Saturday 25 January 2014

வாழ்க்கைமுறை நோய்கள்

வாழ்க்கைமுறை நோய்கள்
Posted Date : 18:12 (13/12/2013)Last updated : 19:12 (14/12/2013)
மீனாட்சி ஜானகிராமன்
நண்பா!
நலமா?
நம் இந்தியா வல்லரசாகப் போகிறது!
வரப் போகும் 2020ம் ஆண்டில் உலகின் இளமையான நாடாகத் திகழப் போகிறது இந்தியா!
ஆம்! இந்திய மக்கள் தொகையில் 64% பேர்  Working age group எனப்படும் 25 - 50 வயதுக்குள் இருப்பார்கள்.*
ஆனால் கடந்த தலைமுறையில் தாத்தாக்களுக்கு வந்த வியாதிகளால், நம் தலைமுறை அப்பாக்களும் மாமாக்களும் அவதிப்படுகின்றனர்.
நகர மயமாதலும், தொழில் வளர்ச்சியும், அதிகரித்துவிட்ட தகவல் தொடர்பு சாதனங்களும் நம் வாழ்க்கை முறையை வேகமாக மாற்றி விட்டன.
மருத்துவத் துறையின் அபார வளர்ச்சியால் சில வருடங்களுக்கு முன் ஏராளமான மரணத்துக்குக் காரணமான தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன.
வாழ்க்கை முறை நோய்கள்!
2020ல் இளைஞர்கள் பலர் நோயாளிகளாக இருப்பார்கள்.
இன்றைய தலைமுறையினர் 40 வயது வரை ஆரோக்கியத்தை இழந்து பணம் சம்பாதிக்கின்றனர்.
40 வயதுக்குப் பின் அந்தப் பணத்தை இழந்து ஆரோக்கியம் பெற முயல்கின்றனர்.
கிராமப்புறங்களிலும், நகரங்களைப் போலவே இந்நோய்கள் அதிகரித்து வருகின்றன.
வருத்தப்பட வேண்டிய வாலிபர் சமூகம்
கூட்டுக் குடும்பம் என்ற சொல்லின் பொருள் தற்போது மாறி விட்டது.
High blood pressure, Obesity, Lipid disorders, Diabetes (சுருக்கமாக HOLD) (உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், நீரிழிவு) ஆகிய 'Metabolic Syndrome’ என்னும் 'நோய்க் குடும்பம்' நம் குடும்பங் களுடன் கூட்டு சேர்ந்து விட்டது.
இத்துடன் புற்று நோய்களும் அதிகரித்து வருகிறது.
சிறுமிகள் மிகச் சிறிய வயதில் பூப்படைவதும், நாற்பதுகளில் நிற்க வேண்டிய மாதவிலக்கு முப்பதுகளில் நின்று விடுவதும் எதிர்கால இந்தியா வுக்கு எச்சரிக்கை மணிகள்.
இது மட்டுமல்ல, அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவு பற்றி வருத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் வாலிபர் சமூகம் உள்ளது.
WHO (World Health Organisation Report) - உலக சுகாதார நிறுவனம்
Disease, like Diarrhoea, HIV, TB, neonatal infections and Malaria will kill fewer people than non communicable diseases Globally over the next 20 years.
தொற்றா நோய்களின் மறுபெயர்கள்
NCD - Non Communicable Disease
Lifestyle Diseases  வாழ்க்கை முறை நோய்கள்
Diseases of Longevity- வாழ்க்கை முறை நோய்கள்
Diseases of Civilization - கலாச்சாரத்தால் வரும் நோய்கள்
1. உடற்பருமன் - Obesity
2. நீரிழிவு - Type-2 Diabetes
3. இதய நோய்கள் - Heart Disease
4. பக்கவாதம் - Stroke
5. மனச்சிதைவு நோய்- Depression
6. நிணநீர் குறைபாடுகள் - Hormone Deficiency
7. கல்லீரல் அழற்சி - Cirrhosis
8. ஆஸ்துமா - Asthma (COPD) (Chronic Obstructive Pulmonary Disease)
9. எலும்பு துவார நோய் - Osteo Porosis
10. புற்று நோய் - Cancer
உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி இந்தியாவில் 53% இறப்புக்கும், 44% உடல் ஊனத்திற்கும், வாழ்க்கை முறை நோய்களே காரணம். உலகளவில் அடுத்த பத்தாண்டுகளில் இவ்வகை நோய்களால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.
எண்களை எண்ணுவோம்! எச்சரிக்கையாக!!
Public Health Foundation of India, Harward and Stanford Universities in the U.J. and Oxord University (U.K.) இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள்.
நீரிழிவு நோயின் உலகத் தலைநகரான இந்திய மக்கள் தொகையில் 50 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக இருக்கிறார்கள்.
சுமார் 12 கோடி பேர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.
8 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோய்களால் இறப்பார்கள்.
2015ல் இந்தியர்கள் வாழ்க்கை முறை நோய்களுக்கு 236 பில்லியன் டாலர்களை செலவிடுவார்கள்.
2030ல் தொற்றா நோய்கள் நான்கில் மூன்று மரணங்களுக்குக் காரணமாகும்.
2020ல் 34% இந்தியர்கள் அதிக எடையுள்ளவர்களாக இருப்பார்கள். (Time, Nov.2009)
நகரவாசிகளில் ஐந்தில் மூன்று பேருக்கு நீரிழிவு நோயோ (அ) அதிக இரத்த அழுத்தமோ (அ) இரண்டுமோ உள்ளது.
பொதுவான காரணங்கள்
1. உடல் உழைப்பு குறைவு
2.அதிகக் கொழுப்பு நிறைந்த, நார்ச்சத்து குறைவாக உள்ள, புரதச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்ணுதல்.
3.காலை உணவைத் தவிர்த்தல், இரவு அதிகளவு உணவு, பசிக்கும் போது உணவுக்குப் பதில் நொறுக்குத் தீனி.
4. மது, சிகரெட்.
5. தூக்கமின்மை
6. மன உளைச்சல்
7. குளிர்பானங்களை அதிகளவு       அருந்துதல்
8. சுற்றுச்சூழல் மாசுபாடு
உடற் பருமன் (Obesity)
2000 வருடங்களுக்கு முன் மருத்துவ உலகின் தந்தை ஹிப்போ கிரேட்டஸ் எல்லா நோய்களும் வயிற்றிலிருந்தே உருவாகின்றன என்றார். அது இன்று வரை உண்மை!
* 35 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புறப் பெண்களில் 50% பேர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ. (35 அங்குலத்திற்கு) மேல் இருந்தாலும், பெண்களுக்கு 80 செ.மீ. (32 அங்குலத்திற்கு) மேல் இருந்தாலும் இதய நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளின் உடற்பருமன் காரணங்கள் :
1) கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகள் குளிர்பானம் (Aerated Soft Drinks) அருந்துவது 300% அதிகரித்துள்ளது.
2) அனாவசிய உணவுகள் (Junk Foods), எண்ணெயில் பொரித்த உணவுகள் (Fried Foods) உண்பது அதிகமாகி விட்டது.
ஹோட்டல்களில் உணவு உண்ணும் பழக்கமும் அதிகமாகி விட்டது. தொலைக்காட்சி விளம்பரங்களும் உணவு முறை மாற்றத்துக்குக் காரணம்.
3) ஓடி விளையாடுவதை மறந்துவிட்ட குழந்தைகள் Mobile Phone Games, Video Games, Computer Gamesல் மூழ்கிப் போய் விட்டனர். ஜிமீணீனீ ஷிஜீவீக்ஷீவீt குன்றி விட்டது.
பெண்களின் உடல் பருமன்
ஆண்களை விட பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். மாறிவரும் வாழ்க்கை முறையே இதற்கு காரணம்.
வேலைக்குச் செல்லும் பெண்களில் 53% பேர் மதிய உணவு நேரத்தில் சாப்பாட்டைத் தவிர்த்து அனாவசிய உணவை (Junk Food) உண்கின்றனர். இதனால் உடல் பருமன், நீரிழிவு, இரத்தக் கொதிப்பால் அவதிப்படுகின்றனர். (Association Survey, 2012.)
75% சதவீதப் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். (National Institute of Nutrition Survey)
வளர் இளம் பருவத்தில் பெரும்பாலான பெண்கள் புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் குறைவாகவும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும், எண்ணெயில் பொறித்த உணவுகளையும் உண்கின்றனர்.
பெரும்பாலும் தற்போது மகப்பேறு என்பது 'சிசேரியன்' மூலம் என்ற நிலை உண்டாகி விட்டதால் கர்ப்ப காலத்திலும் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் Bed Rest எடுக்க வேண்டியதால் உடல் எடை எளிதாகக் கூடுகிறது.
மேலும் நமது பாட்டிமார்களுக்கு உணவு சமைப்பதே உடற்பயிற்சி ஆக இருந்தது.
அம்மி, ஆட்டு உரலில் அரைப்பதும், உலக்கையால் இடிப்பதும் உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருந்தன. இன்று அவை தொல்பொருட்கள் ஆகிவிட்டன.
Modular Kitchen உபகரணங்கள் உடல் உழைப்பை வெகுவாகக் குறைத்து விட்டன.
பெண்களை தொலைக்காட்சித் தொடர்கள் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர வைக்கின்றன.
ஓட்டலில் உணவு உண்ணும் பழக்கம் அதிகரித்து விட்டது. உணவுக்குப் பின் குளிர்பானங்கள் அருந்துதல் வாடிக்கையாகிப் போனது.
Soft Drinks எனப்படும் குளிர்பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் (Phosphoric Acid) எலும்புகளில் கால்சியம் சத்து சேர்வதைத் தடுக்கிறது.
உணவில் உள்ள சத்துக்கள் குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.
சுருக்கமாக,
நம் உயரத்தில் நூறை (Cm) கழித்தால் வரும் அளவு (Kg) தான் நம் உடல் எடை இருக்க வேண்டும்.
அதிக கொழுப்பு சர்க்கரை நோயையும், இதய நோயையும் வாசல் திறந்து வரவேற்கிறது.
சர்க்கரை நோய் (அ) நீரிழிவு நோய்
WHO  உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை உலகின் சர்க்கரை நோய் தலைமையிடமாக அறிவித்துள்ளது. (The week, Health, Nov.20, 2011)
நகரவாசிகளில் 5ல் 3  பேருக்கு நீரிழிவோ (அ) உயர் இரத்த அழுத்தமோ (அ) இரண்டுமோ உள்ளது.
உலகின் ஒவ்வொரு 4வது நீரிழிவு நோயாளி இந்தியன்தான்.
நீரிழிவு நோயை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தி விடும்.
இந்தியாவில் தற்போது 50 மில்லியன் ஆக உள்ள நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2025ல் 70 மில்லியன் ஆகும்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் (Stroke) பக்கவாத சிகிச்சைக்கு 2025ல் இந்தியர்கள் 334 மில்லியன்கள் செலவழிப்பார்கள். (Diabetic Atlas from International Diabetes Federation)
இந்தியாவில் பார்வை இழப்புக்கு முக்கியக் காரணம் நீரிழிவு நோய்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை விட பக்கவாதம் வரும் வாய்ப்பு 2%, மாரடைப்பு வரும் வாய்ப்பு 4%, சிறுநீரக செயலிழப்பு வரும் வாய்ப்பு 17% அதிகம்.
இதய நோய்க்கு வழிகோலும் முக்கியக் காரணி நீரிழிவு நோய்.
நீரிழிவு நோயாளிகளின் உடலில் Free Radicals எனப்படும் சுதந்திர அயனிகள் அதிக அளவு உண்டாகி இதயத்தைப் பாதிக்கின்றன.
Diabetic Neuropathy  என்னும் நிலையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு (மதமதப்பு - Numbness) மரத்துப் போதல் ஏற்படுகிறது. இந்த நரம்புகள் வலியை மூளைக்கு உணர்த்துவதில்லை.
