Thursday 19 March 2015

புயலிலும் மாறாதம்மா.!

* மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம்.
* இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.
* நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான்.
* கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் கொடுப்பதற்காகக் காத்திருக்கிறார்.
* நல்லவர்களின் கோபம் நீடித்து நிற்பதில்லை. தண்ணீரில் இட்ட கோலம் போல உடனே மறையும்.

 * உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!

* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான்.

* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை!

* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!'

* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை!

* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!


தோற்றங்கள் மாறிப்போகும்,
தோல் நிறம் மாறி போகும்,
மாற்றங்கள் வந்து மீண்டும், மறுப்படியும் மாறிப்போகும்,
ஆற்றிலே வெள்ளம் வந்தால், அடையாளம் மாறிப்போகும்,
போற்றிய காதல் மட்டும்,
புயலிலும் மாறாதம்மா.!

No comments:

Post a Comment