி அங்கீகரிக்கப்பட்டது.
ஐ.நா. அலுவல் மொழிகள்:
அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ்.
 தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 அனைத்து ஆவணங்களும் முதலில் 6 மொழிகளில் எழுதப்படுகின்றன.பின்னர் உறுப்பு நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கப்படுகின்றன.
பொதுச் சபை: General Assembley
 ஐ.நா-வின் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது பொதுச் சபை.
 உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் சார்பாக ஐந்து பிரதிநிதிகளை அனுப்பலாம்.
 ஒரு நாடு ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.
 பாதுகாப்புச் சபை தொடர்பான விஷயங்களை மட்டும் விவாதிக்க முடியாது.
 வருடத்துக்கு இரண்டுமுறை கூடுகின்றது.
பொதுச் சபையின் முதன்மைக் குழுக்கள்:
 முதற் குழு: Disarmanent and International Security
 இரண்டாம் குழு: Economic and Financial
 மூன்றாம் குழு: Humanitarian and Cultural
 நான்காம் குழு: Special Political and Decolonization
 ஐந்தாம் குழு: Administrative and Budgetary
 ஆறாம் குழு: Legal
பாதுகாப்புச் சபை : Security Council
 உலக நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
 சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன.
 

No comments:

Post a Comment