Tuesday 5 May 2015

உயிரியல் வினாக்கள்

 உயிரியல் வினாக்கள்
`````````````````````````````````

1) சீதபேதி நோயை உண்டாக்குவது எது?

எண்டமீபா ஹிஸ்டலைடிகா

2) வைரஸ்களை எதன் மூலம் பார்க்க முடியும்?

மின்னணு நுண்பெருக்கு ஆடி

3) வைரஸ் நோய்களுக்கு எடுத்துக்காட்டு

1) சாதாரண சளி 2) தட்டம்மை 3) சின்னம்மை 4) பெரியம்மை 5) வெறிநாய் கடி 6) இளம்பிள்ளை வாதம் (போலியோ)

4) நிமோனியா என்பது யாது?

தட்டம்மை, கக்குவான் இருமல், ஆஸ்த்துமா அல்லது மேல் மூச்• சார்ந்த தொற்று ஆகியவற்றின் சிக்கலான நிலை.

5) புட்டாளம்மைக்கு பயன்படுத்தும் மருந்து?

ஆஸ்பிரின் (வலி மற்றும் காய்ச்சலுக்கு)

6) காசநோயை எவ்வாறு கண்டறியலாம்?

அ) ஆஸிட் ஃபாஸ்ட் பாசில்லைக்கான சளி பரிசோதனை
ஆ) மார்பு எக்ஸ் ரே படம்

7) மாலை நேரக் காய்ச்சல், இரவில் வியர்ப்பது இவை எந்நோயின் அறிகுறிகள்?

காசநோய்

8) காசநோய் முக்கியமாக தாக்கும் உறுப்பு எது?

நுரையீரல்

9) பாக்டீரியாவினால் ஏற்படும் நாள்பட்ட நோய் எது?

காசநோய்

10) குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி எது?

BCG (பிறந்தவுடன் போடவேண்டியது)

11) டைபாய்டை கண்டறியும் சோதனைகள் யாவை?

1) வைடால் பரிசோதனை
2) இரத்தத்தில் நுண்ணுயிர் பரிசோதனை
3) மலத்தில் பாக்டீரியா உள்ளனவா என அறிதல்.

12) காலரா நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி எது?

விப்ரியோ காலரே.

13) சிறுநீர் அடர்மஞ்சள் எந்நோயின் அறிகுறி?

நோய்தொற்று கல்லீரல் அழற்சி

14) அமீபிக் சீதபேதிக்கான நோய் கிருமி யாது?

எண்டமீபா ஹிஸ்டோலிட்டிகா

15) கல்லீரலில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ள நோய் எது?

அமீபா சீதபேதி

16) போலியோ வைரஸ் எந்த மண்டலத்தை தாக்குகிறது?

நரம்பு மண்டலம்

17) புரதங்கள் எவற்றால் ஆனது?

அமினோ அமிலங்கள்

18) வைட்டமின் ம் Dயின் முக்கியத்துவம் யாது?

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சி

19) நிக்கோடினிக் அமிலத்தின் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய் எது?

பெல்லகரா

20) ஃபோலிக் அமிலத்தின் பணி யாது?

அ) இரத்த சிவப்பணுக்களை (யூயளீ) உண்டாக்குவது ஆ) புதிய தி•க்களை உருவாக்குவது

21) வைட்டமின் C யின் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய் எது? -

ஸ்கர்வி

22) பரம்பரை இரத்த சோகை நோய்க்கு எடுத்துக்காட்டு எது?

சிக்கில் செல் இரத்த சோகை

23. இந்தியாவில் பரவும் நோய்களில் முதலிடம் வகிப்பது?

காசநோய்

24. தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

1955

25. இந்தியாவில் எந்த ஆண்டு பால்வினை நோய் தடுப்பு முறை ஆரம்பிக்கப்பட்டது?

1946ல்

26. புரதசத்து குறைவினால் ஏற்படும் நோய்கள் யாவை?

1) மராஸ்மஸ் 2) குவாஷியார்க்கர்

No comments:

Post a Comment