Thursday 31 October 2013

தமிழ் எழுத்துகளின் வகைகள்

எழுத்துகளின் வகைகள்:

முதலெழுத்துகள்:

மொழியில் முதலாவதாக வரக்கூடியதும் தனித்து இயங்கக்கூடியதும் ஆகிய எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம். அதாவது அரிச்சுவடியில் இருக்கிற அ முதல் ஔ வரை உள்ள 12 உயிரெழுத்துகளும் எழுத்துகளும் நெட்டு வரிசையில் க முதல் ன வரை உள்ள 18 மெய்யெழுத்துகளும் கூடிய மொத்தம் 30 எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம்.

சார்பெழுத்துகள்:

சார்பெழுத்துகள் என்பது முதலெழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளாகும். இச் சார்பெழுத்துகள் தனித்து இயங்காது. எனவே தான் இவற்றை சார்பெழுத்துகள் என்கிறோம். அதாவது முதலெழுத்துகளைச் சார்ந்து பின்தொடர்ந்து வருவதால் இவற்றை சார்ப்பெழுத்துகள் என்கிறோம்.

உயிரெழுத்துகள்:

உயிரெழுத்துக்கள் என்பது மொழிக்கு உயிராய் இருப்பது. தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் 12 என்பதை முன்னரே பார்த்தோம். அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துகள் உயிரெழுத்துகள் என அழைக்கப்படுகிறது.

மெய்யெழுத்துகள்:

தமிழ் மொழிக்கு மெய்யாக இருப்பது மெய்யெழுத்துகள். 'மெய்' என்றால் உடம்பு என பொருள்படும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பவை மெய்யெழுத்துகளாகும்.

தமிழ்நாடு

1. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

2. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

3. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

4. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

5. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

6. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

7. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

8. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

9. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

10. கோயில் நகரம் – மதுரை

11. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

12. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

13. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்

இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா

1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

மிக உயர்ந்த கெளரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது

மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது

மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது