Tuesday 5 May 2015

தேர்வு முடிவுகள் எப்போது?

இன்றய அளவில் போட்டி தேர்வாளர்களை அதிகம் பாதிக்கும் விசயங்களாக உள்ளவை...கட் ஆஃப் மதிப்பெண் என்ன?

தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வு அறிவிப்புகள் எப்போது?

தேர்வுகள் தள்ளி போகுமா?

இந்த நான்கு கேள்விகளுக்கு விடை தேடியே தேர்வாளர்கள் படிக்கும் பொன்னான காலங்கள் வீணாக சென்றுகொண்டு உள்ளன.இதற்கு ஒரு படி மேலே சென்று குருப் I பிரதான தேர்விற்கு தயார் படுத்தும் தேர்வாளர்கள் தங்களின் தயாரிப்புகளை துவங்காமலே இந்த தேர்வு தள்ளி போக வாய்ப்பு உள்ளது என கூறி தன்னை சமாதான படுத்தி கொண்டு உள்ளனர்.தேர்வுகள் தள்ளி போவதால் நாம் தயாரிப்புகளை துவங்காமல் இருப்பது முறையாக இருக்குமா என்பதை சிந்தித்து பாருங்கள்.நீங்கள் எழுதப்போகும் தேர்விற்கு ஒரு வருடம் படித்தால் கூட மூன்று தாள்களின் பாடத்திட்ட முறையை முடிக்க இயலாது.உங்களை கடின உழைப்பிற்கு கீழ் கொண்டு வாருங்கள்.உங்களுக்கு கிடைத்து இருக்கும் வாய்ப்பை நீங்களே இழந்து நிற்காதீர்.

அடுத்து முடிவுகள் என்பது அடுத்த தொடக்கம்.நீங்கள் GROUP IV இல் வெற்றி பெற்று விட்டால் GROUP II விற்கு படிக்க தயாரவீர்கள்,அடுத்த கட்டம் தான் முடிவு என்பது அதற்காக நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.அதை போல் வதந்திகளை கிளப்பி விட வேண்டாம்.இவைகள் தேர்வாளர்களின் சிந்தனையை மாற்றும்.

தேர்வு அறிவிப்புகள் எப்பொழுது வந்தாலும் நாம் அந்த தேர்விற்கு முழுவதுமாக தயார் நிலையில் இருக்கிறோமா என்பதை சிந்தித்து பாருங்கள்.அந்த தேர்வின் பாடத்திட்ட முறையை நாம் முழுவதும் படித்து அலகு தேர்வுகள்,மாதிரி தேர்வுகள் எழுதி பத்து விட்டோமா?என்பதை சிந்தியுங்கள்?

போட்டி தேர்வுகளுக்கு நம்மை தயார் செய்து கொண்டு இருப்பதே மன உளைச்சல் தரக்கூடிய ஒன்று.இதில் மேலும் உங்களை சிரமப்படுத்தி கொள்ளாதீர்கள்.நீங்கள் நேர் வழியில் சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிட்டும்.

இறுதியாக....நீங்கள் காலம் கடந்து செய்யும் எந்த ஒரு செயலும் காலத்தை வெல்வது இல்லை.

No comments:

Post a Comment