Sunday 10 July 2016

நிரந்தரமில்லை

எந்தகல்லை வணங்கினாலும்
ஈடேற முடியாது ...
வைரக்கல்லாய் உனைமாற்ற
வைராக்கியம் போலேது ...

தயக்கத்தைவிட மிகப்பெரிய
தடையேதும் கிடையாது
அதைநீ தாண்டாமல்
எதையும்அடைய முடியாது

ஒன்பது கிரகங்களும்
உனக்காய்மட்டுமே உலவாது
ஆறுடத்தையே நம்பிஇருந்தால்
அப்பியபீடை அகலாது

அனுபவம்தான் ஆண்டவன்
அவனைநீ தேடிப்போ
கோவில்கோவிலாய்ப் போவதைவிட
தோல்விகளை நாடிப்போ

யார்தான் தோற்கவில்லை
எதற்குநீ வெட்கவேண்டும்
எம்முயற்சியும் செய்யாமல்
ஏளனிப்போர்தான் வெட்கவேண்டும்

ஐம்புலத்தின் காதைமட்டும்
அவ்வப்போது ஊனமாக்கு
ஆசைகளை ஓடவிட்டு
அதையேஉன் பாதையாக்கு

பிறப்புஓர் பந்தயம்
இறப்பின்பின்னே முடிவுதெரியும்
இடையில்தெரியும் முடிவுயெல்லாம்
எங்கனமும் மாற்றம்புரியும்

மரணத்தைவிட எதுவுமே
நிரந்தரமில்லை புரிந்துகொள்
என்னொடியும் இறப்புவரலாம்
எண்ணியதையடைய விரைந்துசெல்

No comments:

Post a Comment