Monday 26 September 2016

ஹீமோபீலியா

உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, 'ஹீமோபீலியா' எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.
ரத்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறும்போது, வெளிக்காற்றுபட்ட உடன், உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். ரத்தப்போக்கு தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படும்.
'ஹீமோபீலியா' மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது. பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கும். ஒருவருக்கு அடிபட்டால், மூன்றாவது நிமிடத்தில், ரத்தம் உறைய வேண்டும். ஆனால், 'ஹீமோபீலியா' உள்ளோருக்கு, 30 நிமிடங்கள் கடந்த பிறகும், ரத்தம் உறையாது.
தாயின் கருப்பையில், குழந்தை உருவாகும்போது, அதன் பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். அவை, ஆணின் உடலில் 'எக்ஸ், ஒய்' குரோமோசோம்களாகவும், பெண் உடலில், 'எக்ஸ், எக்ஸ்' குரோமோசோம்களாகவும் இருக்கும். 'எக்ஸ்' குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே, 'ஹீமோபீலியா' வர முதன்மை காரணம். அதனால், ஒரு 'எக்ஸ்' குரோமோசோம் கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால், சமாளிக்க முடியாது.
இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு, ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு 'எக்ஸ்' குரோமோசோமில் உள்ள மரபு பண்புகளை கொண்டு, ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.
இந்த நோயின் தன்மைக்கு ஏற்றவாறு, சிகிச்சைகள் உள்ளன. 'க்ரையோ பிசிபிடேடர்' எனும் ஊசி உள்ளது. ஆனால், இதை தயாரிக்கும் செலவு அதிகம். நம் நாட்டில் இம்மருந்து அதிகம் கிடைப்பதில்லை.

No comments:

Post a Comment