Tuesday 5 May 2015

அடுத்த நிமிடத்தைக்கூட நாம் ஆள முடியாதென்பதே நிஜம் .

அடுத்த நிமிடத்தைக்கூட நாம்
ஆள முடியாதென்பதே நிஜம் .
இதில் தேவையற்ற திமிர், வெறுப்பு, ஆணவம் போன்ற குப்பைகளைச் சுமந்து சாக வேண்டாம்,
வாழ்க்கையின் முக்கியமான மூன்று கட்டம்ஏப்ரல் 24,2015,13:02 IST


வாழ்க்கையை மூன்று கட்டமாக பிரிக்கலாம். முதல் 25 ஆண்டுகளில் நாம் எதை வேண்டுமானாலும் கற்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 25- 50 ஆண்டுகளில் எதை எல்லாம் ஈட்ட வேண்டும்மோ அதை எல்லாம் ஈட்ட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 50- 75 ஆண்டுகளில் சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பி செய்ய வேண்டும். இந்த மூன்று கட்டமும் முக்கியம்தான்.

முதல் கட்டத்தில் கிடைப்பதை படிப்போம் என்று இல்லாமல் நமக்கு தெரிந்த மற்றும் ஆர்வம் உள்ள துறையில் துறைகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். நம்மால் சாதிக்க முடிவும் என்ற நம்பிகையோடு, ஒரு துறையை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த துறையில் நாம் தான் முதலில் இருப்போம் என்ற வெறி இருக்க வேண்டும். இந்த மாதிரி வெறிதான் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களை, குறிப்பாக நாராயண மூர்த்தி போன்றவர்களை முதல் இடத்திற்கு கொண்டு செல்லும்.

சாதிக்க பிறந்திருக்கிறோம்

யாரும் எதையும் செய்ய முடியும். நாம் அதற்காக ஒரே படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும் வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது என்று சொல்லவில்லை. நீங்கள்  சினிமா பார்க்கலாம், நண்பர்களோடு சேர்ந்து விளையாடலாம். இதை எல்லாம் முன்னே சொன்ன மாதிரி 25 வயதிற்குள் முடிக்க வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அதாவது ‘நாம் சாதிக்க பிறந்து இருக்கிறோம்’ என்று. இதை எல்லாம் நம்முடைய அப்பா அம்மாதான் சொல்ல வேண்டும் அல்லது வழி நடத்த வேண்டும் என்று இருக்க கூடாது. நமக்கு என்ன திறமை இருக்கிறது என்று நம்மை விட வேறு யார்க்கும் தெரியாது?

திமிரு வேண்டும்

திருவள்ளுவர் சொன்னது போல் எப்பொழுதுமே எண்ணுவது எல்லாம் உயர்வாகவே எண்ண வேண்டும். நோபல் பிரைசும் என்னால் வாங்க முடியும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். என்னால் எவருடனும் போட்டி போட முடியும்; எந்த இடமாக இருந்தாலும் என்னால் போட்டி போட முடியும் என்ற திமிரு எப்பொழுதுமே இருக்க வேண்டும்.

இதுபோக, IQ (intelligence quotient), EQ (Emotional quotient)and SQ (Spritual quotient) ஆகிய மூன்றில் திறமையாக இருக்க வேண்டும். IQ என்பது இயற்கையாகவே சிலர்க்கு இருக்கலாம்  சிலர்க்கு குடும்ப ஜீன்களில் இருக்கலாம். படிப்புக்கும் ஐகிம் எந்த தொடர்பும் இல்லை.

படிப்பு இருந்தால் நாம் கொஞ்சம் IQ வை அதிகரிக்கலாம் அவ்வளவுதான். EQ என்பது என்னால் முடியும் என்ற ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் வெறி. SQ என்பது மத நம்பிக்கை. அது எந்த மதமாகவும் இருக்கலாம். மத நம்பிகையும் முக்கியம். முயற்சியுடன் அம்மா அப்பாவின் ஆசிர்வாதம், ஆசிரியரின் ஆசிர்வாதம் மற்றும் இறைவனின் ஆசிர்வாதம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment