Thursday 24 September 2015

தாய்

 தாய்
--------

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தவள் -அன்பாய்
தரைமேலே தவழவிட்டு தினம் ரசித்தவள்!
கருவிழியாய் எனைக்காத்து வளர்த்து வந்தவள் - நான்
கண்மூடித் தூங்கும்வரை விழித்துக் கிடந்தவள்!

இடைமீது எனைத் தூக்கி நடை போட்டவள் - நான்
விளையாடிப் பார்ப்பதற்கே விழி விழித்தவள் !
மழலைச் சொல் மழைபோல பொழியச் சொல்பவள் - அதில்
பிழை நீக்கி பொருளுணர்ந்து சிரித்து மகிழ்ந்தவள்!

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தவள் -அன்பாய்
தரைமேலே தவழவிட்டு தினம் ரசித்தவள்!

பசித்தாலும் நேரத்தில் பசி போக்கிட - தினம்
பாலாக உதிரத்தை மாற்றிக் கொடுத்தவள்!
கட்டிய தொட்டிலில் எனைக் கிடத்தியே - தினம்
கனிவான தாலாட்டால் உறங்கச் செய்பவள் !

கால்களில் சாய்த்தென்னை குளிப்பாட்டுவாள் - புருவம்
கண்ணுக்கு மையிட்டு பொடி பூசுவாள் !
தன் கண்ணே பட்டிடுமோ என்றெண்ணுவாள் - அவள்
தலையிலே விரல் மடக்கி சுடக்கெண்ணுவாள் !

அழும்போது மலையளவு பிழையானவள் - அன்பு
அணைப்பாலே சிரிப்பூட்டி மகிழச் செய்பவள் !
அம்புலியை அழைப்பதுபோல் ஏமாற்றுவாள் - அன்பு
அம்பாலே பிடிசொற்றை தினம் ஊட்டுவாள்!

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தவள் -அன்பாய்
தரைமேலே தவழவிட்டு தினம் ரசித்தவள்!

நோயாலே வாடுகின்ற நொடி கண்டதும் - தினம்
நோம்பிருந்து மருந்துண்டு சரி செய்பவள் !
கால்களால் மார்பிலே மிதி வாங்கினும் - அன்பாய்
கால்பிடித்து பாதத்தில் முத்தமிடுபவள் !

- அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment