Sunday 10 July 2016

வெற்றி பெற்ற மனிதர்கள் கடைப்பிடிப்பவை

வெற்றி பெற்ற மனிதர்களிடம் ஒரு அமைதியைக் காணலாம். அவர்களின் பேச்சில் ஒர் தெளிவை பார்க்கலாம். முக்கியமாக அவர்கள் தேவையற்றதை பேசவோ அல்லது செய்யவோ மாட்டார்கள்.

............வெற்றி பெற்ற மனிதர்கள் கடைப்பிடிப்பவை..............

‪#‎தங்கள்‬ சுயமதிப்பை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்கள் இலக்கில் தெளிவு கொண்டு இயங்கிக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் எந்திரத்தனமாக செயல்பட மாட்டார்கள்.

‪#‎மற்றவர்களுடன்‬ ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து தனது செயல்பாடுகளை முடக்கிக் கொள்ள மாட்டார்கள்.

‪#‎எந்த‬ ஒன்றுடனும் பலப்பரிட்சை நடத்தி போராடிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை தீவிரமாக போராடிக் கொண்டிருப்பது மற்றவரை பாதிக்கும் என்பது அவர்கள் அறிந்த ரகசியம் ஒவ்வொன்றிற்கும் அவசியமான அளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

‪#‎குறை‬ காணும் பண்பை கொண்டிருக்க மாட்டார்கள். நேர்த்தியை மட்டுமே எதிர்பார்த்தால் குறைகளும், தோல்விகளும் பெருகும் என்பது அவர்கள் அறிந்ததே. குறைகளின் பின்னால் ஒடினால் வெற்றியை இழக்க நேரிடும் என்பதையும் உணர்ந்தவர்களாக செயல்படுவார்கள்

‪#‎நடந்ததை‬ எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருக்க மாட்டார்கள். அதே பிரச்சனையில் மூழ்கியிருக்க மாட்டார்கள்.

‪#‎எதிர்மறை‬ மனிதர்களுடன் சூழ்ந்திருக்க மாட்டார்கள் நல்ல பண்புடையவர்களை நாடிச் செல்வார்கள். நல்ல விஷயங்களை தேடிச் சேகரிப்பார்கள்.

‪#‎மனதுக்கு‬ இறுக்கம் தரும் போராட்டம் தரும் விஷயங்களை அனுமதிக்க மாட்டார்கள். அழுத்தத்தை மனதில் வைத்திருப்பது கோபம், விரோதம், பகை, அழிவு என ஏராளமான விளைவுகளை உண்டு பண்ணும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

‪#‎மகிழ்ச்சியில்‬ திளைத்திருக்க மாட்டார்கள். அதற்காக மகிழ்ச்சியை தடை செய்து வாழ மாட்டார்கள்

‪#‎பிறரின்‬ தவறுகளை எளிதாக மன்னித்து விடுவார்கள். ஆனால் எதையும் மறந்து விடுவதில்லை.

No comments:

Post a Comment