சர்க்கரை நோயாளிகளின் இதய இரத்த நாளங்களில் சிறு அடைப்பு ஏற்பட்டாலும் மற்றவர்களைப் போல் அதன் வலியை அவர்களால் உணர முடிவதில்லை. (Atherosclerosis in coronary Arteries).
வளர்சிதை மாற்றத்தில் அதிகளவு தோன்றும் LDL, VLDL என்ற கெட்ட கொழுப்புகள் இதய ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்புக்கு வழி கோலுகின்றன.
நீரிழிவு ஒரு நோயல்ல. இன்சுலின் என்ற நிணநீர் குறைபட்டால் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கிறது. Diabetic - Retinopathy, Nephropathy, Dermatopathy என்று பட்டியல் நீளுகிறது.
இந்தியா உலகின் சர்க்கரை நோய் தலைமையகம் ஆகக் காரணங்கள்:
1) மரபியல் காரணங்கள் : உலகின் மற்ற இனத்தவரை விட இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம். (Genetic pre-disposition).
2) மேற்கத்தியர்களுடன் ஒப்பிடும் போது இந்தியர்களுக்கு ஒரே அளவு சர்க்கரைக் கட்டுப்பாட்டிற்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படுகிறது.
3) நகர மயமாதல்
4) மன அழுத்தம்
5) தவறான உணவுப் பழக்கங்கள்
6) போதிய விழிப்புணர்வு இல்லாமை : கிராமம், நகரம் என்ற வித்தியாசமின்றி நீரிழிவு பரவலாக இருந்தாலும் இன்னும் பலர், சர்க்கரை நோய் வந்தால் சோறுக்குப் பதில் சப்பாத்தி சாப்பிட்டால் போதும் என்கிற மனநிலையிலேயே உள்ளனர்.
நோய் கண்டறியப்பட்டாலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவிற்கேற்ப பலர் வைத்தியமோ, உடற்பயிற்சியோ, உணவுக் கட்டுப்பாடோ மேற்கொள்வதில்லை.
நண்பர்கள், உறவினர்கள் சொல்வதைக் கேட்டு அடிக்கடி டாக்டர்களையும் சிலர் சித்தா, ஹோமியோ என்று மருத்துவ முறைகளையும் அடிக்கடி மாற்றுகின்றனர்.
இரத்தத்தில் சர்க்கரை அளவுடன், HDL, LDL கொழுப்புக்களின் அளவு, சிறுநீரகச் செயல்பாடு, கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதில் பலருக்கு அக்கறை இல்லை.
இந்த அடிப்படைப் பரிசோத னைக்குப் பணம் செலவழிக்க படித்தவர்கள்  கூட தயங்குகின்றனர். (Para-medical staff & Well equipped Labs) மருத்துவத்துக்குத் துணை புரிய போதிய வல்லுநர்கள் இல்லை.
இதய நோய்
சர்க்கரை நோயைப் போல இதய நோய்களும் மேற்கத்தியர்களை விட 1015 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களைப் பாதிக்கிறது. (Early onset)
இதய நோயாளிகளில் பத்தில் ஒருவருக்கு மாரடைப்பு வர 'மோசமான உணவுப் பழக்கமே' காரணம்.
உலகிலேயே 30  40 வயதுக்குள் மாரடைப்பால் இறப்பவர்களில் அதிகம் இந்தியர்களே.
2020ல் இந்தியாவில் 40% மேற்பட்ட மரணங்களுக்கு இதய நோய்கள் காரணமாகும் (India Today, May 30, 2011)
இந்தியாவில் 45 மில்லியன் இதய நோயாளிகள் உள்ளனர். (உலகளவில் இது கிட்டத்தட்ட 60% ஆகும.)
இளவயது மரணங்களுக்குக் காரணமான 10 நோய்களில் முதலிடம் பிடிப்பது இதய நோய்களே!
இதய நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் காரணமான கொழுப்பைப் பற்றிச் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.
உடல் உழைப்பு குறைவதாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் நம் உடலில் சேரும் அதிகப்படியான மாவுச்சத்து கொழுப்பாக மாறுகிறது.
பொதுவாக நம் உடலில் சில அத்தியாவசியச் செயல்களுக்குக் கொழுப்பு அவசியம். இதன் அளவு அதிகரிக்கும் போது இரத்த நாளங்களில் படிந்து (Athero Sclerosis) மாரடைப்புக்கு வழி வகுக்கிறது.
நம் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவுகள் :
HDL  (நல்ல கொழுப்பு)
High Density Lipo protein : 100 mg/dl (குறைந்த அளவு)
VLDL (Very Low Density Lipo protein) : 40 mg/dl (அதிக அளவு)
Total Cholesterol = 200 mg/dl (அதிக அளவு)
Total Triglycerides : 160 mg/dl (அதிக அளவு)
Blood Urea = 15-40 mg/dl (அதிக அளவு)
Seram creatinine : 0.6-1.2 mg/d (அதிக அளவு)
நம் உணவில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஒமேகா 6 மற்றும் ஒமேகா3 எனப் பிரிக்கலாம்.
டால்டா போன்ற பூரித கொழுப்பு (Saturated Fat ) நிறைந்த பொருட்களிலும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் எண்ணைகளிலும் Transfat  என்ற பொருள் காணப் படுகிறது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் குக்கீஸ், பிஸ்கட்டுகள், கேக்குகள் பலவகை எண்ணெய்ப் பதார்த்தங்கள் உடலில் ஒமேகா 6 வகை கொழுப்பு அமிலங்களை அதிகமாக்கி மாரடைப்புக்குக் காரணமாகின்றன.
ஏன்! உள்ளூர் உளுந்த வடையைக் கூட அடிக்கடி அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. கடைகளில் ஒரே எண்ணெய் மீண்டும் மீண்டும் சமையலுக்கு உபயோகிக்கப்படுவதால் நச்சுத்தன்மை நிறைந்ததாகி விடுகிறது.
இதற்கு நேர்மாறாக கீழ்க்கண்ட ஒமேகா3 வகை கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்கின்றன.
1. d-Alpha Linoleic Acid (from flax seeds)
2. EPA - Eicoso Pentanoic Acid from fish.
3. DHA - Decoso Hexanolic Acid  from fish.
ஒமேகா3 வகை கொழுப்பு அமிலங்களின் நன்மைகள்:
1. மூட்டுக்களில் உயவுத் தன்மையை (Lubrication) அதிகரிக்கிறது. இந்த உயவுத்தன்மை குறைவதால் Arthritis, Spondylites போன்ற வியாதிகள் தோன்றி அதிக வலி உண்டாக்கு கின்றன.
2. குழந்தைகளில் (Neural Cell Connectivity) மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் உதவுகின்றன.
3. அல்சர் தோன்றுவதைத் தடுக்கிறது.
4. இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
5. இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் Stroke அபாயம் குறைகிறது.
6. தோலின் பளபளப்பைக் கூட்டு வதுடன், பல தோல் நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
எனவே பூரிதக் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து (PUFA) Poly Unsaturated Fatty Acid நிறைந்த (Sunflower) சூரியகாந்தி எண்ணெய் (Rice Bran) அரிசி தவிடு எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதாலும், உடற்பயிற்சியாலும், மன அழுத்தத்தைக் குறைப்பதாலும மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
Body Mass Index-WHO Standards
<20 - குறைவான எடை
2025 - ஆரோக்யமான எடை
25-30 அதிக எடை (Over weight)
>30 உடற் பருமன் (Obese)
WHO 2000ம் ஆண்டில் ஆசியர்களுக்கு அதிக எடை அள வீடை 23 ஆகக் குறைத்துள்ளது.
பெரும்பாலான இந்தியர்களின் BMI 25-30 என்ற அளவீட்டில் உள்ளது.
BMI 25க்கு குறைவாக உள்ளவர்களைவிட இவர்களுக்கு இதய நோய் வர 3 மடங்கும் சர்க்கரை நோய் வர 10 மடங்கும் வாய்ப்பு அதிகம்.
மேலும் குடல், கருப்பை, புற்று நோய் வரவும் வாய்ப்பு அதிகம். (Calle, 2003)

No comments:

Post a Comment