Friday 24 January 2014

இந்திய மாநிலங்கள் - 4

இந்திய மாநிலங்கள் - 4
Posted Date : 12:12 (13/12/2013)Last updated : 12:12 (13/12/2013)
சட்டீஸ்கர்
 த்திய இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. சட்டீஸ்கரி பேசும் மக்கள் நிறைந்த மத்தியப்பிரதேசத்தின் தென் பகுதியைப் பிரித்து, 2000-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட மாநிலம்.
வரலாறு: தெற்கு கோசலம் என்று ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்புகள் உள்ளன. ராமாயணத் தின்போது ராமன் - லட்சுமணன் வனவாசத்தின்போது சட்டீஸ்கர் வனப் பகுதிக்கு வந்ததாக நம்பப் படுகிறது. மராத்தியர் ஆட்சியின் போது இந்தப் பகுதிக்கு சட்டீஸ்கர் என்ற பெயர் வந்தது. முதன் முறையாக 1795-ம் ஆண்டு அரசு ஆவணங்களில் சட்டீஸ்கர் என்ற பெயர் இடம்பெற்றது.
எல்லைகள்: வடக்கில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், தெற்கில் ஆந்திரப்பிரதேசம், மேற்கில் மகாராஷ்டிரம், கிழக்கில் ஒடிசா.
முக்கிய ஆறுகள்: மகாநதி, இந்திராவதி, சபரி.
முதனிலைத் துறைகள்
இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 44% வனப் பகுதியினைக் கொண்டுள்ளது.
 அதிக அளவு கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். நாட்டின் மொத்த இரும்பு உற்பத்தியில் 15% இம்மாநிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
 விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களே இம்மாநிலத்தின் பிரதான வருவாய்.
 அரிசி, எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, சோயாபீன் போன்றவை முக்கிய விளைபொருட்கள்.
 நிலக்கரி, இரும்பு, பாக்சைட் போன்றவை அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகின்றன.
 இந்தியாவில் உள்ள மொத்த வனப்பகுதிகளில் 12% இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
 கனிம வளம் மிகுந்த மாநிலம். 28 வகையான கனிமங்கள் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலைத் துறைகள்
 நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20% இம்மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது.
மூன்றாம் நிலைத் துறைகள்
 முக்கிய நகரங்கள் : ராய்ப்பூர், பிலாஸ்பூர், ராஜ்கார், துர்க், பிலாப்.
 விமான நிலையம்: ராய்ப்பூர்
 முக்கிய இடம் : பிலாய் உருக்காலை பால்கோ, ராய்ப்பூர், ஷிபோநாத் நதி.
 சித்ராகோட், திரத்காட் முக்கிய நீர்வீழ்ச்சிகள்.
 சூவா, ரவுட் நச்சா, கர்மா, சைலா போன்ற நடனங்கள் சிறப்பானவை.
 சோஹர், பத்தோளி, பிஃப் போன்றவை நாட்டுப்புறப் பாடல் வகைகள் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.
 முக்கிய விழாக்கள்: போலா, நவாகாப், கோவர்த்தன் பூஜை, ஹோலி, தீபாவளி.

