Thursday 22 September 2016

TAMIL1

126. வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல்?

பவுத்தம்
127. நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது?
இரண்டு
128. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை __________
பத்து
129. நன்னூலுக்கு முதல் உரை எழுதியவர் ___________
மயிலைநாதர்
130. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது ___________
தண்டியலங்காரம்
131. வயலும் வயல் சார்ந்த இடமும் எந்தத் திணைக்குரியது?
      மருதம்
132. பாலை திணைக்குரிய உரிப்பொருள் __________
பிரிதல்
133. புறப்பொருள் வெண்பாமாலை எந்த நூலின் வழிநூல்?
      பன்னிரு படலம்
134. புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை ___________
  361
135. அகத்திணைகளின் எண்ணிக்கை _________
            ஏழு
136. காவியதர்சம் நூலத் தழுவி தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் _________
தண்டியலங்காரம்
137. தண்டியலங்காரத்தில் விளக்கப்படும் அணிகளின் எண்ணிக்கை _________
 35
138. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்க்கை ___________
களவியல்
139. வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை ___________
புறத்திணை
140. தலைவன், தலைவிக்கு அடுத்த நிலை வகிக்கும் அகத்திணைப் பாத்திரம் _____
தோழி
141. தொல்காப்பியரின் அணிக்கொள்கையை விளக்கும் இயல் _________
உவமவியல்
142. உவமவியலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை _________
37
143. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி?
      வஞ்சப்புகழ்ச்சியணி
144. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது?
பொருளியல்
145. தொல்காப்பியர் உள்ளுறையை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்?
ஐந்து
146. அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் எத்தனை?
      எட்டு
147. முட்டாச் சிறப்பினும் பட்டினம் பெறினும் - இது எவ்வகை வண்ணம்?
      வல்லிசை வண்ணம்
148. மாரியன்ன வண்கை - இது எதன் அடிப்படையில் தோன்றிய உவமை?
      பயன்
149. இறைச்சி என்பது எதன் ஒரு பகுதியைக் குறிப்பது?
      கருப்பொருள்
150. வடமொழியில் உள்ள ரீதிக் கோட்பாடு தமிழில் எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது?
நெறி
151. தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார்?
      நான்கு
152. முதல் சங்கம் இருந்த இடம் ____________
            கடல்கொண்ட தென்மதுரை
153. முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை ________
            4449
154. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் ___________
            பரிபாடல்
155. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை ________
அகவற்பா
156. நற்றிணையைத் தொகுப்பித்தவன் ___________
            பன்னாடு தந்த மாறன்வழுதி
157. அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை ____________
            142
158. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் __________
            நல்லந்துவனார்
159. புறநானூற்றில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் __________
            பாரதம் பாடிய பெருந்தேவனார்
160. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது?
      இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
161. சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர்___________
            நத்தத்தனார்
162. பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் _________
கரிகாலன்
163. மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து - இவ்வரி இடம்பெற்ற நூல்?
      சிறுபாணாற்றுப்படை
164. திருக்குறள் பொருட்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
70
165. கல்வி கரையில் கற்பவர் நாள்சில - இவ்வரி இடம்பெற்ற நூல்?
      நாலடியார்
166. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் _________
            பூதஞ்சேத்தனார்
167. காற்நாற்பது நூலின் ஆசிரியர் __________
            கண்ணன் கூத்தனார்
168. மாறன் பொறையனார் இயற்றிய நூல் __________
            ஐந்திணை ஐம்பது
169. களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது?
      கழுமலம்
170. நான்மணிக்கடிகை எந்தச் சமயத்தைச் சேர்ந்த நூல்?
      வைணவம்
171. காவிய காலம் எனப் போற்றப்படும் காலம்
      சோழர் காலம்
172. தமிழின் முதல் காப்பியம்
      சிலப்பதிகாரம்
173. மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம்?
      பவுத்தம்    
174. மணநூல் எனப்படுவது _________
சீவகசிந்தாமணி
175. குண்டலகேசி எந்த சமயக் காப்பியம்?
      பவுத்தம்
176. குண்டலகேசிக்கு மறுப்பாகத் தோன்றிய காப்பியம் __________
நீலகேசி
177. உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் _________
            யசோதர காவியம்
178. பெரியபுராணத்தின் ஆசிரியர் __________
சேக்கிழார்
179. கம்பராமாயணத்தின் முதல் பகுதி _________
            பால காண்டம்
180. நளவெண்பா பாடியவர் _________
            புகழேந்தி
181. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பாடியவர் _________
            திருநாவுக்காரசர்
182. யோகநெறியில் இறைவைனைப் பாடியவர் ___________
            சுந்தரர்
183. மாணிக்கவாசகர் எந்நெறியில் இறைவனைப் பாடினார்?
 ஞானம்
184. சைவத் திருமுறைகள் எத்தனை?
12
185. திருமூலரின் பாடல்கள் எந்தத் திருமுறையாகப் பகுக்கப்பட்டுள்ளன?
      பத்து
186. முதல் மூன்று திருமுறைகள் யாருடையவை?
      திருஞானசம்பந்தர்
187. திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் ___________
            சீர்காழி
188. திருவாசகம் பாடியவர் ____________
மாணிக்கவாசகர்
189. காரைக்கால் அம்மையார் பாடிய நூல் _______
அற்புதத் திருவந்தாதி
190. அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக என்று பாடியவர் _________
பூதத்தாழ்வார்
191. பிள்ளைத்தமிழ் பருவங்கள் எத்தனை?
      பத்து
192. குற்றாலக் குறவஞ்சி எழுதியவர் __________
            திரிகூடராசப்ப கவிராயர்
193. குயில்பாட்டு எழுதியவர் __________
            பாரதியார்
194. இருண்ட வீடு எனும் நூலை எழுதியவர் யார்?
