Thursday 22 September 2016

6ஆம் வகுப்பு தமிழ்

6ஆம் வகுப்பு தமிழ்
1.தமிழ் தாத்தா என போற்றப்படுபவர் யார்?
   உ.வே.சா
2.தமிழ் தாத்தா பிறந்த ஊர்?
   உத்தமதானபுரம்
3.உ.வே.சாவின் பெற்றோர் பெயர்?
   தந்தை:வேங்கட சுப்பையர்
   தாய்:  சரசுவதி
4.உ.வே.சா பிறந்த ஆண்டு?
   19-02-1855
5.உ.வே.சா மறைந்த ஆண்டு?
   28-04-1942
6.வள்ளலார் பிறந்த ஆண்டு?
   05-10-1823
7.வள்ளலார் மறைந்த ஆண்டு?
   30-01-1874
8.பாரதியார் பிறந்த ஆண்டு?
   11-12-1882
9.பாரதியார் மறைந்த ஆண்டு?
   11-09-1921
10.இராமலிங்க அடிகளின் பெற்றோர் பெயர்?
   தந்தை : இராமையா
   தாய் : சின்னமையார்
11.அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக வள்ளலார் நிறுவிய அமைப்பு?
   சமரச சுத்த சன்மார்க சங்கம்
12.ஏழை மக்களின் பசியை போக்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய தரும சாலை
13.ஞான நெறி விளங்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய ஞான சபை
14.வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
    திருவருட்பா
15.திருவருட்பாவில் எத்தனை திருமுறைகள் பாடல்கள் உள்ளன?
    6 திருமுறைகள், 5818 பாடல்கள்
16.அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை எதை போன்றது என வள்ளுவர் கூறுகிறார்?
    பாலை நிலத்தில் காய்ந்த மரம் மீண்டும் துளிர் விடுவது போன்றது
17.அன்புடைமை எனும் அதிகாரம் எப்பால், எந்த இயலில் அமைந்து உள்ளது?
    அறத்துப்பால், இல்லற இயல்
18.தற்போது நிகழும் திருவள்ளுவர் ஆண்டு?
   2046
19.சிறுமி சடகோ சசாகி எந்த நாட்டை சார்ந்தவர்?
  ஜப்பான்
20.சடகோ சசாகி வசித்த நகரம்?
   ஹிரோஷிமா
21.ஜப்பானியர் வணங்கும் பறவை?
  கொக்கு
22.குழந்தைகள் அமைதி நினைவாலயம் அமைந்துள்ள இடம்?
    ஹிரோஷிமா
23.இது எங்கள் கதறல்,இது எங்கள் வேண்டல், உலகத்தில் அமைதி வேண்டும் என்ற தொடர் எங்கு இடம் பெற்றுள்ளது?
   குழந்தைகள் அமைதி நினைவாலயம்
24.சடகோ சசாகி மறைந்த நாள்?
   25-10-1955
25. டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற நூலை எழுதியவர்?
    அரவிந்த குப்த்தா
26.ஓலை சுவடியை ஆற்றில் விட்ட நாள்?
    ஆடி பெருக்கு
27. ஆற்றில் விட்ட ஓலை சுவடிகளை உ.வே.சா கண்டெடுத்த இடம்?
    கொடுமுடி, ஈரோடு
28.உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம்
    பெசன்ட்நகர், சென்னை
29.உ.வே.சா நூலகம் அமைக்க பட்ட ஆண்டு?
    1942
30. உ.வே.சா நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
    2006
31.ஓலைச் சுவடிகளில் எது இருக்காது?
    புள்ளி இருக்காது,ஒற்றைக் கொம்பு இரட்டை கொம்பு வேறுபாடு இருக்காது
32.ஓலைசுவடி எந்த ஓலையால் ஆனது?
    பனை ஓலை
33.ஓலை சுவடியை பாதுகாக்கும் இடங்கள் எவை?
    1. கீழ்திசை சுவடிகள் நூலகம்-சென்னை
    2. அரசு ஆவண காப்பகம்-சென்னை(1999)
    3.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை(1970)
    4. சரசுவதி மகால் நூலகம்- தஞ்சாவூர்(1918)
34.இந்தியாவில் உள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை?
   2400
35.உணவு அடிப்படையில் பறவைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
   5வகை
36.அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும்,அதிக வெப்பத்திலும் வாழும் ஒரே வகை  பறவை?
   பூ நாரை
37.பறவைகள் பருவ கால மாற்றத்தின் போது இடம் பெயர்தல்?
   வலசை போதல்
38.தமிழகத்தில் பட்டாசு வெடிகாமலும், மேள தாளாம் இல்லாமலும் உள்ள ஒரே சிற்றூர்?
  கூந்தன் குளம்
39.தமிழகத்தில் உள்ள பறவைகள் புகலிடங்களின் எண்ணிக்கை?
   13
40.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்?
   திருவள்ளூர்
41.மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்குமுன் பாம்பினம் தோன்றியது?
   10கோடி ஆண்டுகளுக்கு முன்
42.மனிதனின் சிறந்த நண்பன் என அழைக்கபடும் இனம்?
   பறவை
43.உலகின் மிகப்பெரிய விஷபாம்பு?
   ராஜநாகம்
44.உலகில் உள்ள பாம்பினங்களின் எண்ணிக்கை?
   2750
45.இந்தியாவில் மட்டும் உள்ள பாம்பினங்களின் எண்ணிக்கை?
  244
46.விஷப்பாம்புகளின் எண்ணிக்கை?
  52
47.கூடுக்கட்டி வாழும் ஒரேவகை பாம்பு?
  ராஜநாகம்
48.சடகோ சசாகி கொக்கு செய்ய ஊக்கமளித்தவர்?
  தோழி சிசுகோ
49.நல்ல பாம்பின் விஷத்தில் இருந்து தயாரிக்கபடும் மருந்து?
   கோப்ராக்சின் எனும் வலி நீக்கி
50.பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவது ஏன்?
   சுற்றுபுறத்தில் உள்ள வாசனையை அறிய
51.ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர்?
    பாரதியார்
52.கனவு காண்பதில் இவருக்கு நிகர் இவரே?
    பாரதியார்
53.சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியவர்?
   ஔவையார்
54.ஔவையாரை தமிழ்மகள் என அழைத்தவர்?
   பாரதியார்
55.முயற்சி திருவினையாக்கும் என கூறியவர் யார்?
   திருவள்ளுவர்
56.டேரிபாக்ஸ் எந்த நாட்டை சார்ந்தவர்?
   கனடா
57.டேரிபாக்ஸ் புற்றுநோய் தொடரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் நடைபெறுகிறது?
   செப்டம்பர்15
58.வாய்மொழி இலக்கியம், தாளில் எழுதா பாடல், கிராமிய பாடல் என போற்றப்படும் இலக்கியம் எது?
   நாட்டுபுற பாடல்கள்
59.உலக நாட்டுபுறவியலின் தந்தை?
   ஜேக்கப்கீரிம்
60.தமிழக நாட்டுபுறவியலின் தந்தை?
   நா.வானமாமலை
61.பிறந்த குழந்தைக்கு பாடும் பாடல்?
   தாலாட்டு
62.சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு பாடும் பாடல்?
   விளையாட்டு பாடல்
63.திருமண நிகழ்வின் போது பாடும் பாடலின் பெயர்?
   சடங்கு பாடல்/கொண்டாட்ட பாடல்
64.தொழில் செய்வோர் களைப்பு நீங்க பாடும் பாடலின் பெயர்?
   தொழில் பாடல்
65.சாமி கும்பிடுவோர் பாடும் பாடலின் பெயர்?
   வழிபாட்டு பாடல்
66.இறந்தோற்க்கு பாடும் பாடல்?
   ஒப்பாரி
67.விவேகானந்தரின் இயற்பெயர்?
   நரேந்திரதத்
68.வீரத்துறவி என போற்றப்படுபவர்?
   விவேகானந்தர்
69.புறட்சிதுறவி என போற்றப்படுபவர்?
   வள்ளலார்
70.சமய சார்பற்ற துறவி என போற்றப்படுபவர்?
   இளங்கோவடிகள்
71.தொலைவில் இருந்தாலும் எத்தகைய நட்ப்பை அடைதல் வேண்டும் என நாலடியார் கூறுகிறது?
   வாய்க்கால் போன்றோர் நட்பை
72.எத்தகைய நட்பு கூடாது என நாலடியார் கூறுகிறது?
    ஈக்கால் துணையும் உதவாதவர் நட்பு
73.மனைக்கு விளக்கம் மடவாள் என்ற அடிகள் இடம்பெறும் நூல்?
    நான்மணிக்கடிகை
74.தமிழில் உள்ள எழுத்துகளில் மனித இனத்தை குறிக்கும் எழுத்து?
    அ
75.அ எனும் எழுத்தை எழுதி முடிக்கும் போது போடப்படும் கோடு எதனை குறிக்கிறது?
    மனிதன் முதுகில் சுமக்கும் அம்பு கூடு
76.தமிழ் எழுத்துகளில் நண்பர்கள் அல்லது நட்பு எழுத்துகள் என எவை அழைக்க படுகின்றன?
    வல்லினமும்,மெல்லினமும்
77.சுட்டெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
    அ,இ,உ
78.வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
   5, எ ஆ ஏ யா ஒ

No comments:

Post a Comment