Thursday 22 September 2016

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு
1.     36வது அரசியலமைப்புத் திருத்தம் சிக்கிம் மாநிலத்தை எத்தனையாவது மாநிலமாக மாற்றியது - 22வது மாநிலமாக

2.
நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்பின் மீது பாராளுமன்றம் சட்டமியற்ற வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 250

3.
அரசியலமைப்பில் 63வது ஷரத்து குறிப்பிடுவது - நகர்பாலிகா

4.
பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ள தலைப்பாகும் - பொதுப் பட்டியல்

5.
குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்தின் கால வீச்சு - 6 வாரங்கள்

6.
பாராளுமன்றத்தின் இரு சபைகளில் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் முரண்பாடு ஏற்பட்டால் எந்த சபைக்கு அதிகாரம் அதிகமாக உள்ளது - இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது.

7.
உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும் - 6 மாதங்களுக்குள்

8.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை - 3

9.
இந்திய அரசியலமைப்பு 395 ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.

10.
புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950



11.
அரசியலமைப்பு இந்தியாவை - மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

12.
முகவுரையைத் திருத்திய அரசியலமைப்பின் திருத்தம் - 42வது திருத்தம்.

13.
இந்திய குடியரசுத் தலைவரே அட்டர்னி ஜெனரலை நியமிக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 76

14.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷர்தது 320

15.
இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை - நர்கீஸ் தத்

16.
அதிகாரப் பட்டியல்களில் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது - மத்திய அரசு வசம்

17.
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அலுவலரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்.

18.
மதசார்பின்மை என்பது குறிப்பது - எல்லா மதமும் சமம்

19.
பத்திரிக்கைச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

20.
பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராகவும் பேசவும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாது. அவர் அட்டர்னி ஜெனரல்

21.
இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம்

22.
குடியரசுத் தலைவர் இதுவரை மூன்று முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்.

23.
இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம்

24.
பாராளுமன்றத்தில் ஒரு சபையில் தலைமை வகித்தாலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாதவர் - துணை குடியரசுத் தலைவர்

25.
மக்களவையில் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவது - நிதியமைச்சர்



26.
பாராளுமன்ற அரசாங்க முறையில் யார் கேபினெட் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது - பிரதமர்

27.
இந்தியாவில் பொதுநல அரசை நிறுவ மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழிகாட்டும் நன்னெறிக் கோட்பாடுகள் - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

28.
பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் - 30 உறுப்பினர்கள்

29.
அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கத் தேவைப்படுவது - அரசியலமைப்பு திருத்தம்

30.
மக்களவையின் தலைமைச் செயலகம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழே இயங்குகிறது - சபாநாயகர்

31.
மரணம், இராஜிநாமா, பதவி நீக்கம் ஆகியவை காரணமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த நேரிட்டால் அப்பதவி காலியானதிலிருந்து எத்தனை மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - 6 மாதங்கள்

32.
குடியரசுத் தலைவருக்கெதிராக குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன் எத்தனை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் - 14 நாட்கள்

33.
இந்தியாவில் உள்ள அரசாங்க வகை - பாராளுமன்ற அரசாங்கம்

34.
மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக அங்கத்தினர்களாக இருக்க வேண்டியது - பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில்

35.
மக்களவைக்கு நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர்கள் - இருவர்

36.
இந்திய அரசியல் நிர்ணய சபை - காபினெட் மிஷன் திட்டம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.

37.
இந்தியாவில் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952

38.
இந்தியா குடியரசாக மாறிய ஆண்டு - 1950

39.
மக்களவையி்ன் சபாநாயகரை பதவி நீக்கம் செய்வது - மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானம் மூலமாக

40.
மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது.

41.
ஒரு மசோதா மீதான முரண்பாடு குறித்த பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்

42.
இந்திய அரசிலமைப்பை உருவாக்கியது - இந்திய அரசியல் நிர்ணயசபை

43.
ஒரு சபையின் உறுப்பினராக அல்லதா ஒருவர் அதன் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் - துணைக் குடியரசுத் தலைவர்

44.
சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருப்பது - பாராளுமன்றம்

45.
இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் தலைவர்

46.
மத்திய அமைச்சரவை பொறுப்பாக இருப்பது - லோக்சபைக்கு

47.
குடியரசுத் தலைவர் தம்க்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும் - அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்

48.
ஆசியராக இருந்து பின்னர் குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர் - டாக்டர். இராதாகிறுஷ்ணன்

49.
மக்களவைப் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் - பிரதமர்

50.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த வழக்குகளில் முடிவெடுப்பது - உச்சநீதிமன்றம்



51.
அமைச்சரவை யாருக்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்லது - மக்களவைக்கு

52.
இந்திய பாராளுமன்றத்தில் அடங்குவது - குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை

53.
குடியரசுத்தலைவரின் ஊதியம் வருமான வரிக்கு உட்படாதது.

54.
ஒரு மசோதா நிதி மசோதாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர் - சபாநாயகர்

55.
இந்திய அரசியலமைப்பில் பொதுநலக் கோட்பாடு எதில் பிரதிபலிக்கிறது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

56.
குடியரசுத் தலைவர் ஒரு சாதாரண மசோதாவை மீண்டும் சபைக்கு எத்தனை முறை திருப்பி அனுப்பலாம் - ஒரு முறை

57.
புதிய மாநிலத்தை உருவாக்கத் தேவைப்படும் பெரும்பான்மை - பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை

58.
இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு ஏனெனில் அதிகாரப் பிரிவினை உள்ளது.

59.
இராஜ்யசபை பண மசோதாவைப் பொறுத்தவரை காலதாமதம் செய்யக்கூடிய கால அவகாசம் - 14 நாட்கள்

60.
இராஜ்யசபையில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்

61..
இரட்டைக் குடியுரிமை முறை கொண்ட நாடுகளுக்கு உதாரணம் - அமெரிக்கா, சுவிட்சர்லாந்து

62.
வாக்குரிமை பெற நிறைவடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது - 18

63.
நீதி மறுபரிசீலனை என்பது - சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது

64.
சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது - அரசியல் சமத்துவம்

65.
நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது - சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது

66.
அமைச்சரவை கூட்டாக - பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது.

67.
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலாக பிரிக்கப்பட்ட மாநிலம் - பம்பாய் (பம்பாய் மாகாணம் மகாராஷ்ட்ரா + குஜராத் என்று பிரிக்கப்பட்டது)

68.
மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1969

69.
ஆந்திர மாநிலம் முதல் முதலாக மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - அக்டோபர் 1, 1953

70.
இந்தியாவின் 25வது மாநிலம் - கோவா

71.
இந்தியாவிற்கு கிரிப்ஸ் குழு வருகை தந்த ஆண்டு - 1942

72.
இந்தியாவில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலம் - உத்திரபிரதேசம்

73.
இந்திய அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சம் - கூட்டு சேராமை

74.
நவீன இந்தியாவின் சிற்பி - ஜவகர்லால் நேரு

75.
காந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு - 1931



76.
அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு உரிமைகளை உயர்நீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து - 226

77.
இந்தியா பின்பற்ரும் ஆட்சி முறை - பாராளுமன்ற மக்களாட்சி முறை

78.
மறைமுக மக்களாட்சி முறையில் முக்கியப் பங்கு வகிப்பவை - அரசியல் கட்சிகள்

79.
அரசாங்கத்தில் ஆளும் கட்சியைக் கண்காணிக்கும் கட்சி - எதிர்க்கட்சி

80.
திட்டமிடுதல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப் பட்டியல்

81.
மின்சாரம் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப் பட்டியல்

82.
மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை எந்த பட்டியலில் உள்ளது - பொதுப்பட்டியல்

83.
காடுகள் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப்பட்டியல்

84.
காவல் துறை என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - மாநிலப் பட்டியல்

85.
விவசாயம் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - மாநிலப் பட்டியல்

86.
திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 368

87.
அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு ஆணைகளை உச்சநீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 32

88.
தேரதல் ஆணையம் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 324

89.
இந்தியாவில் அடிப்படை உரிமைகளை யார் தற்காலிகமாக இரத்து செய்ய இயலும் - குடியரசுத் தலைவர்

90. 42
வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1976

91.
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை இணைத்த திருத்தம் - 42வது திருத்தம்

92.
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950

93.
இந்தியாவின் இறைமை மிக்கவர் - மக்கள்

99.
மத சார்பின்மையைப் பின்பற்றும் நாடு - இந்தியா

100.
இந்தியாவின் ஆட்சி மொழி – இந்தியா
தேர்தல்கள் - THE ELECTIONS

*
இந்தியாவில் நாம் பின்பற்றி வரும் தேர்தல் முறை, இங்கிலாந்தின் தேர்தல் முறையை ஒட்டியே அமைந்துள்ளது.

*
தேர்தல்களை நடத்தவும், கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் வயதுற்றோர் வாக்குரிமையின் அடிப்படையில் நடைபெறும்.

*
அதாவது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது பொருத்தமான சட்ட அவையினால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், குடியிருக்காமை, மனநலமின்மை, குற்றம், முறைகேடான, சட்டவிரோதமான நடவடிக்கை ஆகிய காரணங்களுக்கான தகுதி இழக்காதவரும், எந்தத் தேர்தலிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்படத் தகுந்தவராவார் .

*
அரசியலமைப்பின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

*
தேர்தல் ஆணையம், ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையும், அவ்வப்போது குடியரசுத் தலைவர் வதிக்கும் ஏதாவதொரு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர்களையும் உள்ளடக்கி இருக்கும்.

*
பாராளுமன்றம் இது விஷயமாக இயற்றி இருக்கும் சட்டங்களுக்குட்பட்டு, தலைமைத்தேர்தல் ஆணையரும், பிற தேரதல் ஆணையர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்.

*
மக்களவை மற்றும் ஒவ்வொரு மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலின்போதும், சட்ட மேலவை உள்ள இடங்களில் சட்ட மேலவைக்கான தேர்தல்

நடைபெறும்போதும் ஆணையத்துக்கும் வழங்கப்பட்ட பொறுப்புக்களை செயல்படுத்துவதில் தேர்தல் ஆணையத்துக்கு உதவுவதற்காக, குடியரசுத் தலைவர், தேர்தல் ஆணையத்தைக் கலந்தாலோசித்த பின், தாம் விரும்பும் எண்ணிக்கையில் பிராந்திய ஆணையர்களையும் நியமிக்கலாம்.

*
உச்சநீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான காரணங்கள் மற்றும் முறைகளைத் தவிர வேறு வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் நிமிக்கப்பட்ட பிறகு, அவரது பணிச்சூழல்கள் அவருக்குப் பாதமாக மாற்றப்பட மாட்டாது.

*
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின்றி, எந்தத் தேர்தல் ஆணையரும் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார்.

*
பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மற்றும் மாநில சட்டப்பேரவையின் இரு அவைகளுக்கும் தேர்தல் நடத்துவது சம்மந்தமாக வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் அவைகளை முறையாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து விஷயங்கள் பற்றியும் சட்டமியற்றும் அதிகாரத்தினை Art-327 பாராளுமன்றத்திற்கு அளிக்கிறது.

*
தேர்தல் பற்றிய வழக்குகளை, பாராளுமன்றம் அல்லது சட்டப்பேரவை, சட்டமியற்றிக் குறிப்பிட்டுள்ள அமைப்புகளிடம் முறைப்படி தேர்தல் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

*
மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கே உண்டு.

*
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். ஆயினும் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரிக்க முடியும்.

*
தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்திற்கென சில சிறப்பு ஏற்பாடுகளை நமது அரசியலமைப்பு செய்துள்ளது.

*
உச்சநீதிமனற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றியே, தலைமைத் தேர்தல் ஆணையரையும் பதவி நீக்கம் செய்ய இயலும். 

*
மேலும் தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தின் போது அவரது பயன்பாடுகளுக்கு பாதகம் ஏற்படும் எந்த வித செயலையும் மேற்கொள்ள இயலாதவண்ணம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

*
பிற தேர்தல் ஆணையர்களையும், மண்டல தேர்தல் ஆணையர்களையும், தலைமை தேர்தல் ஆணையரின் பிரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய இயலும்.

*
தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும். இதில் எது முன்னரே நடைமுறைக்கு வருகிறதோ அதன்படி அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரும்.

*
மேலும் தேர்தல் ஆணையர் மீண்டும் நியமிக்கப்பட தகுதியுடையவரல்ல. அவ்வாறே ஒன்றியத்திலோ மாநிலங்களிலோ எந்த பதவியையும் வகிக்க இயலாது.

*
ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தது 4 மாநிலத்தில் போட்டியிட வேண்டும். மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் அக்கட்சிக்கு இருக்க வேண்டும். இந்த விதிகளை அக்கட்சி பூர்த்தி செய்திருந்தால் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.

*
ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 2 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 3 சதவீ5த தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

*
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள்: 1. Bharatiya Janata Party பாரதிய ஜனதா கட்சி 2. Communist Party of India இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3.Communist Party of India (Marxist) மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4. Indian National Congress இந்திய தேசிய காங்கிரஸ் 5. bahujan Samaj Party பகுஜன்சமாஜ் கட்சி 6. Nationalist Congress Party தேசிய காங்கிரஸ் கட்சி

*
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில மாநிலக் கட்சிகள்: 1. Akali Dal (Punjab) 2. Assam Gana Sangram Parishad (Assam) 3. Dravida Munnetra Kazhagam(TN) 4. All India Anna Dravida Munnetra Kazhagam -AIADMK (TN) 5. Indian Union Muslim League (Kerala) 6.Kerala Congress 7. National Conference(J&K) 8. Telugu Desam (Andhra Pradesh) மேலும்...

* 61-
வது இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி 1988-ல் வாக்களிக்கும் வயது 21ல் இருந்து 18 ஆகாக் குறைக்கப்பட்டது. இது 1989 முதல் நடைமுறைக்கு வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியட இயலாது.

**
நெருக்கடி நிலைப் பிரகடனம் - THE EMERGENCY

*
இந்திய அரசிலமைப்பின் பகுதி -XVIII குடியரசுத் தலைவரின் நெருக்கடி கால அதிகாரங்களை மூன்று தலைப்புகளில் கூறுகிறது.

* Art.352-
ன்படி இந்தியாவின் எல்லைக்கு, போர் அல்லது வெளிநாட்டுப் படையெடுப்பின் மூலமோ, அல்லது இந்தியாவின் அமைதிக்கு ஆயுதமேந்திய உள்நாட்டுக்

கலவரத்தின் மூலமோ பாதிப்பு ஏற்பட்டால், நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

*
மாநில அரசுகள் அரசியமைப்புக்கு முரணாகச் செயல்படுகின்றன என்றால் நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் (Art.356)

*
நிதி நிலையில் (Art.360) நெருக்கடி ஏற்பட்டாலும் இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

* "
நெருக்கடி நிலைப் பிரகடனம்" Proclamation of emergency என்னும் சொல் Art.352-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய நெருக்கடி நிலையையே (National Emergency) குறிப்பிடுகிறது.

* Art.356-
ன் கீழ் பிரகடனப்படுத்தப்படும் மாநில நெருக்கடி நிலையை குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) என்று குறிப்பிடுவர்.

தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் - National Emergency

* Art.352-
ன்படி போர் அல்லது அந்நியப் படையெடுப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக இந்தியா முழுவதற்குமோ, அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதிக்கோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது என்ற கேபினட் தீர்மானம் பற்றி குடியரசுத் தலைவருக்கு எழுத்து மூலம் தகவல் கிடைத்து, அதில் குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால், இந்தியா முழுவதற்குமோ, அல்லது அதன் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமோ ஒர் அவசர நிலையை அவர் பிரகடனப்படுத்தலாம். அவசர நிலைப் பிரகடனங்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

*
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரகடனங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அப்பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் முதல் ஒரு மாதம் முடிவந்தவுடன் அவை செயலிழந்துவிடும்.

*
பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் இன்னொரு பிரகடனத்தால் குடியரசுத் தலைவர் அதனை ரத்து செய்யாதவரை அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மட்டுமே அவசர நிலைப்பிரகடனம் அமலில் இருக்கும்.

*
பின்னர் மீண்டும் பாராளுமன்றம் ஏற்றால் அடுத்து 6 மாத காலத்திற்கு நீடிக்கும்.

*
இவ்வாறாக 3 ஆண்டுகளுக்குத் தான் இவ்வறிவிப்பை நீட்டிக்க இயலும். அவசரநிலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கிற தீர்மானங்கள், அல்லது நீட்டிக்க வகை செய்யும் தீர்மானங்கள், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும்.

*
அவசர நிலை தொடர்பான ஒரு தீர்மானம் பற்றிய அறிவிப்பை அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்குக்குக் குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடமோ சமர்ப்பித்தால் அத்தீர்மானம் பற்றிப் பரிசீலிக்க, 14 நாட்களுக்குள் அவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

*
தாம் பிறப்பித்த நெருக்கடிப் பிரகடனத்தை, குடியரசுத் தலைவரே வாபஸ் பெறலாம். ஆனால் ஒன்றிய அமைச்சரவையின் எழுத்து வடிவிலான அனுமதியைப் பெற்ற பிறகே, குடியரசுத் தலைவர் இந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவிக்க இயலும்.

*
இந்த நெருக்கடி நிலைப்பிரகடனத்தைப் பொறுத்த வரை குடியரசுத் தலைவரின் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கான காரணம், நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது.எனவேகுடியரசுத் தலைவர் இது குறித்த காரணங்களில் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டவராவார்.

* Art.352-
ல் உள்ள அவசர நிலைப் பிரகடனம் பற்றிய வகையுரைகள், 1979-ல் அமுலுக்கு வந்த 44-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978-ன்படி மேலும் கடுமையாக்கப்பட்டன. அவை:

*
உள்நாட்டு நெருக்கடி Internal disturbances காரணத்தின்பேரில் ஜூன் 25-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தால் ஏற்பட்ட மிக மோசமான அனுபவங்களை அடுத்து,

*
உள்நாட்டு நெருக்கடி என்ற தெளிவற்ற சொற்களுக்குப் பதிலாக, ஆயுதக்கிளர்ச்சி -armed rebellion என்ற சொற்கள் இணைக்கப்பட்டன.

*
பிரதமரின் வாய்மொழி ஒப்புதல் அல்லது அனுமதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் முறையை கைவிடப்பட்டு, 44-வது திருத்தத்தின் மூலம் கேபினட்டின் தீர்மானம் எழுத்து மூலமாக குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, அவர் நெருக்கடி நிலையை அறிவிக்க முடியும் என்பது நிபந்தனையாக்கப்பட்டது.

*
அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 2 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றிருந்த கால வரம்பு, 44-வது சட்ட திருத்தத்தின் மூலம் 1 மாதமாகக் குறைக்கப்பட்டது.

* 44-
வது திருத்தத்திற்கு முன்னர், அவசர நிலைப்பிரகடனம், பாராளுமன்றத்தில் ஒருமுறை ஒப்புதல் பெற்ற பிறகு, கால வரையின்றி அவசர நெருக்கடி நிலை நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருந்தது.

*
ஆனால் 44-வது திருத்தம் அதை நீக்கி, அவசர நிலையை 6 மாதம் வரை மட்டுமே நீட்டிக்க வழி செய்தது.

* 44-
வது திருத்தத்திற்கு முன்பு வரை, அவசரநிலை அறிவிக்கப்பட்டு விட்டால், அதை முடிவுக்குக் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு குறிப்பிட்ட வரையறைகள் இல்லாமல் இருந்தது.

*
ஆனால் இத்திருத்தத்திற்குப் பிறகு லஸோக் சபையின் உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு, அவசரநிலையை நிராகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

* 44-
வது திருத்தத்திற்கு முன்னர், போர், அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டுத் தொந்தரவுகள் போன்ற எக்காரணத்திற்காக (Art.352) அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டாலும்,

* Art.19
தாமாகவே செயலிழந்து விடும் என்று Art.358 வலியுறுத்தியது.

*
ஆனால் 44-வது திருத்தம், போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களுக்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டால் மட்டுமே Art.19 தாமாகவே செயலிழக்கும் (Art.358) என்று வரையறுத்தது.

*
மேலும் 44-வது திருத்த்திற்கு முன்னர், அடிப்படை உரிமைகளில் எது வேண்டுமானாலும், நிறுத்தி வைக்கப்பட இயலும் என்ற நிலை இருந்தது.

*
ஆனால் 44-வது திருத்தத்தின் மூலம், அவசர நிலைப் பிரகடனத்தின்போதும் Art.20 மற்றும் 21 ஆகிய இரு ஷரத்துக்களையும் நிறுத்திவைக்க இயலாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் விளைவுகள்

*
ஷரத்து 352-ன்படி செய்யப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது 1. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் சம்மந்தமாகவும் பாராளுமன்றம் சட்டமியற்றலாம்.

2.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஆட்சிக்குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை விதிக்கலாம்.

3.
மத்திய மாநில அரசுகளுக்கிடையே வருமானப் பங்கீடு குறித்து மாறுதல் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

4.
பொதுமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு வழக்குத்தொடர இயலாது. இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், அவ்வழக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

5.
குடியரசுத் தலைவர், மாநிலங்களுக்கு எதுபற்றி வேண்டுமானாலும் தமது கட்டளைகளைப் பிறப்பிக்கலாம்.

6.
மேலும் இந்நெருக்கடி நிலைப்பிரகடனப்படுள்ளபோது, மக்களவையின் (லோக்சபை) பதவிக்காலத்தை நாட்டிப்பதற்கும், பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இக்கால நீட்டிப்பு, நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 6 மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். அவ்வாறே மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் நீட்டிக்கப்படலாம்.

இது தவிர மக்களின் அடிப்படை உரிமைகலில் Art 20 மற்றும் 21 ஆகியவற்றைத் தவிர பிற உரிமைகளின் செயல்பாடுகளை நெருக்கடி நிலையின்போது குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க அதிகாரம் பெற்றுள்ளார்.



மாநில நெருக்கடி நிலைப் பிரகடனம் - State Emergency

* Art. 356-
ன்படி ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளப்படி நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றோ, அரசியலமைப்பு இயந்திரம் அங்கே செயலிழந்துவிட்டது என்றோ, அம்மாநில ஆளுநர் அளித்த அறிக்கையின்படி, அல்லது வேறு விதமாகக் குடியரசுத் தலைவருக்குத் திருப்தி ஏற்பட்டால், அம்மாநில ஆளுநர் மற்றும் பிர அதிகார அமைப்புகள் உள்ளிட்ட மாநில அரசாங்க அதிகாரங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரே, தம்வசம் எடுத்துக்கொள்வதாகப் பிரகடனம் ஒன்றை வெளியிடலாம்.

*
குடியரசுத் தலைவரின் திருப்தி என்பது ஒன்றிய அரசாங்கத்தின் திருப்தியையே குறிக்கும் அத்துடன், குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் அது ஒன்றிய அரசாங்கத்தின் ஆட்சியே ஆகும்.

*
குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநில சட்டப்பேரவையின் அதிகாரங்களை பாராளுமன்றமே செயல்படுத்தும்.

*
மாநில சட்டப்பேரவை கலைக்கப்படலாம், அல்லது அதின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படலாம்.

*
மாநில உயர்நீதிமன்றத்தினைத் தவிர, எந்த ஒர் அதிகார அமைப்புடனும் சம்மந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகளின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பது உட்பட, தேவையான பிற நடவடிக்கைகளையும் குடியரசுத் தலைவர் மேற்கொள்லலாம்.

*
குடியரசுத் தலைவர் ஆட்சியின் பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்காவிட்டால், 2 மாதங்களின் முடிவில் பிரகடனம் முடிவுக்கு வந்துவிடும். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் ஒரே சமயத்தில் 6 மாதங்களுக்கு மேலும், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேலும் ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை நீட்டிக்க இயலாது.

*
எனினும் 68-வது திருத்தத்தின்படி பஞ்சாப் மாநிலத்தில் 1987-ல் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வழி செய்யப்பட்டது.

நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் - Financial Emergency

*
இந்தியா முழுவதிலுமோ, ஏதேனும் ஒரு பகுதில் மட்டுமே நிதி நிலை சீர்கெட்டுப்போகும் அபாயம் உள்ளது என்று குடியரசுத் தலைவருக்கு திருப்தி ஏற்பட்டால், நிதிநிலை நெருக்கடியை அவர் பிரகடனப்படுத்தலாம் என்று Art.360 குடியரசுத்தைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

*
இந்தப் பிரகடனம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், 2 மாத முடிவில் தாமாகவே செயலிழந்துவிடும்.

*
ஆனால் ஒரு முறை பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், இரத்து செய்யப்படும் வரை அல்லது மாற்றியமைப்படும் வரை நிதிநிலை நெருக்கடி நடைமுறையில் இருக்கும்.

*
நிதிநிலை நெருக்கடி நடைமுறையில் உள்ளபோது, மாநில அரசுகள் சில குறிப்பிட்ட நிதிநிலைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என ஒன்றியம் உதிதரவிடலாம்.

*
மேலும் மாநில அரசின் கீழ் பணியாற்றுவோரின் ஊதியத்தையும் படிகளையும் குறைப்பது, மாநில சட்டப்பேரவைகள் இயற்றிய பண மசோதக்கள் உள்ளிட்ட மற்ற மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

*
மேலும் ஒன்றியத்தின் கீழ் பணிபுரியும் அனைவருடைய ஊதியங்களையும், படிகளையும் (உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட) குறைக்கவேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.

*
நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது முதல் இது வரை ஒருமுறை கூட நிதிநெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதில்லை.

அரசியலமைப்புத் திருத்தங்கள் - The Amendment

* Art.368 -
ன்படி பாராளுமன்றமே அரசியல் நிர்ணய அதிகார வைப்பிடமாகத் திகழ்கிறது. அரசியலமைப்பைத் திருத்துவது குறித்து இந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.

*
பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலமே அரசியலமைப்பைத் திருத்தும் நடவடிக்கையைத் தொடங்க இயலும்.

*
எனவே இதற்கான தொடக்க முயற்சியை பாராளுமன்றமே மேற்கொள்ள இயலும். முறைப்படி நிறேவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதவுக்குக் குடியரசுத் தலைவர் கட்டாயமாக ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

*
மற்ற சாதாரண மசோதாக்களைப் போல அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கவோ, மறுபிரிசீலனை செய்யுமாறு மீண்டும் பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பவோ இயலாது.

*
அரசியலமைப்பின் எந்த ஒரு பிரிவையும் எப்படி வேண்டுமானாலும் திருத்தவோ, மாற்றியமைக்கவோ, அடியோடு நீக்கிவிடவோ, பாராளுமன்றத்தால் இயலும். அவ்வாறு

மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் அல்லது கூறுகளை திருத்துவதாகவோ, மீறுவதாகவோ இல்லாத பட்சத்தில் அவற்றை எதிர்த்து எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது.

*
அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், கூட்டுக் கூட்டம் கூட்டப்பட இயலாது.

*
மேலும் இரு அவைகளும் தனித்தனியே திருத்த மசோதாவை அங்கீகரித்தால் மட்டுமே, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அரசியலமைப்பைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண பெரும்பான்மை - Simple Majority

*
பாராளுமன்றத்திற்கு வந்துள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றும் முறையே சாதாரண வாக்கெடுப்பு முறை ஆகும்.

*
இந்த சாதாரண வாக்கெடுப்பு முறை என்பது கீழ்வரும் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும். அவை:

*
புதிய மாநிலங்களை உருவாக்குதல், மாநில எல்லைகளை மாற்றியமைத்தல், மாநிலங்களின் பெயர்களை மாற்றியமைத்தல் போன்றவை

*
மாநில சட்ட மேலவையை நீக்குதல், பாராளுமன்ற நடைமுறைகளில் கட்டுப்பாடுகிள் விதித்தல்,

*
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கான நிர்வாக முறை,

*
அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் போன்ற பழங்குடி இன மக்கள் வாழும் மாநிலங்களுக்கான நிர்வாக முறை.

சிறப்புப் பெரும்பான்மை - Special Majority

*
அரசியலமைப்பின் பெரும்பாலான பிரிவுகளை மூன்றில் இரு பங்குக்குக் குறையாமல் உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன், பாராளுமன்றம் திருத்த இயலும்.

Special Majority with Ratification of States

*
ஒரு சில விஷயங்களில் மட்டும் அதாவது, 7-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள பட்டியல்கள் சம்மந்தமானவை, பாராளுமன்றத்தில் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் மற்றும் ஷரத்து 368-ன் அம்சங்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் முறை, ஒன்றியத்தின் நிர்வாக அதிகாரத்தை மாநிலங்கள் மாது அதிகப்படுத்துதல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள், ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கிடையேயான சட்டமியற்றும் அதிகாரங்களில் பங்கிடு செய்தல், போன்றவற்றைத் திருத்த மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும், பாதிக்கும் குறையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகள் ஏற்பளிப்பும் அவசியமாகிறது.
கண்டனத் தீர்மானம் - Censure Motion

*
கண்டனத் தீர்மானம் (Censure Motion) என்பது எதிர்க்கட்சிகளால் லோக்சபையில் கொண்டுவரப்படும் தீரமானம் ஆகும். கண்டனத் தீர்மானம் லோக்சபையில் நிறைவேற்றப்பட்டால், Council of Ministers மிக விரைவில் லோக்சபையின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்.

*
ஒரு பண மசோதா அல்லது குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி நவிலல் தீர்மானம் (Money Bill or the Vote of Thanks to the President) ஆகியவை லோக்சபையில் தோற்கடிக்கப்பட்டால், அப்போதும் லோக்சபையின் மம்பிக்கையை பெற்றுள்ளதை நிரூபிக்க வேண்டும்.

*
கண்டனத் தீர்மானம் என்பது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து (No-Confidence Motion) முற்றிலும் மாறுபட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது அதற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்பட வேண்டியதில்லை.

