Saturday 25 January 2014

கணினி மென்பொருள்கள் (Computer Softwares)

கணினி மென்பொருள்கள் (Computer Softwares)
Posted Date : 14:12 (16/12/2013)Last updated : 17:12 (16/12/2013)
முனைவர் த.வேல்முருகன்
நாம் வாழ்கின்ற கணினி உலகில் கணினியின் தாக்கம் மிகமிக அதிகம் என்பதை அனைவரும் அறிவோம். அதில் பயன்படுத்தப்படுகின்ற மென்பொருள்கள் (Softwares). பொதுவாக இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். அவை அமைப்பு மென்பொருள்களை (System Softwares) மற்றும் பயன்பாட்டு மென்பொருள்கள் (Application Softwares). 1000-க்கும் மேற்பட்ட அமைப்பு மென்பொருள்களும், 2000-க்கும் அதிகமான பயன்பாட்டு மென்பொருள்களும் உள்ளன.
நாம் பயன்படுத்துகின்ற இயங்கு தளங்கள் (Operating Systems) மற்றும் மொழிமாற்றிகள் (Compilers) முதலாவது வகையையும், கணினி மொழிகள் (languages) இரண்டாவது வகையையும் சேர்ந்தவையே.
கணினி மொழிகள் BASIC (Beginners All purpose Symbolic Instrction Code)
இம்மொழியை ஜான் கெம்னே மற்றும் தாமஸ் குட்ஸ் ஆகிய இருவரும் உருவாக்கினர். இம்மொழி அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைப் பயிலாத மற்ற துறை மாணவர்களுக்காக, எளிதாகக் கணினியைப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
FORTRAN (FORmula TRANslation)
முதன் முதலில் முழுமையாக உருவாக்கப்பட்ட கணினி மொழி. John Backus என்பவர் இம்மொழியை வடிவமைத்தார். இம்மொழி அறிவியல் சார்ந்த சூத்திரங்களுக்கு (Formulae) விடை காண்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதன் வகைகளில் Fortran-77 மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
COBOL (COmmon Business Oriented Language)
Conference on Data Systems Language (CODASYL) என்ற அமைப்பு உருவாக்கியது. இது அரசாங்கம் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்ந்த திட்டம் (Program) எழுதுவதற்காக அதிகம் பயன்படுகிறது. Mainframe - கணினியில் ஒரு தன்னிகரில்லா மிகச் சிறந்த மொழி.
PASCAL 
பாஸ்கலைக் கண்டுபிடித்தது நிக்கோலஸ் ரித் என்பவர். இதனை முதல் Structured Language என்றும் கூறுவர். பிரஞ்சு கணிதமேதை Blaise Pascal என்பவரின் நினைவாக அவரது பெயரில் இம்மொழி உள்ளது. இம்மொழியின் முதல் வகை 1970லும், 1985லும் வெளியிடப் பட்டது.
ALGOL (ALGOrithmic Language)
இம்மொழி படிமுறை தீர்வு (Algorithm) வகையைச் சார்ந்த முதல் தலைமுறை மொழியாகும். Backus Normal Form-முறையில் உருவாக்கப்பட்டது. இதன் முதல் வகையை Niklaus Wirth என்பவர் வெளியிட்டார். ALGOL-68 என்பது இதன் தற்கால வகையாகும்.
Lisp (LISt Processing)
செயற்கை நுண்ணறிவு திறனின் (Artificial Intelligence) தந்தை என்று அழைக்கப்படும் John McCarthy இம்மொழியை உருவாக்கினார். இம்மொழியின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழா 2008-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. செயற்கை அறிவை கணினியில் உருவாக்குவதற்காக இம்மொழி முதலில் பயன்பட்டது. எனவே இதனை Domain Specific மொழி என்றும் கூறுவர்.
BCPL (Basic Combined Programming Language)
Martin Richards என்பவரால் 1966-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொழிமாற்றிகளை (Compilers) உருவாக்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இம்மொழி யிலிருந்தே B, C, C++ போன்ற பல மொழிகள் உருவாயின. அதிகமாக பகுதி இயங்குதளங்களை (Partial Operating Systems) உருவாக்க இம்மொழி பயன்பட்டது.
