Saturday 25 January 2014

விருதுகளும் பரிசுகளும்!
Posted Date : 13:12 (17/12/2013)Last updated : 13:12 (17/12/2013)
நோபல் பரிசு
நோபல் பரிசை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1901-ல் நிறுவினார். இவர் 'டைனமைட்’ என்ற வெடி பொருளைக் கண்டுபிடித்தவர்.
அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாட்டு கமிட்டி முடிவு செய்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் நார்வே நாட்டு தலைநகரான ஆஸ்லோவில் வழங்கப் படுகிறது.
பிற நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதி ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 2009-ல் பெற்ற எலினார் ஆஸ்ட்ரம் என்ற அமெரிக்கப் பெண்மணியே பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
முதல் நோபல் பரிசு (1901) பெற்றவர்களில் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனன்டும் (அமைதி), எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ராண்ட்ஜனும் (இயற்பியல்) அடங்குவர்.
மேரி க்யூரி, இயற்பியல், வேதியியல் துறைகளில் இரு முறை நோபல் பரிசு பெற்றுள்ளார்.
அமைதிக்காகவும் வேதியியலுக்காகவும் இரு முறை நோபல் பரிசு பெற்றவர் லினஸ் பாலிங்.
இயற்பியலில் மட்டுமே இரு முறை நோபல் பெற்றவர் ஜான் பார்டீன்.
இதுவரை மொத்தம் எட்டு இந்தியர்கள் (வம்சாவழி இந்தியர்கள் உட்பட) நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
நோபல் பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத்தாகூர் -1913-ல் இலக்கியத்துக்காக.
இயற்பியலுக்காக சர் சி.வி.ராமனும்  (1930),  விண்வெளி இயற்பியலுக்காக அவர் மருமகன் சுப்ரமணியன் சந்திரசேகரும் (1983) நோபல் பரிசு பெற்றனர்.
மரபணுவை செயற்கை முறையில் தயாரித்ததற்காக ஹர்கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார் (1968).
அமைதிக்கான நோபல் பரிசை முதன்முதலாக 1979-ல் அன்னை தெரசா இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார்.
பொருளாதாரத்துக்காக நோபல் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை 1998-ல் அமர்தியா சென்னுக்கு கிடைத்தது.
வம்சாவழி இந்தியரான வி.எஸ்.நைபால் 2001-ல் இலக்கியத்\துக்காக நோபல் பரிசு பெற்றார்.
வம்சாவழி இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்றார்.
நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கக் காரணமாக இருந்த பியரி டி குபெர்டினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கணிதமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்1950-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1959-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
இலக்கியத்துக்காகத் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற மறுத்துவிட்ட எழுத்தாளர்கள்: போரிஸ் பாஸ்டர்நாக் (ரஷ்யா), ழான் பால் சார்த்தர் (ஃபிரான்ஸ்).
2009-ல் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி மறைந்த ஆண்டில் (1948), அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை..
மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டி பிராக்லி (இயற்பியல்).
நோபல் பரிசு பெற்ற முதல் மரபியல் விஞ்ஞானி T.H  மார்கன்
ஸ்வீடன் நாட்டில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிற Right Livelihood Award எனும் விருது 'மாற்று நோபல் பரிசு’ (Alternative Nobel Prize) என்று அழைக்கப்படுகிறது.
ராமன் மகசேசே விருது
'ஆசியாவின் நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் விருது - ராமன் மகசேசே விருது.
விமான விபத்து ஒன்றில் மறைந்த முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மகசேசே நினைவாக, 1958 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
ராமன் மகசேசே விருது ஆசியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த விருது, அரசு சேவை, பொதுச் சேவை, சமூகத் தலைமை, சர்வதேச உறவு, பத்திரிகையியல் - இலக்கியம்,- படைப்புக் கலை, எழும் தலைமை ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர், வினோபா பாவே (1958).
ஜே.எம்.லிங்டோ, கிரண் பேடி, டி.என்.சேஷன் போன்றோர் சிறந்த அரசாங்க சேவைக்காக ராமன் மகசேசே விருது பெற்றுள்ளனர்.
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், 'வெண்மை புரட்சி’க்குக் காரணமான வர்கீஸ் குரியன், இசைக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத் தலைவர் வி.சாந்தா போன்றோர் ராமன் மகசேசே விருது பெற்ற சில இந்தியர்கள்.