கோவா
திருமாலின் அவதாரமான பரசுராம் உருவாக்கிய பகுதி. மகாபாரத காலத்தில், பசுக்கள் நிறைந்த பகுதியாதலால் கோமஞ்சலா என்று அழைக்கப்பட்டது. வாட்டிகனில் உள்ள புனித பேரா லயம் போன்று புனித காஜேட்டான் தேவாலயம் இங்கு கட்டப்பட்டு உள்ளது. புனித பிரான்சிஸ் சேவி யரின் உடல் இன்றும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடற்கரை, உலகப் புகழ்பெற்ற கட்டடக்கலை பெயர்பெற்றது.
வரலாறு: 20-30 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய பழைமை கொண் டது கோவா. பாறையில் வெட்டிய ஓவியம், இங்கு 20 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு மனித இனம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. கி.பி. 1-ம் நூற்றாண்டில் சதவாகனர் ஆதிக்கம், பின்னர் கடம்பர், ராஷ்ட்ர கூடர், சாளுக்கியர், யாதவர் ஆட்சி. 1312-ல் டெல்லி சுல்தான் வசம் சென்றது. அதன் பிறகு, விஜயநகர ஆட்சி என பலரது ஆட்சிக்கு உட்பட்டது. 1510-ல் போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றினர். 1961-ல் இந்திய ராணுவம் கோவாவை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து கோவா மற்றும் டாமன், டையூ ஆகியவை இந்தியாவின் யூனியன் பிரதேசங்களாக ஆயின. 1987-ல் கோவா தனி மாநில அந்தஸ்து பெற்றது. டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களாக தொடர்கின்றன.
எல்லை: வடக்கில் தெரகோல் ஆறு கோவாவையும் மகாராஷ்டி ராவையும் பிரிக்கிறது, தெற்கு மற்றும் கிழக்கில் கர்நாடகம், மேற்கில் அரபிக்கடல்.
முக்கிய ஆறுகள்: மாண்டவி, சுவாரி, தெரேகோல், பெதுல், சபோரா.
முதனிலைத் துறைகள்
 நெல், கேழ்வரகு, முந்திரி மற்றும் தேங்காய் அதிக அளவில் விளைகின்றன.
 பாக்சைட், மாங்கனிஸ், விவசாயம் முக்கிய வருவாயாக உள்ளது.
இரண்டாம் நிலைத் துறைகள்
 இயற்கையான முறையில் அமைந்த மர்கோவா மிக முக்கியமான துறைமுகமாகும்.
மூன்றாம் நிலைத் துறைகள்
 டாலோ, ஃபுக்டி, மண்டோ போன்ற நாட்டுப்புற நடனங்கள் பிரசித்தி பெற்றவை.
 சுற்றுலா மற்றும் சுரங்கங்கள் மூலம் அதிக அளவில் மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
 விழாக்கள்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோவா கார்னிவல், விநாயகர் சதுர்த்தி, ஹோலி.
 முக்கிய நகரங்கள்: பனாஜி, மர்கோவா, வாஸ்கோடகாமா, மட்காவோன்.
 முக்கிய இடங்கள் : புனித சேவியர் உடல் உள்ள தேவாலயம், கடற்கரைகள், அரவேலம் அருவி.
 இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம்.
 இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓஷ்னாகிராஃபி கோவாவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 கொங்கணி இலக்கியத்தின் மையமாகத் திகழ்கிறது. இது மாநிலத்தின் அலுவலக மொழியாகும்.
 டபோலிம் முக்கிய விமான நிலையமாகும்.

ஹரியானா
சிந்துசமவெளி நாகரிகத்துக்கு உட்பட்ட பகுதி. மகாபாரதத்தின் குருக்ஷேத்திர போர் நடந்ததாக கூறப்படும் இடம் இம்மாநிலத்தில் தான் உள்ளது. மிகக் குறைவான வனப்பகுதி கொண்ட மாநிலம். கிராம கோடீஸ்வரர்கள் நிறைந்த மாநிலம்.
வரலாறு: ஹரியானா என்ற சொல்லுக்கு விஷ்ணுவின் இல்லம் என்று பொருள். இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் கிடைக்க காரணமாக இருந்த பரத வம்ச ஆட்சியின் மையப்பகுதியாக
இது இருந்துள்ளது. மூன்றாவது பானிபட் போர், தற்போது ஹரியானாவில் உள்ள பானிபட் நகரத்துக்கு அருகில் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது பஞ்சாப் மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1966-ம் ஆண்டு ஹரியானா தனி மாநிலம் ஆனது.
எல்லைகள்: வடக்கில் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசம், மேற்கு மற்றும் தெற்கில் ராஜஸ்தான், கிழக்கில் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம். தெற்கில் டெல்லி உள்ளது. டெல்லியின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு எல்லை ஹரியானாவால் சூழப்பட்டுள்ளது.
முக்கிய ஆறு: யமுனை
முதனிலைத் துறைகள்
 மக்கள் 70% விவசாயத்தைச் சார்ந்துள்ளார்கள்.
 அரிசி, கோதுமை, கரும்பு, பார்லி, பருத்தி ஆகியவை முக்கிய விளைபொருட்கள்.
இரண்டாம் நிலைத் துறைகள்
 'மாருதி உத்யோக்' தொழிற்சாலை இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
மூன்றாம் நிலைத் துறைகள்
 பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்.
 மாநிலத்தின் அனைத்து கிராமத்திலும் மின்சார வசதி அளித்த முதல் மாநிலம்.
 முக்கிய நகரங்கள் : அம்பாலா, ஃபரிதாபாத், குர்கான், ஹிஸ்ஸார், குருக்ஷேத்ரம், கர்னால்.

