Thursday 24 September 2015

பேய்கள் ஜாக்கிரத்தை!

பேய்கள் ஜாக்கிரத்தை!

--------------------------
கடவுள் இருக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு எதிர்முனையில் பேய்கள் இருக்கத்தானே செய்யும்!
எங்கே அவைகள்?
பேய்கள் என்றதும் திரைப்படத்தில் வருவதைப்போன்று பயங்கரமான தோற்றத்தில்,வெள்ளை உருவத்திலும்,நீண்ட தலைமுடியோடும்,கூர்மையான பற்களோடும் இருக்கும் என்று எண்ணக்கூடும்.
ஆனால் இங்கே சொல்லவரும் பேய்கள்
உருவத்தில் அழகாக இருக்க கூடும்.
நிறைய நேரம் நாம் அவைகளை கடந்து வந்திருக்கிறோம்.ஆனால் அடையாலம் காண தவரவிட்டோம்.
ஏனென்றால் அவைகள் நமக்கு நெருக்கமான பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,
உறவினர்கள்,
அலுவலக உடன் பணியாற்றுபவர்கள் வேடமனிந்து அவைகள் வரும்...!
அவர்களின் உடலை தற்காலிகமாக வாடகை எடுத்து நம்மிடம் வரும்.
அவைகளின் நோக்கம் பல.
நம்முடைய இலட்சியத்திலிருந்தும்,
வாழ்வில் இருந்தும் நம்மை திசைத்திருப்பும் எண்ணம் கொண்டு,
அதற்கு தேவையான ஆயுதங்களை அவைகள் பயன்படுத்தும்.
பல சமயம் அழகை காட்டும்.சில சமயம் அழுகையை காட்டும்.
உறவுமுறைகளை காட்டி எச்சரிக்கும்.அடுத்தவனை காட்டி நச்சரிக்கும்.
வசைச்சொற்களால் நம்மை வேதனைப்படுத்தும்.
இழிவுப்படுத்தி பேசும்.
நம்முடைய நம்பிக்கையை குலைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு நெருக்கமானவர்கள் பேசும் வார்த்தைகள் அல்ல.அவைகள் அனைத்தும் பேய்களின் வாயிலிருந்து கடன் வாங்கப்பட்ட வார்தைகள்!
அவைகளின் தூதுவர்கள் எல்லா திசைகளிலும் உண்டு.
அவைகள் இயேசுவை காட்டிக்கொடுத்தது.
கிருஷ்னனுக்கு சாபம் கொடுத்தது.
அன்னை தெரேசாவை பார்த்து காரிஉமிழ்ந்தது.
அம்பேத்காரை இழிவுப்படுத்தியது.
நெல்சன் மண்டேலாவை 27 வருடங்கள் சிறையில் வைத்தது.இந்த பட்டியல்
இன்னும் நீளும்!
அவை அனைத்தையும் செய்தது ஆரறிவைக்கொண்ட மனித பேய்களே!
கடவுள் படைத்ததை திருடுவதும்,
திசைதிருப்புவதுமே அவற்றின் முதன்மையான நோக்கம்.
நமக்குள்ளும்
அவைகள் தற்காலிகமாக செயல்புரியும்...!
நம்
எண்ணத்தில்...
செயலில்...
பேச்சில்...!

பேய்கள் ஜாக்கிரதை!!!

No comments:

Post a Comment