எழும் தலைமைக்காக அர்விந்த் கெஜ்ரிவால் 2006-லும், சமூகத் தலைமைக்காக பிரகாஷ் ஆம்டே மற்றும் மந்தாகினி ஆம்டே ஆகியோர் 2008-லும், தீப் ஜோஷி 2009-லும் ராமன் மகசேசே விருது பெற்றனர்.
2010-ல் நீலிமா மிஸ்ரா, ஹரிஷ் ஹண்டே இருவரும் பொது சேவைக்காக மகசேசே விருதுபெற்றனர்.
2013 ஆம் ஆண்டின் எழும் தலைமைக்கான மகசேசே விருதை நேபாளத்தைச் சேர்ந்த சக்தி சமுகா பெற்றுள்ளார்.
இந்திய சிவிலியன் விருதுகள்
இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது: பாரத ரத்னா.
1954-ல் முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்ற மூவர்: ராஜாஜி, சர் சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர். மூவரும் தமிழ்நாட்டினர்.
இறப்புக்குப் பின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் மனிதர் லால் பகதூர் சாஸ்திரி (1966).
இறப்புக்குப் பின் சுபாஷ் சந்திர போஸுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவருடைய குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
பாரத ரத்னா விருது பெற்ற மூன்று தமிழக முதல்வர்கள்: ராஜாஜி (1954), காமராஜர் (1976) மற்றும் எம்.ஜி.ஆர். (1988).
எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்பிரமணியம், அப்துல் கலாம் ஆகியோர் 1998-ல் பாரத ரத்னா விருது பெற்றனர். மூவரும் தமிழ்நாட்டினர்.
பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ - இதுவே இந்திய சிவிலியன் விருதுகளின் சரியான வரிசை முறை.
பாரத ரத்னா விருது பெற்ற இரு வெளிநாட்டவர்கள்: கான் அப்துல் கஃபார்கான் (பாகிஸ்தான், 1987), நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா, 1990).
பாரத் ரத்னா (1992), பத்ம விபூஷண் (1976), பத்ம பூஷண் (1965), பத்ம ஸ்ரீ (1958) ஆகிய நான்கு விருதுகளையும் பெற்ற முதல் இந்தியர்: சத்யஜித் ரே.
2008-ல் பாரத ரத்னா விருது பெற்றவர்: பண்டிட் பீம்சன் ஜோஷி.
2014 ஆம் ஆண்டுக்கான பாரதரத்னா,  விஞ்ஞானி சி.ழி.ஸி. ராவ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் பத்மஸ்ரீ பெற்றவர்: விஸ்வநாதன் ஆனந்த்.
பத்மஸ்ரீ பெற்ற முதல் திரைப்பட நடிகை: நர்கீஸ் தத்.
இந்திய ராணுவ விருதுகள்
இந்திய ராணுவ விருதுகளில் மிக உயர்ந்தது: பரம்வீர் சக்ரா.
போரில் வீர சாகசம் நிகழ்த்தும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அமைதி காலங்களில் செய்யப்படும் சாகசங்களுக்கான ராணுவ விருதுகளின் வரிசை: அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சூரிய சக்ரா.
வீர சாகசம் புரியும் சிறுமிக்கு 'கீதா சோப்ரா’ விருதும், வீர சாகசம் புரியும் சிறுவனுக்கு 'சஞ்சய் சோப்ரா' விருதும் வழங்கப்படுகின்றன.
இந்திய விளையாட்டு விருதுகள்
இந்தியாவில் விளையாட்டுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது: ராஜீவ் காந்தி கேல் ரத்னா.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர்: விஸ்வநாதன் ஆனந்த் (1991-92).
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
அர்ஜுனா விருது 1961 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
வாழ்நாள் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப் படுகிறது.
சாகச விளையாட்டு வீரர்களுக்கு டென்சிங் நார்கே விருது வழங்கப்படுகிறது.
சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யர் விருது வழங்கப் படுகிறது.
2009-10-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை சைனா நேகால் பெற்றார்.
2013ம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது துப்பாக்கி சுடுதல் வீரரான ரஞ்சன்சோதி அவர்களுக்கு வழங்கப்பட்டது
  தமிழ் மொழி ஆய்வு  விருதுகள்
சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு மத்திய அரசால் தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது ஆகியவை வழங்கப்படுகின்றன. 2009- 10ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது ஜராவதம் மகாதேவன் அவர்களுக்கும் 2010-2011 ம்ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழண்ணல் இராம. பெரிய கருப்பண் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
'கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது’ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
முதல், 'கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது’ உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் (2010) இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
'கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது’ பெற்ற முதல் அறிஞர் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பார்போலா.
