Thursday 24 September 2015

படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை....

படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை....

அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது--உன்னை
நோகடிக்க அல்ல,,,
எட்டு மாதமாய் சுமக்கும்--உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது,,
பசியினால் அல்ல,,
பால் குடிக்கும் சாட்டில்--உன்
இதயத்தை முத்தமிட..
பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது
பயத்தினால் அல்ல,,
உன் பாசத்தை பிரிகிறேனோ,,
என்ற பயத்தினால்.
இளமையில் நான் அழுதது
காதலில் கலங்கி அல்ல,,
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை
பிரிக்குமோ என்ற பயத்தினால்..
நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,,
நான் உழைத்து உன்னை
பார்க்கப்போகிறேன்--என்ற
ஆனந்தத்தில்..
இங்கு தனிமையில் அழுகிறேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல
உன் தாய் அன்பு காணாமல்..
அம்மா!!!
உன் இறப்பின் பின் நான் அழுவேன்-நீ
இறந்ததால் அல்ல,,
உலகில் பாசமே இறந்ததால்..
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா--நீ
அழவேண்டாம்--ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..

No comments:

Post a Comment