Sunday 10 July 2016

மனிதாநீ மனிதனாய் பிறந்ததேஓர் புண்ணியம்

வந்தவழி அறியலியே
போரவழி புரியலியே
எந்தவழி போனாலும்
எவ்விலக்கும் தெரியலியே

கூவத்துல விழுந்ததண்ணீ
குடிதண்ணீ ஆகாது
பாவம்அந்த தண்ணீக்கேன்
அந்தபழி நேர்ந்தது

பிறப்பதும் இறப்பதுவும்
மட்டுமல்ல அவன்கையில்
உழைப்பதை தவிரவேறு
ஒன்னுமில்ல ஓங்கையில்

மதிகொண்டு ஆசைப்பட்டு
மாடாக நீஉழை
விடையேதும் கிடைக்கலியா
விதியென்று நீபிழை

கையெழுத்த போட்டுசிலர்
கட்டுக்கட்டா சம்பாதிக்கிறான்
கைகாய்ப்பு வரஉழைச்சும்
கஞ்சிக்கின்றி பலர்சாகுறான்

மனுசபிறப்பின் சூட்சமத்தை
முழுசாய்கண்டவன் எவனுமில்லை
வந்தவேலை முடிந்துவிட்டால்
போகமலிருக்க முடியவதில்லை

எதுவுமே நிரந்தரமில்லை
ஏனிந்த போராட்டம்
போட்டியிலும் பொறாமையிலும்
முடிவதுஏன் நம்மாட்டம்

மனிதாநீ மனிதனாய்
பிறந்ததேஓர் புண்ணியம்
மகிழ்ச்சிதந்து மகிழ்ச்சியாய்
வாழ்ந்துசாவதே கண்ணியம்

No comments:

Post a Comment