சிறந்த தமிழ் மென்பொரு¬ள் உருவாக்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசு கணியன் பூங்குன்றனார் விருது வழங்குகிறது.
2013ம் ஆண்டில்தமிழக அறிஞர்களுக்கான தமிழக அரசின் பல்வேறு விருதுகளை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். அய்யன் திருவள்ளுவர் விருது டாக்டர் ஆர்.முருகனுக்கும் (சேயோன்), தந்தை பெரியார் விருது டாக்டர் கோ.சமரசத்துக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது  தா.பாண்டியனுக்கும், பேரறிஞர் அண்ணா விருது கே.ஆர்.பி.மணிமொழியனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது சிங்காரவடிவேலுக்கும், மகாகவி பாரதியார் விருது கு.ராமமூர்த்திக்கும், பாரதிதாசன் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பிரேமா நந்தகுமாருக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது நா.ராசகோபாலனுக்கும் (மலையமான்) வழங்கப்பட்டது.
புக்கர் பரிசு
இலக்கியத்துக்கான சிறந்த பரிசுகளில் முக்கியமானது: புக்கர் பரிசு.
இது காமன்வெல்த் நாடுகள் மற்றும் அயர்லாந்து நாட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
புக்கர் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர்கள்: சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் மற்றும் கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா.
புக்கர் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்: வி.எஸ்.நைபால்.
வி.எஸ்.நைபால்,  In a Free State என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார் (1971).
Midnight’s Children என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றவர்: சல்மான் ருஷ்டி (1981).
அருந்ததி ராய்க்கு God of Small Things  என்ற நூலுக்காக இந்தப் பரிசு கிடைத்தது (1997).
கிரண் தேசாய், Inheritance of Loss  என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார் (2006).
அரவிந்த் அடிகா, White Tiger என்ற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார் (2008).
2013 ஆம் ஆண்டுக்கான மேன் புக்கர் விருதை The Luminaries என்ற நாவல் எழுதிய நியூசிலாந்து எழுத்தாளர் எலினார் காட்டான் பெற்றார்.
ஞானபீட விருது
இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருது: ஞானபீட விருது.
ஞானபீட விருது முதன்முதலாக 1965-ல் மலையாள எழுத்தாளரான சங்கர குரூப்புக்கு 'ஓடக்குழல்’ நூலுக்காக வழங்கப்பட்டது.
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்: அகிலன் (1975-ல் 'சித்திரப் பாவை’ நாவலுக்காக).
அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி எழுத்தாளருக்கு மட்டும் ஞானபீட விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
1982 முதல் ஞானபீட விருது ஒரு குறிப்பிட்ட படைப்புக்காக என்றில்லாமல், இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் எழுத்தாளரின் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.
தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் 2002-ல் ஞானபீட விருது பெற்றார்.
2012ம் ஆண்டுக்கான ஞான பீட விருது பெற்றவர் தெலுங்கு எழுத்தாளர் ரவூரி பரத்வாஜா.
சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளோடு ராஜஸ்தானி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து 24 இந்திய எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
முதன்முதலாக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழர்: ரா.பி.சேதுப்பிள்ளை (தமிழின்பம் என்ற நூலுக்காக, 1955-ல்).
கல்கி - அலை ஓசை, நாவல் (1956).
மு.வரதராசனார் - அகல் விளக்கு, நாவல் (1961).
பாரதிதாசன் - பிசிராந்தையார், நாடகம் (1969).
வல்லிக்கண்ணன் - புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும், உரைநடை (1978).
கண்ணதாசன் - சேரமான் காதலி, நாவல் (1980).
அப்துல் ரஹ்மான் - ஆலாபனை, கவிதை (1999).
வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், நாவல் (2003)
ஈரோடு தமிழன்பன் - வணக்கம் வள்வளு, கவிதை (2004).
திலகவதி - கல்மரம், நாவல் (2005).
மு.மேத்தா- ஆகாயத்துக்கு அடுத்த வீடு, கவிதை (2006).
நீல பத்மநாபன் - இலையுதிர்காலம், நாவல் (2007).
மேலாண்மை பொன்னுசாமி - மின்சாரப்பூ, சிறுகதை (2008).
கையப்பம் - புவியரசு, கவிதை (2009).
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் நாவல் (2010).
காவல் கோட்டம் - சு.வெங்கடேசன் (2011).
தோல் (நாவல்) டி. செல்வராஜ் (2012)
பிற இலக்கிய விருதுகள்
சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ராஜராஜன் விருது வழங்குகிறது.