ஹிமாச்சலப்பிரதேசம்
இயற்கை அழகு நிறைந்த மாநிலம். அதிக அளவில் நீர்மின் சக்தியை உற்பத்தி செய்யும் மாநிலம். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்த முதல் மாநிலம் இது. மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநிலம்.
வரலாறு: மௌரியர், குப்த பேரரசுகளின் ஆட்சிகளுக்கு உட்பட்டு இருந்தது. அதன் பிறகு, முஸ்லிம் அரசர்கள் வருகை வரை பல சிற்றரசுகள் இந்தப் பகுதியில் ஆட்சி செய்து வந்திருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, ஏப்ரல் 15, 1948-ம் ஆண்டு 28 சிறிய அரசுப் பகுதிகளை ஒன்றிணைத்து ஹிமாச்சலப் பிரதேசம் என்ற மாகாணம் உருவாக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீர்திருத்தத் துக்குப் பிறகு, 1956-ம் ஆண்டு மத்திய ஆட்சிப் பகுதியானது. 1971-ம் ஆண்டு தனி மாநில அந்தஸ்து பெற்றது.
எல்லைகள்: வடக்கில் ஜம்மு- காஷ்மீர், மேற்கு மற்றும் தென் மேற்கில் பஞ்சாப், தெற்கில் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம், தென்கிழக்கில் உத்தர காண்ட், கிழக்கில் திபெத் (சீனா).
முக்கிய ஆறுகள் : ராவி, சட்லெஜ், பியாஸ், சினாப், யமுனை.
முதனிலைத் துறைகள்
 வேளாண்மை, நீர் மின் உற்பத்தி மற்றும் சுற்றுலா ஆகிய மூன்றும் இம்மாநிலத்தின் முக்கியத் தொழில்கள். 93% மக்கள் வேளாண் தொழிலையே நம்பியுள்ளார்கள்.
 ஆப்பிள், பிளம் பழங்கள் அதிக அளவில் விளைகின்றன. கோதுமை, அரிசி, பார்லி முக்கிய விளைபொருள்கள்.
 இந்திய ஆப்பிள் உற்பத்தியில் முதலிடம்.
 மாநிலத்தின் பரப்பளவில் 40% வனப்பகுதி ஆகும்.
இரண்டாம் நிலைத் துறைகள்
 கைவினைப் பொருட்களின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது.
 அதிக அளவு நீர்மின் சக்தியை உற்பத்தி செய்யும் மாநிலம் (25%).
மூன்றாம் நிலைத் துறைகள்
 முக்கிய நகரங்கள்: சிம்லா, பிலாஸ்பூர், தர்மசாலா, குலு, சம்பா, கஜ்ஜார், மனாலி, ராம்பூர், பாலம்பூர்.
 முக்கிய இடங்கள்: சிம்லா, டல்ஹெளசி, மணாலி, மாண்டி.
 சிம்லா மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது.
 இந்தியாவிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள மாநிலம் (400 மீ - 6600 மீ.)
 இந்தியாவின் காளான் நகரம் என்றழைக்கப்படும் சோலன் இம்மாநிலத்தில் உள்ளது.
 நாக்வுஸ், கபாங், ஜாதரு கபாங் போன்ற நடன வடிவங்கள் உள்ளன.
 சிவராத்திரி, நகரா பண்டிகைகள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