*
ஆனால் கண்டனத்தீர்மானத்தின்போது காரணம் அல்லது குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட வேண்டும். அரசின் கொள்கை, திட்டம் அல்லது இதர விஷயங்களுக்காக ஒரு தனி அமைச்சர் அல்லது அமைச்சர் குழு, அல்லது ஒட்டுமொத்த அமைச்சரவை மீதோ கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படலாம்.

*
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இராஜ்யசபையில் கொண்டு வர இயலாது. ஆனால் கண்டத் தீர்மானத்தை இராஜ்யசபையிலும் புகுத்த இயலும்.

*
நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்த அரசும் கலைந்துவிடும். ஆனால் கண்டனத் தார்மானம் நிறைவேற்றப்பட்டால், கண்டனத்துக்குரிய அமைச்சர் அல்லது நபர்கள் மட்டும் பதவி இழக்க நேரிடும்.

*
நம்பிக்கையில்லாத் தீரிமானத்தைக் கொண்டு வர சபாநாயகரின் அனுமதி அவசியம் தேவை. ஆனால் அத்தகைய அனுமதி ஏதும் கண்டனத் தீர்மானத்திற்கு தேவையில்லை.

பாராளுமன்றக் குழுக்கள்

*
நம் அரசியலமைப்பு பாராளுமன்றக் குழுக்களைப் பற்றி எந்த ஒரு பகுதியிலும் தனியே குறிப்பிடவில்லை.

*
எனினும் பல ஷரத்துக்களில் இது பற்றிப் பரவலாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. பாராளுமன்றக் குழுக்களைக் கீழ்வருமாறு வரையறுக்கலாம்.

*
சபாநாயகர் அல்லது அவைத் தலைவரால் (Speaker or Chairman) நியமிக்கப்படத்தக்கதாகவோ, அல்லது சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகவோ இருக்கிறது.

*
சபாநாயகர் அல்லது அவைத்தலாவரின் கீழ் செயல்படுகிறது.

*
சபையிலோ அல்லது சபாநாயகர் அல்லது அவைத் தலைவரிடமோ தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது.

*
லோக் சபைக்கென தனி செயலகத்தையும், இராஜ்ய சபைக்கென தனி செயலகத்தையும் (Secretariat) பெற்றுள்ளது.

*
மொத்தத்தில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், 45 நிலைப்புக் குழுக்கள் (Standing Committees) உள்ளன.

*
இவற்றில் 24 குழுக்கள் இணை நிலைக் குழுக்கள் (Joint Standing Committees) ஆகும்.

*
இவற்றைத் தவிர 21 தனித்த நிலைக் குழுக்களும் இடம் பெற்றுள்ளன.

*
அதாவது 12 குழுக்கள் லோக்சபையிலும், 9 குழுக்கள் இராஜ்யசபையிலும் செயல்படுகின்றன. துறை சார்ந்த கூட்டுக்குழுக்களின் (Department Related Standing Joint Committees) எண்ணிக்கை 17 ஆகும்.

*
இவற்றில் 11 குழுக்கள் லோக்சபை செயலகத்திலும், 6 குழுக்கள் இராஜ்ய சபை செயலகத்திலும் செயல்படுகின்றன.

**
இரு வகையான பாராளுமன்றக் குழுக்கள் உள்ளன. அவை: 1. Standing Committees 2. Adhoc Committees

* Standing Committees
என்பவை அவ்வப்போது ஒவ்வொரு ஆண்டும், சபாநாயகர் அல்லது அவைத்தலைவரால் நியமிக்கப்படும், அல்லது அவைத்தலைவரால் நியமிக்கப்படும், அல்லது சபையால் தேர்வு செய்யப்படும் நிரந்தரக் குழுக்கள் ஆகும்.

*
ஆனால் Adhoc Committees என்பவை சபையாலோ அல்லது சபைத் தலைவராலோ, குறிப்பிட்ட அறிக்கை அல்லது குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக தேவைப்படும் சமயங்களில் மட்டும் ஏற்படுத்தப்படும் குழுக்கள் ஆகும்.

*
இத்தகைய கூடுதல் குழுக்கள் (Adhoc Committees) அவற்றின் பணி முடிவடைந்தவுடன் கலைந்துவிடும், அதாவது தற்காலிக குழுக்களாகவே செயல்படும்.

**
சில முக்கியக் குழுக்களும், அக்குழுக்களின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (அடைப்புக்குள்) கீழ்கண்டவாறு:

1. Business Advisory Committee (15)

2.. Committee on Estimates (30)

3. Committee on Government Assurances (15)

4. General Purpose Committee (22)

5. House Committee (12)

6. Joint Committee on Salaries and Allowances of Members of Parliament (15)

7. Library Committee (9)

8. Committee on Privileges (15)

9. Committee on Public Accounts (22)

10. Committee on Paper laid on the Table (15)

11. Committee on Petitions (15)

12. Committee on Public Undertakings (22)

13. Rules Committee (15)

14. Committee on Subordinate Legislation (15)

15. Committee on Welfare of Scheduled Castes and Scheduled Tribes (30)

*
மதிப்பீட்டுக் குழுவைத் தவிர பிற அனைத்துக் குழுக்களில் இராஜ்ய சபை உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு.

*
அதாவது மதிப்பீட்டுக் குழுவில் (Estimates Committee) முற்றிலும் லோக்சபை உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பெறுவர்.

*
இராஜ்ய சபையின் உறுப்பினர்கள் மற்ற குழுக்களில் பொதுவாக் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காக இருப்பர்.

*
இத்தகைய உறுப்பினர்கள் இராஜ்ய சபையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ அல்லது இராஜ்யசபைத் தலைவரால் நிமிக்கப்படவர்களாகவோ இருப்பர்.

*
அது போலவே லோக்சபை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அனைத்துக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பர்.

*
பொதுவாகக லோக்சபை உறுப்பினர்கள், ஒரு குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்காக இருப்பர்.

*
இத்தகைய உறுப்பினர்கள் லோக்சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ அல்லது சபாநாயகரால் நியமிக்கப்பட்டவர்களாகவோ இருப்பர்.

*
பொதுவாக குழுவின் உறுப்பினர்கள் ஒரு ஆண்டு காலத்திற்கு மிகாத பதவிக் காலத்தை உடையவர்களாக இருப்பர்.

*
பொதுவாக அனைத்துக் கட்சிகளும் அவரவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் குழுக்களில் இடம் பெற்றிருப்பர்.

*
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான கூட்டுக் குழுவைத் (Joint Committee on Salaries and Allowances of Members of Parliament) தவிர பிற பாராளுமன்றக் கழுக்களின் தலைவர்களை, பொதுவாக சபாநாயகர் அந்தந்த குழுக்களின் உறுப்பினர்களிலிருந்து நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.

*
குழுவில் லோக்சபை சபாநாயகரே உறுப்பினராக இருந்தால், அவரே அக்குழுவின் தலைவராகத் (Ex-officio Chairman) திகழ்வார்.

*
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான கூட்டுக் குழு அதற்கான தலைவரைத் தாமே தேர்ந்தெடுக்கிறது.

*
பொதுக் கணக்குக் குழுவின் தலைவரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களிலிருந்து சபாநாயகர் நியமிக்கிறார்.

**
மதிப்பீட்டுக் குழு - Committee on Estimates

*
மதிப்பீட்டுக் குழுவில் (Estimates Committee) மொத்தம் 30 உறுப்பினர்கள் இருப்பார்கள். அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையைச் சார்ந்தவர்களாவர்.

*
ஒவ்வொரு ஆண்டும் இதன் உறுப்பினர்கள் லோக் சபையிலிருந்து தேர்வு செய்யப்படுவர்.

*
இக்குழு அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த உரிய ஆலோசனைகளை ்ளிக்கும் குழுவாகும்.

*
மேலும் இக்குழு ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஆய்ந்தறிந்து, தேவையான ஆலோசனைகளையும், பொருளாதார நிலையை மேம்படுத்தும் உத்திகளையும், நிர்வாக மேம்பாட்டுக்கான வழிமுறைகளையும் தெரிவிக்க வேண்டும்.

*
மதிப்பீட்டுக் குழுவின் தவைவரை சபாநாயகர், அதன் உறுப்பினர்களிலிருந்து நியமிக்கிறார்.

*
ஒரு அமைச்சர் இக்குழுவின் உறுப்பினராக செயலாற்ற இயலாது.

*
ஒரு வேளை இக்குழுவின் உறுப்பினர் ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட நேர்ந்தால், அவர் * அமைச்சராகப் பதவியேற்றவுடன் அவரது மதிப்பீட்டுக்குழு உறுப்பினர் பதவி நீக்கப்பெறும். இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒராண்டு ஆகும்.

**
பொதுக் கணக்குக் குழு - Committee on Public Accounts

*
பொதுக் கணக்குக் குழுவே Public Accounts Committee மிகப்பழமையான நிதிக் குழு ஆகும்.

*
இக்குழுவில் மொத்தம் 22 உறுப்பினர்கள், அதாவது லோக்சபையிலிருந்து 15 உறுப்பினர்களும், இராஜ்ட சபையிலிருந்து 7 உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

* 1967-
ம் ஆண்டு முதல் மரபு அடிப்படையில் எதிர்க்கட்சியின் தலைவரே இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார்.

*
மதிப்பீட்டுக் குழுவும், பொதுக் கணக்குக் குழுவும் இரட்டைச் சகோதரர்களாக கருதப்படுவதுண்டு.

*
காரணம் பொதுக் கணக்குக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் ஒன்றையொன்று சார்ந்தே பணிபுரிகின்றன.

*
மதிப்பீட்டுக் குழு அரசின் பொதுச் செலவுகளைப் பற்றி ஆராய்கிறது.

*
ஆனால் பொதுக் கணக்குக் குழு அத்தகைய பொதுச் செலவுகளின் கணக்குகளைப் பற்றி ஆராய்கிறது.

*
அதாவது பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று செலவு செய்யப்பட்ட பண் குறிப்பிட்ட அந்தச் செயலுக்காகத்தான் செலவு செய்யப்பட்டதா என்பது குறித்தும் ஆய்கிறது.

*
மேலும் பொதுக் கணக்குக் குழு இந்திய தணிக்கை அலுவலரின் (Comptroller and Auditor - General) அறிக்கை குறித்தும் ஆய்வு செய்கிறது.

** The Committee on Public Undertakings

* Public Undertakings Committee-
ல் மொத்தம் 22 உறுப்பினர்கள், அதாவது லோக் சபையிலிருந்து 15 உறுப்பினர்களும், இராஜ்ய சபையிலிருந்து 7 உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

*
இக்குழுவின் தலைவரை லோக்சபை உறுப்பினர்களிலிருந்து, சபாநாயகரே நியமிக்கிறார்.

*
பொது நிறுவனங்களின் அறிக்கைகள், கணக்குகள், இந்திய தணிக்கை அலுவலரின் பொது நிறுவனங்கள் மீதான அறிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்ட வரைமுறைகளுக்குட்பட்டு ஆய்வு செய்வதே இக்குழுவின் தலையாய பணியாகும்.

**
கட்சித்தாவல் தடைச் சட்டம்

* 1985-
ல் இந்திய அரசு கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வெளியிட்டது.10-வது அட்டவணையில் இது பற்றிய கருத்தம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

*
தேர்தல் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் தமது கட்சியை விட்டு, ஆளும் கட்சிக்கு சுயலாபம் கருதி மாறுவதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

*
இதன்படி மூன்றில் ஒரு பங்குக்குக் குறைவான உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினால் அவர்கள் தமது பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

**
அரசியலமைப்பு மறு ஆய்வு ஆணையம்

*
அரசியலமைப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்ற கருத்தானது 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு தோற்கடித்த பின் மாற்று அரசு அமைக்க தோற்கடிக்க எதிர்க்கட்சிகளால் முடியாமல் போன சூழ்நிலை வலுப்பெற்றது.

* 1999-
ல் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அஇஅதிமுக வாபஸ் பெற்றபோது குடியரசுத் தலைவர் நாராயணன் வாஜ்பாய் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியதையும், எதிர்க்கட்சிகளால் மாற்று அரசு அமைக்க முடியாமல் போன போது 12-வது லோக்சபையை கலைத்துவிட அவர் பரிந்துரை செய்ததும் பலரால் விமர்சனம் செய்யப்பட்டது.

*
எனவே தான் மீண்டும் தேர்தல் வெற்றி பெற்று வந்த தேசிய ஜனநாயக முன்னணி அரசு நாட்டில் ஸ்திரத் தன்மையை நிலை நாட்ட அரசியலைப்பை மறு ஆய்வு செய்ய முடிவு செய்து குழு ஒன்றை அமைத்தது.

*
அரசியலமைப்பு மறு ஆய்வுக் குழு தனது 2 ஆண்டு கால ஆய்வுப் பணியை முடித்து 31.03.2013 அன்று தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடன் தாக்கல் செய்தது. நான்கு தொகுதிகள் கொண்டதாக இருந்தது அந்த அறிக்கை.
பஞ்சாயத்துக்களின் அமைப்பு

* 73-
வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (1992)-ன் படி Part IX மற்றும் Part IX A ஆகிய இரு புதிய பகுதிகள் Parts சேர்க்கப்பட்டுள்ளன.

*
இவற்றின்படி ஷரத்துக்களையும், 11 மற்றும் 12 ஆகிய இரண்டு அட்டவணைகளையும் (Schedules) நாம் பெற்றிருக்கிறோம்.

* 73-
வது திருத்தச் சட்டம் பஞ்சாயத்துக்களுக்கும், 74-வது திருத்தச் சட்டம் நகராட்சிகளுக்கும் (நகர்பாலிகா Nagarpalika) அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் வழங்குகின்றன.

*
ஒவ்வொரு மாநிலத்திலும் கிராம், மாவட்ட அளவிலும், இவற்றுக்கு இடைப்பட்ட அளவிலும் பஞ்சாயத்துக்கள் நிறுவப்பட வேண்டும்.

* 20
இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்தால் இடைப்பட்ட நிலையிலான பஞ்சாயத்து அமைப்பு தேவையில்லை.

*
ஒரு பஞ்சாயத்து கலைக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

*
எல்லா பஞ்சாயத்துக்களிலும், பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

*
ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சொந்த வரவு செலவுத் திட்டம், வரிவிதிப்பு அதிகாரங்கள் மற்றும் அதன் அதிகார எல்லைக்குள் அடங்கக்கூடிய விஷயங்கள் உண்டு.

*
அந்தந்தப் பகுதிக்குள் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் போடவும், செயல்படுத்தவும் இயலும்.

*
பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தேர்தல் ஆணையர் ஒருவர் இருப்பார்.

*
பஞ்சாயத்துக்களின் பொருளாதார நிலையைப் பற்றிக் கவனிக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையம் (State Finance Commission) அமைக்கப்படும்.

*
அதே போல் 74-வது திருத்தச் சட்டத்தின்படி நகர் பாலிகா மற்றும் நகர பஞ்சாயத்துக்கள் அமைக்க வகை செய்யப்பட்டது.

*
இட ஒதுக்கீடு, தேர்தல், வரிவிதிப்பு அதிகாரம், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளல், நிதி ஆணையம் அமைத்தல் போன்ற அனைத்தும் நகர பஞ்சாயத்துக்கான 74-வது திருத்தச் சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*
பஞ்சாயத்துக்களின் அமைப்பு முறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஐந்து முதல் ஒன்று வரை அமைந்திருக்கிறது.

*
உத்திரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 முதல் 31 வரை அமைக்கப்பட்டுள்ளது.

*
ஒரிசாவில் அதிகபட்ச எண்ணிக்கை 25 வரை உள்ளது. மற்ற மாநிலங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 முதல் 15 வரை உள்ளன. இந்த எண்ணிக்கை பஞ்சாயத்துக்களின் அளவைப் பொறுத்து அமைந்திருக்கிறது.

*
சில மாநிலங்களில் பஞ்சாயத்து உறுப்பினர் இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், மலை சாதியினருக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

*
இந்த இடங்கள் கூட்டு முறையில் நிரப்பப்படுகின்றன. பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படுவர்.

*
தமிழகத்தில் பஞ்சாயத்துத் தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

*
பெரும்பான்மையான பகுதிகளில் பஞ்சாயத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

*
கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்.

*
தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.



பஞ்சாயத்து சமிதி

*
சமிதிகள் ஒவ்வொன்றும் இன்றைய தாலுகா அமைப்பினைப் போன்று அதாவது112 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளன.

*
ஆனால், ஒவ்வொரு அமைப்பிலும் அடங்கியிருக்கும் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது.

*
சில இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு, மலை சாதியினருக்கு, பெண்களுக்கு ஒதுக்கப்படுவது எல்லா மாநிலங்களிலும் பொதுவானதாகும்.

*
சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பஞ்சாயத்து சமிதி அல்லது பஞ்சாயத்து யூனியன் குழுவில் பணித்துறறை சார்ந்த (Ex-Officio Members) உறுப்பினர்களாவர்.

*
அவர்கள் இணை உறுப்பினர்களாக இருந்து சமிதி அல்லது குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வார்.

*
ஆனால் அவர்களுக்கு தீர்மானங்களின் மீது வாக்களிக்கவோ அல்லது தலைவர் தேர்தலில் போட்டியிடவோ உரிமை இல்லை.

*
சில மாநிலங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து சமிதியின் பணித்துறை சார்ந்த உறுப்பினர்களாக இருப்பர். யூனியன் தலைவர் பஞ்சாயத்துத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

*
பல மாநிலங்களிலும், பஞ்சாயத்து சமிதி அல்லது பஞ்சாயத்து யூனியன் குழுவின் ஈயுட்காலம் பஞ்சாயத்துக்களின் ஆயுட்காலத்தைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

*
கிராமப் பஞ்சாயத்துக்களின் பணிமுறைகளை 2 வகைகளாகப் பரிகிகலாம். அவையாவன: 1. கட்டாயமான பணிகள்(Obligatory Services) 2. விருப்பத்திற்குரிய பணிகள் (Optional Services)

*
துப்பரவு, பொது சுகாதாரம், வீதிகளில் விளக்கு வசதி, கிராமச் சாலைகள் மேற்பார்வை, பள்ளிகள், குடிநீர் விநியோகம் போன்ற துறைப்பணிகள் பஞ்சாயத்து ஆட்சியியல் பணிகளில் அடங்கும்.

*
இவை பஞ்சாயத்துக்களால் செய்யப்பட வேண்டிய கட்டாயப் பணிகள் ஆகும். மற்றவை பஞ்சாயத்துக்களின் விருப்பப்படியான பணிகள் ஆகும்.

*
சமூக நலன் குறித்த பணிகள், இடுகாடு போன்றவற்றைப் பராமரித்தல், பிறப்பு இறப்புக் கணக்குகளை மேற்கொள்ளுதல், தாய்சேய் நல விடுதிகளை உருவாக்குதல், கால்நடைகளுக்கான குளங்களை வெட்டுதல், குடும்ப நல திட்டங்களைப் பரப்புதல், விவசாய வளர்ச்சி ஆகியவை விருப்பப் பணிகளாகும்.

சாலைகள் அமைத்தல், பொது மாளிகைகள் அமைத்தல், கிணறுகள் வெட்டுதல், நீர்த் தொட்டிகள் ஏற்படுத்தல், பள்ளிகள் தொடங்குதல், பஞ்சாயத்து இல்லங்கள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல், படிப்பகங்களை உருவாக்குதல், நீர்ப்பாசன வசதி செய்தல், கூட்டுப்பண்ணைகள் ஏற்படுத்துதல் போன்றவை பஞ்சாயத்துக்களின் முன்னேற்றச் செயல்களில் அடங்கும்.

*
பஞ்சாயத்து சமிதி அல்லது யூனியன் ஆகியவற்றின் பணிகள் சமுதாயத் தொண்டு, கல்வி, சுகாதாரம், துப்புறவு, சமூதாய நல்வாழ்வு, சாலைகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், நீர்பாசனத் திட்டங்கள், கூட்டுறவு முன்னேற்றம், கூட்டுறவுச் சங்கங்களின் முன்னேற்றம், கடன் கொடுத்தல், கைத்தொழில், சிறுதொழில், உற்பத்தித் துறைகளை மேற்பார்வையிடல், பயிற்சி முகாம்களை ஏற்படுத்துதல் போன்றவையாகும். மேற்குறிப்பிட்ட பணிகள் தவிர வேறு பிற பணிகளையும் மாநில அரசு விரும்பினால் பஞ்சாயத்து சமிதிகளிடம் ஒப்படைக்கும் நியதி உண்டு.
உள்ளாட்சி அமைப்பு: அரசாங்கம் மற்றும் நிர்வாகம்

*
அரசியல் உரிமைக்கான இந்தியாவின் இடைவிடாத போராட்டக் காலத்தில் பஞ்சாயத்து ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.

