Tuesday 4 February 2014

மகாபாரதம்

அருமை நண்பர்களுக்கு.... உங்களின் வேண்டுதலுக்கு இணங்கி, குருக்ஷேத்திர போரின் 18 நாட்களில் நடந்த முக்கியமான சம்பவங்களை, நாள் ஒன்றுக்கு வீதமாக 18 நாள் தொடர்ச்சியாக இங்கு பதிவதில் நான் பெருமை கொள்கிறேன்.

இராமாயணத்தை விட மகாபாரதம் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு...அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு.
மகாபாரதப்போரில் ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு. பதினெட்டு நாட்கள் போருக்குப்பின்...10 பேர் தவிர..அனைவரும் மாண்டனர்..

இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை. அனைவரும் படிக்கலாம். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு...அற்றதை விட்டு விடலாம். இப்பதிவின் நோக்கமே எளிமையாக...மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான்.

கதை முழுவதும் இங்கு சொல்ல வேண்டும் என்றால் (ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை) படைப்பவர்களுக்கும் ...படிப்பவர்களுக்கும் நேரம் போதுமானதாக இருக்காது. அதனால், குருக்ஷேத்திர போரை பற்றி மட்டும் இங்கு சுருக்கமாக அலசலாம்.. தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்..... உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை "கமென்ட்" செய்யவும்...
----------------------------------------------------------------------------
போரின் முதல் நாள்.

போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.

பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.

ஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்..

முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது. ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும். இருதிறத்துப் படைகளும் மோதின.வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர்.யானைப்படையும்..குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன.அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது.வீரர்கள் ஈட்டி,கத்தி,கதை,வளைதடி,சக்கரம் முதலியக் கொண்டு போரிட்டனர்.பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து..எண்ணற்ற வீரர்களைக் கொன்றார்.சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது.பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இரண்டாம் நாள் போர்

முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன. கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான். தருமர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

அந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர். கண்ணபிரான் தேரை ஓட்ட, அர்ச்சுனன் பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான். பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார். மற்றொரு புறம் துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர். திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான், அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன் கலிங்கப் படையை ஏவினான். ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான். அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார். அவரை அபிமன்யூவும் சாத்யகியும் சேர்ந்து தாக்கினார். அவர்களது தாக்குதலால் பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின. இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை. அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான். அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான். அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது........

No comments:

Post a Comment