Friday 24 January 2014

தமிழக அரசின் நிவாரண உதவிகள்

தமிழக அரசின் நிவாரண உதவிகள் - பார்த்திபன்
Posted Date : 16:12 (15/12/2013)Last updated : 16:12 (15/12/2013)

சாலைகளில் பயணிக்கும் போது ஏற்படும் விபத்துகளிலும், பல்«வுறு தொழில்களில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளிலும் உயிரிழப்பவர்களுக்கும், காயமடைபவர்களுக்கும் பின்வரும் திட்டங்கள் வாயிலாக தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
(1) விபத்து நிவாரணத் திட்டம் :
தகுதிகள் : அரசாணை (நிலை) எண்.471, நிதித் துறை 23.05.1989ன் படி சலவைத் தொழில், முடிதிருத்துதல், மட்பாண்டம் செய்தல் உள்ளிட்ட 44 வகை தொழில்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடுபவராக இருந்து, அத்தொழிலின்போது ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கும் (அ) உயிரிழப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
 வயது வரம்பு : 18-59 வரை
 வருமான வரம்பு ஏதுமில்லை
நிவாரண உதவிகள் :
 உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15,000/
 காயமடைபவர்களுக்கு காயத்தின் தன்மைக்கேற்ப ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை.
அணுக வேண்டிய அலுவலகம் : மரணமடைந்த 6 மாத காலத்துக்குள் இறப்புச் சான்று, பிரேதப் பரிசோதனை அறிக்கை, முதல் தகவலறிக்கையுடன் தொடர்புடைய தனி வட்டாட்சியரிடம் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) விண்ணப்பிக்கலாம்.
(2) நலிந்தோர் துயர் துடைப்புத் திட்டம் :
தகுதிகள் :
 ஒரு குடும்பத்தின் பொருளீட்டக் கூடிய முக்கிய நபரை இழந்த குடும்பங்களுக்கு இத்திட்டத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
 நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளியின் குடும்பம் (அ) 2.5 ஏக்கருக்குக் குறைவான பாசன நிலம் (அ) 5 ஏக்கர் பாசன வசதியற்ற நிலமுடைய விவசாயக் குடும்பத்திற்கு இத்திட்டம் பொருந்தும்.
 ஆண்டு வருமான வரம்பு ரூ.24,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 வயது வரம்பு : 18-59
நிவாரண உதவி : ரூ.10,000
அணுக வேண்டிய அலுவலகம் : மரணமடைந்தவரின் இறப்புச் சான்றுடன் 6 மாதங்களுக்குள் தொடர்புடைய தனி வட்டாட்சியருக்கு (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) விண்ணப்பிக்க வேண்டும்.
(3) தமிழக முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டம்
சாலைகளில் பயணிக்கும் போது நேரிடும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியரால் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு, வருமான வரம்பு இல்லை.
நிவாரண உதவிகள் :
 உயிரிழப்பிற்கு ரூ.50,000/
 கொடுங்காயம் ஏற்படின் ரூ.30,000/
 ஒரு கால் (அ) ஒரு கை இழப்பிற்கு ரூ.15,000/
சிறு காயங்களுக்கு ரூ.5,000/
அணுக வேண்டிய அலுவலகம் : மரணமடைந்தவர் / காயமடைந்தவரின் இறப்புச் சான்று / காயச் சான்று, வாரிசு சான்று, பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய காவல் நிலைய ஆய்வாளருக்கு 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
(4) இயற்கைச் சீற்றங்களின்    போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்பெறும் நிவாரண உதவிகள் :
மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு வருவாய்த் துறை மூலம் பின்வரும் உதவிகள் வழங்கப்படுகின்றன.
தகுதிகள் :
 வருமான வரம்பு, வயது வரம்பு ஏதுமில்லை.
 பிரேதப் பரிசோதனை அறிக்கை, முதல் தகவலறிக்கை அவசியம்.
நிவாரண உதவி :
 உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1.50 லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சமம் ஆக மொத்தம் 2.50 லட்சம் வழங்கப்படும்.
அணுக வேண்டிய அலுவலகம் : உடனடியாக தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டும்.
(5) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் :
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இளஞ்சிவப்பு (மெரூன்) நிற அட்டை கொண்டுள்ள உறுப்பினர் ஒருவர் எந்த ஒரு விபத்தின் காரணமாக இறக்க நேர்ந்தாலும் / காயமடைய நேர்ந்தாலும் அவரது குடும்பத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
தகுதிகள் :
 18 முதல் 65 வயதுடையவராக இருத்தல்.
 இளஞ்சிவப்பு நிற அட்டை உடைய உறுப்பினராக இருத்தல்
நிவாரண உதவி :
 இறப்பு (அ) இருகைகள் இழப்பு (அ) இரு கால்கள் இழப்பு (அ) ஒரு கை (அ) கால் இழப்பு ஆகியவற்றுக்கு : ரூ.1,00,000/
 ஒரு கை (அ) கால் இழப்பிற்கு ரூ.50,000/
 கொடுங்காயத்திற்கு ரூ.20,000/
அணுக வேண்டிய அலுவலகம் : விபத்தில் மரணமடைந்தவர / காயமடைந்தவரின் இறப்புச் சான்று / காயச் சான்று, பிரேதப் பரிசோதனை அறிக்கை, முதல் தகவலறிக்கை, இளஞ்சிவப்பு நிற உறுப்பினர் அட்டை ஆகியவற்றுடன் தொடர்புடைய தனி வட்டாட்சியரிடம் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர் நல வாரியங்களின் மூலமாக அந்தந்த நலவாரிங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தால் அந்தந்த நல வாரியங்கள் மூலமாக நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment