Tuesday 27 October 2015

NOTIFICATION வந்த பிறகு படிக்கலாம்னு இருப்பவர்களா நீங்கள்?

HELLO FRIENDS........
NOTIFICATION வந்த பிறகு படிக்கலாம்னு இருப்பவர்களா நீங்கள்?
"யார் என்ன சொன்னாலும் என்னால படிக்க முடியல" அப்படி என்பவரா நீங்கள்....???
எவ்ளோ ட்ரை பண்ணி படிச்சாலும் மனசுல நிக்கவே மாட்டுது அப்படி என்பவரா நீங்கள்....???
கொஞ்சம் படிச்சாலே tired ஆகுபவரா நீங்கள்?
அப்ப நீங்க இதை கண்டிப்பாக பின்பற்றி பாருங்கள்.
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
வரும் தேர்வுகளுக்கு முக்கியம் தமிழில் நன்றாக, தெளிவாக படித்து இருக்க வேண்டும், அப்படி படித்தால் 100 மதிப்பெண்களுக்கு நம்மால் கட்டாயம் 85 முதல் 90 வினாக்களுக்கு விடை அளிக்க முடியும். உங்களுக்கு இது தெரிந்த செய்தி தான்.
ஆனால் 6 முதல் 12 வரை படிக்க என்னால இந்த குறைந்த நேரத்தில் எப்படி படிக்க முடியும்? இது உங்கள் கேள்வியாக இருந்தால் என் பதில்.......
உங்களால் (முடியும் OR முடியாது)
அனால் படிச்சு முடிச்சவங்க, தமிழில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து கேள்வி "கேட்க கேட்க" தெரிந்தவர்கள் பதில் "கூற கூற" அதை நீங்கள் நன்றாக கவனித்தால் உங்கள் மனதில் நன்றாக பதியலாம். எல்லாரும் பதில் கூறுவதை பார்த்து உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும்,
மற்றவர்கள் போஸ்ட் பண்ணும் கேள்விகளுக்கு தப்போ, சரியோ பதில் அளியுங்கள். இன்னும் உற்சாகம் ஆவீர்கள்.
சில பேருக்கு Book ah எடுத்தாலே தூக்கமாக வரும், அனால் SYSTEM, CELLஅதிகமா use பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்கலாம் இப்படி ட்ரை பண்ணலாம். இது உங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் சேர்த்து தான். JOB பார்க்கிற நிறைய பேருக்கு கண்டிப்பா நேரம் கிடைப்பது மிக கடினம்.
தமிழ் நன்றாக படித்து முடித்தவர்களுக்கு எது முக்கியமான கேள்வி, புத்தகத்தில் எப்படிலாம் கேள்வி கேட்கலாம்னு நன்றாக தெரியும்........நீங்கள் கேள்விகள் POST பண்ணுவதால் உங்களுக்கும் ஒரு தடவ Revise பண்ண மாதிரி இருக்கும்....
இன்றைக்கு 6th தமிழில் நான் ஆரம்பித்து வைக்கிறேன் friends...
எவ்ளோ சீக்கிரம் வேகமா படிக்கிறோம் என்பது நம்ம கைல தான் இருக்கு......
இந்த குரூப்ல இருக்க, கண்டிப்பா அரசு வேலைக்கு போகணும்னு நினைக்கிற எல்லாரும் support பண்ணுங்க. அப்ப தான் சாதிக்க முடியும்.
பொதுநலமா யோசிங்க, கண்டிப்பா உங்களுக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் friends......
கேள்விகள் POST பண்றவங்க SUPPORT ரொம்ப முக்கியம்.
இது நான் எப்பவோ சொன்ன ஐடியா தான், அப்ப follow பண்ணல , but இனி தீயா உழைக்கணும், நம்ம கிட்ட நேரமும் இல்லை, நாட்களும் இல்லை.
தமிழ் முழுவதும் முடித்தவர்களுக்கு இது ஒரு REVISION மாதிரி இருக்கும்.
குறைந்தது TNPSC கு ஒரு வருடமாவது கடினமாக படித்தால் தான் PASS பண்ண முடியும் னு சொல்வாங்க, அத நீங்க நினைச்சால் மாத்தலாம்.
"எதுக்குமே நம்ம மனசு தான் காரணம்", முடியாதுன்னு நினைச்சாலே கண்டிப்பா முடியாது, "முடியும்" னு நினைச்சு முயற்சி தான் பண்ணிப் பாருங்களேன்.
"வெற்றியோ, தோல்வியோ ஒரு கை பார்ப்போம்". எது வந்தாலும் ஏத்துகுவோம்.
நன்றி,

No comments:

Post a Comment