Tuesday 27 October 2015

நோபல் பரிசு - 2015:

நோபல் பரிசு - 2015:

மருத்துவம்: [வில்லியம் கேம்பெல் - அயர்லாந்து, சதோஷி ஒமுரா - ஜப்பான் & யூயூ தூ - சீனா ]:

உருளைப் புழுக்களால் ஏற்படும் யானைக்கால் வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகிய இருவருக்கும்,

மலேரியாவுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக யூயூ தூவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ள "அவெர்மேக்டின்' மருந்து, உருளைப் புழு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக் கால் வியாதி,

பார்வையின்மை ஆகிய நோய்கள் தாக்குதவதை மிகப் பெரிய அளவில் குறைத்துள்ளது.

மேலும், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பிற நோய்களையும் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது.

யூயூ தூவால் கண்டுபிடிக்கப்பட்ட "ஆர்டெமிஸினின்' மருந்து, மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.

இயற்பியல்: [கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா]:

நியூட்ரினோ ஆய்வுக்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

வேதியியல்: [தாமஸ் லிண்டால் - சுவீடன், பால் மாட்ரிச் - அமெரிக்கா, அசீஸ் சன்கார் - துருக்கி]:

மரபணு குறையை சீரமைக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

இலக்கியம்: [ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் - பெலாரஸ்]

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 14வது பெண் அலெக்ஸிவிச் ஆவார்.

இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட பல உணர்வுப் பூர்வமான புத்தகங்களை எழுதியவரும், பல மொழிகளில் இருந்து புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளார்.

ரஷ்ய மொழியில் இவர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் இன்னமும் அவரது தாய் மொழியில் எழுதப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதி: [துனிசியாவின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குழு]

துனிசியாவின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குழுவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த பேச்சுவார்த்தைக்குழுவுக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்: [ஆங்கஸ் டீட்டன் - ஸ்காட்லாந்து]

2015ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு (69) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிரின்ஸ்டென் பல்கலைகழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஆங்கஸுக்கு, நுகர்வு, வறுமை, மக்கள் நலம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதற்காக இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment