Thursday 24 September 2015

ஒஷோ உணர்த்தும் 3 முக்கியம் அம்சங்கள்

மீள்பதிவு:

பொதுவாகவே இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசை விடவும் சிறிய தூசு என்பதை உயர் ஆன்மீகமும், நம் ஆழ் அறிவும் உணர்த்தும். அதே நேரம், இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடைய இருப்பும் போதிய அளவு முக்கியத்துவம் கொண்டது தான் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். "உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு! இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலைவிடு!" என்பார் கவியரசு கண்ணதாசன்.

"இதில் உன்னை விட்டால் உலகம் இல்லை" என்ற வரி மிகையாக சொல்லப்பட்டதோ என்று எண்ணத் தோணுகையில் ஒஷோ ஞாபகத்துக்கு வருகிறார்.

ஒவ்வொரு உயிரின் இருப்பும் இந்த உலகில் முக்கியம். நீங்கள் இல்லையென்றால், "இந்த உலகம் கொஞ்சம் கவிதையை இழந்திருக்கும்", "ஒரு பாடலை இழந்திருக்கும்" என்பார் அவர். நீ முக்கியம் இல்லை என்ற எண்ணத்தை இந்த சமூகம் மனிதர்கள் மேல் உருவாக்குகிறது. ஆனால் அந்த அவ நம்பிக்கையை உடைப்பது தான் என் வேலை என்கிறார் அவர்.

ஒஷோ உணர்த்தும் 3 முக்கியம் அம்சங்கள்
1.தன்னை நம்புவது
2.தன்னை நேசிப்பது
3.தன் மதிப்பை உணர்வது

அப்படியானால் ஏற்கனவே மனதிலிருக்கும் வலியை வருத்தத்தை (Disappointment/ Defeat/ Disaster) என்ன செய்வது? அந்த வலியையும் வருத்தத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பது ஆறிக் கொண்டிருக்கும் காயத்தை கீறி விடுவதற்கு சமம். ஆனால் அமைதியாக அந்த வலியை உற்று நோக்குவதன் மூலம் அந்த வலிகளின் மூலத்தை கண்டடைந்து விழிப்புணர்வுடன் அதை அணுகி சமநிலை தன்மையின் மூலம் அந்த வலியை கடந்து விடலாம்.

இந்த சமநிலையும் விழிப்புணர்வும் உறுதிப்பட, உறுதிப்பட உங்களின் வலிகளின் வேர் தோண்டி எறியப்படுகிறது. விழிப்புணர்வு வெளிச்சத்தில் இருட்டு காணாமல் போகிறது. இது தான் கவலையை நேரடியாக எதிர் கொள்ளும் வழி. கவலையை மறைமுகமாக வெல்ல நினைப்பவர்கள் தான் தற்காலிக பொழுது போக்குகளில் தங்கள் உணர்வுகளை மறைத்து கொள்கிறார்கள் என்கிறார்.

கழுதைக்கு முன் தொங்கவிடப்படுகிற கேரட்டை போல துன்பங்களை கட்டிக் கொண்டு அதன் பின்னால் ஒடுகிற மாய வேலையை மனம் செய்யும். ஆனால் அந்த துன்பங்களை பழைய சம்பங்களின் வலிகளை எரித்து விட்டால் கழுதை போல தள்ளாடும் மனம் குதிரைப் பாய்ச்சலால் தூதுகலமாய் ஒடும். ஆனந்தத்தின் பாடலை எப்போதும் பாடும்.

No comments:

Post a Comment