      பாரதிதாசன்
195. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
      அழ.வள்ளியப்பா
196. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலை எழுதியவர் யார்?
      வல்லிக்கண்ணன்
197. புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுபவர் _________
            பிச்சமூர்த்தி
198. தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கியவர் ____________
மறைமலையடிகள்
199. சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர் __________
            புதுமைப்பித்தன்
200. தமிழின் முதல் நாவல் ___________
            பிரதாபமுதலியார் சரித்திரம்
201. தொல்காப்பியரின் ஊர் எது?
      வெள்ளூர்
202. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இயல்கள் எத்தனை?
9
203. தொல்காப்பியர் எந்தக் குடியில் பிறந்தவர்?
காப்பியக் குடி
204. உரையாசிரியர் என்றே குறிப்பிடப்படும் உரையாசிரியர் யார்?
      இளம்பூரணர்
205. புறப்பொருள் வெண்பாமாலை நூலை இயற்றியவர் யார்?
      ஐயனாரிதனார்
206. திருக்குருகை பெருமாள் நாயனார் இயற்றிய இலக்கண நூல் எது?
மாறனலங்காரம்
207. வீரசோழியம் எந்த யாப்பில் அமைந்தது?
கட்டளைக் கலித்துறை
208. நெய்தல் திணைக்குரிய நிலம் எது?
      கடலும் கடல் சார்ந்த இடமும்
209. இப்பாடலின் பொருள் என்ன என ஆசிரியர் மாணவரிடம் கேட்பது எவ்வகை வினா?
      அறிவினா
210. புலவரே உமக்கு ஆடை இருக்கிறதா என மன்னன் கேட்பது எவ்வகை வினா?
      கொடை வினா
211. நட - எவ்வகைச் சொல்?
வினை
212. ஆட்டம் என்பது __________
            பெயர்ச்சொல்
213.வந்து    - இலக்கணக் குறிப்பு தருக.
      வினையெச்சம்
214. இரவு பகல் - இலக்கணக் குறிப்பு தருக.
      உம்மைத் தொகை
215. கூறு எனும் வினைச் சொல்லின் பெயர் வடிவம் __________
கூற்று
216. மதுரை சென்றேன் - மறைந்திருக்கும் வேற்றுமை உருபு _______
            நான்காம் வேற்றுமை உருபு
217. எனது கை - எவ்வகைத் தொடர்?
      வேற்றுமைத் தொடர்    
218. இன்று பள்ளி விடுமுறை - எவ்வகை வாக்கியம்?
      செய்தி வாக்கியம்
219.ஆகா! எவ்வளவு அழகு - எவ்வகை வாக்கியம்?
      உணர்ச்சி வாக்கியம்
220. அன்ன நடை - இலக்கணக் குறிப்பு தருக
      உவமைத் தொகை
221. விளையாடினாள் - பால் குறிப்பிடு
      பெண் பால்
222. நடந்தன - பால் குறிப்பிடு
பலவின் பால்
223. இன்சொல் - இலக்கணக் குறிப்பு தருக.
      பண்புத்தொகை
224. அகவன் மகளே அகவன் மகளே - எவ்வகைத் தொடர்?
      அடுக்குத் தொடர்
225. சென்று வா - இலக்கணக் குறிப்பு தருக.
      ஏவல் வினைமுற்று
226. விடுகதை - இலக்கணக் குறிப்பு தருக.
      வினைத்தொகை
227. புத்தமித்திரர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்?
      பவுத்தம்
228. தமிழின் முதல் அகராதியை உருவாக்கியவர்
      வீரமாமுனிவர்
229. அகப்பொருள் விளக்கம் நூலின் இன்னொரு பெயர்
      நம்பியகப்பொருள்
230. நன்னூலார் குறிப்பிடும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
10
231. மகளிர் வீரத்தைச் சொல்லும் புறத்துறை
      மூதின்முல்லை
232. கல்வியழகே அழகு - தொடர் இடம் பெறும் இலக்கியம்
      நாலடியார் 
233. மா என்பது _________
            மரம்
234.வஞ்சித்திணைக்குப் புறனான அகத்திணை
      முல்லை
235. கீழ்க்கண்டவற்றுள் கடைச்சங்க நூல் எது?
      புறநானூறு 
236. கடைச்சங்கம் இருந்த ஊர்
      மதுரை
237. நான்மணிக்கடிகை எழுதியவர்
      விளம்பிநாகனார்
238. ஆற்றுணா வேண்டுவது இல் - இத்தொடர் இடம்பெறும் இலக்கியம்
பழமொழி நானூறு
239. கடம்பவனம் என்றழைக்கப்படும் ஊர்
      மதுரை
240. அவ்வழி நல்லை; வாழிய நிலனே - தொடர் இடம்பெறும் இலக்கியம்
      புறநானூறு
241. ஆதிகவி எனப் போற்றப்படுபவர்
      வால்மீகி   
242. குமார சம்பவம் எனும் வடமொழி நூலை எழுதியவர்
      காளிதாசர்
243. கிளவியாக்கம் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது?
எழுத்ததிகாரம்
244. ஒருதலைக் காமம் என்பது _________
            கைக்கிளை
245. திருமணத்திற்குப் முந்தைய காதல் வாழ்வைச் சொல்வது
      களவியல்
246. தோல் என்பது __________
            வனப்பு
247. நகை என்பது _________
            சுவை
248.உள்ளதை உள்ளவாறே கூறும் அணி
      தன்மை நவிற்சியணி   
249. ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்
      கபிலர்
250. அறநூல்களின் பொதுவான யாப்பு வடிவம்
      வெண்பா
251. வேளாண் வேதம் எனப்படும் நூல்
      நாலடியார்
252. பாலைக்கலிப் பாடல்களைப் பாடியவர்
      பெருங்கடுங்கோன்
253. யாதும் ஊரே யாவரும் கேளிர் - இவ்வடி இடம்பெற்ற நூல்
      புறநானூறு
254. முதுசொல் எனப்படுவது
      பழமொழி  
255. பரிபாடலில் பாடப்படும் ஆறு
      வைகை   
256. நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல்
      நெடுநல்வாடை
257. குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர்
கபிலர்
258. ஐந்து வேர்களின் பெயரைக் குறிப்பிடும் வகையில் அமைந்த நீதிநூல்
 சிறுபஞ்சமூலம்
259. ஆசாரக்கோவை எனும் நூலை எழுதியவர்
      பெருவாயின் முள்ளியார்
260. குடிமக்கள் காப்பியம் எனப்படுவது
      சிலப்பதிகாரம்
261. திருத்தக்கத் தேவர் பாடிய காப்பியம்
சீவகசிந்தாமணி
262. சூளாமணியின் ஆசிரியர்
      தோலாமொழித்தேவர்
263. குண்டலகேசியின் ஆசிரியர்
      நாதகுத்தனார்
264. வில்லி பாரதத்தில் உள்ள பருவங்கள்
      பதினெட்டு 
265. கம்பராமாயணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
      118
266. திருத்தொண்டர் தொகை பாடியவர்
      சுந்தரர்     
267.பெரியபுராணத்தின் பாட்டுடைத் தலைவர் யார்?
      சுந்தரர்     
268. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்கள்
      மூன்று
269. இயேசு காவியம் பாடியவர்
      கண்ணதாசன்    
270. தேம்பாவணியின் முதல் நூல்
      கடவுளின் நகரம்
271.திருமந்திரம் எந்தத் திருமுறையாகப் பகுக்கப்பட்டுள்ளது?   
      பத்தாம்
272.மருள் நீக்கியார் என்பது யாருடைய இயற்பெயர்?
      திருநாவுக்கரசர்
273. என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று பாடியவர்
      தாயுமானவர்
274. நாராயணனே நமக்கே பறைதருவான் - இவ்வரி இடம்பெற்ற நூல்
      திருப்பாவை
275.விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்?
      தொண்டரடிப்பொடியாழ்வார்
276. நாலயாயிர திவ்விய பிரபந்த உரைகளில் ஈடு எனப்படுவது
      முப்பத்தாறாயிரப்படி
277. பட்டர்பிரான் என்றழைக்கப்படும் ஆழ்வார்
      பெரியாழ்வார்
278. அமலனாதி பிரான் எனத் தொடங்கும் பாசுரம் பாடியவர்
      திருப்பாணாழ்வார்
279. திருநெடுந்தாண்டகம் பாடியவர்
      திருமங்கையாழ்வார்    
280. தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுபவர்
      வீரமாமுனிவர்
281. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
      ஜி.யூ.போப்
282. மணல் வீடு கட்டி விளையாடும் பருவம்
      சிற்றில்
283. இரட்டைப் புலவர்கள் இயற்றிய கலம்பக நூல்
தில்லைக் கலம்பகம்
284. முருகன் அல்லது அழகு எனும் நூலை எழுதியவர்
      திரு.வி.க.
285.கிறித்தவக் கம்பர் என்றழைக்கப்படுபவர்
      எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
286. ராசநாயகம் எனும் இஸ்லாமியக் காப்பியத்தைப் பாடியவர்
      வண்ணக்களஞ்சியப் புலவர்
287. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றவர்
பாரதியார்  
288.உவமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
      சுரதா
289. புரட்சிக்கவி எனப் போற்றப்படுபவர்
      பாரதிதாசன்
290. தமிழைத் திராவிட மொழிகளின் தாய் என்றவர்
      கால்டுவெல்
291. தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றுள்ள நூல்
      மனோன்மணீயம்
292.அபிநவக் கதைகள் எனும் நூலை எழுதியவர்
      செல்வக் கேசவராய முதலியார்
293. மனுமுறை கண்ட வாசகம் எனும் உரைநடை நூலை எழுதியவர்
      ராமலிங்க அடிகளார்
294. அமர வாழ்வு எனும் சிறுகதையை எழுதியவர்
      கல்கி
295. தமிழின் முதல் சிறுகதை எழுதியவர்
      வ.வே.சு.ஐயர்
296. பொன்னகரம் எனும் கதையை எழுதியவர்
      புதுமைப்பித்தன்
297. பத்மாவதி சரித்திரம் எனும் நாவலை எழுதியவர்
      அ.மாதவையா
298. சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்
      அலை ஓசை
299. நெஞ்சில் ஒரு முள் எனும் நாவலை எழுதியவர்
      மு.வரதராசன்
300. பொன்விலங்கு நாவலை எழுதியவர்
நா.பார்த்தசாரதி
301. தொல்காப்பிர் யாருடைய மாணவராகக் கருதப்படுகிறார்?
      அகத்தியர்  
302. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள இயல்கள்
      9
303. பண்டைக்காலச் சேரநாட்டின் தலைநகரம்
      வஞ்சி
304. பாண்டியரின் கொடிச்சின்னம்
      மீன்
305. நன்னூலை இயற்றியவர்
      பவனந்தி முனிவர்
306. வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல்
      தொன்னூல் விளக்கம்
307. சீவக சிந்தாமணி எந்த யாப்பில் அமைந்தது?
      விருத்தப்பா
308. முல்லைத் திணைக்குரிய நிலம்
      காடும் காடு சார்ந்த இடமும்
309. திருக்குறளை இயற்றியது யார்? என மாணவன் ஆசிரியரிடம் கேட்பது எவ்வகை வினா?
      அறியா வினா
310. தண்ணீர் கொண்டு வருவாயா? எவ்வகை வினா?
      ஏவல் வினா
311. ஆன் - என்ன விகுதி?
      ஆண்பால் வினைமுற்று
312. வந்த - என்பது
      பெயரெச்சம்
313. காப்பாய் - இடம் குறிப்பிடுக.
      முன்னிலை
314. நீயும் நானும் - இலக்கணக் குறிப்பு தருக.
      முற்றும்மை
315. இன்னா நாற்பது - இலக்கணக் குறிப்பு தருக.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
316. தலை வணங்கு - மறைந்திருக்கும் வேற்றுமை உருபு
      மூன்றாம் வேற்றுமை உருபு
317. பாவாய் என்பது
      விளி
318. ஓடி வா - எவ்வகை வாக்கியம்?
      ஏவல் வாக்கியம்
319. கண்ணா வருவாயா? எவ்வகை வாக்கியம்?
வினா வாக்கியம்
320. கடந்த - என்ன வகை எச்சம்?
      தெரிநிலை பெயரெச்சம் 
321. தண்ணீர் சாப்பிட்டான் - எவ்வகை வழு?
      மரபு வழு
322. தங்கை வந்தது - எவ்வகை வழு?
      திணை வழு
323. ஊறுகாய் - எவ்வகைத் தொகை?
      வினைத்தொகை
324. காந்தி வாழ்க! எவ்வகைத் தொடர்?
      வியங்கோள் வினைமுற்றுத் தொடர்
325. படித்தவன் - இலக்கணக் குறிப்பு தருக.
      வினையாலணையும் பெயர்
326. கண்ணன் அழகிய வீடு கட்டினான் - இத்தொடரில் செயப்படுபொருள் எது?
      வீடு
327.முல்லைத்திணைக்குரிய சிறுபொழுது
      மாலை
328. குட்டித் தொல்காப்பியம் என்றழைக்கப்படும் நூல்
      இலக்கண விளக்கம்
329. அகப்பொருள் விளக்கம் நூலுக்குரிய அமைப்பு நூலாகத் தோன்றிய நூல்
      தஞ்சைவாணன் கோவை
330. முதல் நிகண்டு நூல்
      திவாகரம்
331. சூடாமணி நிகண்டை எழுதியவர்
      மண்டல புருடர்
332. வினையே ஆடவர்க் குயிரே - தொடர் இடம் பெறும் இலக்கியம்
      புறநானூறு 
333. கேடில் விழுச் செல்வம் கல்வி - தொடர் இடம் பெறும் இலக்கியம்
      திருக்குறள்
334. மதுரையின் வேறு பெயர்கள்
      கூடல், ஆலவாய், கடம்பவனம்
335. வேணுவனம் எனப்படும் ஊர்
      திருநெல்வேலி
336. எழுதுண்ட மறை என்று கம்பர் போற்றும் நூல்
      திருக்குறள்
337. பழமொழி நானூறு எழுதியவர்
      முன்றுரையரையனார்
338. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
      30
339. சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள்
      13
340. சீவகனுடைய தாயின் பெயர்
      விசயை
341. மாதவியின் தாய்
      சித்திராபதி 
342. காவிய தர்சம் எனும் வடமொழி இலக்கண நூலை எழுதியவர்
      தண்டி
343. குண்டலகேசியின் இயற்பெயர்
      பத்தரை    
344. பொருந்தாக்காமம் என்பது
      பெருந்திணை
345. மகாபுராணத்தைத் தழுவி இயற்றப்பட்ட காப்பியம்
      சூளாமணி
346. பெருங்கதையின் மூல நூல்
      பிருகத் கதா
347. கம்பராமாயணத்தின் முதல் காண்டம்
      பால காண்டம்
348. அருண்மொழித் தேவர் என்பது யாருடைய இயற்பெயர்?
      சேக்கிழார் 
349. ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்
      கபிலர்
350. பெரிய புராணத்துக்குச் சேக்கிழார் இட்ட பெயர்
      திருத்தொண்டர் புராணம்
351. திருவிளையாடற் புராணம் எந்தத் தலத்துக்குரிய புராணம்?
      மதுரை    
352. சீறாப்புராணத்தின் முதல் காண்டம்
      விலாதத்துக் காண்டம்
353. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
      இத்தாலி
354. தேம்பாவணியின் காப்பியத் தலைவர்
      வளனார்   
355. மேருமந்திர புராணம் இயற்றியவர்
      வாமன முனிவர்
356. புலவராற்றுப்படை எனப்படும் நூல்
      திருமுருகாற்றுப்படை
357. மதுரைக் காஞ்சியை இயற்றியவர்
      மாங்குடி மருதனார்
358. அரிச்சந்திர புராணம் எழுதியவர்
      வீரை ஆசுகவிராயர்
359. உத்தர ராமாயணம் எழுதியவர்
      ஒட்டக் கூத்தர்
360. வாயுறை வாழ்த்து எனப்படுவது
      திருக்குறள் 
361. சரியை நெறியில் இறைவனைப் பாடியவர்
      திருநாவுக்கரசர்
362. பன்னிரு திருமுறையைத் தொகுத்தவர்
      நம்பியாண்டார் நம்பி
363. திலகவதியார் யாருடைய தமக்கை?
      திருநாவுக்கரசர்
364. நம்பியாருரார் எனப்படும் நாயன்மார்
      சுந்தரர்
365. வன்தொண்டன் எனப்படுபவர்
      சுந்தரர்
366. மாணிக்கவாசகரின் இயற்பெயர்
      திருவாதவூரார்
367. திருவெழு கூற்றிருக்கை எழுதியவர்
      நக்கீரர்
368. காசிக் கலம்பகம் இயற்றியவர்
      குமரகுருபரர்
369. திராவிட சாகரம் எனப்படுவது
      நாலாயிர திவ்விய பிரபந்தம்
370. முதலாழ்வார்கள் இறையனுபவம் பெற்ற ஊர்
      திருக்கோவிலூர்
371. திருமழிசையாழ்வாரின் சீடர்
      கணிகண்ணன்
372. திருப்பல்லாண்டு பாடியவர்
      பெரியாழ்வார்
373. வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து - இவ்வரி இடம்பெற்ற நூல்
      நாச்சியார் திருமொழி
374. கண்ணிநுன் சிறுத்தாம்பு எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடியவர்
      மதுரகவியாழ்வார்
375. திருமங்கையாழ்வார் திருமாலுடைய எதன் அம்சமாகப் பிறந்தவர்?
      வில்
376. பெருமாள் திருமொழி பாடியவர்
      குலசேகராழ்வார்
377. திருவாசிரியம் இயற்றியவர்
      நம்மாழ்வார்
378. இருபத்து நாலாயிரப்படி உரையெழுதியவர்
      பெரியவாச்சான் பிள்ளை
379. பெண்மதிமாலை எனும் நூலை எழுதியவர்
      மாயூரம் வேதநாயகம்பிள்ளை
380. தைரிய நாதர் என்றழைக்கப்படுபவர்
      வீரமாமுனிவர்
381. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
      ஜி.யூ.போப்
382. பொருளற்ற ஒலிகளை எழுப்பும் பிள்ளைத்தமிழ்ப் பருவம்
      செங்கீரை
383. பிரபந்த காலம் என்று குறிப்பிடப்படுவது
      நாயக்கர் காலம்
384. ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் - இவ்வரி இடம்பெற்ற நூல்
      குற்றாலக் குறவஞ்சி
385. பிள்ளைத்தமிழில் முதற் பருவம்
      காப்புப் பருவம்
386. முதல் பிள்ளைத்தமிழ் நூல்
      குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
387. கலம்பகத்தில் இடம்பெறும் உறுப்புகள்
      18
388. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்
      மூன்றாம் நந்திவர்மன்
389. ஆங்கிலக் கல்வியை பேடிக்கல்வி என்று சாடியவர்
      பாரதியார்  
390. எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடியவர்
      பாரதிதாசன்
391. மணிமேகலை வெண்பா பாடியவர்
      பாரதிதாசன்
392. அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலை எழுதியவர்
      கண்ணதாசன்
393. சிறுகதை வளரச்சிக்குப் பெரும்பங்காற்றிய இதழ்
      மணிக்கொடி     
394. ஊசிகள் எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
      மீரா
395. காவிய காலம் எனும் நூலின் ஆசிரியர்
      வையாபுரிப்பிள்ளை
396. தமிழ்க் காதல் எனும் நூலை எழுதியவர்
      வ.சுப.மாணிக்கம்
397. பாரதியார் எழுதிய சிறுகதை
ஆறில் ஒரு பங்கு
398. தமிழ்நாட்டின் மாப்பசான் என்று போற்றப்படும் எழுத்தாளர்
      புதுமைப் பித்தன்
399. சி.சு.செல்லப்பா நடத்திய இதழ்
      எழுத்து
400. ஒரு பிடி சோறு எனும் கதையை எழுதியவர்
      ஜெயகாந்தன்
401. முதற்சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள்
      89
402. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள இயல்கள்
      9
403. ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர்
பேயனார்
404. பதிற்றுப் பத்தில் தற்போது கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை
      80
405. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல்
      புறநானூறு
406. நஞ்சும் உண்பர்; நனிநா கரிகர் எனும் தொடர் இடம்பெற்ற இலக்கியம்
      நற்றிணை
407. கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
      150
408. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர்
  நல்லந்துவனார்
409. தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ - இத்தொடர் இடம்பெற்ற நூல்
      பரிபாடல்
410. சிறுபாணாற்றுப்படையில் போற்றப்படும் மன்னன்
நல்லியக்கோடன்
411. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளை உடையது?
      782
412. வஞ்சிநெடும்பாட்டு என்றழைக்கப்படுவது
பட்டினப்பாலை
413. வணிகப் பரிசிலேன் அல்லேன் என்று பாடிய புலவர்
      பெருஞ்சித்தரனார்
414. திரிகடுகம் இயற்றியவர்
      நல்லாதனார்
415. குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - இத்தொடர் இடம்பெறும் நூல்
      பழமொழிநானூறு
416. சிறுபஞ்சமூலம் பாடியவர்
காரியாசான்
417. ஐந்திணை எழுபது நூலை எழுதியவர்
      மூவாதியார்
418. சம்பந்தர் தேவாரத்தில் இன்று கிடைக்கும் பாடல்கள்
      584
419. தம்பிரான் தோழர் என்றழைக்கப்படுபவர்
      சுந்தரர்
420. தாண்டக வேந்தர் என்றழைக்கப்படுபவர்
      திருநாவுக்கரசர்
421. அழுது அடியடைந்த அன்பர் என்று போற்றப்படுபவர்
       மாணிக்கவாசகர்
422. நம்மாழ்வாரின் இயற்பெயர்
       மாறன்
423. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர்
      நாதமுனி
424. ஆசாரிய இருதயம் நூலை எழுதியவர்
      அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
425. வியாக்கியான சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் வைணவ உரையாசிரியர்
      பெரிய வாச்சான் பிள்ளை
426. சேக்கிழாரிடம் பெரியபுராணத்தைப் பாடும்படிச் சொன்ன மன்னன்
      அநபாயன்
427. சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதியவர்
      அடியார்க்கு நல்லார்    
428. ஈடு என்றழைக்கப்படும் திருவாய்மொழி உரையை எழுதியவர்
      வடக்குத் தெரு வீதிப்பிள்ளை
429. ஐஞ்சிறு காப்பியங்கள் எந்தச் சமயத்தைச் சார்ந்தவை
      சமணம்
430. வச்சணந்தி மாலை எனும் நூலின் ஆசிரியர்
      குணவீர பண்டிதர்
431.மன்மதன் ஆடிய கூத்து
       பேடு
432. பழிநாணுவான் - பெயர்ச்சொல்லின் வகை என்ன?
      வினையாலனையும் பெயர்
433. தஞ்சை கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது - என்ன வகை வினை?
      செயப்பாட்டு வினை
434. புலி - பெயர்ச்சொல்லின் வகை என்ன?
      பொருட்பெயர்
435. உலகம் மகிழ்ந்தது - என்ன வகை ஆகுபெயர்?
      இடவாகுபெயர்
436. கண்டேன் - வேர்ச்சொல்லைக் கண்டறிக.
      காண்
437. பேறு பெற்றான் - பெயர்ச்சொல்லின் வகை என்ன?
      முதனிலை திரிந்த தொழிற்பெயர்
438. வெற்றிலை நட்டான் - என்ன வகை ஆகுபெயர்?
      சினையாகுபெயர்
439. தழீஇ - என்ன அளபெடை?
      சொல்லிசையளபெடை
440. வெல் - இந்தச் சொல்லுக்குரிய தொழிற்பெயர்
      வெல்லுதல்
441. தொல்காப்பியர் சுட்டும் முதல் அறிவு எது?
      உற்றறிதல்
442. முல்லை நிலக் கடவுளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
      மாயோன்
443. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று கூறும் இலக்கண நூல்
      நன்னூல்
444. போர் வீரர்களுக்காக ஆடப்பட்ட கூத்து
      குரவைக்கூத்து
445. காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று பாடிய சித்தர்
      பட்டினத்தார்
446. தோல் என்பது
      வனப்பு
447. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்று இறைவனைப் போற்றியவர்
      மாணிக்கவாசகர்
448. கடல்பிறகோட்டிய செங்குட்டவனைப் பாடும் பதிற்றுப்பத்தின் பகுதி
      ஐந்தாம் பத்து
449. பதிற்றுப் பத்தில் இடம்பெறும் ஐந்தாம் பத்தைப் பாடியவர்
      பரணர்
450. நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று - இத் தொடர் இடம்பெற்ற நூல்
குறுந்தொகை
451. நற்றிணையைத் தொகுப்பித்தவன்
      பன்னாடு தந்த மாறன்வழுதி
452. குறிஞ்சிக்கலிப் பாடல்களைப் பாடியவர்
      கபிலர்
453. ஈன்று புறந்தருத லென்றலைக் கடனே - இவ்வடி இடம்பெற்ற நூல்
      புறநானூறு
454. புலவராற்றுப்படை எனப் போற்றப்படும் இலக்கியம்
      திருமுருகாற்றுப்படை
455. எட்டுத் தொகையில் அகமும் புறமும் கலந்த தொகை நூல்
பரிபாடல்
456. அஷ்டப் பிரபந்தம் எனப்படும் எட்டு நூல்களை இயற்றியவர்
      பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
457. ரிக் வேதத்தின் சாறாகக் கருதப்படும் நூல்
      திருவாசிரியம்
458. நம்மாழ்வாரின் சீடராக விளங்கிய ஆழ்வார்
      மதுரகவியாழ்வார்
459. மணிமேகலை எந்த பா வகையைச் சேர்ந்தது?
      ஆசிரியப்பா
460. இலம்பகங்களாகப் பகுக்கப்பட்ட காப்பியம்
      சீவகசிந்தாமணி
461. குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுவது
      சிலப்பதிகாரம்
462. இரட்சணிய மனோகரம் எனும் நூலை எழுதியவர்
      எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
463. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்த கிறித்தவர்
      வீரமாமுனிவர்
464. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் காப்பியத்தை எழுதியவர்
      பாரதிதாசன்
465. தமிழின் முதல் இதழ்
      மாச தினச் சரிதை
466. தி இந்து நாளிதழின் நிறுவனர்
      ஜி.சுப்ரமணிய அய்யர்
467. கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
      திலகவதி
468. மானாவரிப்பூ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்
மேலாண்மை பொன்னுச்சாமி
469. இயேசு காவியம் பாடியவர்
      கண்ணதாசன்
470. சித்திரப்பாவை நாவலை எழுதியவர்
      அகிலன்
471. பிலகணீயம் எனும் வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட காப்பியம்
      புரட்சிக்கவி
472. வாடாமல்லி நாவலை எழுதியவர்
      சு.சமுத்திரம்
473. ஒரு கிராமத்து நதி எனும் கவிதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்
      சிற்பி
474. சிலுவை ராஜ் சரித்திரம் நாவலை எழுதியவர்
ராஜ் கவுதமன்
475. தமிழின் முதல் வர்க்கப் போராட்ட நாவலாகக் கருதப்படுவது
பஞ்சும் பசியும்
476. வெண்மணிச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்
      செந்நெல்
477. குலசேகராழ்வார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
      சேரநாடு
478. மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி என்று திருமாலை குழந்தையாகப் பாவித்துப் பாடியவர்
      பெரியாழ்வார்
479. தென்குருகூர் நம்பி என்றழைக்கப்படுபவர்
      மதுரகவியாழ்வார்
480. திருவாரூர்ப் பள்ளு நூலை இயற்றியவர்
      கமலை ஞானப்பிரகாசர்
481. இந்திரையோ யிவள் சுந்தரியோ - இவ்வடி இடம்பெற்ற நூல்
      குற்றாலக்குறவஞ்சி
482. தாலாட்டுப் பாடும் பிள்ளைத் தமிழ்ப் பருவம்
      தாலப்பருவம்
483. திருமுருகாற்றுப்படையை இயற்றியவர்
      நக்கீரர்
484. பெத்லகேம் குறவஞ்சி எழுதியவர்
      வேதநாயக சாத்திரியார்
485. கிறித்தவமும் தமிழும் எனும் நூலை எழுதியவர்
      மயிலை சீனி. வேங்கடசாமி
486. சதாவதானி என்றழைக்கப்படும் இஸ்லாமியப் புலவர்
செய்குத்தம்பிப் பாவலர்
487. அவனும் அவளும் எனும் நூலை எழுதியவர்
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
488. உவமைக்கவிஞர் என்றழைக்கப்படுபவர்
      சுரதா
489. குழந்தைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்
      அழ.வள்ளியப்பா
490. இரவு மிருகம் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
சுகிர்தாராணி
491. ஹைகூ கவிதைகள் எத்தனை அடிகளை உடையவை?
      மூன்று
492. பயணக் கட்டுரைகள் எழுதுவதில் முன்னோடியாக விளங்கியவர்
ஏ.கே.செட்டியார்
493. மனுமுறை கண்ட வாசகம் எனும் உரைநடை நூலை எழுதியவர்
வள்ளலார்
494. கொடுந்தமிழ் இலக்கணம் எழுதியவர்
வீரமாமுனிவர்
495. சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலை எழுதியவர்
      ஜெயகாந்தன்
496. கதவு எனும் கதையை எழுதியவர்
      கி.ராஜநாராயணன்
497. தமிழின் முதல் சோசலிச யதார்த்தவாத நாவல் என்று அழைக்கப்படுவது
      பஞ்சும் பசியும்
498. சுதந்திரப் போராட்ட காலப் பின்னணியுடன் கல்கி எழுதிய நாவல்
அலை ஓசை
499. ஞானபீட பரிசு வென்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்
      ஜெயகாந்தன்
500. யவன ராணி எனும் வரலாற்று நாவலை எழுதியவர்
      சாண்டில்யன்
501. தொல்காப்பியர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்?
சமணம்
502. புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர்
உ.வே.சாமிநாதர்
503. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - இவ்வடி இடம்பெற்ற இலக்கியம்
புறநானூறு 
504. சோழர்களின் கொடிச்சின்னம்
      புலி
505. யாப்பெருங்கலக் காரிகை நூலை இயற்றியவர்
      அமித சாகரனார்
506. காவடிச்சிந்து எழுதியவர்
அண்ணாமலை ரெட்டியார்
507. சிறுபாணாற்றுப்படையை எழுதியவர்
      நல்லூர் நத்தத்தனார்    
508. நெயதற் திணைக்குரிய நிலம்
      கடலும் கடல் சார்ந்த இடமும்
509. அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?
      ஐய வினா
500. காவிய காலம் எனும் நூலை எழுதியவர்
வையாபுரிப் பிள்ளை
511. ஆள் - என்ன விகுதி?
      பெண்பால் வினைமுற்று
512. வினையெச்சம் எது?
      ஓடி
513. கண்டேன் - இடம் குறிப்பிடுக.
      தன்மை
514. சேர சோழ பாண்டியர் - இலக்கணக் குறிப்பு தருக.
      உம்மைத்தொகை
515. கருங்கூந்தல் - இலக்கணக் குறிப்பு தருக.
      பண்புத் தொகை
516. பால் குடித்தேன் - மறைந்திருக்கும் வேற்றுமை உருபு
      இரண்டாம் வேற்றுமை உருபு
517. அவள் பாடினான் என்பது
      வழு
518. அவள் வருவாளா? - எவ்வகை வாக்கியம்?
      வினா வாக்கியம்
519.பணத்தைக் கொடு - எவ்வகை வாக்கியம்?
      கட்டளை வாக்கியம்
520. கரிய - என்ன வகை எச்சம்?
      குறிப்புப் பெயரெச்சம்
521. கன்றுக்குட்டி வந்தாள் - எவ்வகை வழு?
      திணை வழு
522. நாய் கத்தியது - எவ்வகை வழு?
      மரபு வழு
523. வருவிருந்து - எவ்வகைத் தொகை?
      வினைத்தொகை
524. அகவன் மகளே! எவ்வகைத் தொடர்?
      விளித் தொடர்
525. பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
      பெயரெச்சம்
526. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - இத்தொடரில் பயனிலை எது?
இயற்றினார்
527.முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது
      கார்
528. தமிழ்ப்புலவர் சரித்திரம் எழுதியவர்
      சுன்னாகம் குமாரசாமிப் புலவர்
529. பரமார்த்த குருவின் கதை எழுதியவர்
      வீரமாமுனிவர்
530. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
திருவாதவூர்
531. அப்பர் பாடியது
4,5 மற்றும் ஆறாம் திருமுறைகள்
532. தகடூரை ஆண்ட மன்னன்
அதியமான் 
533. மலைப்படுகடாம் இயற்றியவர்
பெருங்கவுசிகனார்
534. பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்
இளஞ்சேரலிரும்பொறை
535. கதரின் வெற்றி நாடகத்தை எழுதியவர்
கிருஷ்ணசாமிப் பாவலர்
536. முதற்குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவன்
கருணாகரத் தொண்டைமான்
537. பேயாழ்வார் பிறந்த ஊர்
      மயிலை   
538. ஆண்டாளின் இயற்பெயர்
கோதை
539. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர்
      நீலன்
540. யாழ் நூல் எழுதியவர்
      விபுலானந்தர்
541. விமரிசனக்கலை எனும் நூலை எழுதியவர்
க.நா.சுப்ரமணியன்
542. செய்யுட்குரிய உறுப்புகளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
 34
543. பத்தரை என்பது யாருடைய இயற்பெயர்
      குண்டலகேசி
544. பாடுகின்ற ஆண்மகனைக் குறிக்கும் திணை
      பாடாண் திணை
545. கலிப்பாவுக்குரிய ஓசை
      துள்ளல்
546. முதலெழுத்து ஒன்றி வருவது
      மோனை   
547. தொல்காப்பியர் குறிப்பிடும் அங்கத வகைகள்
      இரண்டு
548. வாதவூரார் என்பது யாருடைய இயற்பெயர்?
      மாணிக்கவாசகர்
549. இடையெழுத்து மிகுந்து வரும் வண்ணம்
      இயைபு வண்ணம்
550. பெரியபுராணத்தில் நந்தனார் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்?
      திருநாளைப்போவார் நாயனார்
551. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
      176
552. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் எனத்தொடங்கும் இலக்கியம்
கம்ப ராமாயணம்
553. பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர்
      பெருங்குனறுர்க்கிழார்
554. பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி
      மூன்றாம் பத்து
555. அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர்
      முத்துத் தம்பிப்பிள்ளை
556. பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்
      குடியரசு
557. மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர்
      ஆ.சிவசுப்பிரமணியன்
558. பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர்
      தொ.பரமசிவன்
559. பாலைத் திணைக்குரிய புறத்திணை
      வாகை
560. உழிஞை எதற்குரிய புறத்திணை?
      மருதம்
561. பொருநராற்றுப்படையின் ஆசிரியர்
      முடத்தாமக் கண்ணியார்
562. முல்லைப் பாட்டை இயற்றியவர்
      நப்பூதனார்
563. அகநானூற்றின் முதல் நூற்றிருபது பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
      களிற்றியானை நிரை
564. திணைமாலை நூற்றைம்பது நூலை எழுதியவர்
      கணிமேதாவியார்
565. நிஜ நாடக இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
      மு.ராமசாமி
566. திரிகடுகம் எழுதியவர்
      நல்லாதனார்
567. தேடுடைய செவியன் விடையெறி என்று இறைவனைப் போற்றியவர்
அ.ஞானசம்பந்தர்
568. திருக்கைலயாய ஞான உலா பாடியவர்
      சேரமான் பெருமான் நாயனார்
569. திருவெண்காடர் எனப்படும் சித்தர்
      பட்டினத்தார்
570. யாப்பெருங்கலம் இயற்றியவர்
      குணசாகரர்
571. திருக்களிற்றுப்படியார் பாடியவர்
உய்யவந்த தேவநாயனார்
572. சைவசித்தாந்த சாத்திர நூல்கள்
      14
573. உமாபதி சிவாச்சாரியார் பாடிய சாத்திர நூல்களின் எண்ணிக்கை
      8
574. சிவஞான போதம் இயற்றியவர்
மெய்கண்டதேவர்
575. முன்னை யிட்டதீ முப்புரத்திலே எனும் பாடலைப் பாடியவர்
      பட்டினத்தார்
576. திருக்குறள் வடிவில் எழுதப்பட்ட சாத்திர நூல்
      திருவருட்பயன்
577. சிவப்பிரகாசம் இயற்றியவர்
      உமாபதி சிவாச்சாரியார்
578. இருபத்து நாலாயிரப்படி உரையெழுதியவர்
      பெரியவாச்சான் பிள்ளை
579. திருவானைக்காவுலா எழுதியவர்
காளமேகப்புலவர்
580. சேது புராணம் எழுதியவர்
      நிரம்பவழகிய தேசிகர்
581. லிங்கபுராணம் இயற்றியவர்
      அதிவீரராமபாண்டியர்   
582. திருப்புகழ் பாடியவர்
      அருணகிரிநாதர்
583. பிரபுலிங்க லீலை எழுதியவர்
      சிவப்பிரகாசர்
584. ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி - இவ்வரி இடம்பெற்ற நூல்
முக்கூடற்பள்ளு
585. எல்லப்ப நாவலர் எழுதிய புராணம்
அருணாச்சலப் புராணம் 
586. அபிராமி அந்தாதி பாடியவர்
      அபிராம பட்டர்
587. தொண்டை மண்டல சதகம் பாடியவர்
      படிக்காசுப் புலவர்
588. திராவிடப் பிரகசிகை எனும் நூலை எழுதியவர்
      சபாபதி நாவலர்
589. கைவல்ய நவநீதம் எழுதியவர்
      தாண்டவ மூர்த்தி
590. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர்
      மீனாட்சி சுந்தரம்பிள்ளை
591. நூற்றாண்டு அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்
      மு.அருணாசலம்
592. விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலை எழுதியவர்
ம.பொ.சிவஞானம்
593. 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
      சு.வெங்கடேசன்
594. கருப்பு மலர்கள் எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
      நா.காமராசன்
595. என் சரித்திரம் எனும் நூலின் ஆசிரியர்
      உ.வே.சாமிநாதய்யர்
596. இலக்கியக்கலை எனும் நூலை எழுதியவர்
      அ.ச.ஞானசம்பந்தன்
597. பாற்கடல் எனும் சிறுகதையை எழுதியவர்
      ல.ச.ராமாமிர்தம்
598. ஒற்றை ரோஜா எனும் கதையை எழுதியவர்
      கல்கி
599. சல்லிக்கட்டு குறித்து சி.சு.செல்லப்பா எழுதிய நாவல்
வாடிவாசல்
600. நாளை மற்றுமொரு நாளே எனும் நாவலை எழுதியவர்
ஜி.நாகராஜன்

No comments:

Post a Comment