 ஜம்மு-காஷ்மீர் 
  பூமியின் சொர்க்கம் என்றழைக் கப்படுகிறது. ஹிமாலய மலைத் தொடரின்மேல் அமைந்துள்ள மாநிலம். இரண்டு தலை நகரங்களைக் கொண்டது. தனி அரசியல் சட்டத்தைக் கொண்டது. இம்மாநிலத்தவர் தவிர, வேறு எவரும் இங்கு நிலம் வாங்க முடியாது.
வரலாறு: இஸ்லாமியர் ஆட்சி 1346-ல் காஷ்மீரில் ஏற்பட்டது. முகலாயர்கள், சுல்தான் என பலரிடம் ஆட்சிப்பொறுப்பு கைமாறியது. 1733 முதல் 1782-ம் ஆண்டு வரை ரஞ்சித் சிங் காஷ்மீர் பகுதியை ஆண்டார். பின்னர், பஞ்சாபின் ஆட்சிப்பகுதியானது. 1846 முதல் 1947 வரை தோஹ்ரா ஆட்சியின் கீழ் காஷ்மீர் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீர் மன்னர் ஹரி சிங்  இந்தியாவில் இணைய முடிவெடுத்தார். அக்டோபர் 26, 1997-ம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது.
எல்லைகள்: பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் எல்லைப் பிரச்னை உள்ள பகுதி. காஷ்மீரின் குறிப்பிட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ள இவ்விரு நாடுகளும், அதைத் தங்களுடையது என்று உரிமை கோருகின்றன.
தெற்கில் ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களும், கிழக்கில் சீனா, மேற்கு, வடக்கில் பாகிஸ்தான் எல்லையாக உள்ளன.
முக்கிய ஆறுகள்: சிந்து, ஜீலம், ராவி, தாவி.
முதனிலைத் துறைகள்
 வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த தொழில்கள் மிகவும் முக்கியமானவை.
 ஆப்பிள், பார்லி, பெர்ரி, அரிசி, குங்குமப்பூ, காய்கறிகள், கோதுமை முக்கிய விளைபொருட்கள்.
 காஷ்மீரில்தான் தரமான கிரிக்கெட் பேட்கள் தயாரிக்கப்படுகின்றன. (வில்லோ மரம்).
 குங்குமப்பூ உற்பத்தில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் நிலைத் துறைகள்
காஷ்மீர் கம்பளம், சால்வை உலகப் புகழ் பெற்றவை. மாநில வருமானத்தில் கைவினைப் பொருட்களின் வருமானம் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.
மூன்றாம் நிலைத் துறைகள்
 லடாக்கின் இந்தோ-திபெத் கலாசாரம், ஜம்முவின் டோக்ரா கலாசாரம் மிகவும் புகழ் பெற்றது.
 வருடாந்திர புத்தத் துறவிகள் நடனத் திருவிழா லடாக்கின் பாரம்பரியமான நிகழ்ச்சி.
 ஜூன் மாதம் நடைபெறும் சிந்து தர்ஷன் முக்கியமானவை.
 முக்கிய நகரம்: ஜம்மு, ஸ்ரீநகர், லே, லடாக்.
 லடாக் 'லிட்டில் திபெத்' என்றழைக்கப்படுகிறது.
 உலகின் உயர்ந்த மற்றும் செலவு மிகுந்த யுத்த பூமி சிபாச்சின் இம்மாநிலத்தில் உள்ளது.
 தால், நாகின், ஆலர் ஏரிகளில் படகு வீடுகள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்பவை.
 ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த அமர்நாத், வைஷ்ணவி தேவி கோயில்களின் இருப்பிடம்.

No comments:

Post a Comment