Saturday 25 January 2014

அறிவுசார் சொத்துரிமைகள்-ஓர் அறிமுகம்

அறிவுசார் சொத்துரிமைகள்-ஓர் அறிமுகம்
Posted Date : 14:12 (17/12/2013)Last updated : 14:12 (17/12/2013)
டாக்டர் நாகலிங்கம் மோகன்தாஸ்
மனித மனம் பல அரிய படைப்புகளைப் படைக்கும் சக்தி வாய்ந்தது. உதாரணத்திற்கு கதை, கவிதை, கட்டுரை, தொழில்நுட்பம், வடிவமைப்பு எனக் கூறலாம். இவை அனைத்தும் தொட்டறிய முடியா (intangible) சொத்துகளாகும். தொட்டறிய முடியும் சொத்துக்களை நிலம், வீடு, வாகனம் போன்றவற்றைக் ¢கட்டுப்படு¢த்தும் சட்டங்கள் மற்றும் உரிமைகள் இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் சமுதாய, பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பொருட்டு தொட்டறிய முடியாத அறிவுசார் சொத்து உரிமைகள் (Intellectual Property Rights - IPR) முக்கியத்துவம் பெறுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
 அறிவுசார் சொத்து உரிமைகள்
அறிவுசார் சொத்து உரிமைகள் என்பது தொழில், அறிவியல், இலக்கியம் மற்றம் கலைத் துறைகளில் கையாளப்படும் அறிவு சார்ந்த செயல்களுக்கு வழங்கப்படும் சட்ட உரிமைகள் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன.
1) படைப்பாளிகளின் படைப்புகளுக்கு நிதி மற்றம் பொருளியல் சார்ந்த உரிமைகளின் பொருட்டும் பொதுமக்களுக்கு அந்தப் படைப்புகள் சென்றடைவது பொருட்டும் சட்ட வடிவம் கொடுப்பதற்கு உதவும்.
2) படைப்புத் திறனை மேம்படுத்தவும், மக்களிடையே பரப்புவதற்கும், நியாயமான வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதற்கும், இதன் மூலம் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவதற்கும் உதவும்.
அறிவுசார் சொத்துகளைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அறிவு சார் சொத்துகள்
 காப்புரிமை (Patent)  பதிப்புரிமை மற்றும் தொடர்புடைய உரிமைகள் தொழில் சார்ந்த வடிவமைப்பு (Industrial Design)  வர்த்தகச் சின்னம் (Trade mark) புவிசார் குறியீடு(Geographical Indication) ஒன்றிணைக்கும் சுற்றின் உருவரை (Layout of Integrated circuit) தாவர வகைகள் பாதுகாப்பு (Plant Variety Protection) தொழில் இரகசியங்கள் (Trade Secrets)

வரலாறு
இடைக்கால ஐரோப்பாவில்(Medievel Europe)  அரசர்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் திறந்த கடிதத்தின் மூலம்(Literate patents-open letters)  பிரத்தியேகமான உரிமை கொடுக்கப்பட்டது. அதுபோல 1200களில் வெனீசியன் நகர மாநிலம் (Venetiala City State) பட்டு உற்பத்தியில் புதுமையைப் புகுத்தியவர்களுக்கு 10 வருட தனி உரிமை வழங்கியது. 1449 ஆம் ஆண்டில் உத்யானம் ஜானுக்கு (John of Utyanam)  கண்ணாடி செய்யும் முறைக்கு 20 வருட தனி உரிமை இங்கிலாந்தில் வழங்கப்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் சூரியனுக்குக் கீழே உள்ள எந்த ஒரு புதுப்பொருள்/ முறைக்கும் காப்புரிமை வழங்கப்படும். இந்தியாவில் காப்புரிமை சம்பந்தப்பட்ட முதல் சட்டம் 1856ம் ஆண்டு (Act VI of 1856)  இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின் குறிக்கோள் புதுக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்கும், கண்டுபிடிப்பாளர்கள் அவர்களது கண்டுபிடிப்பின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்குமாக அமைந்தது. மேலும் இச்சட்டத்தில்1857 (Act IX of 1857), 1859 (Act XV of 1859)  சில திருத்தங்கள் செய்யப்பட்டன. 1911ம் ஆண்டு (Act 11 of 1911)  இந்திய காப்புரிமை மற்றும் வடிவமைப்பு சட்டம், 1911 இயற்றப்பட்டது.
இது இதற்கு முன்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் ¨’replace’ செய்தது. இந்தச் சட்டம் காப்புரிமை நிர்வாகத்தை காப்புரிமை கட்டுப்பாட்டாளரின் (Controller of Patent) கீழ் கொண்டு வந்தது. மேலும் 1920, 1930 மற்றும் 1945 ஆண்டுகளில் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
1957ம் ஆண்டு இந்திய அரசு காப்புரிமை சட்டங்களைச் சீர்திருத்த, நீதியரசர் N..இராஜகோபால் ஐயங்கார் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து, அதன் பரிந்துரைகளின் படி காப்புரிமை சட்டம், 1970 (Patent Act 1970)  உருவானது.
பின்னர் 2004, 1972ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1999, 2002 மற்றும் 2005ல் சில சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதுபோல ஒவ்வொரு வகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. (பார்க்க பெட்டி செய்தி)
உரிமைகள் சட்டம் 2001
பன்னாட்டு கழகங்கள் / உடன்படிக்கைகள் / கூட்டங்கள்
பன்னாட்டு அறிவுசார் சொத்து உரிமைகளைக் கண்காணிப்பதில் கீழ்க்கண்ட இரு அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
1) உலக அறிவுசார் சொத்துரிமைகள் கழகம் (விப்போ) (World Intellectual Property Organizaion - WIPO)

2. வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துகளின் உரிமை (டிரிப்ஸ் )(Trade Related Intellectual Property Rights - TRIPS)
 
1. விப்போ
இக்கழகம் 1967ம் கூட்டத்தின் படி துவக்கப்பட்டு 1970ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டது. 1974ம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபையின் (UNO)  அங்கமாக மாறியது.
இதற்கு 2 குறிக்கோள்கள் உள்ளன.
1) உறுப்பு நாடுகள் மற்றும் பன்னாட்டுக் கழகங்களின் துணை கொண்டு அறிவுசார் பண்டங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
2) 24 பலதரப்பட்ட உடன்படிக்கைகள் (Multi Lateral Agreements)  மூலம் நிர்வாக ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல்.
முக்கிய பன்னாட்டு உடன்படிக்கைகள் மற்றும் எதன் பொருட்டு இவ்வுடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன என்பவற்றை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

2) வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள்
உலக வர்த்தக அமைப்பின் கீழ், 1993ம் ஆண்¢டு சுங்கவரி மற்றும் வாணிபம் குறித்த பொது உடன்பாடு உருகுவே சுற்றுப் பேச்சுக்களில், வர்த்தக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது எல்லா WTO  உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். மேலும் சட்டங்களை அமலாக்குவதிலும் இவ்வுடன்படிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. மேலும் விப்போ மற்றும் WTO  இடையே 1996ம் ஆண்டு உடன்படிக்கை ஏற்பட்டது.
இதன்படி சட்ட, தொழில்நுட்ப விஷயங்களில் இரண்டு கழகங்களும் ஒத்துழைப்புடன் செயல்படும். இவ்வுடன்படிக்கை ஏழு பகுதிகளைக் கொண்டது. முதற் பகுதியில் மிகச் சாதகமான தேசியப் பிரிவு மற்றும் தேசியப் பிரிவு குறிப்பிடப்பட் டுள்ளது.
மிகச் சாதகமான தேசியப் பிரிவு(Most favoured nation clause)
இங்கு பிரிவு என்பது நீக்குதல்(elimination) அல்லது பேதங்காட்டுதல்(discrimination) தன்மையைக் குறிக்கும். இப்பிரிவை இங்கு கொடுக்க வேண்டியதன் காரணம் பன்னாட்டு வாணிபத்தில் பேதங்காட்டும் தன்மையைத் தவிர்க்கவே ஆகும். இதன்படி உதாரணத்திற்கு பர்மாவிற்கு நம் நாட்டில் என்ன உரிமை கொடுக்கிறோமோ அதே உரிமையை அமெரிக்காவுக்கும் கொடுக்க வேண்டும்.
தேசியப் பிரிவு : இதன்படி இந்திய மண்ணில் இந்தியர் ஒருவருக்கு என்ன உரிமை கிடைத்ததோ அதே உரிமை இங்கு வேறு நாட்டவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
பகுதி III ன் கீழ், அறிவுசார் சொத்துரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1) பதிப்புரிமை மற்றும் தொடர்புடைய உரிமைகள் (ஆர்ட்டிக்கிள் 914)
2) வர்த்தக சின்னம் (ஆர்ட்டிகிள் 1521)
3) புவிசார் குறியீடு (ஆர்ட்டிகிள் 2224)
4) தொழில் சார்ந்த வடிவமைப்பு (ஆர்ட்டிகிள் 2526)
5) காப்புரிமை (ஆர்ட்டிகிள் 2734)
6) ஒன்றிணைக்கும் சுற்றின் உருவறை (ஆர்ட்டிகிள் 3538)
இது பாரிஸ் மாநாடு, பெர்னே மாநாடு, காப்புரிமை ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் பல உடன்படிக்கைகளின்படி எடுத்துரைக்கப்பட்டது. பகுதி III  இவற்றை அமலாக்கும் விதம் பற்றியும், பகுதி IVல் அறிவுசார் சொத்துரிமை பெறுவது மற்றும் பேணுவது குறித்தும், பகுதி Vல் இடைப்பட்ட ஏற்பாடு குறித்தும், பகுதி க்ஷிமிமி ல் இறுதி ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன.
இந்தியா கீழ்க்கண்ட கூட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் உறுப்பு நாடாகவோ அல்லத கையெழுத்திட்ட நாடாகவோ பங்கு வகிக்கிறது.
1) பெர்னே மாநாடு 1886
2) பதிப்புரிமை பொதுக்கூட்டம் 1952 1952 (Univesal Convention for Copyright 1952)

3) ஒன்றிணைக்கும் சுற்றின் உருவரை வாஷிங்டன் கூட்டம் 1989(Convention)
4) Bio Diversity கூட்டம்(CBD 1994)
5) வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள் 1995
6) பாரிஸ் மாநாடு / காப்புரிமை ஒத்துழைப்பு உடன்படிக்கை 1998 (Patent Cooperation Treaty)
7) புடாபெஸ்ட் உடன்படிக்கை 2001
8) மாட்ரிட் புரோட்டோகால்
அறிவுசார் சொத்துரிமைகள் காப்புரிமை(Patent)
காப்புரிமை என்பது அரசால் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும் சட்ட உரிமைப் பத்திரம் ஆகும். இந்த உரிமை ஒரு குறிபிட்ட கால அளவுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமை பெறுவதற்குக் கண்டுபிடிப்பின் இரகசியத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த உரிமையின் மூலம் கண்டுபிடிப்பாளரின் அனுமதியில்லாமல் அக்கண்டுபிடிப்பை/ கண்டுபிடிப்பு முறையை செய்யவோ, உபயோகப்படுத்தவோ, விற்கவோ, விற்பனைக்கு வழி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ பிறரால் முடியாது.
காப்புரிமை பாதுகாப்பு பிராந்தியத்திற்குட்பட்ட (territerial) உரிமை ஆகும். எனவே அது ஒரு பிராந்தியத்திற்குள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும். எந்த ஒரு காப்புரிமையும் உலகம் முழுவதும் கட்டுப்படுத்தாது. ஆகவே எந்த நாட்டில் காப்புரிமையை அமல்படுத்த விரும்புகிறோமோ, அந்த நாட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும் காப்புரிமை உரிமைக் காலம் முடிந்த பின்போ அல்லது புதுப்பிக்க கட்டணம் செலுத்தாததன் பொருட்டு உரிமை ரத்தானாலோ யார் வேண்டுமானாலும் அக்கண்டுபிடிப்பைத் தடையின்றி இலவசமாகப் பயன்படுத்தலாம்.
காப்புரிமையைப் பொதுவாக தனியுரிமை(Monopoly)  எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில் இதனை எதிர்முக உரிமை (Negative Right) எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் காப்புரிமை அதன் உரிமையாளருக்கு எந்தப் பொருளையும் செய்யவோ, உபயோகப்படுத்தவோ, விற்பதற்கோ தரும் உரிமையைவிட மற்றவர்கள் காப்புரிமை பெற்ற பொருளை செய்வதையோ, உபயோகப்படுத்துவதையோ அல்லது விற்பதையோ தடுக்கும் உரிமையைக் கொடுக்கிறது. மேலும் அரசு காப்புரிமை தந்த போதிலும், தானாகவே அமல்படுத்துவதில்லை எனவே காப்புரிமை பெற்ற உரிமையாளரே எந்த ஒரு உரிமை மீறலுக்கும் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற வேண்டும்.
தொழில் மற்றும் வணிகவியல் அமைச்சகத்தின் கீழ் வரும் காப்புரிமை அலுவலகம்  (Controller General of Patents Designs and Trademarks) புது காப்புரிமை மற்றும் வடிவமைப்பு பத்திரங்களை விநியோகிக்கும் பணி ஆற்றுகின்றது. காப்புரிமை அலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் டில்லி ஆகிய நகரங்களில் உள்ளன. அந்தந்த அலுவலகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து காப்புரிமை வழங்கப்படுகின்றது.
National Institute for Intellectual Property Management (NIIPM) and Patent Information System (PIS) அலுவலகம் நாக்பூரில் உள்ளது. இங்கு காப்புரிமை Specifications மற்றும் காப்புரிமை சம்பந்தப்பட்ட உலகளாவிய  Literature அனைத்தும் கிடைக்கும்
ஒரு பொருளுக்கோ / முறைக்கோ காப்புரிமை வழங்குவதற்கு கீழ்க்கண்ட கூறுகள் தேவைப்படுகின்றன.
1) புதுமை (Novelty)
புதுமையை நிரூபிப்பதை விட, இது புதுமையில்லை என்பதை நிரூபிக்க முடியாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கும் அதுற்கு முந்தைய கலை (Prior Art) எதுவும் இல்லாதிருப்பதே அதன் புதுமைக்கு அத்தாட்சி. முந்தைய கலை என்பது காப்புரிமை விண்ணப்பிக்கும் தேதிக்கு முன் அக்கண்டுபிடிப்பு சம்பந்தமாக எழுத்து அல்லது வாய்மொழியாக அக்கண்டுபிடிப்பைப் பற்றிய அறிவு ஏற்கனவே இருப்ப தாகும். எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கும் முந்தைய கலை இருந்தால் அது காப்புரிமைக்கு தகுதி பெறாது. மேலும், ஏற்கனவே வழக்கத்தில் உள்ள கண்டுபிடிப்போ முறையோ காப்புரிமைக்குத் தகுதி பெறாது.
2) கண்டுபிடிப்பு வழிமுறை (Inventive Step)
எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கும் கண்டுபிடிப்பு வழிமுறை இருக்க வேண்டும். அந்த வழிமுறை அந்தக் கண்டுபிடிப்பின் துறையில் உள்ள சாதாரண திறமை படைத்தவர்களுக்கு தெரியாத (Non Obviousness)   விஷயமாக இருக்க வேண்டும்.
3 தொழில் உபயோகம்(Industrial applicability (utility)
எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கும் உபயோகம் ஏதும் இல்லாவிட்டால் அந்தக் கண்டுபிடிப்பு காப்புரிமைக்குத் தகுதி பெறாது.
மேற்கண்ட கூறுகளைச் சுருக்கமாக  ‘NUNS’ (N - Novelty; U - Utility ; N - Non obviousness; S - Statutory Compliance)  என்று குறிப்பிடுவர்.
காப்புரிமை பெற இயலா சில கண்டுபிடிப்புகள்
1) இயற்கை விதிகளுக்கு மாறான கண்டுபிடிப்புகள்
2) மனித குலத்திற்கோ, விலங்கினம், தாவரவினம் அல்லது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்.
3) மனித மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, நோய் கண்டுபிடிப்பு முறை, கால்நடைகளுக்கான சிகிச்சை தொடர்பான கண்டுபிடிப்புகள்.
4) தாவரங்கள் மற்றும் விலங்குகள் இன்னும் சில.
காப்புரிமை பெறும் முறை
காப்புரிமைக்கு அதற்குண்டான விண்ணப்பத்தில் நம் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நாம் காப்புரிமைக்கு விண்ணப்பித்து 12 மாதத்திற்குள் ஏனைய உறுப்பினர் நாடுகளில்(Convention Countries) விண்ணப்பித்தாலும் நாம் முதலில் பதிவு செய்த தேதியே (Priority date)  எடுத்துக் கொள்ளப்படும்.
ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் விண்ணப்பிக்க முனையும் போது, காப்புரிமை ஒத்துழைப்பு உடன்படிக்கை (Patent Cooperation Treaty)  கீழ், பன்னாட்டு விண்ணப்ப முறை உகந்ததாகும். அவ்வாறு பன்னாட்டு விண்ணப்ப முறைப்படி விண்ணப்பித்த பின், 31 மாதங்களுக்குள் எந்த ஒரு உறுப்பினர் நாடுகளில் விண்ணப்பித் தாலும் முதலில் பதிவு செய்த தேதியை எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பித்து 18 மாதங்களுக்குப் பின் காப்புரிமை அலுவலக பத்திரிகையில் பிரசாரம் செய்யப்படும். காப்புரிமைக்கு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து சீக்கிரம் பிரசுரம் சொல்லி விண்ணப்பித்தால் (1 மாதத்திற்குள்) அதற்கும் வாய்ப்புண்டு. காப்புரிமைக்கு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து கண்டிப்பாக காப்புரிமை ஆய்வு செய்ய (48 மாதங்களுக்குள்) விண்ணப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து முதல் ஆய்வறிக்கை (First Examination Report) வழங்கப்படும். அதற்கு 12 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். எல்லாவிதத் தேவைகளும் பூர்த்தி அடையும் போது, அலுவலகப் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 6 மாதங்கள் கழித்து காப்புரிமை வழங்கப்படும். எந்தப் பிரச்சினைகளும் இல்லாதபட்சத்தில் காப்புரிமை கிடைப்பதற்கு 23 வருடங்கள் ஆகும்.
ஒவ்வொரு காப்புரிமையின் உரிமைக்காலம், அது விண்ணப்பித்த நாளிலிருந்து 20 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் காப்புரிமையை புதுப்பிக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது காலாவதி ஆகிவிடும்.
தொழில் சார்ந்த வடிவமைப்பு
வடிவமைப்பு என்பது வடிவம், அமைப்பு அல்லது அணிகலன், கோடுகளின் அமைப்பு, நிறம், 2D அல்லது 3D அல்லது இரண்டும் கலந்து எந்த ஒரு தொழில் சார்ந்த முறை மூலம் அல்லது Manual  அல்லது  Mechanical  அல்லது ரசாயனம் தனித்தனியாகவோ அல்லது கலந்தோ எதுவானாலும் முடிவு பெறாத ஒரு பொருளின் appeal  அதைக் கண்களால் மட்டுமே தீர்மானிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
வடிவமைப்பு என்பது எந்த ஒருConstruction Mechanical Device  விதியோ அல்லது Mechanical Device ஓ அல்ல. இது எந்த ஒரு வர்த்தகச் சின்னம் அல்லது கலை வேலைபபாட்டையோ குறிப்பிடாது. இது காப்புரிமைக்கும் பதிப்புரிமைக்கும் இடைப்பட்ட இடத்தை நிரப்பியுள்ளது.
ஒரு பொருளின் தோற்றம் நுகர்வோர் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதிலிருந்து வடிவமைப்பின் முக்கியத்துவம் எளிதில் விளங்கும். இந்தியாவில் வடிவமைப்பு பதிவை வடிவமைப்பு சட்டம் 2000 (Design Act 2000) மற்றும் வடிவமைப்பு விதிகள் 2001 (Design Rule 2001)  தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு வடிவமைப்பும் புதுமையானதாகவும் அசலானதாகவும் இருகக வேண்டும். அது ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருக்கக் கூடாது. வேறு எந்த நாட்டிலும் பதிவுத் தேதிக்கு முன்னர் உபயோகப்படுத்தியிருக்கக் கடாது. பதிவு செய்வதன் பொருட்டு பொருட்கள் வடிவமைப்பு விதிகள் 2001ன் கீழ் 32 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு பதிவதற்கு விண்ணப் பத்தை அந்தந்த மாநிலத்திற்கு உட்பட்ட காப்புரிமை அலுவலகங் களில் சமர்ப்பிக்கலாம். எல்லா விண்ணப்பங்களும் கொல்கத்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசீலிக்கப்படும். எந்த ஒரு வடிவமைப்பும் பதிவு பெற்றபின் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு பத்திரிகையில் பிரசுரம் செய்யப்படும்.
வர்த்தகக் குறியீடுகள்
வர்த்தகக் குறியீடுகளை வர்த்தகக் குறியீடுகள் சட்டம் 1999 (Trade Marks Act 1999)  மற்றும் வர்த்தகக் குறியீடுகள் விதிகள் 2002(Trade Marks Rules 2002) ம் நிர்வகிக்கின்றன.
வர்த்தகக் குறியீடுகள் என்பது ஒரு பொருளையோ சேவையையோ ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்ட உதவுவதாகும். இது வடிவியல் உருவகங்கள், சிட்டை, அனுமதிச் சீட்டு, பெயர், கையெழுத்து, சொல் எழுத்து, எண், பொருளின் வடிவம், நிறம் அல்லது கூட்டாகவும் இருக்கலாம். வர்த்தகக் குறியீடுகளில் பலதரப்பட்ட வகைகள் உள்ளன.
1.Fenciful °Pf´ குறியீடு  குறியீட்டிற்கும் பொருளுக்கும் சம்பந்தம் இருக்காது. இது மாதிரியான குறியீடுகள் மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும். (உ.ம்.) கோடாக்(Kodak®) - பிலிம்
2. நடுநிலைக் குறியீடு(Arbitrary Mark) - ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சொற்கள் கொண்டு உருவாக்கியது. ஆனால் குறியீட்டிற்கும் பொருளுக்கும் சம்பந்தம் இருக்காது. (உம்) ஆப்பிள் கணினிகள்.
3. Suggestive Marks  பொருளையோ, சேவையையோ சம்பந்தப்படுத்தி குறியீடுகளை உருவாக்குவது (உ.ம்.) பீட்சா ஹட்.
4. விளக்கும் குறியீடுகள் (Descriptive Marks) -பொருளையோ அல்லது சேவையையோ அல்லது அதன் குணாதிசயங்களையோ விளக்கும் குறியீடுகள். (உ.ம்) ஏர் இந்தியா  இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கழகம்
5. பொதுக் குறியீடுகள் (Generic terms)      இவை நேரிடையான குறியீடுகள் (உ.ம்.) சீட்  நாற்காலி, சோபா விற்கும் நிறுவனத்தின் பெயர்.
வர்த்தகக் குறியீட்டை அந்தந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட வர்த்தகக் குறியீடு அலுவலகத்தில் (மும்பை, தில்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றம் சென்னை) பதிவு செய்தல் வேண்டும். எல்லா வகையான பொருட்கள் மற்றும் சேவைகளை 45 வகைகளாகப் பிரித்துள்ளனர். இதன் உரிமை பத்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். மேலும் பத்து பத்து ஆண்டுகளாக இதன் உரிமையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம்.
புவிசார் குறியீடுகள்
இது ஒரு நாட்டையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ குறித்து அங்கிருந்து ஒரு பொருள் உற்பத்தியாவதைக் குறிக்கும். அப்படிக் குறிப்பதனால் அதன் தரம், அவ்விடத்தினால் கிடைக்கும் தனிப்பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும். இது இயற்கையாகவோ அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருளாகவோ இருக்கலாம். புவிசார் குறியீட்டுப் பொருட்கள் சட்டம் மற்றவர்கள் ஏமாற்றுவதை தடுப்பதோடு நுகர்வோர் பாதுகாப்பையும் அளிக்கிறது.
புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 [The Geographical Indications (Registration and protection) Act, 1999]  மற்றும் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) விதிகள், 2002 [The Geographical Indications (Registration and Protection) Rules, 2002] இவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இக்குறியீட்டிற்கு விண்ணப்பிப்பதும் வர்த்தகக் குறியீட்டிற்கு விண்ணப்பிப்பதைப் போன்றே ஆகும். ஆனால், இங்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு சங்கமாகவோ அல்லது உற்பத்தியாளர்களின் கூட்டாகவோ இருக்க வேண்டும். இதன் பதிவகம் சென்னையில் உள்ளது. இதன் உரிமைக் காலம் பத்து ஆண்டுகள் ஆகும். மேலும் பத்துப் பத்து ஆண்டுகளாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
(உ.ம்.) டார்ஜிலிங் தேயிலை, மதுரை மல்லி, பத்தமடை பாய், சன்னபட்னா பொம்மைகள், காசி புரம் பட்டு, திருநெல்வேலி அல்வா.
ஒன்றிணைக்கும் சுற்றின் உருவரை
ஒன்றிணைக்கும் சுற்றின் உருவரை சட்டம், 2000 இதனைக் கட்டுப்படுத்துகின்றது. இன்று வானொலி, தொலைக்காட்சி என்று பல மின்னணு சார்ந்த உப காரணங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனை வடிவமைக்க ஆகும் கால அளவும், பொருளும் இதனை எளிதாக நகல் எடுப்பதன் மூலம் ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும். மேலும், இது புதுக் கண்டுபிடிப்பு அல்லாததால் காப்புரிமை கீழாகவும், கண்களுக்கு வெளியிலிருந்து தெரியாததால் வடிவமைப்பு கீழாகவும் கொண்டுவர இயலாது. எனவே இதற்கென்று தனியாக ஓர் உரிமைச் சட்டத்தை ஏற்படுத்தினர். இதன் உரிமைக் காலம் 10 வருடங்கள் ஆகும்.
இவை அனைத்தையும் சுருக்கமாக NDUS  என்று குறிப்பிடுகின்றனர். இதன் பதிவு அலுவலகம் நியூதில்லியில் உள்ளது.DUS சோதனையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கவும், நிராகரிக்கவும்படும். அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது அலுவலக பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். இன்னும் புதுத் தாவர வகைகளின் பாதுகாப்பு பன்னாட்டு ஒன்றியத்தில் (UPOV) இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட வில்லை.
தொழில் இரகசியங்கள்
செய்முறை, Formula, வடிவம், தகவல்களின் கூட்டு என எது வேண்டுமானாலும் இருக்கலாம். (உ.ம்) ஊட்ட பானத்தின் ஃபார்முலா. இந்தியாவில் இதற்கென்று இன்னும் தனிச்சட்டங்கள் இயற்றப்பட வில்லை.
பதிப்புரிமை
பதிப்புரிமைச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள் போன்றோர்களை ஊக்கப்படுத்துவதே ஆகும். இந்த உரிமைகளை பிறருக்கு உரிமம் வழங்குவதன் மூலம் மிகுந்த பொருளீட்டுவதற்கும் வழி வகுக்கும். பதிப்புரிமைச் சட்டம்1957 (Copyright Act 1957)  பகுதி 14ன் படி படைப்பாளரே(Sectimly)  முதல் உரிமையாளர் ஆகிறார்.
பதிப்புரிமை சிந்தனையின் வெளிப்பாடை (expression)  மட்டுமே பாதுகாக்கிறது. சிந்தனையை  (idea) அல்ல. பதிப்புரிமை கோர கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பதிவு செய்திருந்தால் அதுவே உரிமையாளர் சான்றாக விளங்கும். பதிப்புரிமை அலுவலகம் தில்லியில் உள்ளது. இலக்கிய, நாடக, இசை மற்றும் கலை வேலைகளுக்கு படைப்பாளரின் ஆயுட்காலம் மற்றும் இறந்த பிறகு 60 வருடங்கள் மொத்த உரிமைக் காலம் ஆகும். நிழற் படம், திரைப்படம், ஒலிப்பதிவு போன்றவைகளுக்கு அவை வெளிவந்ததிலிருந்து 60 வருடங்கள் ஆகும்.
www.wipo.int விபோ
www.uspto.gov   அமெரிக்க காப்புரிமை மற்றும் வர்த்தகக் குறியீடுகள் அலுவலகம்
www.epo.org - ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம்
www.patinfo.nic.in -    இந்திய காப்புரிமை தகவல் மையம்
www.ipindia.nic.in காப்புரிமை வடிவமைப்பு மற்றும் வர்த்தகக் குறியீடுகள் அலுவலகம்
www.ipmdia.nic.in/giriindia  புவியியல் குறியீடுகள்
www.plantauthorit.gov.in  தாவர வகைகள் பாதுகாப்பு

No comments:

Post a Comment