Thursday 24 September 2015

வள்ளலாரின் அறிவுரைகள்

வள்ளலாரின் அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.

2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.

3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.

4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.

5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.

6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.

7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.

8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.

9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.

10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

இன்றைய பொழுது இனிதாகட்டும்...!

No comments:

Post a Comment