Monday 26 September 2016

லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா

1966 ல், மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில், Administrative Reforms Commission (ARC) அன்மிஸிஸ்டிரேடிவ் ரிபார்ஸ் கமிஷன் ஒன்றின் பரிந்துரையில், மத்திய அரசில் லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா என்னும் அமைப்புக்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியது. லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா என்பவர் மத்திய மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அதிகாரி. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கலாம். அவர் கீழ் அமையும் அமைப்புக்கு, பொது மக்கள் தொடுக்கும், புகாரின் பேரில், அரசு ஊழியர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பற்றிய ஊழல்களை, தவறுகளை விசாரிக்கவும் தண்டனை அளிக்கவும் அதிகாரம் இருக்கும். அந்த மாதிரியான விசாரனையில், பொது மக்களின் குறைகளை விரைவில் களைய ஒரு வழி கிடைக்கும் என்று முடிவானது.
1971 ல் முதன் முதலாய், மகாராஷ்டிர மாநிலத்தில், லோக் ஆயுக்தா நியமிக்கப் பட்டார். அடுத்து 19 மாநிலங்களில் லோக் ஆயுத்தா நியமிக்கப் பட்டனர். மற்ற இதர மாநிலங்களில் இன்னும் நியமிக்கப் படவில்லை, குறிப்பாக இதுவரை தமிழகத்தில் லோக் ஆயுத்தா உள்ளே நுழையவே இல்லை. கர்நாடக மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன், சந்தோஷ் ஹெக்டே அவர்கள் லோக் ஆயுத்தா வாக தீவிர மாக செயல் பட்டு, 12,000 கோடி சுரங்க ஊழலை கண்டு பிடித்து, முதலமைச்சராய் இருந்த திரு யெடியூரப்பா அவர்களை சிறைக்கு அனுப்பினார். குஜராத்தில், திரு நரேந்திர மோடி பல காலமாய் லோக் ஆயுக்தா நியமிக்க தடையாய் இருந்து, இறுதியில் கவர்னரின் குறிக்கீடில் நியமிக்கப் பட்டார்.
சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா செயல் படுத்தப் பட்டதே தவிர, மத்திய அரசில் வரவேண்டிய, லோக் பால் என்ற அமைப்பு வரவே இல்லை. அப்படி ஒரு அமைப்பை கொண்டு வரவே, திரு அன்னா ஹாசாரே அவர்கள் தலைமையில் ஒரு புரட்சி துவங்கியது

No comments:

Post a Comment