Thursday 24 September 2015

வளையாத நதிகள் இல்லை

 வளையாத நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை. வரும் காலம் காயங்கள் ஆற்றும்.

பொதுவாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஒரு சில மதிப்பெண்களால் தேர்வில் பின் தங்கியவர்களுக்கு அந்த கணத்தில் தோன்றும் இயல்பான மனவோட்டங்கள் பல. முதலில் நம் அறிவின் மீதே நமக்கு ஏற்படும் கசப்பு, பல ஆண்டுகளின் தீவிர உழைப்பின் Negative பலன், வேலையில்லா நிலைமை, ஏமாற்றம், ஏக்கம், மனமுறிவு, பணமின்மை, தன்னம்பிக்கையின்மை, அன்புக்காக பரிதவிப்பு . அந்த வயதிற்கான வாழ்க்கையின்மை (Fighting Biological Needs) போன்றவை அந்த நேரத்தில் தோன்றி நம்மை கலங்கடிக்கும்.

உண்மையில் இவைகளை அந்த கணத்தில் கடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஒரு சில உணர்வுகளை நம்மாலே கூட புரிந்து கொள்ள இயலாது தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கடக்கக் கூடியதே. கொஞ்சம் பொறுமையாக அதை ஏற்றுக்கொண்டு உற்றுக் கவனித்தாலே போதும். ஒரிரு வாரத்தில் அந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.

உண்மையில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்தவர்கள் தான் வாழ்க்கையில் நிறைய சாதித்ததோடு மட்டுமல்லாமல் சாதனையாளராகவும் உள்ளனர். காரணம் தோல்வி தரும் பாடமும் தோல்வியால் வாழ்க்கை தரும் நெருக்கடியும் அவர்களை படிப்படியாக ஆற்றலுடையவராக்குவது தான். தோல்வியால் உண்டாகும் படிப்பினை கூட நோய்களில் இருந்து நம்மை மீட்கும் ஆன்டிபயடிக் போலத் தான்.

இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள், பந்தங்கள், நட்புகள் நம்மை சுற்றி இருந்தாலும் நம்மை நாம் உணரும் தருணம் என்று ஒன்று உண்டு. அது எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. அப்படி அது அவர்களுக்கு வாய்க்கும் பட்சத்தில் அவர்கள் அதை முற்றிலும் உணர்ந்தால் நெறிப்பட்ட மனிதர் ஆகிவிடுவர். எந்த உணர்வுக்கும் ஆட்படமாட்டர்.

இதை இப்படியும் உருவகம் கொள்ளலாம். அதாவது மதம், உட்பிரிவு(Social Group), பந்தம், நட்பு எல்லாமே ஒர் பழத்தில் உள்ள பல லேயர்கள் (surrounding) போலத் தான். பழத்தின் உள்ளே இருக்கும் நட்ஸ் என்பது அதன் தனிப்பொருள் (Human Independent Soul). அது தனித்துவமானது (Unique). அதன் வலிகளையும் உணர்வுகளையும் அவனால்/அவளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆற்றுப்படுத்த முடியும். பெற்றவர்களால் கூட புரிந்து கொள்ள முடியாது. இந்த உணர்வைத் தான் நமக்கு தோல்விகள் ஏற்படுத்தித் தரும்.இது ஒரு Vision. (பழத்தை சாப்பிட்டு விட்டு நட்சை எறிந்து விடுவதன் மூலம் அது ஒரு மரத்தையே உருவாக்கும் வலிமை வாய்ந்தது என்பதை இங்கே நீங்கள் பொருத்திப் பார்க்க வேண்டும்.)

எனவே கொஞ்சம் யோசித்து பார்த்தால், வெற்றி என்பது வெற்றி பெற்று விட்டோம் என்ற கொண்டாட்டத்தோடு அந்த கணத்தோடு முடிந்து விடும். அகம்பாவத்தையும், ஆணவத்தையும் கூடசேர்த்து கொண்டு வரும். ஆனால் தோல்வி என்பது மிகுந்த வலி மிகுந்தது. உங்களை அது நிறைய சிந்திக்க வைக்கும். பக்குவப்பட வைக்கும். வாழ்க்கையில் அனைத்து பரிமாணங்களையும் புரிய வைக்கும். இது அடுத்த தேர்வை புதிய அணுமுறையுடனும் ஒரு வகையான நேர்த்தியுடனும் கண்டிப்பாக உங்களை உயரத்தில் வைக்கும்.

எனவே வருகிற குரூப் 2 (A), வி.ஏ.ஒ மற்றும் குரூப் IV தேர்வை புதிய சிந்தனைகளுடன், புதிய வரையறைகளுடன், புத்தம் புதிய மலர்ச்சியுடன் அணுகத் தொடங்குங்கள். வசந்தம் மிக அருகில்.

No comments:

Post a Comment