Tuesday 5 May 2015

சிப்பாய்

 "செஸ் ஆட்டத்திலே மிகவும் பலவீனமானதாக நாம் கருதுவது சிப்பாயை தான். முதலில் மட்டும் இரண்டு எட்டு போகும். அப்புறம் ஒவ்வொரு கட்டமாகத் தான் நகரும். ஆனால் இந்த சாதாரண சிப்பாய்க்கும் நம்மவர்கள் ஒரு அசாதாரணமான சக்தியைக் கொடுத்திருப்பார்கள். சதுரங்கத்தில் எந்தக் காய்களும் கடைசி வரை ஒரே விதமாகத் தான் செயல்படும். ஒன்று மற்றொன்றாக மாற முடியாது.

ஆனால் சிப்பாய் மட்டும் இறுதிக் கட்டத்தை எட்டினால் அது எதுவாகவும் மாறலாம். அது போல நீங்களும் உங்களின்
மென்மையான இயல்பை வைத்து போட்டி நிறைந்த இந்த சூழ்நிலையை பார்த்து உங்கள் ஆற்றலை குறைத்து மதிப்பிடாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியை திறமையை வைத்து உங்களை சரியாக மதிப்பிடுங்கள். தேர்ந்த சதுரங்க ஆட்டக்காரரைப் போல் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டு கடந்தால் எதுவாகவும் நீங்கள் மாறலாம்!"--திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ்..அவர்கள் கூறியது.

‪#‎நீதி‬: இது போட்டித் தேர்வாளர்களுக்கு முற்றிலும் பொருந்தும். படிக்கும் போது சிப்பாய் மாதிரி தான். கஷ்டப்பட்டு/ திட்டமிட்டு அந்த பக்கம் சென்று விட்டால் நாமும் பவர் பெற்ற அந்த சிப்பாய் போலத்தான்.

No comments:

Post a Comment