B Language
BCPL-ன் முதல் எழுத்தை வைத்து உருவாக்கப்பட்டது. 1969-ஆம் ஆண்டு Ken Thomson என்பவரால் Bell பயிற்சிக் கூடத்தில் உருவாக்கி வெளியிடப்பட்டது. பிற்காலத்தில் இம்மொழியின் நம்பகத் தன்மை குறைந்து காணப்பட்டதால் C மொழி இதிலிருந்து உருவாக்கப்பட்டது.
C Language
BCPL-ன் இரண்டாவது எழுத்தைக் கொண்டு Dennis Rich என்பவரால் உருவாக்கப்பட்ட இம்மொழி தற்காலத்தில் அதிகமாகப் பயன்படும் ஒரு மிகச் சிறந்த மேல்நிலை (High Level) மொழியாகும்.
தற்போது பயன்படுத்தப்படுகின்ற இயங்கு தளங்களையும் கணினி மொழிகளையும் உருவாக்கிய பெருமை இம்மொழியையே சாரும். இம்மொழி AT & T Bell Lab-ல் 1969-க்கும் 1973-க்கும் இடைப்பட்ட காலத்தலி உருவானது.
C++
இம்மொழி C with classes என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடுத்தர வகை (Intermediate) மொழியை 1979-ம் ஆண்டு Bjarhe Stroustrup என்பவர் Bell நிறுவனத்தில் உருவாக்கினார். இம்மொழியில் எழுதப்படுகின்ற திட்டங்கள் மூலம் வன்பொருள்கள் (Hardwares), இயங்கு தளங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், உருவாக்கவும் முடியும். Video Games போன்ற பொழுதுபோக்கு மென்பொருள்களையும் இம்மொழி மூலம் மிகவும் எளிதாக உருவாக்க முடியும். ஒருசில வன்பொருள்களை வடிவமைக்கவும் இந்த மொழி பயன்படுகிறது.
C# - C Sharp
பன்முகத் திறன் கொண்ட (Multi-Paradigm)  சி மொழியை அடிப் படையாக வைத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி அனைத்து வகைத் திட்டங்களையும் இம்மொழிமூலம் எழுத முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தினை மேம்படுத்துவதற்கு இம்மொழி மிகவும் பயன்படுகிறது. தற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Windows-7, Windows-8, Windows Server 2012 போன்றவை இம்மொழியை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டவை.
Visual Studio 2012 மற்றும் .NET அமைப்பில் C# மொழி உருவாக்கப் பட்டு மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. இம்மொழியை உருவாக்கியவர் Anders Hejlsberg ஆவார். உலக அளவில் மிகவும் அதிகம் மனிதர்களால் பயன்படுத் தப்படும் முதல் 10 மொழிகளில் இம்மொழியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
JAVA
1995-ஆம் ஆண்டு James Gosling என்பவரால் Sun micro system நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட இம்மொழியில் எழுதப்பட்ட திட்டங்களை அனைத்து வகைக் கணினிகளிலும் நேரடியாக நாம் பயன்படுத்தலாம்.
இம்மொழி பொது பயன்பாட்டுடன் கூடிய பொருள் சார்ந்த (Object oriented) திட்ட மொழியாகும். முதலில் இம்மொழி தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிகளை தெரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. C மற்றும் C++ மொழிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. Java மொழியில்தான் byte code compiler அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மொழி யின் மொழிமாற்றி (Compiler) திறந்த மூல மென்பொருள் வகையைச் (Open Source Software) சார்ந்ததான காரணத்தினால் நாம் எழுதுகின்ற திட்டங்களின் மூலம் மொழித் தன்மையினை மாற்றி அமைக்கவும், திருத்தி அமைக்கவும் முடியும். எனவே இம்மொழி GNU-General Public License வகையைச் சேர்ந்தது. இணைய தளங்கள் (Web sites) மற்றும் இணையப் பக்கங்களை (Web pages) மிகவும் எளிதாக இம்மொழியினைப் பயன்படுத்தி வடிவமைக்கலாம்.
Python
பல்நோக்கு, பொதுவகையைச சார்ந்த திறந்த மூலநிலை மொழியான இது. 1991-ஆம் ஆண்டு Guido Van Rossum என்பவரால் உருவாக் கப்பட்டது. இம்மொழியின் திட்டங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் திறன் கொண்டவை. இது ஒரு வகை படிவ நிரலாக்க மொழி (Scripting Language) ஆகும். இம்மொழி முறை நிரல் (Functional Programming) மொழி, பொருள் சார்ந்த மொழி (Aspect-oritented) எனவும் அழைக்கப்படுகிறது. அழகான மொழி என்றும் எளிமையான மொழி எனவும் அழைக்கப்படும் இந்த மொழியின் புதிய வரவு 15 மே 2013-ல் வெளியிடப்பட்டது. கணித சம்பந்தப்பட்ட ஒருசில துல்லியமான கணிப்புகளை மிக எளிதாகவும், நாம் எதிர்பார்க்கிற முறையிலும் செய்து முடிக்கும் வல்லமை பொருந்திய மிகச் சிறந்த மொழி.
PERL (Practical Extraction and Report Language)
Interpreted, dynamic வகையைச் சார்ந்த இந்த மேல்நிலை மொழியை 1987-ஆம் ஆண்டு Larry Wall என்பவர் உருவாக்கினார். இம்மொழியின் சிறப்பு மிக்க வகை Aug-12, 2013-ல் வெளியானது. ஒரே நேரத்தில் பலர் ஒர் இயங்குதளத்தில் தொடர்பு கொள்ளக் கூடிய Unix Scripting வகையைச் சார்ந்தது. கணினி கட்டுப்பாடு, வலைத்தள திட்டம் (Network Programming), வரைகலை திட்டம் (Graphics Programming), உயிர் தகவலியல் (Bio informatics) போன்ற துறைகளில் இம்மொழியின் தாக்கம் மிகவும் அதிகம். UNIX-இன் இயங்குதள Shell Programming மற்றும் Unix Scripting பயன்பாடுகளை உள்ளடக்கியது.
 Ruby
1993-ல் Yukihiro matsumoto என்னும் ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட பொதுத்தன்மையுள்ள, object-oriented வகையிலான எளிதான Syntax கொண்ட மொழி இது. இது சி-மொழியில் எழுதப்பட்ட, நேரடியாக Machine Code-ஐ உருவாக்கக் கூடிய ஒரு Interpreted மொழியாகும். இம்மொழியில் எழுதப்படும் திட்டங்கள் (Programs) ஆங்கில மொழியைப் போன்றே மிகவும் எளிதாக இருக்கும். June 27, 2013-ல் இம்மாழியின் புதிய வரவு வெளியிடப்பட்டது. இது Perl மற்றும் Smalltalk போன்ற மொழிகளின் தன்மைகளை உட்கொண்டது.
PHP (Personal Home Page (or) Hypertext Processor)
1995-ல் Rasmus Lerdort என்பவரின் கைவண்ணத்தில் உருவான இம்மொழி, தற்காலத்தில் 244 மில்லியன் இணைய தளங்களையும் (Websites), 2.1 மில்லியன் (Web Server)களையும் வடிவமைக்கப் பயன்பட்டுள்ளது. இணையதள உருவாக்கம் சார்ந்த வேலைவாய்ப்பு இம்மொழி கற்றவர்களுக்கு மிக அதிகம். June-2013-ல் இதன் புதிய வகை வெளியிடப்பட்டது. திறந்த மூல வகையைச் சார்ந்தது. அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடிய சிறந்த மொழி.
SQL (Structured Query Language)
தொடர்பு சார்ந்த தரவுதள மேலாண்மைக்கான (Relational Database Management System) பிரத்தியேக கட்டமைப்பு கொண்ட வினாமொழி இது. தரவுதளங்களை உருவாக்கி அதில் செய்திகளைப் புகுத்துவதற்கும் மாற்றங்களைச் செய்வதற்கும் தேவையற்ற செய்திகளை நீக்குவதற்கும் பயன்படும் இந்த மொழி 1974ல் உருவாக்கப்பட்டது. கோடிக்கணக்கான கோப்புகளை ஆராய்ந்து அதில் புதைந்துள்ள தகவல்களைக் காட்சிப்படுத்துவதற்கு இம்மொழி மிக அதிகமாக வணிக நிறுவனங்களில் கையாளப்படுகிறது. 2011-ல் இதன் கடைசி வரவு இருந்தது.
Visual Basic
உலகப் புகழ்பெற்ற மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இப்படைப்பு, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த நிரல் மொழி (event-driven programming language). இது BASIC மொழியிலிருந்து 1991-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் GUI (Graphical User Interface) எனப்படும் வரைகலை பயன்பாட்டுனர் முறை மூலம் மின்னணு உறுப்புகளை (Electronic devices) கையாள்வதற்குத் தேவைப்படும் சிறப்பம்சங்கள் உள்ளன. இம்மொழியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.msdn.microsoft.com/vbasic/ என்ற முகவரி உதவியாக இருக்கும்.
Java Script
1995ல் Brendan Eich என்பவரால் Netscape Communication நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஒரு படிவ வகை (Scripting) மொழி. இம்மொழியைப் பயன்படுத்தி நாம் வலைத்தளக் காட்சிகளை மாற்றி அமைக்கலாம். இம்மொழியின் மூலம், திட்டம் எழுதுகிறவர்கள் அவரவர் விருப்பமான, மனிதர்கள் பேசக் கூடிய மொழிகளில் இணைய தளங்களை உருவாக்கிக் கொள்ளலாம். எனவே இம்மொழி பயன்பாட்டுநர் மொழி என்றழைக் கப்படுகிறது. March 22, 2011-ல் இம்மொழியின் கடைசி வரவு உருவானது.
VB Script
Visual Basic Script என்பதன் சுருக்கம். இம்மொழி Visual Basic மொழியிலிருந்து உருவானது. 'light weight language'  முறையில் 1996-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இம்மொழி மைக்ரோசாப்டின் Windows-98 இயங்குதளத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து இயங்குதளங்களிலும் Windows இயங்குதளத்தின் உள்ளேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Windows இயங்குதளத்தில் உள்ள வலைத்தள விரிவாக்கி (Internet Explorer) போன்ற மிகவும் முக்கியமான படிவ முறைகள் இம்மொழியைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.NET Frame Work
2002-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது இந்த .Net வரைவுரு. இந்த வரைவுரு அமைப்பைப் பயன்படுத்தி ஒரு கணினி மொழியில் எழுதப்பட்ட திட்டங்களை மற்ற மொழிகளில் மாற்றம் செய்யலாம். மேலும் ஒருசில இயங்குதளங்களில் உருவாக்கப்பட்ட திட்டங்களை மற்ற வகை இயங்கு தளங்களிலும் இந்த அமைப்பின் மூலம் மாற்றி அமைக்க இயலும். இவ்வகை மென்பொருளில் VB.Net, ASP.Net, ADO.Net போன்ற பல வகைகள் உள்ளன. இவ்வகையில் Visual Studio.NET என்ற மென்பொருள் அதிக பயன்பாட்டில் உள்ளது.
Microsoft Office
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இவ்வகை மென்பொருள் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக்கின்டோஷ் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அலுவலக மென்பொருளாகும். 1990-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி இந்த மென்பொருள் முதலாவதாக வெளியிடப்பட்டது. இதன் கடைசி வரவு Oct-t8, 2013-ல் வெளிவந்தது.
ஆங்கிலம் மட்டுமல்லாமல் 35 மொழிகளில் இவ்வகை மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. C++ மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
இதில் Word, Excel, Outlook, OneNote, Powerpoint, Infopath Designer, Infopath Filter, Publisher, Access போன்ற பயன்பாடு மிக்க மென்பொருள்கள் பல உள்ளன.
மேலும், MS Office Mobile என்ற மென்பொருள் கைபேசிகளுக்காக உருவாக்கப்பட்ட Android, iphone ñŸÁ‹ Windows phone போன்ற மென்பொருள்களையும் தன்னில் கொண்டுள்ளது மிகவும் குறிப்பிடத் தக்கது.
இதனை www.office.microsoft.com/en-us என்ற இணையதளத்தில் பதிவி றக்கம் செய்து பயன் படுத்தலாம்.
இயங்குதள மென்பொருள்கள் (Operating System Softwares)
பொதுவாக இரண்டு வகையான இயங்குதள மென்பொருள்கள் தற்காலத்தில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உரிமையாளர் வகை (Proprietary) மற்றும் திறந்தமூல (Open Source) வகை என்பனதான் அவை. முதல் வகையில் 592 இயங்குதளங்களும் அடுத்த வகையில் 611 இயங்குதளங்களும் உள்ளன. இவைகளில் இன்றியமையாத ஒருசில இயங்குதளங்களைப் பற்றிக் கீழே காண்போம்.
MS-DOS (Microsoft Disk Operating System)
இந்த இயங்குதளம் 1981-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் X86 வகையைச் சார்ந்த தனிநபர் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இவ்வியங்கு தளத்தின் மூலம் ஒரு கணினியோடு ஒருவர் மட்டுமே தொடர்பு கொண்டு திட்டங்களை வரைய முடியும். எனவே, இவ்வகை Single User OS என்று அழைக்கப்படுகிறது. தற்போது நாம் பயன்படுத்துகிற Windows OSஅனைத்தும் இந்த இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது என்றும் கூறலாம்.
Windows XP
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிடப்பட்டது. 'XP’ என்பது 'Experience’ என்பதைக் குறிக்கும். ஒரு நபர் பயன்பாட்டு இயங்குதளம். இதற்கு அடுத்ததாக Windows 2000, Windows ME போன்ற இயங்கு தளங்கள் Windows NT (New Technology)-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. இந்த முறையில் பல பரிமாணங்களைக் கொண்டு தற்கால Windows 7, Windows 8, Windows RT, Windows Phone 8, Windows Server 2012 ஆகிய இயங்குதளங்கள் பயனில் உள்ளன. இவ்வுலகில் அதிகமான நபர்கள் பயன்படுத்தும் இயங்குதளம் இதுவே ஆகும். இதன் எளிமையும் ஆற்றலுமே இதற்குக் காரண மாகும்.
UNIX (Unplexted Information and Computing Service)
இவ்வகை இயங்குதளம் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரு கணினியை ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடிய ஓர் இயங்குதளம் ஆகும்.
இது 1969-ஆம் ஆண்டு Ken Thompson என்பவரால் Bell நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இதனை யுனிக்ஸ் Shell மற்றும் யுனிக்கு கருனி (Kernel) என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
திட்டம் எழுதுபவர்கள் (Programmers) ஷெல் ஊடகக் கட்டளைகளை கணினிக்கு இடுவார்கள். அவற்றை யுனிக்ஸ் கருனி, கணினியின் வன்பொருட்களை (Hardwares) தகுந்தவாறு இயங்கி அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும்.
இந்த இயங்குதளம் C மொழியில் எழுதப்பட்டது. முதலில் PDP-1 தளத்தில் இயக்கப்பட்டது. பின்னர் ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் இயங்குமாறு இதனைப் மேம்படுத்தினர். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இந்த இயங்குதளம் மிகவும் பயனுள்ளதாக விளங்கு கிறது.
OS X (or) Mac OS X
இந்த இயங்குதளம் ஆப்பிள் நிறுவனத்தால் 2002-ல் உருவாக் கப்பட்டது. இது யுனிக்ஸ் வகை சார்ந்த வரைகலை தொடர்புடன் கூடிய (Graphical Interface) இயங்குதளம் ஆகும். Mac கணினிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. OS X-ல் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கி, தற்காலத்தில் iOS, iphone, Ipod Touch, ipad, Apple TV போன்றவை செயல்படுகின்றன. C, C++ மற்றும் Objective-C மொழிகளைப் பயன்படுத்தி இந்த இயங்குதளம் ஒருங்கே நிர்மாணிக்கப்பட்டது. இதன் கடைசி வரவு Oct-3, 2013இல் இருந்தது. கணினி அமைப்புகளுக்காக இவ்வகை இயங்குதளம் பயன்படுகிறது.
Linux - Unix  மற்றும் POSIX
வகை சார்ந்த, திறந்தமூல கட்டற்ற மென்பொருளாகும். கட்டற்ற மென்பொருள் (Free Software) என்பது எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாம் நம் விருப்பம் போல் நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறுவிநியோகம் செய்வதற்கு உகந்த மென்பொருள் இயங்குதளம் ஆகும். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 5-இல் இது வெளியானது. Richard Stallman என்பவர் இவ்வகை இயங்குதளத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தார். இத்தளம் Mainframe கணினி மற்றும் Super கணினி போன்றவைகட்கு மிகவும் உகந்ததாக உள்ளது. 500க்கும் மேற்பட்ட Super Computer-ல் இந்த இயங்குதளம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Linux பரவல்கள் (Distributions) எனப்படும் Debian, Ubuntu, Linux Mint, Fedora, மற்றும் Red Hat Linus ஆகியவற்றை தற்காலத்தில் மிகவும் அதிகமாக மனிதர்களால் பயன்படுத்து கின்றனர்.
Android OS
2005-ஆம் ஆண்டு Google நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. Linux வகை சார்ந்த இவ்வியங்குதளம், தொடு திரை (Touch screen) கைபேசி, நுண்ணறிபேசி (Smart Phone), குளிகை (Tablet Computers) ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட் டது.
திறந்தமூல வகையைச் சார்ந்த, தேவைக்கேற்ற மாற்றம் செய்யும் வசதி கொண்ட ஓர் நடமாடும் இயங்குதளம் ஆகும். JAVA மொழியில் உருவாக்கப்பட்டது.
மின்னணு படக் கருவி (Digital Camera), விளையாட்டுத் தளங்கள் (Games Consoles) போன்றவை இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. May, 2013 இன் கணக்குப்படி Google Playstore மூலம் இதனைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 48 பில்லியன் ஆகும்.
Sep 2013 வரை 1 பில்லியன் ஆண்ட்ராய்டு கருவிகள் (Android Devices) பயன்பாட்டுக்கு வந்ததுள்ளன. August 23, 2013-ல் இதன் புதிய வரவான Jelly Bean OS பலகோண தொடுதிரை இயங்குதளமாக (Multi-touch screen) வெளியிடப்பட்டது. இந்த வகை இயங்குதளம் C மற்றும் C++ மொழி களைப் பயன்படுத்தி எழுதப்பட்டது.
HTML (Hypertext Markup Language)
இம்மொழி இணைய தளங்களையும், இணையதள கருவிகளையும் (Web browser) உருவாக்குவதற்கு முதன்னையான மொழியாக உள்ளது. WWW எனப்படும் உலகளாவிய வலைத்தளத்தை உருவாக்கிய Tim Berners-Lee என்பவர் WWW-க்காகவே உருவாக்கிய ஒரு மிகச் சிறந்த மொழி இதுவாகும். 1980-களில் முதல் வரவைக் கொண்ட இம்மொழியின் புதிய வரவு 2011-ல் வெளிவந்தது. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற வலைத்தளம் (Internet) இம்மொழியைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறது. W3C எனப்படும் www consortium-இம்மொழியை உருவாக்கி அதன் காப்புரிமையையும் தன்னகத்தே வைத்துள்ளது.
(கட்டுரையாளர் கல்லூரி ஒன்றில் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர்)

No comments:

Post a Comment