Tuesday 5 May 2015

GK

2015 ஆம் ஆண்டு தமிழக அரசு விருது

கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
கம்பர் விருது - கோ.செல்வம்
சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன்
ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்
Like · Comment · Share

Current affairs and Gk
1.இந்திர தனுஷ் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்
2.ஆந்திராவின் புதிய தலைநகர் -அமராவதி
3.சாகர் மாலா திட்டம் பெரிய துறைமுகங்களுக்கு அருகே 12 smart சிட்டிகளை அமைப்பது
4.2016 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடம் லியோடிஜெனிரோ
5.Playing it my way புத்தகத்தை எழுதியவர் சச்சின் டெண்டுல்கர்
6.ஆபரேஷன் 'மைத்ரி' -நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி
7.2015 ஔவையார் விருது-சாந்தி ரங்கநாதன்
8.IAS தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாற்றுத்திறனாளி பெண்-சரிகா(ஒடிசா)
9.டெல்லி மாணவி நிர்பையா பற்றி BBC எடுத்த ஆவணப்படம் -இந்தியாவின் மகள்
10.உலகின் முதல் சூரிய சக்தி விமானம்-இம்பள்ஸ்2(ஸ்விட்சர்லாந்து)

ஐநா : உலகிலேயே மகிழ்ச்சியான 158 நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தான் மிகவும் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் கீழ் இயங்கும் சஸ்டெய்னபில் டெவலப்மென்ட் சொலிஷன் நெட்வொர்க் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் ஆயுட்காலம், சமூக ஆதரவு மற்றும் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. டாப்-5 இடங்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகியவை இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா 15வது இடத்திலும், இங்கிலாந்து 21, சிங்கப்பூர் 24, சவுதி அரேபியா 35, ஜப்பான் 46, சீனா 84வது இடத்திலும் உள்ளன.

இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013ல் 113வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் பின்தங்கியுள்ளது. நம்மை விட பாகிஸ்தான் (81), பாலஸ்தீனம் (108), வங்கதேசம் (109), உக்ரைன் (111) மற்றும் ஈராக் (112) ஆகிய நாடுகள்கூட பட்டியலில் முன்னணியில் உள்ளன. ஆப்கானிஸ்தான், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்ரிக்க நாடுகளான டோகோ, புருண்டி, பெனின், ரிவாண்டா, புர்கினா, பாஸோ, ஐவரி கோஸ்ட், கினியா மற்றும் சாட் ஆகிய 10 நாடுகள் மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment