Thursday 24 September 2015

நாம் நினைத்தால்!

நாம் நினைத்தால்!

----------------------

நாம் சாதாரணமானவர்களாகப் பிறந்திருந்தாலும் நாம் நினைத்தால் நம் திறமையைப் பயன்படுத்தி நம்மால் மிகப்பெரிய நிலைக்கு உயர முடியம்.
நாம்
நடுந்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,
நாம் நினைத்தால் மிகப்பெரிய தொழிற்புரட்சியை உருவாக்க முடியும்.நாம் படிப்பறிவில்லாத பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் நாம் நினைத்தால் உலகம் போற்றும் மாமேதையாக உருவாக முடியும்.
குழந்தைப் பருவத்தில் நாம் தகுதியில்லாதவர்களாக,
பலவீனமானவர்களாக கருதப்பட்டாலும் நாம் நினைத்தால் நமது அடுத்த தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரனமாக திகழலாம்.
எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையைவிட,வெற்றி கிடைக்கும்வரை விடமாட்டேன் என்ற வைராக்கியமே முக்கியம்.வாழ்க்கை சில சமயம் சதுரங்க ஆட்டம் போன்றது.
திறமையாக பயன்படுத்தினால் சிப்பாயும் இராணியாக மாறும்!
இதுவரை பிறரால் முடிந்தது நாம் நினைத்தால் நம்மாலும் முடியும்!




No comments:

Post a Comment