தென்பாண்டி சிங்கம் என்ற புதினத்துக்காக கலைஞர் கருணாநிதி ராஜராஜன் விருது பெற்றார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சுந்தர காண்டம் நாவலுக்காக ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
சிறந்த இலக்கியத்துக்கு பிர்லா ஃபவுண்டேஷன் வழங்கும் விருது: சரஸ்வதி சம்மான்.
சரஸ்வதி சம்மான் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:இந்திரா பார்த்தசாரதி (ராமானுஜர், நாடகம்) மற்றும் ஏ.ஏ.மணவாளன் (இராம கதையும் இராமாயணங்களும்.)
சிறந்த பெண்எழுத்தாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இலக்கிய விருது ஆரஞ்சு பரிசு.
பத்திரிகைத் துறை
விருது
பத்திரிகைத் துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் உயர்ந்த விருது: புலிட்சர்.
இந்திய வம்சாவளியினரான ஜும்பா லஹரி, மிஸீtமீக்ஷீஜீக்ஷீமீtமீக்ஷீ ஷீயீ விணீறீணீபீவீமீs என்ற நூலுக்காக புலிட்சர் விருது பெற்றுள்ளார்.
இந்தியாவில் பத்திரிகைத் துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது: பி.டி.கோயங்கா விருது.
சர்வதேசத் திரைப்பட விருதுகள்
இந்தியாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது: Golden peacock award.

ஃபிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது: Golden palm Award.

இத்தாலியில் நடைபெறும் வெனிஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது: Golden Lion Award.

ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது: Golden Bear Award.

ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பின் பெயர்:  Academy of Motion Pictures Arts and Sciences.

ஆஸ்கர் விருதுக்கான சிலையை வடிவமைத்த கலை இயக்குநர்: செட்ரிக் கிப்பன்ஸ். இவர் 11 முறை ஆஸ்கர் பெற்றுள்ளார்.
ஆஸ்கர் சிலையின் உயரம் 13.5 அங்குலம்.
இதுவரை அதிக (தலா 11) ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள்: பென் ஹர், டைட்டானிக், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்.
ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தம்பதியினர்: விவியன் லேய் - லாரன்ஸ் ஆலிவர் (1951).
ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்: பானு அத்தையா.
'காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்: பானு அத்தையா.
இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்றார்.
இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்: ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் தயாரிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது 1957 முதல் வழங்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியத் திரைப்படம் எதுவும் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை.
இதுவரை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய திரைப்படங்கள்: மதர் இண்டியா, சலாம் பாம்பே, லகான்.
ஆண்டுதோறும் ஓர் இந்தியத் திரைப்படம் அதிகாரபூர்வமாக இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகிறது.
இதுவரை இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்: தெய்வமகன், நாயகன், பேசும் படம், அஞ்சலி, தேவர்மகன், இந்தியன், ஜீன்ஸ், ஹே ராம்.
2013ல் வழங்கப்பட்ட 85ஆவது ஆக்ஸர் விருதுகளில் '‘Argo’ ’ சிறந்த திரைப்படத்துக்கான விருதையும்,  Life of Pi  படத்தை இயக்கிய லீ சிறந்த இயக்குநருக்கான விருதையும், டேனிஸ்டே லெவிஸ் சிறந்த நடிகருக்கான விருதையும், ஜெனிபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர்.
Lincoln  படத்தில் ஆபிரகாம் லிங்கனாக நடித்ததற்காக நடிகர் லெவிஸ் இந்த விருதைப் பெற்றார்.
நடிகை ஜெனிபர் லாரன்ஸ் Silver Linings Play book  என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படடது.
இந்தியத் திரைப்பட விருதுகள்
இந்தியாவில் சினிமாவுக்கான உயர்ந்த விருது: தாதா சாஹிப் பால்கே விருது.
முதன்முதலாக தாதா சாஹிப் பால்கே விருதைப் பெற்றவர்: தேவிகா ராணி (1969).
தாதா சாஹிப் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்: சிவாஜி கணேசன் (1996).
திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் 2010 ஆம் ஆண்டு தாதா சாஹிப் பால்கே விருது பெற்றார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாரத் விருது என்றும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஊர்வசி என்றும் முன்பு அழைக்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: எம்.ஜி.ஆர்., கமலஹாசன், விக்ரம், பிரகாஷ்ராஜ், தனுஷ்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்: எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். 'ரிக்ஷாக்காரன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் (1971).
கமலஹாசன் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.
கமலஹாசன் சிறந்த குழந்தை  நட்சத்திரத்துக்கான தேசிய விருதை 'களத்தூர் கண்ணம்மா’ படத்துக்காக பெற்றார்.
கமலஹாசன் 'மூன்றாம் பிறை’, 'நாயகன்’, 'இந்தியன்’ படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
நடிகர் விக்ரம், 'பிதாமகன்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் (2003).
நடிகர் பிரகாஷ்ராஜ், 'காஞ்சிவரம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் (2008).
நடிகர் தனுஷ், 'ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் (2010).
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகைகள்: லட்சுமி, சுகாசினி, பிரியாமணி, சரண்யா பொன் வண்ணன்.
லட்சுமி, 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
சுகாசினி, 'சிந்து பைரவி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
பிரியாமணி, 'பருத்திவீரன்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
சரண்யா பொன்வண்ணன், 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இளையராஜா மூன்று முறை பெற்றுள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் வைரமுத்து.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது - நர்கீஸ் தத் விருது.
இயக்குநர் மணிரத்னத்தின் 'ரோஜா’, 'பாம்பே’ படங்கள் 'நர்கீஸ் தத் விருது’ பெற்றுள்ளன.
புதுமுக இயக்குநரின் முதல் சிறந்த படத்துக்கான தேசிய விருது: 'இந்திரா காந்தி விருது’.
'மோக முள்’ படத்துக்காக 'இந்திரா காந்தி’ விருதைப் பெற்றவர்  ஞானராஜசேகரன்.
சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்: 'மலைக்கள்ளன்’.
சிறந்த படத்துக்கான 'தங்கத் தாமரை’ விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்: 'மறுபக்கம்’.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குநர்கள்: அகத்தியன்    (காதல் கோட்டை), பாலா (நான் கடவுள்), வெற்றிமாறன் (ஆடுகளம்).
60வது தேசிய விருதுகளில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை (விஸ்வரூபம்) திரைப்படத்துக்கு நடனம் அமைத்த கதக் நடன கலைஞர் பிர்ஜூ மஹராஜ் பெற்றார்.   சிறந்த ஆடை அலங்காரத்துக் கான விருதை (பரதேசி) திரைப்படமும் சிறந்த ஒப்பனைக்கான விருதை வழக்கு எண் 18/9 திரைப்படமும்  பெற்றன.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வாழ்நாள் சாதனையாளர் விருது ஏற்படுத்தப்பட்டு, அந்த விருது முதன் முதலாக ஹிந்தி நடிகை வாஹிதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வழங்கும் கலைத் துறை வித்தகர் விருதுகள்
சிறந்த நடிகருக்கு எம்.ஜி.ஆர். விருது.
சிறந்த வசனகர்த்தாவுக்கு அறிஞர் அண்ணா விருது.
சிறந்த பாடலாசிரியருக்கு கவிஞர் கண்ணதாசன் விருது.
சிறந்த இயக்குநருக்கு ராஜா சாண்டோ விருது.
பிற விருதுகள்
அறிவியல் துறை சேவைக்கு UNESCO அமைப்பு வழங்கும் விருது: கலிங்கா.
CSIR , சிறந்த விஞ்ஞானிகளுக்கு 'பட்நாகர் விருது’ வழங்குகிறது.
'போர்லாக் விருது’ விவசாயத் துறை சாதனை விஞானி களுக்கு வழங்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வரும் சிறந்த மருத்துவருமான B.C.ராய் நினைவாக, சிறந்த மருத்துவர்களுக்கு 'ஙி.சி.ராய் விருது’ வழங்கப்படுகிறது.
இசைத் துறைக்கான உயர்ந்த விருதான கிராமி விருதுகளை அமெரிக்கா வழங்குகிறது.
கிராமி விருது பெற்றுள்ள இந்தியர்கள்: பண்டிட் ரவிசங்கர், விக்கு விநாயக் ராம், விஸ்வமோகன் பட், ஏ.ஆர்.ரஹ்மான்.
அமைதிக்காக இந்தியா வழங்கும் உயர்ந்த விருது: காந்தி அமைதிப் பரிசு.
ஜவஹர்லால் நேரு விருது, பன்னாட்டு புரிதிறனுக்காக(International Understanding)  ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
ஜி.பி.பந்த் விருது, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
லால் பகதூர் சாஸ்திரி விருது, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
சிறந்த சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களுக்கு லலித் கலா அகாடமி ஆண்டுதோறும் விருது வழங்குகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைமாமணி விருதுகளை வழங்குகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பாரதி விருது, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகிய விருதுகளையும் வழங்குகிறது.
சிறந்த திரைப்படங்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசு வழங்குவது: 'தங்க நந்தி விருது’(Golden Nandi Award).

No comments:

Post a Comment