*
உரிமை பெற்ற பின்பு கிராம பஞ்சாயத்து முறை ஏற்படுத்தப்படவும் அவற்றை முன்னேற்றச் செய்யவும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

*
இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து முறை பற்றிய அரசு நெறிமுறைக் கோட்பாட்டினை ஏற்படுத்தியதன் மூலமாக பஞ்சாயத்து முறைக்கு நிலையான சிறப்பிடம் கொடுக்கப்பட்டது.

*
மாநிலங்கள் கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த முயற்ச்சிக்க வேண்டும். அவை தன்னாட்சி முறையின் பகுதிகளாக சிறப்பாக இயங்குவதற்கு தேவையான அதிகாரங்களையும், மேலாண்மை உரிமைகளையும் அவற்றுக்கு வழங்க வேண்டும் என அரசியலமைப்பின் Art.40 கூறுகிறது.

*
அரசிலமைப்பின் ஷரத்து 40, கருத்தளவில் மட்டும் விட்டுவிடப்படாமல், செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டது.

* 1959-
ம் ஆண்டு பஞ்சாயத்து இராஜ்யம் நாட்டுப்புற சிற்றூர் வளர்ச்சிப் பணியுடன் தொடர்பு கொண்டதாக இருந்தது.

*
அவை தொகுதி முன்னேற்றக் குழுவின்(Block Development Committee) இடம் பெற்றிருந்தன. அவை சமூக முன்னேற்றத் திட்டத்திற்கு (Community Development Programme) ஆலோசனா கூறுவதாகவும் அமைந்திருந்தன.

*
ஆனால் 1959-க்குப் பின் அவை பஞ்சாயத்துக்களின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பினைப் பெற்றன.

*
மத்திய அரசாங்கம், 1959-ம் ஆண்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளைக் கூறவும், திறமையைக் கண்காணிக்கவும், சமூக முன்னேற்றத் திட்டத்தினை சிறப்பாக மாற்றியமைக்க வேண்டிய மவழிமுறைகளைக் கூறவும், அஷோக் மேத்தா என்பவர் தலைமையில் குழு ஒன்றை நியமனம் செய்தது.

*
அக்குழு, நாட்டுப்புற ஸ்தல சுய ஆட்சிமுறை பற்ரிய மூன்று அடுக்குத் திட்டங்களை Three Tier System) பரிந்துரைத்தது.

*
அத்திட்டம் ஜனநாயக அதிகாரப் குவிப்பற்ற முறை (Democratic Decentralization) எனப் பெயரிடப்பட்டது.

*
இதுவே பஞ்சாயத்து இராஜ்யம் எனவும் ஆகியது. அஷோக் மேத்தா குழுவின் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமாறு:

*
நாட்டுப்புறப் பகுதிளின் முன்னேற்றப்பணிகள் சம்மந்தமான வேலைகள், சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்பான பஞ்சாயத்து(Panchayat Samiti) ஒப்படைக்க வேண்டும்.

*
பஞ்சாயத்து தலைவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு அங்கமாக அமைக்கப்பட வேண்டும்.

*
ஒவ்வொரு மாநிலமும் அதற்கான பஞ்சாயத்துசமிதியைத் தேர்ந்தெடுக்கும் முறையைக கொண்டிருக்கிறது. அந்தத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாயத்து சமிதியின் இணை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

*
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பஞ்சாயத்து சமிதிகளின் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சில கூட்டு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஜில்லா பரிஷத் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

*
அவர்களுள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரும் இந்த ஜில்லா பரிஷத்தில் ஒரு ஆலோசனை கூறுகின்ற, ஒருமுகப்படுத்துகின்ற, மேற்பார்வை செய்கின்ற அமைப்பாக இருக்க வேண்டும்.

*
பஞ்சாயத்துக்களின் வரவு செலவுத்திட்டங்களைப் பஞ்சாயத்து சமிதி ஆய்வு செய்ய வேண்டும். பஞ்சாயத்து சமிதிகளின் வரவு செலவுத் திட்டங்களை ஜில்லா பரிஷத் ஆய்வு செய்ய வேண்டும்.

*
பஞ்சாயத்து சமிதியின் பணிகளில் தேசிய விரிவாக்கத் திட்டத்தால் நடத்தப்படும் பணிகளும், மாவட்ட ஆட்சிக் குழுவின் பணிகளும் அடங்கும்.

*
பஞ்சாயத்து சமிதி சதந்திரமான வருவாய்த் துறையைக் கொண்டு இயங்க வேண்டும்.

*
சமூக முன்னேற்றத் துறை அதிகாரிகள் (Block Development Officers) பஞ்சாயத்து சமிதியின் நிர்வாக அதிகாரியாகவும், செயலாளராகவும் பணியாற்ற வேண்டும்.

கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் முன்னேற்றப் பணிகளுக்காகப் பாடுபட வேண்டும்.

*
இந்த அமைப்புக்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும். மாநில அரசு இவ்வமைப்புக்களை விலக்கி வைக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.

*
அஷோக் மேத்தா அறிக்கை தலைசிறந்த அறிக்கை(Master Blue Print) எனவும், பஞ்சாயத்து ராஜ்யத்தின் பைபிள் (Bible of Panchayat Raj) எனவும் அழைக்கப்பட்டது.

*
முதன் முதலாக இராஜஸ்தான் மாநிலத்திலும், பிறகு ஆந்திரப்பிரதேசத்திலும் தான் ஜனநாயக அதிகாரக் குவிப்பற்ற முறை(Democratic Decentralization) ஏற்படுத்தப்பட்டது.

* 1963-
ம் ஆண்டின் முடிவில் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பஞ்சாயத்து இராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது.

*
மேத்தா குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, பெருமாபான்மையான மாநிலங்கள் மூன்றடுக்கு முறையே பின்பற்றுகின்றன.
* குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்,

*
மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.

*
மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.

*
பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

*
மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.

*
குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார்.

*
குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது.

*
ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்.

*
ஆளுநரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தொடர்ந்து பதவி வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.

*
ஆளுநரை ஒரு மாநிலத்தைவிட்டு மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார்.

*
ஆளுநரின் ஊதியம் அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வாக்கெடுப்பின்றியே வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.

*
ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர படிகளும் அவருக்கு வழங்கப்படும்.

*
ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நியம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.

*
பாராளுமன்றம் அல்லது மாநில சட்டபேரவைகளில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது. அப்படி ஏதேனும் ஒர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து, அவரது சட்டபேரவை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாகிவிட்டதாக கருதப்படும்.

*
ஊதியம் பெறும் வேறு எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.

*
அரசியலமைப்பு மாநில ஆளுநருக்கென்று சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

*
அதன்படி ஒரு மாநில ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள் குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்.

*
மேலும் அவரது பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது.

*
அது போலவே அவரது பதவிக்காலத்தில் அவர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.

*
உரிமையியல் நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2 மாதங்களுக்கு முன்பாக ஆளுநருக்கு அறிவித்தல் வேண்டும்.



**
ஆளுநரின் அதிகாரங்கள் - பணிகள்:

*
ஆட்சித்துறை அதிகாரங்கள் - Executive Powers

*
மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரின் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரங்களை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அவரே நேரிடையாகவோ, தமக்குக் கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்த வேண்டும்.

*
மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் என்பது அதன் சட்டமியற்றும் அதிகாரத்துடன் சேர்ந்தே காணப்படும்.

*
பொதுப்பட்டியலில் உள்ள விசயங்களைப் பொறுத்தவரையில் அரசியல் சட்டத்தின்படி அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின்படி ஒன்றியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டதே மாநில நிர்வாகத்தின் அதிகாரம் எனப்படும்.

*
மாநிலத்தின் அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயராலேயே மேற்கொள்ளப்படும்.

*
ஜார்க்கண்ட, மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவதும் ஆளுநரின் கடமையாகும்.

*
மாநிலத்தின் முதல்வரையும், அவரது ஆலோசனையின்படி பிற அமைச்சர்களையும், மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார்.

*
அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் வரை பதவியில் நீடிப்பார்கள்.

*
ஆனால் அமைச்சரவை மாநில சட்டப்பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக உள்ளது.

*
அதாவது சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றவரே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்றும், மாநில சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவை பதவியில் நீடிக்க இயலும் என்றும் இதற்குப் பொருள்படும்.

*
மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், அமைச்ர்களிடையே பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்யவும், தேவையான விதிகளை ஆளுநர் உருவாக்கலாம்.

*
மாநில அட்வகேட் ஜெனரல், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சார்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகி்யோரையும் ஆளுநரே நியமனம் செய்கிறார்.

*
மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இருப்பின், அதன் உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கினரை, இல்க்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை போன்ற துறைகளின் சிறப்பறிவும், பழுத்த அனுபவமும் வாய்ந்தவர்களில் இருந்து ஆளுநர் நியமிக்க வேண்டும்.

*
ஆங்கிலோ-இந்திய சமூகத்தினருக்கு சட்டப்பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றும், அதற்குப் பிரதிநிதித்துவம் தேவையென்று ஆளுநர் கருதினால், அந்தச் சமூகத்தில் இருந்து ஒருவரை பேரவைக்கு ஆளுநர் நியமனம் செய்யலாம் என ஷரத்து 333 கூறுகிறது.



**
ஆளுநரின் சட்டத்துறை அதிகாரங்கள்:

*
மாநிலச் சட்டப்பேரவையின் ஒரு ்ங்கமாகவே ஆளுநர் திகழ்கிறார். சட்டப்பேரவையின் இரு அவைகளையும்(பேரவை,மேலவை என இரு அவைகள் உள்ள மாநிலங்களில்) கூடுமாறு ஆணையிடுவதும், கூட்டத் தொடரை முடித்து வைப்பதும் ஆளுநரே ஆவார்.

*
அவர் நினைத்தால் பேரவையைக் கலைத்து விட முடியும். மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றுவதுடன், சட்டப்பபேரவைக்கு செய்திகளையும் அனுப்ப ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.

*
பொதுத் தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூடட்த்தில் ஆளுநர் உரையாற்றுகிறார்.

*
அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரே உரையாற்றுவார்.

*
தேவைப்படும்போது இரு அவைகளையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ கூட்டி உரை நிகழ்த்தவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.

*
சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஆளுநரின் ஒப்புதலின்றி அது சட்டமாகாது என ஷரத்து 200 கூறுகிறது.

*
அவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற அமைச்சரவையின் ஆலோசனையுடன், அம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

*
அம்மசோதாவுக்கு ஆளுநர் தமது ஒப்புதலை அளிக்கலாம்.

*
ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கலாம்.

*
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அதனை அனுப்பி வைக்கலாம்.

*
பண மசோதாவைத் தவிர வேறு மசோதாவாக இருப்பின், ஆளுநர் தம்து குருத்தையும் கூறி, அந்த மசோதாவைப் பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.

*
மசோதாவைப் பற்றிச் சில தகவல்கள், விவரங்கள் தேவையெனக் கேட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிற ஆலோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.

*
ஆளுநர் தமது கருத்தைக் கூறி ஒரு மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பினால், அவருடைய கருத்தின்படி அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டோ, அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

*
சட்டப்பேரவையின் சூட்டத்தொடர், அல்லது மேலைவை இருந்தால் இரு அவைகளின் கூட்டத்தொடர், நடைபெறாத காலத்தில், ஷரத்து 213-ன்படி ஆளுநர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.

*
சட்டப்பேரவை இயற்றி, ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டங்களைப் போலவே, அவசரச் சட்டங்களும் செயல் வீச்சுயுடையவை.

*
எனினும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உள்ள அதே கட்டுப்பாடுகள் அவசரச் சட்டங்களும் உள்ளன.

*
எனவே ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பினும்

*
ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலினைக்காக ஆளுநர் அனுப்ப வேண்டியிருப்பினும்

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகாமல் போய்விடக்கூடியதாக அம்மசோதா இருந்தாலும் இம்மூன்று இனங்களிலும், குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி, ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலாது. ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப்பேரவை முன் (மேலவை இருப்பின் இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும்)

*
சட்டப்பேரவை மாண்டும் கூடியதும் 6 வாரங்களுக்குப் பின்னர் அவசரச் சட்டம் செயலிழந்து விடும்.

*
அதற்கு முன்னரே அதனை நிராகரிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நிறைவேற்றினால் அப்போதே அவசரச் சட்டம் செயலற்றுப் போய்விடும். அவசரச் சட்டத்தை எந்த நேரத்தில் மேண்டுமானாலும் ஆளுநர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
உச்சநீதிமன்றம்

*
உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950

*
உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா

*
உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி

*
உச்சநீதிமன்றத்துக்கான அதிகாரமளிப்பு - இந்திய அரசியலமைப்பு

*
உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கான மேல்மூறையீடு - இந்தியக் குடியரசுத் தலைவர்(தூக்கு தண்டனை உள்பட தண்டனையை நீக்க மட்டும்.

*
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை - நிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)

*
உச்சநீதிமன்றத்தின் குறிக்கோளுரை - அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.

*
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - பி.சதாசிவம். (19 ஜூலை 2013)

**
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்:

*
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

*
தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

*
தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

*
குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதித்துறை அறிஞராக இருத்தல் வேண்டும்.

*
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்போ, குறிப்பிட்ட கால வரம்போ வரையறுக்கப்படவில்லை.

*
உச்சநீதிமன்ற மீதிபதி தமது பதவியை தமது 65 வயது நிறைவுற்றாலோ, அல்லது குடியரசுத் தலைவருக்கு பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலமாகவோ, அல்லது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களித்தவர்களின் மூன்றில் இரு பங்கு ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மான்த்தின் அடிப்படையிலோ பதவி நீக்கம் பெறலாம் அல்லது இழக்கலாம்.

*
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காலியானாலோ, அல்லது அவர் பணியாற்ற இயலாத சூழ்நிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு ஒருவரை பணியமர்த்த அதிகாரம் பெற்றுள்ளார்.

*
குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தற்காலிகமாக ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய அழைக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் பெற்றுள்ளார்.

*
அது போன்று போதிய நீதிபதிகள் இல்லாத சூழ்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற ஒருவரை, உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியைக தற்காலிகமாகப் பணியாற்றவும் வழி செய்யப்பட்டுள்ளது.

*
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்ற விசாரணை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அளிக்கத்தக்க, லோக்சபையாக இருப்பின் 100 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, சபாநாயகரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ, அல்லது இராஜ்ய சபையாக இருப்பின் 50 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ நிறைவேற்றப்பட வேண்டும்.

*
அத்தீர்மானம் மீன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவினால் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் ஒரு நீதித்துறை வல்லுநர்) விசாரிக்கப்படும்.

*
அக்குழு, குற்றாவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நீதிபதியின் திறமையின்மை அல்லது தவறான நடத்தையை கண்டறிந்து உண்மையெனக் கண்டால் சபைக்குப் பரிந்துரைத்து அறிக்கை அளிப்பர்.

*
அதன்பின்பு அத் தீர்மானம் குழுவின் அறிக்கையுடன், டபையில் புகுத்தப்படும்.

அத்தீர்மானம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்போரில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டால், பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

*
இதன் பிறகு குடியரசுத் தலைவரின் சம்மந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீக்கத்தை அறிவிப்பார்.

* 1991 - 93
ல் ஆர்.இராமசாமி என்ற நீதிபதியின் மீது குற்றவிசாரணை கொண்டு வரப்பட்டு, குழு தனது அறிக்கையில் குற்றத்தை உறுத்ப்படுத்தியது.

*
எனினும், அப்போதைய லோக்சபையில் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் புறக்கணித்ததால், போதிய பெரும்பான்மையின்றி, குற்றவிசாரணைத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

*
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கென சில செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது. அவை:

*
உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசித்தே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.

*
ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

*
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்ற அரசியலமைப்பு தடை விதிக்கிறது. எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.

*
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் இந்திய தொகுப்பு நிதியத்தின் செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு தேவையில்லை.

*
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட இயலாது.

*
உச்சநீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின், குற்ற விசாரணை தீர்மானம் கொண்வரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.



**
உச்சநீதிமன்றத்தின் நீதிவரம்பு:

1.Original 2. Writ 3. Appellate 4. Advisory and 5. Revisory Jurisdictions.

**
உண்மையான நீதிவரம்பு அதிகாரம் - Original Jurisdiction

*
உச்சநீதிமன்றத்தின் மூல வழக்கு விசாரணை வரம்பு என்பது பொதுவாக கூட்டாட்சி குறித்த விசயங்களைக் குறித்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரமாகும்.

*
இந்திய அரசாங்கத்திற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்.

*
ஒரு புறத்தில் இந்திய அரசும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் மறுபுறத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்.

*
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகள் ஆகிய மூன்று விதமான வழக்குகளிலும் மூலவிசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கே உண்டு.

*
எனினும் 7வது திருத்தச் சட்டம் 1956-ன்படி, அமலில் இருக்கும் ஒர் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் இந்த விசாரணை வரம்பை விலக்கியிருந்தால், அவற்றின் காரணமாகத் தோன்றும் எந்தவிதமான தகராறுக்கும் இந்த நீதிவரம்பு பொருந்தாது.

*
மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்த்தகராறுகள், நிதிக்கமிஷனின் ஆய்வுக்கு விடப்பட்ட விஷயங்கள், ஒன்றியத்திற்கும் மாநிலங்கதளுக்கும் இடையே சிலவகையான செலவுகள், ஒய்வூதியங்கள் போன்றவற்றை சரி செய்து கொள்வது போன்ற சில விசயங்களிலும் உச்சநீதிமன்றத்தின் மூலவழக்கு விசாரணை வரம்பு பொருந்தாது.



**
ஆணை வழங்கும் நீதி அதிகார வரம்பு - Writ Jurisdiction

* Art.32
ன் படி தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பான வழக்குகளிலும் மூல விசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.

*
அந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்காக உச்சநீதிமன்றம் பல்வேறு நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கலாம்.

*
தன்னுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நேரிடையாகவே ஒருவர் உச்சநீதிமன்றத்தினை அணுகலாம் என்பது நமது அரசியலமைப்பில் உள்ள தனிச் சிறப்பாகும்.

*
உச்சநீதிமன்றத்தின் இந்த பேராணை வழங்கும் அதிகாரத்தைப் பொருத்தவரை, ஒரு தனிநபர் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி அடிப்படை உரிமைகளுக்கான தீர்வினைப் பெற இயல்கிறது என்ற நோக்கின் அடிப்படையில், இது மூல அதிகாரமாக கருதப்படுகிறது.

*
ஆனால் மூல அதிகாரம் என்பது முற்றிலும் கூட்டாட்சி குறித்த விசயங்கள் குறித்தே ஆகும்.



**
மேல்முறையீட்டு அதிகார நீதிவரம்பு - Appellate Jurisdiction

*
உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பைப் பொருத்தவரை மூன்று தலைப்புக்களில் காணப்படுகின்றன.

*
அரசியலமைப்பு சம்மந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஒர் உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்போது, ஏதேனும் ஒர் வழக்கில் அரசியலமைப்புக்கு விளக்கமுரைப்பதில், அனைத்துத் தரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட வினா சம்மந்தப்பட்டுள்ளது என்றும், அதனை உச்சநீதிமன்றமே தீர்த்து வைக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் ஒரு சான்றளித்தால், அவ்வழக்குப் பற்றி உச்சநீதின்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

*
உரிமையியல் (சிவில்) - ரூ.20000-க்கு மேற்பட்ட மதிப்புடைய உரிமையியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம், அவ்வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரிக்கத்தக்கதென்று சான்றளித்தால், உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்குகள் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

*
இவை தவிர உச்சநீதின்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பை பாராளுமன்றம் விரிவுபடுத்த இயலும்.

குற்றவியல் (Criminal) - குற்றவியல் வழக்குகளில்

*
ஒர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் விடுதலைத் தீர்ப்பை மாற்றி அவருக்கு மரண தண்டணை அளித்தாலும்,

*
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குக் கீழ் நிலையில் உள்ள ஏதேனும் நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைத் தனக்கு மாற்றிக் கொண்டு, அந்த வழக்கின் விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளித்தாலும், அந்தத்தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்யலாம்.

*
ஒர் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு உகந்த வழக்கு என்று அந்த உயர்நீதிமன்றம் சான்றளித்தால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

**
ஆலோசனை வழங்கும் அதிகார நீதிவரம்பு - Advisory Jurisdiction

* Art.143-
ன்படி ஆலோசனை வழஹ்கும் நீதிவரம்பை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

*
பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் தொடர்பான அல்லது பொருண்மை சம்மந்தமான வினாவுக்கு உச்சநீதிமன்றத்தின் உச்சநீதிமன்றத்தின் ஆலோசணையைப் பெறுவது உசிதமானது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டறியலாம்.

*
குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படிப்பட்ட செய்தி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டால் நீதிமன்றமும் தேவையான விசாரணைகளை நடத்திய பின்னர் தனது கருத்துக்களைக் குடியரசுத் தலைவருக்கு அறிவிக்கும்.
1.     அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது - ஷரத்து 32

2.
அரசியலமைப்பை திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 368

3.
அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பாராளுமன்றம்

4.
நிறுத்திவைக்கப்பட இயலாத இரு ஷரத்துக்கள் - ஷரத்து 20 மற்றும் 21

5.
அவசர கால நெருக்கடி நிலையின்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை - ஷரத்து 19

6.
வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18 என்று வாக்குரிமை அளிக்கும் ஷரத்து - ஷரத்து 326

7.
ஷரத்து 20 மற்றும் 21 தவிர எந்த அடிப்படை உரிமையையும் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 368

8.
அடிப்படை கடமைகள் என்பது அமைந்துள்ள ஷரத்து - ஷரத்து 51 A

9. 1948
ல் நியமிக்கப்பட்ட மாநி்ல மறுசீரமைப்புக் குழு - ஜே.வி.பி. கமிட்டி

10. 1947
ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு எஸ்.கே.தார் கமிட்டி

11.
மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

12.
சொத்துரிமை என்பது தற்போது அடிப்படை உரிமை அல்ல, ஆனால் சட்ட உரிமை

13.
அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு - 1978

14. சொத்துரிமை 44 வது திருத்தத்தின்போது நீக்கப்பட்டது. சொத்துரிமை ,சட்ட உரிமை
300A ,1978--
Prabhu Tnpsc

15.
தற்போது சொத்துரிமை உள்ள ஷரத்து - ஷரத்து 300 A

16.
சொத்துரிமை நீக்கப்பட்டபோது இருந்த அரசு - ஜனதா அரசு

17.
தனி அரசியலமைப்பை உடைய ஒரே ஒரு இந்திய மாநிலம் - ஜம்மு காஷ்மீர்

18.
அரசியலமைப்பின்படி லோக்சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை - 552

19.
அரசியலமைப்பின்படி இராஜ்யசபைக்கான உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை - 250 (238+12)

20.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கியது - 3 அதிகாரப் பட்டியல்கள்

21.
அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தம் செய்ய இயலாது என்று குறிப்பிட்ட வழக்கு - கேசவானந்த பாரதி வழக்கு

22.
அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - அயர்லாந்து

23.
அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களி்ன் எண்ணிக்கை - 530

24.
அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 20

25.
எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தைச் சார்ந்தவை என்னும் கருத்துப் படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - கனடா

26.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

27.
அடிப்படை கடமைகள் பகுதி எந்த திருத்தத்தின்போது அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டன - 42வது திருத்தம்(1976)

28.
தொடக்கத்தில் அரசியலமைப்பில் இருந்த அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை - 10

29.
தற்போது அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை - 11

30.
30. 86வது திருத்தம்(2002) திருத்தத்தின்போது 11வது அடிப்படை கடமை சேர்க்கப்பட்டது.

SWARAN SINGH COMMITTEE PARINTHURAIPADI.  (
Prabhu Tnpsc)
2.     31. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் குறித்த அட்டவணை - 8வது அட்டவணை

32.
அதிகாரப் பட்டியல்கள்(3 பட்டியல்கள்) குறித்த விவரம் அடங்கியுள்ள அட்டவணை - 7வது அட்டவணை

33.
மாநிலங்களுக்கான இராஜ்ய சபை இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இடம் பெற்றுள்ள அட்டவணை - நான்காவது அட்டவணை

34.
உறுதிமொழிகள் இடம் பெற்றுள்ள அட்டவணை - மூன்றாவது அட்டவணை

35.
அனைத்து மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - முதலாம் அட்டவணை

36.
பதவிப்பிரமாணங்கள் இடம் பெற்றுள்ள அட்டவணை - மூன்றாவது அட்டவணை

37.
ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டன.



இந்திய பாராளுமன்றம்

1.
இந்திய பாராளுமன்றம் - மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது

2.
குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு - பாராளுமன்றம்

3.
புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு - பாராளுமன்றம்

4.
இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்

5.
நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் - 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

6.
மக்களவையின் தலைவர் - அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.

7.
இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை 32 விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

8.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 102

9.
இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர் அம்பேத்கார்

10.
அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது - அடிப்படை உரிமை

11.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது - முகவுரை

12.
இந்திய அரசாங்க முறையானது - பாராளுமன்ற ஆட்சி முறை

13.
மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார் வசமுள்ளது - பாராளுமன்றம்

14.
பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையான நிதிக்குழு - பொதுக் கணக்குக் குழு

15.
பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 24

16.
பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை - 45

17.
பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 21

18.
பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் - குளிர்கால கூட்டத்தொடர்

19.
பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர் - பட்ஜெட் கூட்டத்தொடர்

20.
பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் - 6 மாதங்கள்

21.
பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர் - துணை சபாநாயகர்

22.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திராகாந்தி

23.
லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

24.
அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை

25.
மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை

26.
பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்

27.
பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் - 2 முறை

28.
எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்

29.
பாராளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 14

30.
மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்

31.
நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம் - மத்திய அமைச்சரவை

32.
காபினெட்டின் தலைவர் - பிரதமர்

33.
மத்திய அமைச்சரவையின் தலைவர் - பிரதமர்

34.
காபினெட் என்பது - மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்

35.
மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும் - 6 மாதங்கள் வரை

36.
அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது - மூன்று

37.
அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது - லோக்சபைக்கு

38.
ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - சபாநாயகர்

39.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் - லோக்சபை

40.
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை - லோக்சபை(மக்களவை)

41.
லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர் - லோக் சபை உறுப்பினர்கள்

42.
தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும் - 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)

43.
பண மசோதா என்று வரையறை செய்பவர் - சபாநாயகர்

44.
பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும் - லோக்சபை

45.
பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு - 14 நாட்கள்

46.
லோக்சபையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

47.
லோக்சபையின் பதவிக்காலம் எந்த சமயத்தின்போது நீட்டிக்கப்படலாம் - தேசிய அவசரகால நெருக்கடி நிலையின்போது

48.
லோக்சபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)

49.
தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 545 (530+13+2)

50. 545
என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் - 2025

51.
லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 25

52.
லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

53.
இராஜ்யசபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 30

54.
இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் - லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள்

55.
இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி

56.
இராஜ்யசபையின் பதவிக்காலம் - நிரந்தரமானது

57.
இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

58.
தற்போது நடைமுறையில் உள்ள இரைஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 245 (233+12)

59.
மாநில சட்டப்பேரவை கொண்ட இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி

60.
ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை - 3

61.
ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை - 3

62.
இருசபைக் கூட்டுக் கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 108

63.
பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 110

64.
பட்ஜெட் என்பது - பண மசோதா

65.
மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 30

66.
மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையை சார்ந்தவர்கள்.

67.
மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் - 1 ஆண்டு

68.
பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 22 உறுப்பினர்கள்

69.
பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 15

70.
பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 7

71.
இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள் - பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு

72.
அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு - மதிப்பீட்டுக் குழு

73.
மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு - பொதுக் கணக்கு குழு

74.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் - 50

75.
இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு - பொதுக் கணக்குக் குழு

76.
பொதுவாக கேள்வி நேரம் என்பது - காலை 11 முதல் 12 வரை

77.
பூஜ்ய நேரம் என்பது - 12 முதல் 1 மணி வரை

78.
சபையின் முதல் ஒரு மணி நேரமே - கேள்வி நேரம்

79.
நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும் - லோக்சபை

80.
லோக்சபையின் தலைவரா செயல்படுபவர் - சபாநாயகர்

81.
லோக்சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர் - சபாநாயகர்

82.
லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் - பிரதமர்

83.
மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்

84.
லோக்சபையின் முதல் சபாநாயகர் - ஜி.வி.மாவலங்கார்

85.
ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது - 1935ம் ஆண்டுச் சட்டம்

86. 1995
ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் - ஃபாசல் அலி

87.
நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை - வாக்குரிமை (பாராளுமன்ற செயல்பாடுகளில் வாக்களிக்க இயலாது)

88.
காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

89.
அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு - ஜப்பான்

90. 6
வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பது - 11வது அடிப்படை கடமை

91.
ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு - ஷரத்து 356

92.
இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்

93.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஒய்வுக்கால வயது - 65 (அல்லது 6 ஆண்டுகள்)

94.
இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்

95.
இந்திய பொதுப்பணத்தின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலர்

96.
மைய அரசில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் - மொரார்ஜி தேசாய்

97.
இந்திய அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் - மக்கள்

98.
இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்தி்ருக்கிறது - கனடா

99.
கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம் - அதிகார பங்கீடு

100.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை

No comments:

Post a Comment